நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட கவின் உடலை, 5 நாட்களுக்கு பின் அவரது குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர். அரசு மருத்துவமனையில் கவினின் உடலுக்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பட்டியலின இளைஞரான கவின், கடந்த மாதம் 27 அன்று நெல்லையில் கொலை செய்யப்பட்டார். காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்துள்ள நிலையில், பெண்ணின் சகோதரரான சுர்ஜித் என்பவர் கைது செய்யப்பட்டார். சுர்ஜித்தின் பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் சப்-இன்ஸ்பெக்டர்களாகப் பணியாற்றி வந்த நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்டனர். ஆனால், அவர்கள் இருவரையும் கைது செய்தால் மட்டுமே கவினின் உடலை வாங்கி அடக்கம் செய்வோம் என உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அரசு அறிவித்த நிவாரண நிதியை கவினின் பெற்றோர் வாங்க மறுத்தனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாகக் கூறப்படும் சுர்ஜித்தின் தந்தை, காவல் உதவி ஆய்வாளர் சரவணன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், சுர்ஜித்தின் தந்தை கைது செய்யப்பட்ட நிலையில், போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில், கவினின் உடலை பெற்றுக்கொள்ள அவர்களது உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, 5 நாட்களுக்கு பின் கவினின் உடலை அவரது குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர். இதனை தொடர்ந்து, கவினின் உடல் நெல்லை அரசு மருத்துவமனையில் இருந்து அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்துக்கு கொண்டுவரப்படுகிறது. முன்னதாக, நெல்லை அரசு மருத்துவமனையில் கவினின் உடலுக்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை அரசு மருத்துவமனை முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

- Post by Mr Mr. Gandhi1
- Post by Dayanand kumar paswan8
- ஒக்கேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்.1
- 100 நாட்கள் வேலை திட்டம் குறித்து பொய்யான தகவல்களை மட்டுமே திமுக அரசு மக்களுக்கு தெரிவித்து மோசமான போராட்டத்தை நடத்தியதாக கிருஷ்ணகிரியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு. தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் 42 வது நிகழ்ச்சியாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கிருஷ்ணகிரியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்., தமிழக மக்களுக்கு 525 பொய்யான வாக்குறுதிகளை ஸ்டாலின் கொடுத்து ஆட்சிக்கு வந்தார். தற்போது வரை 25 வாக்குறுதிகளை கூட நிறைவேற்ற வில்லை. பெண்களுக்கு 50 ஆயிரம் கடனுதவி, நீட் ரத்து, பெண்களுக்கு பாதுகாப்பு , அரசு ஊழியர்களுக்கு பென்சன், அனைத்து பெண்களுக்கும் உரிமைத் தொகை என எல்லா வாக்குறுதிகளையும் பொய்யாக கொடுத்து ஆட்சிக்கு வந்தது. மற்றும் 100 நாட்கள் வேலை திட்டம் குறித்து பொய்யான தகவல்களை மட்டுமே திமுக அரசு மக்களுக்கு தெரிவித்து மோசமான போராட்டத்தை நடத்தியது. ஆனால் மத்திய அரசு 125 நாட்களாக உயர்த்தி உள்ளது. திமுக அரசு அதனை மறைத்து மக்களை திசை திருப்புகிறது. 100 நாட்கள் வேலை நாட்களில் வேலைக்கு வராமல் திமுகவினர் பணத்தை எடுத்து கொள்கின்றனர். இதனை அறிந்த மத்திய அரசு, வேலைக்கு வருவோரின் கைரோகை பதிவு செய்தால் மட்டுமே பணம் என்று என்றது. எனவே யாரும் அச்சம் அடைய தேவையில்லை. திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தேசிய பொதுக் குழு உறுப்பினர் நரேந்திரன், மாநில துணை தலைவர் KP இராமலிங்கம் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அசோக்குமார், தமிழ்செல்வன் மற்றும் தமிழ்மாநில காங்கிரஸ், கட்சியின் நிர்வாகிகள் பலர் இருந்தனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- Post by Mr Mr. Gandhi1
- Post by Mr Mr. Gandhi1
- Post by Mr Mr. Gandhi1
- Post by Mr Mr. Gandhi1