Shuru
Apke Nagar Ki App…
தேனி மாவட்டத்திலுள்ள அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்: தேனி மாவட்ட அணைகளின் (ஆக-01) நீர்மட்டம்: வைகை அணை: 33.79 (71) அடி, வரத்து: 99 க.அடி, திறப்பு: 86 க.அடி, பெரியாறு அணை: 113.70 (142) அடி, வரத்து: 2650 க.அடி, திறப்பு: 256 க.அடி, மஞ்சளார் அணை: 29.70 (57) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 54.28 (126.28) அடி, வரத்து: இல்லை, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 26.25 (52.55) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை.
Theni Godwin
தேனி மாவட்டத்திலுள்ள அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்: தேனி மாவட்ட அணைகளின் (ஆக-01) நீர்மட்டம்: வைகை அணை: 33.79 (71) அடி, வரத்து: 99 க.அடி, திறப்பு: 86 க.அடி, பெரியாறு அணை: 113.70 (142) அடி, வரத்து: 2650 க.அடி, திறப்பு: 256 க.அடி, மஞ்சளார் அணை: 29.70 (57) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 54.28 (126.28) அடி, வரத்து: இல்லை, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 26.25 (52.55) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை.
More news from தமிழ்நாடு and nearby areas
- வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் கீழ் வைகை கூட்டு குடிநீர் தொட்டி... மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வைகை கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கடந்த சுமார் ஒரு வருடமாய்நடந்த பணிகளில் போடிநாயக்கன்பட்டி செல்லும் பாதையில் காவுவாங்க காத்திருக்கும் குழி என்று கடந்தபத்துநாளுகளுக்கு முன்பு நம் ஸ்குரு ஆஃப் நியூஸ் சுட்டிக்காட்டி வெளியிட்டிருந்தோம் அதன் எதிரொலியாக வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் சரிசெய்தது பொதுமக்கள் பலரும் நிர்வாகத்தை பாராட்டினர்1
- திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் நிலமோசடி சம்பந்தமாக சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் அவர்கள் இரண்டாவது நாளாக சிபிசிஐடி காவல்துறையினரிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்1
- புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட எம்எல்ஏ மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சேடபட்டி மணிமாறன் அவர்கள் செக்காணூரணியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய பணிகளை பார்வையிட்டதோடு, ஆ.கொக்குளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் முக்கியஸ்தர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி விரைந்து தீர்வு காணும் படி அறிவுறுத்தினார். உடன் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் இருந்தனர்.1
- ஸ்ரீராமர் ஆலயத்தில் பெண்கள் 108 திருவிளக்கு பூஜை செய்தனர் சிங்கம்புணரி அண்ணா நகரில் உள்ள ஸ்ரீராமர் ஆலயத்தில் இன்று மூன்றாவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு பெண்கள் 108 திருவிளக்கு பூஜை செய்தனர். நல்ல மழை, நோயற்ற வாழ்வு, மாங்கல்ய பலம், குழந்தைகள் கல்வி ஆகியவற்றிற்காக விரதம் இருந்து குத்துவிளக்கு பூஜை செய்தனர். குங்கும அர்ச்சனை, லலிதா சகஸ்ரநாமம், மகாலட்சுமி பூஜைக்குப் பிறகு அன்னை சீதாதேவிக்கும் மூலவர்களுக்கும் மகாதீபாரத்தி காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.1
- தேவகோட்டை அருகே கோவில் திருவிழா முன்னிட்டு உலக நன்மை வேண்டி விளக்கு பூஜை நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள ஆவரங்காடு முத்துமாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாத திருவிழா முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்த புனித ஆடி மாதத்தில், உலக நன்மை மற்றும் அனைவரின் நலனை வேண்டி சிறப்பு திருவிளக்கு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டது. பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் கோவிலுக்கு வந்து வழிபட்டனர்.உலக அமைதி, நல்வாழ்வு, மற்றும் அனைவரின் நலனுக்காகவும் இந்த சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பக்தர்கள் தங்கள் குடும்ப நலனுக்காகவும், சமுதாய நன்மைக்காகவும் அம்மனை வேண்டி வழிபட்டனர்.1
- திண்டுக்கல் மாநகராட்சி ஆணையரின் வேண்டுகோள் ஆத்தூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து உள்ளதால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்1
- வெளிமாநிலங்களுக்கு கனிம வளங்களை அனுப்ப தடை விதித்திருப்பது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும், அந்தத் தடை நிரந்தரமாக தொடருமா என்பது குறித்து தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு முதல்வர் விஜய் முடிவு எடுப்பார் என்றும் சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு தெரிவித்தார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கிரவல் மண் குவாரிகள் தொடர்பாக பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அரசின் புதிய கொள்கை முடிவுகள் அடுத்த வாரம் வெளியாகும் என்றும் கூறினார். மேலும், மண்பாண்ட தொழிலாளர்கள் மண் எடுப்பதில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அதற்கான தீர்வுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். முதல்வர் விஜயின் ஊழலற்ற ஆட்சி இலக்கை வெற்றிகரமாக செயல்படுத்த அதிகாரிகளின் முழுமையான ஒத்துழைப்பு அவசியம் என்பதை இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தியதாக அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு கூறினார்.1
- தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் வீ த லீடர்ஸ் சார்பில் போதை இல்லா தமிழகம் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக மாணவர்கள் ஸ்கேட்டிங் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியை மாவட்ட வீ த_க்ஷ லீடர்ஸ் தன்னார்வலர்கள் மற்றும் சுமு முருகன், மாடசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்1
- சுருளி அருவியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் சுருளி அருவி அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகவும் ஆன்மீக தலமாகவும் உள்ள இந்த சுருளி அருவிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் வருகை தந்து அருவியில் குளித்துவிட்டு அங்குள்ள சிவாலயங்களில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாததால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு சுருளி அருவிக்கு தண்ணீர் இன்றி வெறும் பாறையாக காட்சியளித்து வந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று இரவு சுருளி அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரிசி பாறை, ஈத்தக்காடு, தூவானம் அணை, மற்றும் ஆற்றுப் பகுதிகளில் அதிக அளவில் கனமழை பெய்து அருவிக்கு வரும் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவியில் வெள்ள நீர் பெருக்கெடுத்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி அருவியில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தொடர் தடை விதித்துள்ளனர். மேலும் நீர்வரத்து சீராகும் வரை சுருளி அருவிப்பகுதிக்கு யாரும் வர வேண்டாம் என வனத்துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். சுருளி அருவிப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அருவியில் குளிப்பதற்காக வருகை தந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.1