Shuru
Apke Nagar Ki App…
தேர்தல் பறக்கும் படையினரால் 6 லட்ச ரூபாய் பறிமுதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படுகிறது. அந்த வகையில் குமரன் சாலையில் பறக்கும் படையினரின் வாகன தணிக்கையின் போது பொள்ளாச்சியில் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் கார்த்திகேயன் என்பவர் கொண்டுவந்த 6 லட்ச ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
Vel
தேர்தல் பறக்கும் படையினரால் 6 லட்ச ரூபாய் பறிமுதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படுகிறது. அந்த வகையில் குமரன் சாலையில் பறக்கும் படையினரின் வாகன தணிக்கையின் போது பொள்ளாச்சியில் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் கார்த்திகேயன் என்பவர் கொண்டுவந்த 6 லட்ச ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- திண்டுக்கல் ரத்ததான குழுவினர் மாவட்டம் முழுவதும் இன்றி பல்வேறு மாவட்டங்களிலும் ரத்த தானம், உடல் தானம், கண் தானம் போன்ற விழிப்புணர்வு நடத்தி வருகின்றனர் அவர்களின் இன்றைய விழிப்புணர்வு வீடியோ.1
- திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பறக்கும் படை குழு, நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்புக்குழு ஆகியவைகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர் இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026 க்கான அறிவிப்பை வெளியிட்டது தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சரவணன் நேற்று பறக்கும் படை குழு, நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்பு குழு வாகனங்களை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இக்குழுவினர் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்1
- Post by Natarajan Pitchaimani1
- சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடைபெறும் சிறப்பு குறை தீர்ப்பு முகாமில் வருகை தரும் பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் மனுக்களை நேரடியாக கொடுப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று முதல் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், இன்று திங்கட்கிழமை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் நேரடியாக வழங்க முடியாமல், அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்ட புதிய புகார் பெட்டியில் தங்களது கோரிக்கை மனுக்களை செலுத்தினர். இதுகுறித்து அரசு துறை அதிகாரிகள் கூறும்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்வதால், பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கை மனுக்களை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சிறப்பு புகார் பெட்டியில் தங்களது மனுக்களை செலுத்தலாம் எனவும், பொதுமக்கள் செலுத்திய மனுக்கள் மீது தேர்தல் முடிந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் வாங்கிய பிறகு அனைத்து மனுக்கள் மீதும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அதிகாரிகளிடம் நேரடியாக மனுக்களை வழங்கலாம் என்று வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது.1
- பெரியகுளம் மற்றும் அதை சுட்டு வட்டார பகுதியில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை முதலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் மாலை பெரியகுளம் வடுகபட்டி லட்சுமிபுரம் புதுப்பட்டி சோத்துப்பாறை முருகமலை உள்ளிட்ட பகுதிகளில் திடீரென மழை பெய்துள்ளது. இதனால் குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்1
- தேர்தல் தேதி அறிவித்ததை ஒட்டி கரூர் மாவட்டம் குளித்தலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட மருதூர் வாகன சோதனை சாவடியில் குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் வாகனங்களில் சட்டத்துக்கு புறம்பாக பண பரிவர்த்தனை ஏதும் நடைபெறுகிறதா என்று சோதனை செய்த குளித்தலை போலீசார்1
- திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான பறக்கும் படை மற்றும்1
- இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026 க்கான அறிவிப்பை வெளியிட்டது தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சரவணன் நேற்று பறக்கும் படை குழு, நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்பு குழு வாகனங்களை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இக்குழுவினர் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்1
- தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுவிடுகின்றனர் அதன் ஒரு பகுதியாக மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் குன்னூர் டோல்கேட்டில் தேர்தல் பறக்கும் படை வாகனத்தில் வந்த பறக்கும் படை அலுவலர் ராஜாராம் தலைமையில் இரண்டு உதவி அலுவலர்கள் ஒரு வீடியோ பதிவாளர் மற்றும் காவல் துறையினர் உள்ளிட்ட அணியினருடன் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தேனியில் இருந்து மதுரை செல்லும் இருசக்கர வாகனம் கார் சரக்கு வாகனம் கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் நிறுத்தி காருக்குள்ளாகவும் காரின் பின்புற டிக்கியிலும் காரில் உள்ளவர்களின் பைகளிலும் தேர்தல் விதிமுறைப்படி ஐம்பதாயிரம் மேற்பட்ட ரொக்க பணம் மேலும் 10,000 மேற்பட்ட பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர் . இதேபோன்று ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளின் மூன்று அணிகளாக பறக்கும் படையினர் தீவிர சோதனை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் உடனடியாக தேர்தல் விதிகள் அமலுக்கு வந்து இன்று பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.1