குண்டடம் ஒன்றியத்திற்குட்பட்ட நியாய விலை கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் குண்டடம் ஒன்றியத்திற்குட்பட்ட 47 நியாய விலை கடைகளில் சுமார் 21329 ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்கம் 3000 ரூபாய் வழங்கப்பட்டது இதில் குண்டடம் நியாய விலை கடையில் ருத்ராவதி பேரூர் கழக செயலாளர் திரு அன்பரசு அவர்கள் தொகுப்பை வழங்கினார். இதில்கொ.ம. தே க மாவட்ட செயலாளர் நந்தகுமார், பேரூர் கழக அவைத்தலைவர் கண்ணகுமார் அவர்கள், மாவட்ட பிரதிநிதிகள் தங்கவேல், நந்தகோபால், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் ராமசாமி, பேரூர் இளைஞர் அணி துணை அமைப்பாளர் விஸ்வநாதன், பவித்ரன், கோகுலகிருஷ்ணன், ஒன்றிய பிரதிநிதிகள் ராமசாமி, சண்முகசுந்தரம், வார்டு செயலாளர்கள் சுப்பராயன், குழந்தைவேல், சிவசுப்பிரமணியன், IT விங் ஒருங்கிணைப்பாளர் சக்தியமூர்த்தி, விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் க. கார்த்தி, பேரூர் நிர்வாகிகள் கிருஷ்ணன், மோகன்தாஸ் பலரும் கலந்து கொண்டனர்.
குண்டடம் ஒன்றியத்திற்குட்பட்ட நியாய விலை கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் குண்டடம் ஒன்றியத்திற்குட்பட்ட 47 நியாய விலை கடைகளில் சுமார் 21329 ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்கம் 3000 ரூபாய் வழங்கப்பட்டது இதில் குண்டடம் நியாய விலை கடையில் ருத்ராவதி பேரூர் கழக செயலாளர் திரு அன்பரசு அவர்கள் தொகுப்பை வழங்கினார். இதில்கொ.ம. தே க மாவட்ட செயலாளர் நந்தகுமார், பேரூர் கழக அவைத்தலைவர் கண்ணகுமார் அவர்கள், மாவட்ட பிரதிநிதிகள் தங்கவேல், நந்தகோபால், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் ராமசாமி, பேரூர் இளைஞர் அணி துணை அமைப்பாளர் விஸ்வநாதன், பவித்ரன், கோகுலகிருஷ்ணன், ஒன்றிய பிரதிநிதிகள் ராமசாமி, சண்முகசுந்தரம், வார்டு செயலாளர்கள் சுப்பராயன், குழந்தைவேல், சிவசுப்பிரமணியன், IT விங் ஒருங்கிணைப்பாளர் சக்தியமூர்த்தி, விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் க. கார்த்தி, பேரூர் நிர்வாகிகள் கிருஷ்ணன், மோகன்தாஸ் பலரும் கலந்து கொண்டனர்.
- திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் ஊராட்சிக்கு உட்பட்ட சூரியநல்லூர் அருகே திமுக விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பாக குண்டடம் ஒன்றியம் திருப்பூர் கிழக்கு மாவட்டம் சார்பாக மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது அதன் பின்னர் பெண்களுக்கு கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றது இதில் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் மற்றும் பெண்கள் பலர் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்1
- தாராபுரத்தை சேர்ந்த சமூக சேவகருக்கு சேவை நாயகன் விருது ஜன.9 கோவையில் பிரமாண்ட ஹோட்டலில் சாதனையாளர்களுக்கு (வாகை) விருது வழங்கும் விழா நடைபெற்றது இதில் பிரபல திரைபட நடிகர் வையாபுரி அவர்கள் கலந்து கொண்டு ஒவ் ஒரு துறையிலும் சாதித்தவர்களுக்கு பாராட்டி அவர்களை கௌரிவித்து அவர்களை மென்மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது விழாவில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த சமூக சேவகரும் தினதளம் பத்திரிக்கை நிருபருமான ரஜினிகுமார் அவர்களின் 15 ஆண்டு கால சமூக சேவையை பாராட்டி 2026 ஆம் ஆண்டின் சேவை நாயகன் விருது வழங்கப்பட்டது அவர் இதற்கு முன் சமூக சேவகர் சேவை செம்மல் அண்ணல் அம்பேத்கர் போன்ற விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது2
- இரவு வணக்கம்1
- தமிழ்நாட்டில் சில இடங்களில் 10/01/26 மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மைய அறிவிப்பு வெளியிடபட்டது போல திருச்செங்கோடு பகுதியில் லேசான மழை தூறல்கள் பெய்து வருகிறது1
- தேனியில் நடைபெறும் மாநில அளவிலான கைப்பந்து போட்டிகளை உற்சாகமாக கண்டு ரசிக்கும் இளைஞர்கள். தேனியில் உள்ள தனியார் விளையாட்டு கழகம் சார்பில் முதலாமாண்டு மாநில அளவிலான கைப்பந்து போட்டிகள் இன்றும் நாளை என 2 நாட்கள் நடத்தப்படுகின்றன. தேனி என்.ஆர்.டி. நகரில் உள்ள காமராஜர் பூங்கா மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் மதுரை, கோயமுத்தூர், திருச்சி, சேலம், சென்னை என மாநில அளவிலான சுமார் 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. நாக் அவுட் முறையில் பகல் - இரவு ஆட்டமாக மின்னொளி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியை தேனி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சிறுவர்கள், இளைஞர்கள் என விளையாட்டு வீரர்கள் உற்சாகமாக கண்டு ரசிக்கின்றனர். போட்டிகளில் வெற்றி பெறும் முதல் 4 அணிகளுக்கு பரிசுத் தொகை மற்றும் கோப்பைகள் வழங்கப்பட உள்ளன.1
- திண்டுக்கல் மாவட்டம் இராமலிங்கப்ட்டியில் அமைந்துள்ள பாதாள செம்பு முருகன் திருக்கோவிலில் மார்கழி மாத 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது இதில் அமிர்தா வித்யாலயம் பள்ளி குழந்தைகள் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் திண்டுக்கல் மாவட்டம் இராமலிங்கம்பட்டி அமைந்துள்ள புகழ்பெற்ற பாதாள செம்பு முருகன் ஆலயத்தில் இன்று மார்கழி மாதத்தை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திண்டுக்கல் எஸ். காமாட்சிபுரம் பிரிவு பகுதியில் அமைந்துள்ள அமிர்தா வித்யாலயம் பள்ளியில் இருந்து 200 பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள், குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இந்த பூஜையானது குழந்தைகளின் கல்வி, மங்களம் பெருகவும், ஆரோக்கியம், செல்வம் பெருகும் . தீமைகள் நீங்கும் என்பது ஐதீகம் ஆகும். தீபத்தை ஏற்றி முதலில் கணபதி பூஜை பின்னர் குலதெய்வம், முருகப்பெருமானை மனதால் நினைத்து வழிபட்டார்கள். பூஜையில் கலந்து கொண்ட அனைத்து பள்ளிக் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகளின் பெற்றோர்கள் அனைவருக்கும் பாதாள செம்பு முருகன் திருக்கோவில் சார்பாக இந்த வருடத்திற்கான காலண்டர் மற்றும் முருகனின் புகைப்படம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.1
- *ஊதிய உயர்வு, பணி பாதுகாப்பு உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி* *ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் ஐந்தாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்* தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஐந்தாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்களுக்கு அடிப்படை ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மாவட்ட அலுவலகத்தில் இருந்து பணியாளர்களுக்கு நேரடியாக வங்கி கணக்கில் ஊதியம் வழங்கப்பட வேண்டும் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு மற்றும் பணி நிரந்தரம் வழங்க வேண்டும் காலை உணவு திட்டத்தில் பணி புரியும் பணியாளர்களுக்கு சத்துணவு சட்ட பணியாளர்களுக்கு இணையான மதிப்பூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதாரப் பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஐந்தாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்1
- திருப்பூர் மாவட்டம் தாராபுரம் – பொள்ளாச்சி சாலையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள ஜீட்ஸ் கிரிக்கெட் அகாடமி – டிசிசி (JEET’S CRICKET ACADEMY – DCC) தொடக்க விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவினை தாராபுரம் தி.மு.க ஒன்றிய பெருந்தலைவர் எஸ்.வி.எஸ் (எ) எஸ்.வி.செந்தில்குமார் & நகரச் செயலாளர் முருகானந்தம் ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார்.1