தூத்துக்குடியில் அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது முன்னாள் அமைச்சா் எஸ். பி சண்முகநாதன் பங்கேற்பு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் டூவிபுரத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் மாநகர பகுதி செயலாளர்கள் மற்றும் வட்ட செயலாளர் ஆலோசனை கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் தலைமை வகித்து பேசுகையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் எம்ஜிஆர் ஜெ வழியில் எடப்பாடியார் தலைமையில் அதிமுக தான் தமிழகத்தில் ஆட்சி அமைக்க போகிறது என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை. எனவே நாம் அனைவரும் இனிவரும் காலங்களில் தெருமுனைப் பிரச்சாரம் மூலம் கடந்த கால அதிமுக அரசின் சாதனைகள் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ள அதிமுகவின் தேர்தல் அறிவிப்புகளை வீடு வீடாக நேரில் மக்களிடம் எடுத்துகூற ேவண்டும். இங்கு யார் வேட்பாளர்கள் நின்றாலும் எடப்பாடியார் தான் மூன்று தொகுதிகளிலும் நிற்பதாக கருதி தேர்தல் பணிகளில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 3 தொகுதிகள் தான் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுது என்பதை நிரூபிக்கும் வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து வரும் காலங்களில் தேர்தல் பணி மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணைச் செயலாளர் பெருமாள் சாமி, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் சுதாகர், மாவட்ட பொருளாளர் சேவியர், மாவட்ட அணி செயலாளர்கள் தனராஜ், பில்லா விக்னேஷ், பெருமாள், நிலா சந்திரன், மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர்கள் திருச்சிற்றம்பலம், மனுவேல் ராஜ், பகுதி செயலாளர்கள் முருகன், சந்தனப்பட்டு, ஜெய்கணேஷ், நட்டார் முத்து, சுடலைமணி, பேரூராட்சி செயலாளர் செந்தில் ராஜ்குமார், சாம்ராஜ், மற்றும் வட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

- தூத்துக்குடி தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் முன்னிட்டு பொது மக்களின் பாதுகாப்பு நலன் கருதி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் மதன் தலைமையில் கொடி அணி வகுப்பு தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து மில்லர்புரம் வ உ சி கல்லூரி வரை இந்திய துணை ராணுவ படை மற்றும் காவல் துறையில் அணிவகுப்பு நடைபெற்றது இப்பேரணியில் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகிர் மற்றும் தூத்துக்குடி காவல்துறையினர் கலந்து கொண்டனர்1
- மக்காச்சோளம் அதன் குறைந்தபட்ச ஆதார விலை ரூபாய் 2500 ஆக அறிவிக்க வேண்டும் விளாத்திகுளம் பகுதியில் மிளகாய் பயிரிட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் 15,000 எழுப்பீடு வழங்க வேண்டும் உழவு மற்றும் வண்டி காளை வைத்திருக்கும் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு தனி அடையாள அட்டை வழங்க வேண்டும் கடம்பா வடிகால் ஆக்கிரமிப்பை முழுவதும் அகத்திட வேண்டும் வாய்ப்பாட்டில் மாட்டுவண்டியில் வீட்டு உபயோகத்திற்கு மணல் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியை வறட்சிதொகுதியாக அறிவிக்க வேண்டும்இவ்வாறு தமிழக ஏர் உழவன் அனைத்து விவசாயிகள் சங்கம் தலைவர் ராஜேஷ் உழவர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு2
- தென்காசி மாவட்டம் வடகரை மெயின் ரோடு பகுதியில் குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடுமையான அவதிப்படுகின்றனர்1
- திருமங்கலம் முனிசிபல் காலனி 12வது வார்டு மூன்று மாதங்களால் அடைக்கப்பட்டிருக்கும் சாக்கடை கழிவுகள்1
- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மத்திய துணை ராணுவ பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி திருப்பரங்குன்றம் ஆர்ச் பகுதியில் இன்று (மார்ச்.10) மாலை தொடங்கியது. மதுரை மாநகர காவல் உதவி ஆணையர் சசி பிரியா தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலத்தில் ஒடிசாவில் இருந்து வந்த 60 பேர் கொண்ட மத்திய துணை ராணுவ படை வீரர்கள் மற்றும் திருப்பரங்குன்றம், திருநகர் காவலர்கள் 30 பேர் இணைந்து கொடி அணிவிப்பு நடைபெற்றது. 16 கால் மண்டபம் ,கீழரத வீதி, பெரிய ரத வீதி வழியாக சன்னதி தெரு, மேலரத வீதி பஸ் ஸ்டாண்ட், திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை, மற்றும் எக்கோ பார்க் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது .1
- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சியோன் நகரில் கடந்த 6 ஆம் தேதி இருவரை வாளால் வெட்டிய வழக்கில் கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் மற்றும் கோபி ஆகிய வரை போலீசார் கைது செய்தனர் இதில் ஆகாஷ் போலீசார் கைது செய்த போது மேல பசலை மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்ததில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் அதற்கான சிகிச்சை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஆகாஷ் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணமடைந்ததாக தெரிய வருகிறது இந்நிலையில் ஆகாஷின் மரணத்திற்கு காரணமான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் மானாமதுரையில் மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மூன்றாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர் மதுரை உயர்நீதிமன்றம் தேசிய நெடுஞ்சாலைகளில் சாலை மறியல் போராட்டம் நடத்தக்கூடாது என்று உத்தரவிட்ட நிலையிலும் மூன்றாவது நாளாக இந்த போராட்டம் நடைபெற்று வருவதால் அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவ மாணவிகள் செல்வதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது அது மட்டுமல்லாமல் போக்குவரத்தும் 30 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது இதனால் அப்பகுதியில் உள்ள இரண்டு தனியார் பள்ளிகள் பள்ளி வாகனங்கள் செல்ல முடியாததால் விடுமுறை விடப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது இந்தப் போராட்டம் நடத்தவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களில் கோரிக்கையாக உள்ளது.1
- மதுரை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஆகாஷ் என்ற பட்டியலின இளைஞர் காவல் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இது குறித்து புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிவகங்கை மாவட்ட காவல்துறை ஆகாஷ் என்ற இளைஞரை கொலை செய்துவிட்டது. இந்த மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் ஒரே சாதியினராக இருந்து கொண்டு, சாதி சங்கங்களைப் போல செயல்படுகின்றனர். ஏற்கனவே மடப்புரம் கோவில் காவலாளி காவல்துறையினரால் கொல்லப்பட்ட சுவடு மறைவதற்குள் மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆகாஷ் என்ற இளைஞரின் காலை உடைத்தது காவல்துறைதான். ஆனால், அவர் பாலத்தில் இருந்து குதிக்க முயன்றதாக காவல்துறை பொய் சொல்கிறது என அவர் குற்றம் சாட்டினார்.1
- Post by மா.சுடலைமணி1