Shuru
Apke Nagar Ki App…
நாகர்கோவில் அருகே வெள்ளமடம் பகுதியில் நிகழ்ந்த கோர விபத்தில் காரில் பயணித்த மூன்று பேர் உயிரிழந்தனர். நெல்லையில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்த கார் ஒன்று, வெள்ளமடம் வந்தபோது சாலையில் நின்று கொண்டிருந்த டெம்போ மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Magson jones
நாகர்கோவில் அருகே வெள்ளமடம் பகுதியில் நிகழ்ந்த கோர விபத்தில் காரில் பயணித்த மூன்று பேர் உயிரிழந்தனர். நெல்லையில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்த கார் ஒன்று, வெள்ளமடம் வந்தபோது சாலையில் நின்று கொண்டிருந்த டெம்போ மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
More news from தமிழ்நாடு and nearby areas
- தென்காசி மாவட்டத்தில் உள்ள சுரண்டை சிவகுருநாதபுரத்தில் அருள்மிகு ஸ்ரீ திருமலைக் குமாரசாமி திருக்கோவிலின் சப்பரம் வீதி உலா நடைபெற்றது.1
- தூத்துக்குடியில் உள்ள பரிசுத்த பனிமய மாதா திருத்தல பேராலயத்தில் இருந்து ஒரு மாபெரும் ஜெபமாலை பவனி நடைபெற்றது. தேவமாதாவின் வணக்கமாதம் மற்றும் மரியாவின் இயக்கத்தின் 35வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த பவனி, பரிசுத்த பனிமய மாதா தங்கத்தேர் வலம் வரும் ரத வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்றது. இந்த நிகழ்வில் பங்கேற்றவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்திச் சென்றனர். உலக சமாதானத்திற்காகவும், இயேசு மரிய திரு இருதயங்களுக்கு எதிராக செய்யப்படும் நிந்தனைகளுக்கு பரிகாரமாகவும், மக்களின் வாழ்வாதாரம் செழிக்கவும் இந்த ஜெபமாலை பவனி நடத்தப்பட்டது. இந்த விழாவில் மரியாவின் இயக்கத்தினர், பரிசுத்த பனிமய மாதா திருத்தல பேராலய இறைமக்கள், அருள் சகோதரர்கள் மற்றும் அருள் சகோதரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். பனிமயமாதா பங்கு தந்தை ஜான் செல்வம் சுவாமிகள் மற்றும் மரியாதையை இயக்கத்தினர் இணைந்து இந்த பவனி விழாவிற்கான சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.1
- Post by Maatram World news Theni1
- திருவாடானை ஸ்ரீ ஆதிரெத்னேஸ்வரர் ஆலயத்தின் பத்தாம் திருநாளை முன்னிட்டு பால்குடம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் VK ராஜுவ் MLA சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.1
- மதுரை போக்குவரத்து காவல் உதவி ஆணையர் செல்வின் அவர்களின் பணி நிறைவு நிகழ்வு இன்று (மே.30) மதுரை தெப்பக்குளம் காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் காவல்துறை உயர் அதிகாரிகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு உதவி ஆணையர் செல்வின் அவர்களின் சிறப்பான பணியைப் பாராட்டி, அவருக்கு பொன்னாடை அணிவித்து பரிசுப் பொருட்களை வழங்கி வழியனுப்பி வைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய போக்குவரத்து காவல் உதவி ஆணையர் செல்வின், தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்புக்கும் பாராட்டுக்களுக்கும் நெகிழ்ச்சியுடன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.1
- சிவகங்கை மாவட்டம், எஸ்.எஸ். கோட்டை அருகே உள்ள எருமைப்பட்டியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டு வண்டி எல்லைப் பந்தயம் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மொத்தம் 20 ஜோடி மாடுகள் பங்கேற்றன. மேலூர் - காரைக்குடி சாலையில் நடைபெற்ற இந்தப் பந்தயத்தில், பெரிய மாட்டுப் பிரிவிற்கு ஏழு மைல் தூரமும், சிறிய மாட்டுப் பிரிவிற்கு ஐந்து மைல் தூரமும் எல்லையாக நிர்ணயிக்கப்பட்டது. போட்டியில் மாட்டு வண்டிகள் சீறிப் பாய்ந்து ஒன்றை ஒன்று முந்திச் சென்று ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தன. இதில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். எஸ்.எஸ். கோட்டை, எருமைப்பட்டி, மேலூர், திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான ரசிகர்கள் சாலையின் இருபுறமும் கூடி நின்று, இந்த மாட்டு வண்டி பந்தயத்தை உற்சாகமாக கண்டுகளித்தனர்.1
- முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் பிறந்தநாளான ஜூன் 3ஆம் தேதியை முன்னிட்டு, தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஒரு செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. சுரண்டை நகரம் கீழச்சுரண்டையில் அமைந்துள்ள கலைஞர் நினைவாலயத்தில் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில், கலைஞர் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடுவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதன்படி, மாவட்டம் முழுவதும் மாதம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்கள், பொதுநலப் பணிகள் மற்றும் கழக நிகழ்ச்சிகளைச் சிறப்பாக நடத்துவது குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.1
- தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே உள்ள பேயன் விளை கிராமத்தில், காதல் திருமணத்திற்கு உதவியதாகக் கூறி இரு குடும்பத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. ஸ்ரீதரின் குடும்பத்தினர், மேலலட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவன் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். ஸ்ரீதரின் மகள் சௌமியா, அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சௌமியா மற்றும் தினேஷின் காதலுக்கு பரமசிவன் குடும்பம் உதவியதாகக் கூறி இந்த கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1