logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

வாடிப்பட்டி போடிநாயக்கன்பட்டி விவசாயிகள் மத்தியில் சமூக ஆர்வலர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் இன்று வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட போடிநாயக்கன்பட்டியில் அறுவடை நடைபெற்றுவரும் சூழலில் விவசாயிகள் மத்தியில் இந்த நெல் கொள்முதல் நிலையங்கள் வருவதற்கு பாடுபட்ட சமூக ஆர்வலர்கள் ( விவசாய சங்கத்தை சேர்ந்த ஆசிரியர் சீத்தாராமன் கம்னியூஸ்ட் செல்வராஜ் விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழ் நிலவன் தமிழ்மாநில காங்கிரஸ் கவுன்சிலர் சரவணகுமார்) அரசு உங்கள் நெல் நேரடியாக கொள்முதல் செய்யும் போது மூட்டைக்கு ஐம்பது ரூபாய் கொடுக்கவேண்டிய அவசியமில்லை கடந்தகாலங்களில் அரசு அதிகாரிகள் துணையோடு ஒருசில அரசியல் வாதிகள் இந்த நிலையத்தில் சுமார் பதினைந்து லட்சம் வரை ஏமாற்றம் அடைந்துள்ளனர் இனியும் ஏமாறாமல் விழிப்போடு செயல்படுங்கள் என்று துண்டு பிரசுரங்கள் வழங்கினார்கள்

2 hrs ago
user_தங்க சுரேஷ்
தங்க சுரேஷ்
பத்திரிகையாளர் வாடிப்பட்டி, மதுரை, தமிழ்நாடு•
2 hrs ago
501956ef-2e66-4267-898d-15f2a867af01
c53dab16-4506-4de8-b1c0-5ee141801b7a

வாடிப்பட்டி போடிநாயக்கன்பட்டி விவசாயிகள் மத்தியில் சமூக ஆர்வலர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் இன்று வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட போடிநாயக்கன்பட்டியில் அறுவடை நடைபெற்றுவரும் சூழலில் விவசாயிகள் மத்தியில் இந்த நெல் கொள்முதல் நிலையங்கள் வருவதற்கு பாடுபட்ட சமூக ஆர்வலர்கள் ( விவசாய சங்கத்தை சேர்ந்த ஆசிரியர் சீத்தாராமன் கம்னியூஸ்ட் செல்வராஜ் விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழ் நிலவன் தமிழ்மாநில காங்கிரஸ் கவுன்சிலர் சரவணகுமார்) அரசு உங்கள் நெல் நேரடியாக கொள்முதல் செய்யும் போது மூட்டைக்கு ஐம்பது ரூபாய் கொடுக்கவேண்டிய அவசியமில்லை கடந்தகாலங்களில் அரசு அதிகாரிகள் துணையோடு ஒருசில அரசியல் வாதிகள் இந்த நிலையத்தில் சுமார் பதினைந்து லட்சம் வரை ஏமாற்றம் அடைந்துள்ளனர் இனியும் ஏமாறாமல் விழிப்போடு செயல்படுங்கள் என்று துண்டு பிரசுரங்கள் வழங்கினார்கள்

More news from Tamil Nadu and nearby areas
  • மதுரை அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் 30.03.2026 திங்கட்கிழமை சந்திர சோமவார பிரதோசத்தை முன்னிட்டு மாலை ஸ்ரீ நந்தியம் பெருமானுக்கு மூலவர் பிரதோஷ நாயகர் நாயகி சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் நாயகி திருக்கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பிரதோஷ பூஜை நிறைவு பெற்றது. இந்நிகழ்விற்கு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
    1
    மதுரை அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் 
30.03.2026 திங்கட்கிழமை   சந்திர  சோமவார பிரதோசத்தை முன்னிட்டு  மாலை ஸ்ரீ நந்தியம் பெருமானுக்கு மூலவர் பிரதோஷ நாயகர் நாயகி சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் நாயகி திருக்கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பிரதோஷ பூஜை நிறைவு பெற்றது. இந்நிகழ்விற்கு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    4 hrs ago
  • ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக ஆண்டிபட்டியில் மலரால் அலங்கரிக்கப்பட்ட முருகன் வேலை கையில் ஏந்தி, தப்பாட்டம் முழங்க ஊர்வலமாக வந்து முதல் ஆளாக தனது வேட்பு மனுவை தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோமதி அன்பரசன் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று மாநிலம் முழுவதும் துவங்கியது அதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோமதி அன்பரசன்.ஆண்டிபட்டி தேர்தல் நடத்தும் அலுவலர் கவிதாவிடம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.முன்னதாக ஆண்டிபட்டி - பாலக்கோம்பை பிரிவில் இருந்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோமதி அன்பரசன் மலரால் அலங்கரிக்கப்பட்ட முருகன் வேலுடன் தப்பாட்டம் முழங்க தனது கட்சியினருடன் ஊர்வலமாக வந்த நிலையில் தேனி சாலையில் வந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் ஊர்வலம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு 100 மீட்டர் தொலைவில் முன்பாகவே நிறுத்தப்பட்டது.பின்னர் தேர்தல் நடத்தை விதிமுறைகள்படி, அனுமதிக்கப்பட்ட நபர்களுடன் சென்று தனது வேட்பு மனுவை கோமதி அன்பரசன் தாக்கல் செய்தார்.தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 35 வயதான பெண்மணி கோமதி.மென்பொருள் பட்டதாரியான இவர் அப்பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார்.இவரது கணவர் அன்பரசன், நாம் தமிழர் கட்சியின் வணிகர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    1
    ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக ஆண்டிபட்டியில் மலரால் அலங்கரிக்கப்பட்ட முருகன் வேலை கையில் ஏந்தி, தப்பாட்டம் முழங்க ஊர்வலமாக வந்து முதல் ஆளாக தனது வேட்பு மனுவை தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோமதி அன்பரசன்
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று மாநிலம் முழுவதும் துவங்கியது
அதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோமதி அன்பரசன்.ஆண்டிபட்டி தேர்தல் நடத்தும் அலுவலர் கவிதாவிடம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.முன்னதாக ஆண்டிபட்டி - பாலக்கோம்பை பிரிவில் இருந்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோமதி அன்பரசன் மலரால் அலங்கரிக்கப்பட்ட முருகன் வேலுடன் தப்பாட்டம் முழங்க தனது கட்சியினருடன் ஊர்வலமாக வந்த நிலையில் தேனி சாலையில் வந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் ஊர்வலம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு 100 மீட்டர் தொலைவில் முன்பாகவே நிறுத்தப்பட்டது.பின்னர் தேர்தல் நடத்தை விதிமுறைகள்படி, அனுமதிக்கப்பட்ட நபர்களுடன் சென்று தனது வேட்பு மனுவை கோமதி அன்பரசன் தாக்கல் செய்தார்.தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 35 வயதான பெண்மணி கோமதி.மென்பொருள் பட்டதாரியான இவர் அப்பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார்.இவரது கணவர் அன்பரசன், நாம் தமிழர் கட்சியின் வணிகர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேவகோட்டை சார் ஆட்சியர் அலுவலகத்தில் தனது மனைவி கயல்விழி, தாயார் அண்ணமாளுடன் வந்து சார் ஆட்சியர் ஆயூஸ் வெங்கட் வர்ஸிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, வேலையில்லாதவனுக்கு நான்காயிரம் கொடுப்பவன் நல்ல தலைவன் இல்லை என்றும், வேலை கொடுப்பவனே தலைவன். அவன்தான் சிறந்த ஆட்சியாளர் என்றவர், டாஸ்மார்க் கடையை திறந்து வைத்து விட்டு பெண்களுக்கு பாதுகாப்பு என்பது இப்படி சாத்தியம். மதுக்கடை வருமானத்தை வைத்து கொடுமையான ஆட்சி நடைபெறுவதை எப்படி சகித்து கொண்டு இருக்க முடியும் என கேள்வி எழுப்பினார். ஏற்கனவே 10.5 லட்சம் கோடி கடன் உள்ள நிலையில் மேலும் இலவச திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றால் மேலும் பல லட்சம் கோடி கடன் வாங்கும் நிலை ஏற்படும் என குற்றம் சாட்டியவர், ஒவ்வொரு ஆண்டும் மக்களை வெள்ளத்தில் மிதக்கவிட்டு வெள்ள நிவாரணம் கொடுப்பது நல்ல ஆட்சி இல்லை. வெள்ள பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பது தான் நல்லாட்சி என கூறியவர், ஸ்டாலின் எதிர்கட்சியாக இருந்த போது இலவசங்களை மக்கள் விரும்பவில்லை என்று கூறிவிட்டு இப்போது திருப்பி இலவச திட்டங்களை அறிவிப்பதாக என குற்றம் சாட்டினார். ஸ்டாலின் 23 கட்சியுடன் கூட்டணி அமைத்து இருப்பது பயத்தினால் அவர்களிடம் நேர்மை துளி அளவும் இல்லை. ஐயா ராமதாஸ் எனக்கு மிகவும் பிடிக்கும். சாட்டை துரைமுருகன் ஐய்யாவை விமர்சனம் செய்ததை நான் கண்டித்தேன் என்றவர், நாடாளுமன்ற உறுப்பிரான திருமாவளவன் சட்டமன்ற தேர்தலில் நிற்பது ஏற்புடையது அல்ல என்றார். தொடர்ந்து ஓட்டுக்காக 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை காங்கிரஸ் மற்றும் பாஜக கொண்டு வந்ததாக குற்றம் சாட்டியவர், திட்டத்தால் எந்த ஒரு பலனும் இல்லை என்றவர், தனது கிராமத்தில் உள்ள அனைவரும் 100 நாள் திட்டத்திற்கு சென்று விட்டதால் தனியாக இருப்பதால் எனது தாயும் 100 நாள் வேலைக்கு சென்றதாகவும், அங்கு சென்று வேலை செய்யாமல் அமர்ந்து இருந்ததாகவும் கூறினார், இத்திட்டம் மூலம் நட்டு வைத்த மரங்கள் எத்தனை, சீரமைத்த சாலைகள் எத்தனை, தூர்வாரிய குளங்கள் எத்தனை என கேள்வி சீமான் எழுப்பினார்.
    1
    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேவகோட்டை சார் ஆட்சியர் அலுவலகத்தில்  தனது மனைவி கயல்விழி, தாயார் அண்ணமாளுடன் வந்து சார் ஆட்சியர் ஆயூஸ் வெங்கட் வர்ஸிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,  
வேலையில்லாதவனுக்கு நான்காயிரம் கொடுப்பவன் நல்ல தலைவன் இல்லை என்றும், வேலை கொடுப்பவனே தலைவன். அவன்தான் சிறந்த ஆட்சியாளர் என்றவர்,
டாஸ்மார்க் கடையை திறந்து வைத்து விட்டு பெண்களுக்கு பாதுகாப்பு என்பது இப்படி சாத்தியம். மதுக்கடை வருமானத்தை வைத்து கொடுமையான ஆட்சி நடைபெறுவதை எப்படி சகித்து கொண்டு இருக்க முடியும் என கேள்வி எழுப்பினார். 
ஏற்கனவே 10.5 லட்சம் கோடி கடன் உள்ள நிலையில் மேலும் இலவச திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றால் மேலும் பல லட்சம் கோடி கடன் வாங்கும் நிலை ஏற்படும் என குற்றம் சாட்டியவர்,
ஒவ்வொரு ஆண்டும் மக்களை வெள்ளத்தில் மிதக்கவிட்டு வெள்ள நிவாரணம் கொடுப்பது நல்ல ஆட்சி இல்லை. வெள்ள பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பது தான் நல்லாட்சி என கூறியவர்,
ஸ்டாலின் எதிர்கட்சியாக இருந்த போது இலவசங்களை மக்கள் விரும்பவில்லை என்று கூறிவிட்டு இப்போது திருப்பி இலவச திட்டங்களை அறிவிப்பதாக என குற்றம் சாட்டினார்.
ஸ்டாலின் 23 கட்சியுடன் கூட்டணி அமைத்து இருப்பது பயத்தினால் அவர்களிடம் நேர்மை துளி அளவும் இல்லை. 
ஐயா ராமதாஸ் எனக்கு மிகவும் பிடிக்கும். சாட்டை துரைமுருகன்  ஐய்யாவை விமர்சனம் செய்ததை நான் கண்டித்தேன் என்றவர், நாடாளுமன்ற உறுப்பிரான
திருமாவளவன் சட்டமன்ற தேர்தலில் நிற்பது ஏற்புடையது அல்ல என்றார். தொடர்ந்து ஓட்டுக்காக 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை காங்கிரஸ் மற்றும் பாஜக கொண்டு வந்ததாக குற்றம் சாட்டியவர், திட்டத்தால் எந்த ஒரு பலனும் இல்லை என்றவர், தனது கிராமத்தில் உள்ள  அனைவரும் 100 நாள் திட்டத்திற்கு  சென்று விட்டதால் தனியாக இருப்பதால் எனது தாயும் 100 நாள் வேலைக்கு சென்றதாகவும், அங்கு சென்று வேலை செய்யாமல் அமர்ந்து இருந்ததாகவும் கூறினார், இத்திட்டம் மூலம் நட்டு வைத்த மரங்கள் எத்தனை, சீரமைத்த சாலைகள் எத்தனை, தூர்வாரிய குளங்கள் எத்தனை என கேள்வி சீமான் எழுப்பினார்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சண்முகப்பிரியா இன்று மானாமதுரை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதற்கு முன்பு, மானாமதுரையில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் மேளதாளங்களுடன், ஏர் கலப்பையை சுமந்து மற்றும் ஜல்லிக்கட்டு காளையுடன் சுமார் 5 கிலோமீட்டர் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
    1
    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சண்முகப்பிரியா இன்று மானாமதுரை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இதற்கு முன்பு, மானாமதுரையில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் மேளதாளங்களுடன், ஏர் கலப்பையை சுமந்து மற்றும் ஜல்லிக்கட்டு காளையுடன் சுமார் 5 கிலோமீட்டர் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
    user_Santhosh Kumar V
    Santhosh Kumar V
    பத்திரிகையாளர் மானாமதுரை, சிவகங்கை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் முதல் ஆளாக வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அருணகிரி. தமிழகம் முழுவதும் இன்று காலை 11:00 மணி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அருணகிரி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக நாம் தமிழர் கட்சியினருடன் வருகை தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசித்ரகலாவிடம் வேட்பாளர் அருணகிரி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்து பின் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.
    1
    மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் முதல் ஆளாக வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அருணகிரி.
தமிழகம் முழுவதும் இன்று காலை 11:00 மணி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அருணகிரி  தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் 
மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக நாம் தமிழர் கட்சியினருடன்  வருகை தந்த 
வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசித்ரகலாவிடம் வேட்பாளர் அருணகிரி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்து பின் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான இனிகோ இருதயராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "கிழக்கு தொகுதியில் நான் பணியாற்றிய விதத்தை மக்கள் அறிவார்கள். நிச்சயமாக 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். எங்களை எதிர்த்து யார் நின்றாலும் கவலையில்லை. விஜய் 2 தொகுதியில் போட்டியிடுகிறார் என்றால் அவர் தெம்பும், திராணியும் அற்றவர் என தெரிவித்தார் எனவும் அறிவாலயத்தை தேவாலயம் கைவிடாது எனவும் விஜயை நிச்சயமாக டெபாசிட் இழக்க வைப்போம்" என தெரிவித்தார்
    1
    திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான இனிகோ இருதயராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "கிழக்கு தொகுதியில் நான் பணியாற்றிய விதத்தை மக்கள் அறிவார்கள். நிச்சயமாக 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். எங்களை எதிர்த்து யார் நின்றாலும் கவலையில்லை. விஜய் 2 தொகுதியில் போட்டியிடுகிறார் என்றால் அவர் தெம்பும், திராணியும் அற்றவர் என தெரிவித்தார் எனவும் அறிவாலயத்தை தேவாலயம் கைவிடாது எனவும் விஜயை நிச்சயமாக டெபாசிட் இழக்க வைப்போம்" என தெரிவித்தார்
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • இன்று சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி(190) வேட்புமனு தாக்கல் செய்ய முதல்நாளில். அடுத்த பணியில் தேர்தல் அலுவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அனைத்து பாதுகாப்பு கருடன் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் ஏற்பாடு செய்துள்ளனர்
    1
    இன்று சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி(190) வேட்புமனு தாக்கல் செய்ய முதல்நாளில். அடுத்த பணியில் தேர்தல் அலுவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அனைத்து பாதுகாப்பு கருடன் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் ஏற்பாடு செய்துள்ளனர்
    user_தங்க சுரேஷ்
    தங்க சுரேஷ்
    பத்திரிகையாளர் வாடிப்பட்டி, மதுரை, தமிழ்நாடு•
    12 hrs ago
  • மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள கொடிக்குளம் கிராமத்தில் உள்ள மலைச்சாமி கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு அனைத்து சமுதாய மக்களுக்கும் இணைந்து விரதமிருந்து பங்குனி உத்திர திருவிழா கொண்டாட உள்ள நிலையில் ஒரு தரப்பினர் திருவிழா நடத்தக்கூடாது என்று தகராறு செய்து தடை செய்வதால் இதுகுறித்து போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் ஒருதரப்பினருக்கு ஆதரவாக போலீசார் ஈடுபட்டு திருவிழா நடைபெறாமல் தடுத்து வருவதால் கிராம மக்கள் தங்களுடைய வாக்காளர்கள் அடையாள அட்டையை திருப்பி ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று (மார்ச்.30) காலை சுமார் நூறு பெண்கள் உள்பட முந்நூறு பேர் வந்திருந்தனர். அங்கிருந்த போலீசார் கிராம மக்களின் முக்கிய நபர்கள் ஐந்து பேரை மட்டும் அழைத்து கொண்டு உயர் அதிகாரியை இது குறித்து சந்திக்க அழைத்து சென்றனர். இதனால் அப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    1
    மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள கொடிக்குளம் கிராமத்தில் உள்ள மலைச்சாமி கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு அனைத்து சமுதாய மக்களுக்கும் இணைந்து விரதமிருந்து  பங்குனி உத்திர திருவிழா கொண்டாட உள்ள நிலையில் ஒரு தரப்பினர் திருவிழா நடத்தக்கூடாது என்று தகராறு செய்து தடை செய்வதால் இதுகுறித்து போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் ஒருதரப்பினருக்கு ஆதரவாக போலீசார் ஈடுபட்டு திருவிழா நடைபெறாமல் தடுத்து வருவதால் கிராம மக்கள் தங்களுடைய வாக்காளர்கள் அடையாள அட்டையை திருப்பி ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று (மார்ச்.30) காலை சுமார் நூறு பெண்கள் உள்பட முந்நூறு பேர் வந்திருந்தனர். அங்கிருந்த போலீசார் கிராம மக்களின் முக்கிய நபர்கள் ஐந்து பேரை மட்டும் அழைத்து கொண்டு உயர் அதிகாரியை இது குறித்து சந்திக்க அழைத்து சென்றனர். இதனால் அப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    11 hrs ago
  • கம்பம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஆ.அன்புச்செல்வி தனது வேட்பு மனுவை உத்தமபாளையம் கோட்டாட்சியர் சையது முகமது இப்ராகிமிடம் இன்று தாக்கல் செய்தார். நாம் தமிழர் கட்சியின் சார்பாக கம்பம் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அன்புச்செல்வி இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக வருகை தந்தார். அப்போது அவர் தனது ஆதரவாளர்களுடன் சென்று முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து சிலையின் முன்பு வீரவணக்கம் செலுத்தினார். அதனைத் தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஆதரவாளர்களோடு ஊர்வலமாக வருகை தந்தவர் கோட்டாட்சியர் செய்யது முகமது இப்ராஹிமிடம் தேர்தல் உறுதி மொழியை எடுத்துக்கொண்டு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
    1
    கம்பம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஆ.அன்புச்செல்வி
தனது வேட்பு மனுவை உத்தமபாளையம் கோட்டாட்சியர் சையது முகமது இப்ராகிமிடம் இன்று தாக்கல் செய்தார்.
நாம் தமிழர் கட்சியின் சார்பாக கம்பம் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அன்புச்செல்வி இன்று  வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக வருகை தந்தார்.
அப்போது அவர் தனது ஆதரவாளர்களுடன் சென்று முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து சிலையின் முன்பு
வீரவணக்கம் செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர்  அலுவலகத்திற்கு ஆதரவாளர்களோடு ஊர்வலமாக வருகை தந்தவர் கோட்டாட்சியர்  செய்யது முகமது இப்ராஹிமிடம் தேர்தல் உறுதி மொழியை எடுத்துக்கொண்டு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    9 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.