*தூத்துக்குடி மாவட்டம் : 12.08.2025* *தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கத்தியால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டிருந்த போது தன் உயிரை பணையம் வைத்து அசம்பாவிதம் நடக்காமல் தடுத்து நிறுத்தி துரிதமாக செயல்பட்ட பெண் சார்பு ஆய்வாளருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு.* *தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி. தரணியா நேற்று (11.08.2025) தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் ரோட்டில் உள்ள ஒரு மஹால் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அங்குள்ள ஒரு டீக்கடை முன்பாக இரண்டு நபர்கள் ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கிக் கொண்டிருந்துள்ளனர். இதனைக் கண்ட மேற்படி சார்பு ஆய்வாளர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி அசம்பாவிதம் நடைபெறாமல் தடுத்தும், மேலும் காயம்பட்ட இருவரையும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தும் துரிதமாக செயல்பட்டார்.* *மேலும் இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.* *மேற்படி சம்பவத்தில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் விரைந்து செயல்பட்டு அசம்பாவிதத்தை தடுத்து நிறுத்தியும், காயம்பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தும் சிறப்பாக செயல்பட்ட சார்பு ஆய்வாளர் திருமதி. தரணியாவை இன்று (12.08.2025) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.*

- ♦️மாண்புமிகு துணை முதலமைச்சர் கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48 -வது பிறந்தநாள் மற்றும் திராவிட பொங்கலை முன்னிட்டு 11.01.2026 அன்று காலை 11மணியளவில், டவுன் அருணகிரி தியேட்டர் அருகில் லிட்டில் பிலோவேர் மெட்ரிகுலேஷன் பள்ளி மைதானத்தில் நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர், பாளை சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் மு. அப்துல் வஹாப் அவர்கள் தலைமையில் 1000 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை வட்ட கழக செயலாளர் களுக்கு , சட்டை, T. சர்ட் வழங்கும் நிகழ்ச்சி சீறும் சிறுப்புடன் நடைபெற்றது கலந்து கொண்ட கழக நிர்வாகிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி🙏 ♦️KR. ராஜூ* ♦️துணை மேயர் - ⭐திருநெல்வேலி மாநகராட்சி⭐ ♦️தலைமை பொதுக்குழு உறுப்பினர்♦️1
- நான்கு மாதங்களாக ரேஷன் பொருள் கிடைக்க வில்லையென நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் புலம்பல்... அதிகாரிகள் கருணை காட்ட கோரிக்கை1
- தென்காசி அருகே இன்ஜின் கோளாறால் செங்கோட்டை–நெல்லை பயணிகள் ரயில் நடுவழியில் நின்று, மாற்று என்ஜின் மூலம் தாமதமாக புறப்பட்டது.1
- மோடி பொங்கல் விழா கொண்டாட்டம் பெரியகுளம் பகுதியில் இன்று தேனி மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தேனி மாவட்டத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பெரியகுளம் வள்ளுவர் சிலை பகுதியில் இருந்து பொங்கல் பானையை சுமந்து நகர் பகுதியில் ஊர்வலமாக வந்து பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.1
- 11.01.2026_ADP_ MARATHAN SPORTS. உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தேனி மாவட்டம் கடமலைகுண்டு பகுதியில் திமுக சார்பில் மாரத்தான் போட்டி நடைபெறுகிறது.கடமலைக்குண்டு பகுதியில் இருந்து வருசநாடு பகுதி வரை உள்ள 15 கிலோமீட்டர் தொலைவிற்காக நடைபெற்ற இந்த போட்டிகளில் சிறுவர்கள் முதியவர்கள் என 900க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் இதில் தேவராஜ்நகர் பகுதியை சேர்ந்த நிதிஷ்குமார் என்ற ராணுவ வீரர் முதல் இடத்தை பிடித்தார் பொங்கல் பண்டிகை மற்றும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட கடமலைக்குண்டு பகுதியில் கடமலை - மயிலை ஒன்றிய திமுக இளைஞரணி சார்பாக மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது.கடமலைக்குண்டு பகுதியிலிருந்து வருசநாடு பகுதி வரை 15 கிலோமீட்டர் தொலைவு தூரத்திற்காக நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டிகளில் சிறுவர்கள், பெரியவர்கள் என 900க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இந்த மாரத்தான் போட்டிகளை ஆண்டிப்பட்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் கொடியசைத்து துவங்கி வைத்த நிலையில் இந்தப் போட்டியின் முடிவில் கடமலைக்குண்டு பபகுதியிலிருந்து வருசநாடு பகுதி வரையிலான 15 கிலோமீட்டர் கொண்ட தூரத்தை முதலில் கடந்த தேவராஜ்நகரை சேர்ந்த நிதிஷ்குமார் முதல் இடத்தையும்,தூத்துக்குடியை சேர்ந்த கருத்தபாண்டி இரண்டாவது இடத்தையும்,கோயம்புத்தூரை சேர்ந்த தினகரன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.முதல் மூன்று இடங்களை பிடித்த நபர்களுக்கு திமுக சார்பில் பரிசுகளும் ரொக்க பணமும் பரிசாக வழங்கப்பட்ட நிலையில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.1
- கடமலை மயிலை வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் சமத்துவம் பொங்கட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற முழக்கத்துடன் பள்ளி மாணவிகளுக்கான கோலப்போட்டி, ஓட்டப்பந்தயம் மற்றும் கோ-கோ போட்டிகள் நடைபெற்றது. இந்தப் போட்டிகளை கடமலை-மயிலை ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் சுப்பிரமணி மற்றும் தங்கப்பாண்டி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளின் இறுதியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ஒன்றிய செயலாளர்கள் சார்பில் சுழற்கோப்பைகளும், ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட பிரதிநிதி குறிஞ்சி மாடசாமி, கடமலைக்குண்டு நகர செயலாளர் தென்னரசு, முன்னாள் கவுன்சிலர் மச்சக்காளை, தொழில்நுட்ப பிரிவு பிரபு, அருண்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு குழந்தைகளை உற்சாகப்படுத்தினர்.1
- திண்டுக்கல் மாவட்டம் மாநகராட்சிக்குட்பட்ட 44வது வார்டு பகுதியில் மாமன்றஉறுப்பினர் மார்த்தாண்டன் தலைமையில் சமத்துவப் பொங்கல் மற்றும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது இந்நிகழ்வில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி .செந்தில்குமார் மற்றும் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் துணை மேயர் ராசப்பா கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்1
- மாண்புமிகு தமிழக துணை முதலமைச்சர் கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48 -வது பிறந்தநாள் மற்றும் திராவிட பொங்கல் விழாவை முன்னிட்டு திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் அண்ணன் KR.ராஜு அவர்களின் ஏற்பாட்டில் டவுண் லிட்டில் பிளவர் மெட்ரிகுலேஷன் பள்ளி மைதானத்தில் நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு. மு.அப்துல்வஹாப் MLA அவர்கள் தலைமையில் 1000 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை மற்றும் 2500 கழக உடன்பிறப்புகளுக்கு பொங்கல் பரிசு வழங்கினார் இந்நிகழ்வில் கழக நிர்வாகாளர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.1