தொழில்துறையில் பொன்விழா சாதனை-"லாட்டரி கிங்" சாண்டியாகோ மார்டின் 50 ஆண்டுகால வெற்றிப் பயணம் : மார்டின் துணைவியாரும், லால்குடி சட்டமன்ற உறுப்பினருமான லீமாரோஸ்மார்டின் பெருமிதம் எனது கணவரும், மார்டின் குழுமங்களின் தலைவருமான "லாட்டரிகிங்"சாண்டியாகோ மார்ட்டின் தொழில்துறையில் தனது 50 ஆண்டுகால சிறப்பான சாதனைப் பயணத்தை நிறைவு செய்ததை முன்னிட்டு, பாராட்டு விழா மற்றும் இந்த சாதனை பயணத்தில் எங்களுடன் பயணித்த ஊழியர்களுக்கு பரிசு வழங்கும் விழாவும் கடந்த 25.07.2026 சனிக்கிழமை மாலை கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எங்கள் மார்டின் குழுமங்களின் தலைமையகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் எங்களது மார்டின் குழும நிறுவனங்களில் 25 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் அர்ப்பணிப்புடனும் விசுவாசத்துடனும் பணியாற்றிய 50 ஊழியர்களுக்கு தலா ரூ,30 லட்சம் வழங்கி கௌரவித்தது, எங்கள் அனைவருக்கும் பெருமை அளிக்கிறது. இது ஒரு நிதி உதவி மட்டுமல்ல; எங்கள் மார்டின் குழுமத்தின் வளர்ச்சிப் பயணத்தில் தங்களது உழைப்பு, நேர்மை, அர்ப்பணிப்பு மற்றும் நம்பிக்கையைப் பகிர்ந்துகொண்ட ஒவ்வொரு பணியாளருக்கும் செலுத்தப்பட்ட மனமார்ந்த நன்றியின் வெளிப்பாடாகும். இந்த பெருமைமிகு நிகழ்வில் பயனடைந்த அனைத்து ஊழியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, எங்கள் குழுமத்தின் வளர்ச்சிப் பயணத்தில் உறுதுணையாக இருந்து வரும் ஒவ்வொரு பணியாளருக்கும் எனது அன்பும் நன்றியும் உரித்தாக்குகிறேன். மனிதர்களை மதிக்கும் இந்த உயரிய பண்பாட்டை என்றும் முன்னெடுத்து, பணியாளர்களின் நலனையும், அவர்களின் குடும்பங்களின் முன்னேற்றத்தையும் முன்னிருத்தி மார்டின் குழுமம் தனது பயணத்தை தொடர்ந்து மேற்கொள்ளும் என்று பெருமிதத்துடன் லீமாரோஸ்மார்டின் MLA கூறினார். மேலும் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக அண்ணாபூர்ணா குழுமங்களின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன், கே.ஜி. மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ஜி. பக்தவத்சலம், இலங்கையின் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் திரு. செந்தில் தொண்டமான் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு பணியாளர்களை வாழ்த்தி பாராட்டினர். இந்த விழாவில் குடும்ப உறுப்பினர்கள், நிறுவன நிர்வாகிகள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
தொழில்துறையில் பொன்விழா சாதனை-"லாட்டரி கிங்" சாண்டியாகோ மார்டின் 50 ஆண்டுகால வெற்றிப் பயணம் : மார்டின் துணைவியாரும், லால்குடி சட்டமன்ற உறுப்பினருமான லீமாரோஸ்மார்டின் பெருமிதம் எனது கணவரும், மார்டின் குழுமங்களின் தலைவருமான "லாட்டரிகிங்"சாண்டியாகோ மார்ட்டின் தொழில்துறையில் தனது 50 ஆண்டுகால சிறப்பான சாதனைப் பயணத்தை நிறைவு செய்ததை முன்னிட்டு, பாராட்டு விழா மற்றும் இந்த சாதனை பயணத்தில் எங்களுடன் பயணித்த ஊழியர்களுக்கு பரிசு வழங்கும் விழாவும் கடந்த 25.07.2026 சனிக்கிழமை மாலை
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எங்கள் மார்டின் குழுமங்களின் தலைமையகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் எங்களது மார்டின் குழும நிறுவனங்களில் 25 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் அர்ப்பணிப்புடனும் விசுவாசத்துடனும் பணியாற்றிய 50 ஊழியர்களுக்கு தலா ரூ,30 லட்சம் வழங்கி கௌரவித்தது, எங்கள் அனைவருக்கும் பெருமை அளிக்கிறது. இது ஒரு நிதி உதவி மட்டுமல்ல; எங்கள் மார்டின் குழுமத்தின் வளர்ச்சிப் பயணத்தில் தங்களது உழைப்பு, நேர்மை, அர்ப்பணிப்பு மற்றும் நம்பிக்கையைப் பகிர்ந்துகொண்ட ஒவ்வொரு பணியாளருக்கும்
செலுத்தப்பட்ட மனமார்ந்த நன்றியின் வெளிப்பாடாகும். இந்த பெருமைமிகு நிகழ்வில் பயனடைந்த அனைத்து ஊழியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, எங்கள் குழுமத்தின் வளர்ச்சிப் பயணத்தில் உறுதுணையாக இருந்து வரும் ஒவ்வொரு பணியாளருக்கும் எனது அன்பும் நன்றியும் உரித்தாக்குகிறேன். மனிதர்களை மதிக்கும் இந்த உயரிய பண்பாட்டை என்றும் முன்னெடுத்து, பணியாளர்களின் நலனையும், அவர்களின் குடும்பங்களின் முன்னேற்றத்தையும் முன்னிருத்தி மார்டின் குழுமம் தனது பயணத்தை தொடர்ந்து மேற்கொள்ளும் என்று பெருமிதத்துடன் லீமாரோஸ்மார்டின் MLA கூறினார். மேலும் இந்த
நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக அண்ணாபூர்ணா குழுமங்களின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன், கே.ஜி. மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ஜி. பக்தவத்சலம், இலங்கையின் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் திரு. செந்தில் தொண்டமான் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு பணியாளர்களை வாழ்த்தி பாராட்டினர். இந்த விழாவில் குடும்ப உறுப்பினர்கள், நிறுவன நிர்வாகிகள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
- கொடைக்கானல்-பூம்பாறை தூய்மை காவலர் ராமர் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி காத்திருப்பு போராட்டம். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறை அருகில் திண்டுக்கல் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம்.கொடைக்கானல் பூம்பாறை தூய்மை காவலர் ராமர் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் கொலையான ராமரின் பெற்றோர்களை மிரட்டும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூம்பாறை பகுதியில் விவசாயம் செய்து வரும் ராமர் இவரது தாய்,தந்தை பூம்பாறை ஊராட்சியில் தூய்மை காவலராக பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு கூர்மையான ஆயுதங்களால் கொடூரமாக ராமரை உடலில் பல இடங்களில் வெட்டிக்கொலை செய்துள்ளனர். கொடைக்கானல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.1
- 100 அடி தேசிய கொடி ஏற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் நினைவாக 100 அடி உயர தேசியக் கொடி ஏற்ற கோரிக்கை கடந்த 5 ஆண்டுகளாக அனுமதி மறுத்த மாவட்ட நிர்வாகம் நீதிமன்ற உத்தரவின்படி பெரியகுளத்தில் திரண்ட பொதுமக்கள் உண்ணாவிரதம் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ராணுவ வீரர் தியாகராஜன். இவர் கடந்த 2003-ஆம் ஆண்டு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் வீரமரணம் அடைந்தார். அவரது தியாகத்தை நினைவுகூரும் வகையிலும், எல்லையில் வீரமரணம் அடைந்த அனைத்து ராணுவ வீரர்களுக்கும் மரியாதை செலுத்தும் வகையிலும், தாமரைக்குளம் அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில் மலைப் பகுதியில் 100 அடி உயர தேசியக் கொடி அமைக்க அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முடிவெடுத்தணர். இதற்காக மாவட்ட நிர்வாகம், காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினரிடம் கடந்த 5 ஆண்டுகளாக அனுமதி கேட்கப்பட்டும், தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பெரியகுளம் நகராட்சி அலுவலகம் அருகே அமைதியான முறையில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது. மேலும் நீதிமன்ற உத்தரவின்படி, தாமரைக்குளம் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். போராட்டத்தின் தொடக்கமாக, வீரமரணம் அடைந்த தியாகராஜனின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நாட்டிற்காக உயிர்நீத்த வீரருக்கு மரியாதை செய்யக் கூட 5 ஆண்டுகளாக அனுமதி மறுப்பது மிகுந்த வேதனையளிப்பதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கவலை தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, 100 அடி உயர தேசியக் கொடியை ஏற்ற அனுமதி வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். நாட்டின் பாதுகாப்புக்காக உயிரைக் கொடுத்த தியாகிக்கு மரியாதை செலுத்தும் வகையில் தேசியக் கொடி ஏற்றக் கேட்கிறோம். இதற்கு 5 ஆண்டுகளாக அனுமதி தராமல் அலைக்கழிப்பது வேதனை தருகிறது. அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்." பேட்டி : சரவணன் முன்னால் ராணுவ வீரர்.1
- எங்க பேர்ல கேஸ் போட இந்த உலகத்திலேயே எந்த போலீசும் இல்லை. சும்மா தில்லா களவாடின எலி நகை கடையில் தங்கம் "திருடிய" எலி - புடிங்க சார் அவன..புடிச்சு ஜெயில்ல போடுங்க சார் கர்நாடகா - தும்கூரில் உள்ள ஒரு நகைக்கடையில் வியாழன் கிழமை காலை ஊழியர்கள் பொருட்களை சரிபார்த்தபோது 10 தங்க மோதிரங்கள் மற்றும் 2 தங்க செயின்கள் காணவில்லை என தெரியவந்தது. முதலில் திருட்டு நடந்ததா என CCTV-யை பார்த்தார்கள். அதில் சந்தேகம் எதுவும் இல்லை. பிறகு இன்னொரு ட்ரே-யில் நகை டேக் மட்டும் காணவில்லை என்பதை பார்த்து சந்தேகம் வந்தது. அதனால் இரவு முழுவதும் உள்ள CCTV-யை மீண்டும் பார்தார்கள். அப்போது அதிகாலை 4 மணிக்கு ஒரு எலி தங்க மோதிரத்தை இழுத்துக்கொண்டு போவது பதிவாகி இருந்தது. அந்த எலி ஒவ்வொரு நகையாக கடைக்குள் இருந்த பெரிய துளைக்குள் தூக்கி சென்றிருப்பது தெரிந்தது உடனே ஊழியர்கள் அந்த துளையை தோண்டி பார்ததில், தொலைந்த 10 மோதிரங்கள் மற்றும் 2 செயின்கள் அனைத்தும் அதற்குள் இருந்து மீட்கப்பட்டன. தங்கம் விக்கிற விலையில் எலிக்கு கூட தங்கத்து மேல ஆசை வந்துடுச்சு போல1
- ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு அருள்மிகு கௌமாரியம்மன் சிறப்பு பூஜை *ஆடி மாதத்தை முன்னிட்டு பிரசித்தி பெற்ற வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்* தேனி மாவட்டம் தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது . மிகவும் புகழ்பெற்ற பழ நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருக்கோயிலில் இன்று ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனை தரிசனம் செய்வதற்கு காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்தனர். அம்மனுக்கு பட்டுடுத்தி சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த கௌமாரியம்மன் தரிசனம் செய்வதற்காக பெண்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர் . பக்தர்களின் வசதிக்கேற்ப கோயில் அறநிலையத்துறை சார்பில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டும் பொதுமக்கள் ஒரே வரிசையில் சென்று வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பிற்காக வீரபாண்டி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் . காப்புக் கட்டி விரதம் ஏற்பட்ட பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து கோயில் வளாகத்தில் திருவிளக்கை ஏற்றிச் சென்றனர்.1
- பொரசல்பட்டி கிராமத்தில் ஆடி மாத கூழ் ஊற்றும் விழா நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் பொரசல்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள புடவைக்காரியம்மன், கருப்பனார் சுவாமி ஆலயத்தில் ஆடி மாத கூழ் ஊற்றும் விழா. ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இவ்வாலயத்தில் உள்ள தெய்வங்களுக்கு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன. பொதுமக்கள் அம்மன் தரிசனம் பெற்று அம்பாளுக்கு படைக்கப்பட்ட கூழ் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டன. கூழ் கூற்றும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.1
- தவெக அரசுக்கு எதிராக விவசாயிகளை திரட்டி போராட்டம்! இபிஎஸ் அறிவிப்பு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்தில் இருந்து விமான மூலம் சென்னை செல்வதற்கு முன் சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறும் போது, தமிழக வெற்றிக்கழக அரசு தேர்தல் வாக்குறுதியின் அளித்தபடி விவசாயிகளின் முழு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், மேலும் கடன் தள்ளுபடி காண அறிவிப்பு நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அறிவிக்க வேண்டும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடு விளையாடுவதை விட்டுவிட்டு முதல்வர் மௌனத்தை கலைத்து விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், ஒருவேளை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய அறிவிப்பு தவறும் பட்சத்தில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளையும் ஒன்றிணைத்து அதிமுக சார்பில் விரைவில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.1
- ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் ஸ்ரீராமபுரத்தில் மீண்டும் மோர் மிளகாய் கழிவுகள் கொட்டப்பட்டதால் பரபரப்பு-* *அதிகாரிகள் நேரில் ஆய்வு, காவல்துறையினர் விசாரணை திண்டுக்கல், ஜூலை 31: திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டத்திற்குட்பட்ட ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் ஸ்ரீராமபுரம் பகுதியில் இயங்கி வரும் மோர் மிளகாய் நிறுவனங்களை நிரந்தரமாக மூடக்கோரி, கடந்த 28/07/2026 மூன்று நாட்களுக்கு முன்பு அகில இந்திய விவசாய சங்கம் தலைமையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில், விவசாய நிலங்களிலும் வனத்துறைக்குச் சொந்தமான பகுதிகளிலும் மோர் மிளகாய் கழிவுகள் கொட்டப்படுவதால் நிலத்தடி நீர் மாசுபடுவதுடன், சுற்றுச்சூழல் மற்றும் விவசாயத்திற்கும் கடுமையான பாதிப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், போராட்டம் நடைபெற்ற மூன்று நாட்களிலேயே மீண்டும் அதே பகுதிகளில் தனியார் விவசாய நிலங்களிலும், வனத்துறைக்குச் சொந்தமான நிலங்களிலும் மோர் மிளகாய் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கழிவுகள் கொட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், உடனடியாக அகில இந்திய விவசாய சங்க நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, விவசாய சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஸ்ரீராமபுரம் பேரூராட்சி செயல் அலுவலருக்கு உடனடியாக புகார் அளித்தனர். புகாரின் பேரில், ஸ்ரீராமபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கல்பனா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது கழிவுகள் கொட்டப்பட்டுள்ள இடங்களை பார்வையிட்டு, சம்பவம் தொடர்பாக தகவல்களை சேகரித்தார். இதனைத் தொடர்ந்து ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, மோர் மிளகாய் கழிவுகளை சட்டவிரோதமாக கொட்டியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் கழிவுகளை கொட்டுவதை நிரந்தரமாக தடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். ஸ்ரீராமபுரம் பகுதியில் மீண்டும் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் விவசாயிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் எடுக்கவுள்ள நடவடிக்கை மீது அப்பகுதி மக்களின் கவனம் திரும்பியுள்ளது..1