Shuru
Apke Nagar Ki App…
திண்டுக்கல் மாவட்டம் பாளையம் அருகே மூளைச்சாவு அடைந்தவருக்கு அரசு மரியாதை திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை, பாளையம் அருகே சானிப்பட்டியை சேர்ந்த சுகந்தம் என்பவர் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக ஈரோடு, பெருந்துறை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டதில் மூளைச்சாவு ஏற்பட்டு நேற்று இரவு 12 மணியளவில் இறந்துவிட்டார். அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டதையடுத்து, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யும் விதமாக பழனி வருவாய் கோட்டாட்சியர் கண்ணன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
Abbas Abbas
திண்டுக்கல் மாவட்டம் பாளையம் அருகே மூளைச்சாவு அடைந்தவருக்கு அரசு மரியாதை திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை, பாளையம் அருகே சானிப்பட்டியை சேர்ந்த சுகந்தம் என்பவர் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக ஈரோடு, பெருந்துறை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டதில் மூளைச்சாவு ஏற்பட்டு நேற்று இரவு 12 மணியளவில் இறந்துவிட்டார். அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டதையடுத்து, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யும் விதமாக பழனி வருவாய் கோட்டாட்சியர் கண்ணன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
More news from தமிழ்நாடு and nearby areas
- திண்டுக்கல் மாவட்டம் தவசிமடை ஊராட்சி விராலிப்பட்டியில். சக்தி கேந்திர அளவிலான. மக்கள் சந்திப்பு தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் . நடைபெற்றது இதில் பாஜக என் ஜி ஓ பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ் உரையாற்றினார்1
- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா குளத்துபட்டி அரசு மகளிர் கலை கல்லூரியில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டது சுமார் 4 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள கூடுதல் கட்டிடத்திற்கு நிலக்கோட்டை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகால பாண்டியன் கலந்து கொண்டு பூமி பூஜையை துவக்கி வைத்தார். நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் சக்தி ஸ்ரீ தலைமை வகித்தார். மேலும் இவ்விழாவில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் திமுக முக்கிய பிரமுகர்களான சேசுராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மலையாளம் துணை அமைப்பாளர் கந்த பிரபு, கல்லூரி பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.1
- திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை அருகாமையில் உள்ள கருங்குளம் முதல் வண்ணாந்துரை வரை உள்ள விவசாய விலை நிலங்களுக்கு செல்லும் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது, நெல் அறுவடை காலம் என்பதால் விளைந்த நெல்களை அவ்வழியாக கொண்டு வருவதற்கு கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே துறை சார்ந்த அதிகாரிகள் கவனம் செலுத்தி சாலையை பராமரிப்பு செய்து தந்து உதவிட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் மாசி மாத திருவிழாவை முன்னிட்டு இன்று கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.1
- முன்னாள் மதுரை துணை மேயரும் திமுக பிரமுகருமன பி.எம். மன்னன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் இன்று சந்தித்தார்1
- மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் காத்திருப்பு போராட்டம் மதுரை, பிப்.17- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், மதுரை மாவட்டம் கரடிப்பட்டி மற்றும் மேலக் குயில்குடி பகுதிகளில் இடம்பெற்று வரும் நில ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும், அப்பகுதி இளைஞர்களுக்காக விளையாட்டு மைதானம் அமைக்க வலியுறுத்தியும் நாளை காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டம் பிப் - 17 செவ்வாய்க்கிழமை pமதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும் என அமைப்பினர் தெரிவித்துள்ளனர். பொது மக்களின் பயன்பாட்டிற்கான நிலங்களை பாதுகாக்கவும், இளைஞர்களின் விளையாட்டு மற்றும் உடற்திறன் மேம்பாட்டிற்கான வசதிகளை உருவாக்கவும் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.3
- தேனிமாவட்டம் தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோவிலின் மாசி திருவிழாவை முன்னிட்டு மூன்றாவது நாளாக பக்தர்கள் பல்வேறு பகுதியில் இருந்து கோவிலுக்கு வருகை தந்து நேர்த்திக்கடன் செலுத்தினர் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பகுதியில் அருள்மிகு மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள இக்கோவில் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக மிகவும் சிறப்பு வாய்ந்த 1000 ஆண்டுகள் பலமையான இத்திருக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடக்கம் இந்நிலையில் பிப்ரவரி 15ஆம் தேதி மாசி மகா சிவராத்திரி முன்னிட்டு கோவில் திருவிழா தொடங்கப்பட்டது அன்று முதல் 8 நாட்கள் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் அருள்மிகு மூங்கில் அன்னை காமாட்சி அம்மனுக்கு தங்கள் நேத்திகடனை செலுத்தும் விதமாக அக்னி சட்டி , கரும்புத் தொட்டில் குழந்தை நேத்திக்கடன் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர் இதில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மூன்றாவது நாளாக தேனி மாவட்டம் இன்றி பிற மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் இரவு முழுவதும் மஞ்சளார் ஆற்றில் அக்னி சட்டி வளர்த்து கையில் ஏந்தி ஊர்வலம் ஆக கோவிலுக்கு வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர் அதேபோல், கரும்புத் தொட்டில் குழந்தை நேத்திக்கடன், முளைப்பாரி உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடனை அம்மனுக்கு செலுத்தி அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர் அதனைத் தொடர்ந்து கோவில் வளாகப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராட்டணிங்களில் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் திருவிழாவை கொண்டாடினர் பின்னர் அங்குள்ள வீட்டுக்கு தேவையான பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்களை பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்1
- திண்டுக்கல் நாகல் நகர் ரவுண்டான அருகில் தனியார் பேருந்தும்,காரும் மோதி விபத்து1