Shuru
Apke Nagar Ki App…
வனத்துறையை கண்டித்தும் நரியூத்து கிராமத்தில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டம் 2006 ஆண்டு வனஉரிமை சட்டப்படி அனைத்து வீடுகளுக்கும் பட்டா வழங்கவேண்டும் தங்களை வெளியேற்ற முயற்சிக்கும் வனத்துறையை கண்டித்தும் நரியூத்து கிராமத்தில் நடந்த சிறப்பு மக்கள் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்
Shakthi
வனத்துறையை கண்டித்தும் நரியூத்து கிராமத்தில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டம் 2006 ஆண்டு வனஉரிமை சட்டப்படி அனைத்து வீடுகளுக்கும் பட்டா வழங்கவேண்டும் தங்களை வெளியேற்ற முயற்சிக்கும் வனத்துறையை கண்டித்தும் நரியூத்து கிராமத்தில் நடந்த சிறப்பு மக்கள் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்
More news from தமிழ்நாடு and nearby areas
- வீடியோ எடிட் செய்து சமூக வலைதளத்தில் பரப்பிய நபரை வனத்துறையினர் கைது *ஆண்டிப்பட்டி கனவாய் பகுதியில் சாலையில் கடந்து செல்லும் ஒற்றைக் காட்டு யானை வீடியோ வைரல்* *ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் வீடியோ எடிட் செய்து சமூக வலைதளத்தில் பரப்பிய நபரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை* தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி கனவாய் பகுதியில் யானை ஒன்று தேனி - மதுரை தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வந்தது அந்த வழியாக காரில் சென்ற நபர்கள் தங்களது செல்போனில் யானை கடந்து செல்வது போன்று வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர் இந்த வீடியோ ஆண்டிப்பட்டி பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது இந்த நிலையில் இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர் ஆண்டிப்பட்டி கனவாய் பகுதியில் யானை நடமாட்டம் இல்லாத நிலையில் திடீரென யானை உலா வருவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருவது குறித்து ஆண்டிப்பட்டி வனத்துறையினர் விசாரணை செய்த நிலையில் இந்த காணொளி ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் எடிட் செய்யப்பட்ட வீடியோ என்று உறுதி செய்தனர் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் யானை கடந்து சென்ற வீடியோவால் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் இந்த காணொளி எடிட் செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த அழகு ராஜா (27) என்பவரை வனத்துறையினர் கைது செய்து விசாரணைக்கு பின் ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் இது குறித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுகள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்1
- தேனி கலெக்டர் அலுவலகத்தில் TNGEA சங்கம் சார்பில் கலெக்டர் உத்தரவை கண்டித்து ஆர்ப்பாட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதி ஆக்கிரமிப்பு விவகாரத்தில் பல தலைமுறைகளாக குடியிருந்து வரும் 118 அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் தேனி மாவட்ட ஆட்சியரின் உத்தரவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தாஜுதீன் தலைமை அழிக்க மாவட்ட துணைத் தலைவர்கள் ரவிக்குமார் லட்சுமி அழகுராஜா சக்தி திருமுருகன் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க மாவட்ட செயலாளர் முத்துக்குமார் கோரிக்கை விளக்க உரையாற்றினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் TNPGTA மாநில பொதுச்செயலாளர் அன்பழகன் TNPTF மாவட்டத் தலைவர் ராம்குமார் தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் சிவமணி சிஐடியு மாவட்ட தலைவர் சண்முகம் உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணை செயலாளர்கள் தமிழ் பரமன் மலர்விழி பரமேஸ்வரன் விஸ்வன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தில் நிறைவாக மாநில செயலாளர் நீதி ராஜா நிறைவுறையாற்றினார் மாவட்ட பொருளாளர் நாகராஜன் நன்றி கூறினார்2
- 2006 ஆண்டு வனஉரிமை சட்டப்படி அனைத்து வீடுகளுக்கும் பட்டா வழங்கவேண்டும் தங்களை வெளியேற்ற முயற்சிக்கும் வனத்துறையை கண்டித்தும் நரியூத்து கிராமத்தில் நடந்த சிறப்பு மக்கள் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மேகமலை மற்றும் தும்மக்குண்டு உள்ளிட்ட ஒன்பது ஊராட்சிகளுக்கு உட்பட்ட 108 கிராமங்களில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக 5000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அவர்களை வெளியேற்ற உச்ச நீதிமன்றம் புலிகள் காப்பகம் என்ற காரணம் காட்டி தீர்ப்பை அளித்துள்ளது வனப்பகுதியில் வசிப்பவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக கருதப்படுவார்கள் என்றும் அவர்களை வெளியேற்ற வனத்துறை மற்றும் தேனி மாவட்ட நிர்வாகம் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது இதை எதிர்த்து கடமலை மயிலை ஒன்றிய பகுதியைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராமமக்கள் ஆர்ப்பாட்டம் தர்ணா பொதுக்கூட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுமை போராட்டம் என பலகட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர் தமிழக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தங்களது வெளியேற்றக் கூடாது என்றும் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர் ஆனால் தேனி மாவட்டம் நிர்வாகம் மற்றும் வனத்துறை இணைந்து வனப்பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற்ற தொடர் முயற்சிகளை எடுத்து வருவது இப்பகுதி மக்களை வேதனைக்குள்ளாக்கி உள்ளது இந்நிலையில் இன்று நரியூத்து கிராமத்தில் வனப்பகுதியில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது கிராமத்தில் உள்ள அரசு சமுதாயக்கூடத்தில் மக்கள் கிராமசபை கூட்டம் என்ற சிறப்பு கூட்டத்தை நடத்தினார்கள் இக்கூட்டத்தில் கிராமத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் தங்களது வேலைகளுக்கு செல்லாமல் கலந்து கொண்டனர் கூட்டத்தில் 2006 ஆம் ஆண்டு வன உரிமை சட்டப்படி வனப்பகுதியில் வசிக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் பட்டா வழங்க வேண்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தங்களை வெளியேற்ற முயற்சிக்கும் வனத்துறை அந்த நடவடிக்கையை கைவிடவேண்டும் தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனுதாக்கல் செய்ய வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது மேலும் இதற்கான உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் 9 ஊராட்சிகளை சேர்ந்த 108 கிராம மக்களும் ஒன்று சேர்ந்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று அங்கேயே தங்கி உணவு சமைத்து உண்டு தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்1
- நத்தம் எருமநாயக்கன் பட்டி சாலையில் சாலையை கடக்கும் முதியவர் முயன்ற போது அதிவேகமாக வந்த வாகன மோதி முதியவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த நத்தம் காவல் துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறனர்1
- விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று திண்டுக்கல் மாநகர் மாவட்டம் சார்பில் பாரதி புரத்தில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.1
- வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பிரதோஷ வழிபாடு வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமி வழிபாட்டிற்காக ஆகஸ்ட் 25 முதல் 28- ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. முதல் நாளான செவ்வாய்க்கிழமை ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு தாணிப்பாறை வழியாக காலை 6 முதல் 12 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர் சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் பிற்பகல் 4 மணிக்கு மேல் பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சதுரகிரி மலையில் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.1
- டாஸ்மாக் கடைகள் விடுமுறை: மதுபான கடைகளில் குவிந்த மது பிரியர்கள். தமிழகத்தில் மிலாடி நபியை முன்னிட்டு நாளை (ஆக.26) டாஸ்மார்க் கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டு கடைகள் அடைக்கப்படும் என்று தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து இன்று (ஆக.25) இரவில் மதுரை நகரில் பல்வேறு பகுதிகளில் டாஸ்மார்க் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பல டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று தங்களுக்கு வேண்டிய மது பாட்டில்களை வாங்கி சென்றார்கள்.1
- காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி தேனியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம் போர்க்கால அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி தேனியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் 200க்கும் மேற்பட்டோர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். தமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்பிடக் கோரி இன்று மாநிலம் தழுவிய அளவில் முதலமைச்சரின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக தேனி மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் இன்று மாலை ஆட்சியர் அலுவலகம் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தேனி மாவட்டத்தில் உள்ள சத்துணவு ஊழியர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்பிடக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்-ன் கவனத்தை ஈர்க்கும் வகையில் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.1