திருப்பத்தூர் மாவட்டத்தில் நகராட்சி ஊழியர்கள் போராட்டம் *தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி ஊழியர்கள் இன்று ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டம்* தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (27.08.2026) புதன்கிழமை ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெறுகிறது. *போராட்டத்திற்கான 6 முக்கிய கோரிக்கைகள்:* *01.* நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். *02.* பணியிட மாற்றங்கள் மற்றும் பதவி உயர்வு மாற்றங்கள் கலந்தாய்வு மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும். *03.* அரசாணை எண்.152 மற்றும் அரசாணை எண்.10-ன்படி அலுவலக உதவியாளர், வருவாய் உதவியாளர், கண்காணிப்பாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்கள் மற்றும் தூய்மை பணியாளர் பணியிடங்கள் வழங்கிட வேண்டும். *04.* ஆய்வு கூட்டங்களை சனி, ஞாயிறு, அரசு விடுமுறை நாட்கள் மற்றும் அலுவலக நேரம் கடந்து ஆய்வு கூட்டம் நடத்துவதை கைவிட வேண்டும். *05.* தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 2023-ன்படி பணி விதிகளால் நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களுக்கு பதவி உயர்வு இல்லாத நிலை உள்ளது. பணி விதிகளில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு பதவி உயர்வு கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். *06.* காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும், எல்லை விரிவாக்கப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். நமது உரிமை - நமது குரல் - நமது எதிர்காலம் என்ற முழக்கத்துடன் இந்த போராட்டம் நடைபெறுகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நகராட்சி ஊழியர்கள் போராட்டம் *தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி ஊழியர்கள் இன்று ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டம்* தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (27.08.2026) புதன்கிழமை ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெறுகிறது. *போராட்டத்திற்கான 6 முக்கிய கோரிக்கைகள்:* *01.* நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். *02.* பணியிட மாற்றங்கள் மற்றும் பதவி உயர்வு மாற்றங்கள் கலந்தாய்வு மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும். *03.* அரசாணை எண்.152 மற்றும் அரசாணை எண்.10-ன்படி அலுவலக உதவியாளர், வருவாய் உதவியாளர், கண்காணிப்பாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்கள் மற்றும் தூய்மை பணியாளர் பணியிடங்கள்
வழங்கிட வேண்டும். *04.* ஆய்வு கூட்டங்களை சனி, ஞாயிறு, அரசு விடுமுறை நாட்கள் மற்றும் அலுவலக நேரம் கடந்து ஆய்வு கூட்டம் நடத்துவதை கைவிட வேண்டும். *05.* தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 2023-ன்படி பணி விதிகளால் நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களுக்கு பதவி உயர்வு இல்லாத நிலை உள்ளது. பணி விதிகளில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு பதவி உயர்வு கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். *06.* காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும், எல்லை விரிவாக்கப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். நமது உரிமை - நமது குரல் - நமது எதிர்காலம் என்ற முழக்கத்துடன் இந்த போராட்டம் நடைபெறுகிறது.
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் தேவலாபுரம் ஊராட்சியில் தனியார் கம்பனி கேட்டில் நாய் சிக்கியது தீ அணைப்பு வீரர்கள் நாயை மீட்டனர் *திருப்பத்தூர் மாவட்டம்* *தேவலாபுரத்தில் தொழிற்சாலை கேட்டில் சிக்கிய நாய் - தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்* திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகா, மாதனூர் ஒன்றியம், தேவலாபுரம் ஊராட்சியில் இன்று (ஆகஸ்ட் 26) தனியார் தொழிற்சாலை ஒன்றின் இரும்பு கேட்டில் நாய் ஒன்று சிக்கிக்கொண்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் தீயணைப்பு வீரர்கள், பணியாளர்கள் உதவியுடன் கட்டர் மூலம் கேட் கம்பியை அறுத்து நாயை பத்திரமாக உயிருடன் மீட்டனர். தீயணைப்பு வீரர்களின் மனித நேயமிக்க செயலை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.1
- தமிழ்நாட்டில் எச்சரிக்கை அவசியம். நேபாளத்தில் ஏற்பட்டதாக பகிரப்படும் இந்த அதிர்ச்சியூட்டும் காணொளியில், மலைப்பகுதியில் திடீரென பெருக்கெடுத்து வரும் மண் மற்றும் வெள்ளநீர், குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களை சூழ்ந்து அடித்துச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இயற்கை சீற்றம் ஏற்படும் நேரங்களில் நீரின் இயல்பான பாதையை ஆக்கிரமிப்பது எவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த காட்சிகள் உணர்த்துகின்றன. நீர்வழிப்பாதைகளின் இருபுறமும் குறைந்தபட்சம் 50 மீட்டர் வரை எந்தவிதமான கட்டுமானங்களுக்கும் அனுமதி வழங்கக் கூடாது என்ற கருத்தும் இதில் வலியுறுத்தப்படுகிறது. குறிப்பாக மலைப்பிரதேசங்களில், நில அமைப்பு மற்றும் மழைப்பொழிவை கருத்தில் கொண்டு இந்த பாதுகாப்பு இடைவெளி மேலும் அதிகமாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. நீர்வழிப்பாதைகளை ஆக்கிரமித்து கட்டப்படும் வீடுகள், கட்டிடங்கள் மற்றும் பிற கட்டுமானங்களை அரசு அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து, சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் இருப்பின் பாரபட்சமின்றி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்காமல் விட்டால், இயற்கை பேரிடர்கள் ஏற்படும் நேரத்தில் அந்த ஆக்கிரமிப்புகளே மிகப்பெரிய பாதிப்புகளுக்கு காரணமாக மாறக்கூடும். இயற்கை தனது பாதையை மீட்டெடுக்கும் போது ஏற்படும் சேதங்களை பணத்தால் ஈடு செய்ய முடிந்தாலும், மனித உயிரிழப்புகளை ஒருபோதும் ஈடு செய்ய முடியாது. எனவே, நேபாளத்தில் பகிரப்படும் இந்த பேரிடர் காட்சிகளை ஒரு எச்சரிக்கை பாடமாக எடுத்துக்கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள நீர்வழிப்பாதைகள், ஓடைகள், கால்வாய்கள் மற்றும் மழைநீர் செல்லும் இயற்கை வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக கண்டறிந்து அகற்ற வேண்டும். குறிப்பாக மலை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். “இயற்கையின் பாதையை மறிக்காதீர்; இல்லையெனில் பேரிடர் நேரத்தில் அதன் விளைவுகளை மனிதர்களே சந்திக்க நேரிடும்” என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடமும், அதிகாரிகளிடமும் ஏற்படுத்துவது அவசியமாகிறது.1
- கிருஷ்ணகிரி பாரிஸ் நகரில் சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கிருஷ்ணகிரி அருகே பாரிஸ் நகரில் சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகளின் அறிமுகக் கூட்டம் நடைப்பெற்றது நுகர்வோர் சங்கத்தின் முன்னாள் மாநில நிர்வாகி திருமதி குமுதா தலைமையில் நடைப்பெற்றது1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்1
- காரிமங்கலம் ஸ்ரீ அம்பிகேஸ்வரி அம்மன் கோவிலில் ஆணி அவிட்ட நிகழ்ச்சி! காரிமங்கலம், ஆக .27, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வாணியர் ஸ்ரீ அம்பிகேஸ்வரி அம்மன் கோவிலில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி சிறப்பு ஹோமம் மற்றும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் 25 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பூணூல் மாற்றி சிறப்பு பூஜை செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை வாணியர் சங்க தலைவர் முன்னாள் கவுன்சிலர் பிரகாஷ் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்1
- பாலக்கோட்டில் முறைகேடாக செயல்படும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையமா? – நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக புகார். மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்ய கோரிக்கை தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு போக்குவரத்து பணிமனை அருகே சமீபகாலமாக செயல்பட்டு வரும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தண்ணீர் பற்றாக்குறை நிலவும் பகுதியில் ஆழ்துளை கிணறு மூலம் அதிகளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி, மாவட்ட ஆட்சியர் உரிய ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான எர்ரனஅள்ளி, கரகதஅள்ளி, பேளாரஅள்ளி உள்ளிட்ட ஊராட்சிப் பகுதிகள் வறட்சியின் தாக்கத்தை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இப்பகுதிகளில் போதிய மழையின்மை மற்றும் நீராதாரங்கள் குறைந்து வருவதால், விவசாயம் மேற்கொள்வதில் விவசாயிகள் சிரமம் அடைந்து வருவதுடன், கால்நடைகளுக்கு தேவையான தண்ணீரை வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டு வருவதாகவும், சில பகுதிகளில் குடிநீருக்காக பொதுமக்கள் சிரமப்படுவதாகவும் சமூக ஆர்வலர் தெரிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில், பாலக்கோடு அரசு போக்குவரத்து பணிமனை அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருவதாகவும், அங்கு ஆழ்துளை கிணறு மூலம் தினசரி பல ஆயிரம் லிட்டர் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு, சுத்திகரிப்பு செய்யப்பட்ட பின்னர் விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பாலக்கோடு அவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன், மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறை நிலவி வரும் பாலக்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீரை வணிக நோக்கத்திற்காக அதிகளவில் உறிஞ்சினால், அதன் தாக்கம் பொதுமக்களின் குடிநீர் ஆதாரங்களிலும் ஏற்படும் என தெரிவித்துள்ளார். குறிப்பாக, வீடுகள் மற்றும் விவசாய பயன்பாட்டிற்காக பொதுமக்கள் அமைத்துள்ள ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து வருவதாகவும், இதே நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் அந்த ஆழ்துளை கிணறுகளும் வறண்டு போகும் அபாயம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், வணிக நோக்கில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவதற்கு சம்பந்தப்பட்ட துறைகளின் உரிய அனுமதிகள் பெறப்பட்டுள்ளதா, நிலத்தடி நீரை எடுப்பதற்கான அனுமதி உள்ளதா, அனுமதி பெற்ற இடத்திலேயே சுத்திகரிப்பு நிலையம் செயல்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அனுமதி பெற்ற இடம் வேறு பகுதியாக இருந்து, பாலக்கோடு நகரப் பகுதியில் வேறு இடத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வந்தால், அது தொடர்பாகவும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும், குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடு காரணமாக சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால், மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்பு, குடிநீர் வழங்கல் மற்றும் நிலத்தடி நீர் தொடர்புடைய அதிகாரிகளை கொண்டு சம்பந்தப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நேரில் ஆய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆய்வின்போது, நிலையத்திற்கு தேவையான அனைத்து அரசு அனுமதிகளும் பெறப்பட்டுள்ளதா, நிலத்தடி நீர் எடுக்க அனுமதி உள்ளதா, எவ்வளவு அளவு தண்ணீர் உறிஞ்சப்படுகிறது, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எவ்வாறு விற்பனை செய்யப்படுகிறது உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர் தெரிவித்துள்ளார். தண்ணீர் பற்றாக்குறை நிலவும் பகுதியில் வணிக நோக்கத்திற்காக நிலத்தடி நீர் அதிகளவில் உறிஞ்சப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக விசாரணை நடத்தி, விதிமீறல்கள் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.1
- RDO அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பெண் உடலில் சாமி இறங்கிய சம்பவம் : கத்தி கூச்சலிட்டு பெண்ணால் பரபரப்பு நிலவியது. கடத்தூர் அருகே கோவில் வழிபாடு தொடர்பான இருகிராமங்களுக்கு இடையிலான அமைதி பேச்சுவார்த்தை ஒத்தி வைப்பு - RDO அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பெண் உடலில் சாமி இறங்கிய சம்பவம் : கத்தி கூச்சலிட்டு பெண்ணால் பரபரப்பு நிலவியத1
- காணாமல் போன மலைகள் குறித்து அமைச்சர் பேச்சு. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் என குறிப்பிட்டது மக்களிடையே அதிர்ச்சி காணாமல் போன மலைகள்” ,மலை வளங்கள் அழிக்கப்பட்டு வருவது குறித்து அமைச்சர் புகைப்படங்களுடன் கூடிய ஆதாரங்களை சுட்டிக்காட்டி விளக்கமாகப் பேசினார். அப்போது, மலைகள் மற்றும் இயற்கை வளங்கள் தொடர்பான புகைப்படங்களை சட்டசபையில் காண்பித்து, அவற்றின் தற்போதைய நிலை குறித்தும் அமைச்சர் எடுத்துரைத்தது சமூக வலைத்தளங்களில் பரவியது . இதில், #திருப்பத்தூர் மாவட்டம் – #ஆம்பூர் எனக் குறிப்பிட்டு அமைச்சர் பேசியது திருப்பத்தூர் மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம்பூர் பகுதியில் மலை வளங்கள் மற்றும் இயற்கைச் சூழல் தொடர்பாக அமைச்சர் குறிப்பிட்டுள்ள தகவல்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் தற்போது கவனம் ஏற்பட்டுள்ளது. அமைச்சர் குறிப்பிட்ட புகைப்படங்கள் மற்றும் அதன் பின்னணி குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.1