logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ஓட்டப்பிடாரம் அருகே மனைவியுடன் குடும்பத் தகராறில் கணவர் மர்ம மரணம்! தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் வட்டத் தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் ஜெயசங்கர் (54). இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், 3 மகன்களும், 1 மகளும் உள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை 4 மணியளவில் குடிபோதையில் இருந்த ஜெயசங்கர் தனது மனைவியுடன் குடும்பப் பிரச்சினை காரணமாகத் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் வீட்டின் கதவை உட்புறமாகப் பூட்டிக்கொண்டு உள்ளே சென்று படுத்துக் கொண்டார். அப்பகுதியில் உள்ள பிள்ளையார் கோவிலில் பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்ததால், ஜெயசங்கரின் மனைவி மற்றும் பிள்ளைகள் கோவிலுக்குச் சென்றுவிட்டனர். பின்னர் இரவு 8 மணியளவில் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது கதவு பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரம் தட்டியும் கதவைத் திறக்காததால், சந்தேகமடைந்த அவரது மூத்த மகன் ஜெயபாரத் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது ஜெயசங்கர் பாயில் சலனமற்று இறந்த நிலையில் படுத்துக் கிடப்பத்தைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லை எனக் கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதியம்புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெஸ்லின், ஜெயசங்கரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

6 hrs ago
user_AMS MEDIA
AMS MEDIA
Local News Reporter ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
6 hrs ago
b69cb913-e861-4a2e-ac53-bc1879645d95

ஓட்டப்பிடாரம் அருகே மனைவியுடன் குடும்பத் தகராறில் கணவர் மர்ம மரணம்! தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் வட்டத் தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் ஜெயசங்கர் (54). இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், 3 மகன்களும், 1 மகளும் உள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை 4 மணியளவில் குடிபோதையில் இருந்த ஜெயசங்கர் தனது மனைவியுடன் குடும்பப் பிரச்சினை காரணமாகத் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் வீட்டின் கதவை உட்புறமாகப் பூட்டிக்கொண்டு உள்ளே சென்று படுத்துக் கொண்டார். அப்பகுதியில் உள்ள பிள்ளையார் கோவிலில் பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்ததால், ஜெயசங்கரின் மனைவி மற்றும் பிள்ளைகள் கோவிலுக்குச் சென்றுவிட்டனர். பின்னர் இரவு 8 மணியளவில் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது கதவு பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரம் தட்டியும் கதவைத் திறக்காததால், சந்தேகமடைந்த அவரது மூத்த மகன் ஜெயபாரத் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது ஜெயசங்கர் பாயில் சலனமற்று இறந்த நிலையில் படுத்துக் கிடப்பத்தைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லை எனக் கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதியம்புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெஸ்லின், ஜெயசங்கரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • நெல்லை மாவட்ட பஞ்சாயத்து சார்பில் குடிநீர் திட்டத்துக்காக ரூ.1 1/4 கோடி ஒதுக்கீடு தலைவர் வி.எஸ்.ஆர் ஜெகதீஷ் தலைமையில் தீர்மானம் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் இசக்கியப்பன் முன்னிலை வகித்தார். இதில் கவுன்சிலர்கள் கனகராஜ், சாலமோன் டேவிட், மகேஷ், அருண் தவசு பாண்டியன், தனி தங்கம், ஜான்ஸ்ரூபா, லிங்க சாந்தி, சத்தியவாணி முத்து, கிருஷ்ணவேணி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர் ஜெகதீஷ் பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளில் 92 சதவீதம் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. தற்போது இந்த நிதியாண்டில் ரூ.1 கோடியே 20 லட்சம் நிதி உள்ளது. இதனை குடிநீர் திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டம் செயல்படுத்தப்படும். கடந்த நிதி ஆண்டுகளில் முடிக்கப்படாத பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். முடிக்கப்பட்ட பணிகளுக்கு திறப்பு விழா நடக்கும் போது கண்டிப்பாக கல்வெட்டு வைக்க வேண்டும். மாவட்ட கவுன்சிலர்கள் பணி பாராட்டுக்கு உரியது. இவ்வாறு அவர் பேசினார்.
    1
    நெல்லை மாவட்ட பஞ்சாயத்து சார்பில் 
குடிநீர் திட்டத்துக்காக ரூ.1 1/4 கோடி ஒதுக்கீடு
தலைவர் வி.எஸ்.ஆர் ஜெகதீஷ் தலைமையில் தீர்மானம் 
நெல்லை மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் இசக்கியப்பன் முன்னிலை வகித்தார்.
இதில் கவுன்சிலர்கள் கனகராஜ், சாலமோன் டேவிட், மகேஷ், அருண் தவசு பாண்டியன், தனி தங்கம், ஜான்ஸ்ரூபா, லிங்க சாந்தி, சத்தியவாணி முத்து, கிருஷ்ணவேணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர் ஜெகதீஷ் பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளில் 92 சதவீதம் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
தற்போது இந்த நிதியாண்டில் ரூ.1 கோடியே 20 லட்சம் நிதி உள்ளது. இதனை குடிநீர் திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டம் செயல்படுத்தப்படும். கடந்த நிதி ஆண்டுகளில் முடிக்கப்படாத பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். முடிக்கப்பட்ட பணிகளுக்கு திறப்பு விழா நடக்கும் போது கண்டிப்பாக கல்வெட்டு வைக்க வேண்டும். மாவட்ட கவுன்சிலர்கள் பணி பாராட்டுக்கு உரியது.
இவ்வாறு அவர் பேசினார்.
    user_Subramanian
    Subramanian
    திருநெல்வேலி, திருநெல்வேலி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • பிரசித்தி பெற்ற கோடி அற்புதர் அந்தோணியார் திருத்தல திருவிழா நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் பிரசித்தி பெற்ற புனித அந்தோனியார் திருத்தல திருவிழா தேர் பவனி நேற்று மாலை நடைபெற்றது அலங்கரிக்கப்பட்ட புனித அந்தோணியார் தேர் பவனி பக்தர்களுக்கு காட்சியளித்தது
    1
    பிரசித்தி பெற்ற கோடி அற்புதர் அந்தோணியார் திருத்தல திருவிழா 
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் பிரசித்தி பெற்ற புனித அந்தோனியார் திருத்தல திருவிழா தேர் பவனி நேற்று மாலை நடைபெற்றது அலங்கரிக்கப்பட்ட புனித அந்தோணியார் தேர் பவனி பக்தர்களுக்கு காட்சியளித்தது
    user_S.Maria selvam
    S.Maria selvam
    சேரன்மகாதேவி, திருநெல்வேலி, தமிழ்நாடு•
    12 hrs ago
  • தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள பரன்குன்றாபுரம் டிடிடிஏ நடுநிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள டிஎஸ் டேனியல் ராஜம்மாள் நினைவு கட்டடம் திறப்பு விழா நடந்தது விழாவிற்கு தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் பிரபாகரன் தலைமை வகித்து திறந்து வைத்து வாழ்த்தி பேசினார் மாவட்ட பொறுப்பு அமைச்சர் ராஜீவ், தென்காசி கலெக்டர் ரஞ்சித் சிங் ரெட்டியபட்டி நாராயணன் எம்எல்ஏ சென்னை டிஎஸ் குரூப்ஸ் ஜெயசிங், சௌந்திரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
    1
    தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள பரன்குன்றாபுரம் டிடிடிஏ நடுநிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள டிஎஸ் டேனியல் ராஜம்மாள் நினைவு கட்டடம் திறப்பு விழா நடந்தது 
விழாவிற்கு தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் பிரபாகரன் தலைமை வகித்து திறந்து வைத்து வாழ்த்தி பேசினார் மாவட்ட பொறுப்பு அமைச்சர் ராஜீவ், தென்காசி கலெக்டர் ரஞ்சித் சிங் ரெட்டியபட்டி நாராயணன் எம்எல்ஏ சென்னை டிஎஸ் குரூப்ஸ் ஜெயசிங், சௌந்திரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    13 min ago
  • ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சயனர் புரட்டாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ வடபத்ரசயனர் திருக்கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது. மகாலட்சுமியின் அம்சமான ஸ்ரீ ஆண்டாள் மானிட பெண்ணாக அவதரித்து பாமாலை பாடி பின் பூமாலை சுற்றி ஸ்ரீரங்கநாதரை அடைந்தார் என்பது ஐதீகம்.ஆண்டாள் தினமும் தான் சூடி கலைந்த மாலையை ஸ்ரீரங்கநாதரின் அம்சமான ஸ்ரீ வடபத்ரசயனருக்குத்தான் சாற்றி வந்துள்ளார். இந்த வடபத்ர சயனருக்கான புரட்டாசி பிரமோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று துவங்கும் உற்சவம் 12 நாட்கள் நடைபெறும்.ஐந்தாம் திருநாள் தங்க கருட சேவையும், ஒன்பதாம் திருநாள்(23.09.26) செப்பு திருத்தேரோட்டமும் நடைபெற உள்ள நிலையில் தினந்தோறும் பூதேவி ஸ்ரீதேவி சமேத வடபத்ரசயனர் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பர். கொடியேற்ற நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.
    1
    ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சயனர் புரட்டாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ வடபத்ரசயனர் திருக்கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது. மகாலட்சுமியின் அம்சமான ஸ்ரீ ஆண்டாள் மானிட பெண்ணாக அவதரித்து பாமாலை பாடி பின் பூமாலை சுற்றி ஸ்ரீரங்கநாதரை அடைந்தார் என்பது ஐதீகம்.ஆண்டாள் தினமும் தான் சூடி கலைந்த மாலையை ஸ்ரீரங்கநாதரின் அம்சமான ஸ்ரீ வடபத்ரசயனருக்குத்தான் சாற்றி வந்துள்ளார். இந்த வடபத்ர சயனருக்கான புரட்டாசி பிரமோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. 
இன்று துவங்கும் உற்சவம் 12 நாட்கள் நடைபெறும்.ஐந்தாம் திருநாள் தங்க கருட சேவையும், ஒன்பதாம் திருநாள்(23.09.26) செப்பு திருத்தேரோட்டமும் நடைபெற உள்ள நிலையில் தினந்தோறும் பூதேவி ஸ்ரீதேவி சமேத வடபத்ரசயனர் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பர். கொடியேற்ற நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.
    user_Virudhunagar
    Virudhunagar
    Virudhunagar, Tamil Nadu•
    31 min ago
  • ஸ்ரீவில்லிபுத்தூரில்  பேரறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 118 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் தொண்டர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.  இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருஉருவ சிலைக்கு தமிழக வெற்றிக்கழக ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் எம்ஜிஆர் அவர்களின் திருஉருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர்  இனிப்புகள்  வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்காக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    1
    ஸ்ரீவில்லிபுத்தூரில்  பேரறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 118 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நாடு முழுவதும்  தொண்டர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். 
இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருஉருவ சிலைக்கு தமிழக வெற்றிக்கழக ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் எம்ஜிஆர் அவர்களின் திருஉருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர்  இனிப்புகள்  வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்காக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    user_Prabakaran Praba
    Prabakaran Praba
    ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    7 hrs ago
  • மாணவர்களுடன் காலை உணவு அருந்திய விருதுநகர் மாவட்ட ஆட்சியர். விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா ஹரி இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.09.2026) திருவில்லிபுத்தூர் நகராட்சிக்குட்பட்ட திரு.வி.க. தொடக்கப்பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வரும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரம், சுகாதாரம் மற்றும் உணவு வழங்கப்படும் முறைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை அருந்தி, அவர்களுடன் கலந்துரையாடினார். மாணவர்களின் கல்வி, பள்ளியில் வழங்கப்படும் அடிப்படை வசதிகள் மற்றும் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார்.
    1
    மாணவர்களுடன் காலை உணவு அருந்திய விருதுநகர் மாவட்ட ஆட்சியர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா ஹரி இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.09.2026) திருவில்லிபுத்தூர் நகராட்சிக்குட்பட்ட திரு.வி.க. தொடக்கப்பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வரும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரம், சுகாதாரம் மற்றும் உணவு வழங்கப்படும் முறைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை அருந்தி, அவர்களுடன் கலந்துரையாடினார்.
மாணவர்களின் கல்வி, பள்ளியில் வழங்கப்படும் அடிப்படை வசதிகள் மற்றும் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார்.
    user_குமார்
    குமார்
    Local News Reporter காரியாபட்டி, விருதுநகர், தமிழ்நாடு•
    9 hrs ago
  • தூத்துக்குடியில் அண்ணா பிறந்தநாள் சிலைக்கு திமுக முன்னாள் அமைச்சர் மாலை தூத்துக்குடி பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்த நாள் விழா தூத்துக்குடியில் அவரது திருவுருவ சிலைக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள்  இன்று செப்டம்பர் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் தூத்துக்குடி, மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள பேரறிஞர் அண்ணாவின் முழு உருவச் சிலைக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் கீதா ஜீவன் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் இதைத்தொடர்ந்து ஏராளமான திமுகவினர் மாலை அணிவித்தனர் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திமுக நிர்வாகிகள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    1
    தூத்துக்குடியில் அண்ணா பிறந்தநாள் சிலைக்கு திமுக முன்னாள் அமைச்சர் மாலை
தூத்துக்குடி பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்த நாள் விழா தூத்துக்குடியில் அவரது திருவுருவ சிலைக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்  மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர்   மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்
பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள்  இன்று செப்டம்பர் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் தூத்துக்குடி, மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள பேரறிஞர் அண்ணாவின் முழு உருவச் சிலைக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் கீதா ஜீவன் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி  ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் இதைத்தொடர்ந்து ஏராளமான திமுகவினர் மாலை அணிவித்தனர் 
இந்த நிகழ்ச்சியில்  ஏராளமான திமுக நிர்வாகிகள்,  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    user_Mithun
    Mithun
    City Star தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • பத்து நாட்களுக்கு மேலாக நெல்லை மாநகராட்சி சார்பில் விநியோகிக்கப்படும் குடிநீர் நிறுத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு குல வனிகர் புரம் பகுதியில் இருப்பு பாதையை மறித்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு திருநெல்வேலி மேலப்பாளையம் 31-வது வார்டுக்குட்பட்ட குலவணிகர்புரம் பாண்டித்துரை 1 முதல் 3-வது தெருக்கள், விநாயகர் தெரு 1 முதல் 3-வது தெருக்கள் உள்ளிட்ட 7 தெருக்களில் சுமார் 10 நாட்களாக மாநகராட்சி குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டால் அவதியடைந்து வந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பும் இதேபோன்று குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து குடிநீர் விநியோகம் சீரான நிலையில், தற்போது மீண்டும் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலப்பாளையம் மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், அதனை சீரமைக்க 2 நாட்கள் மட்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்ட பின்னரும் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறி, குலவணிகர்புரம் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருவனந்தபுரம் சாலையில் மத்திய சிறைச்சாலை அருகே உள்ள குலவணிகர்புரம் ரயில்வே கேட் பகுதியில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சிலர் திருநெல்வேலி–திருச்செந்தூர் இருப்புப்பாதையிலும் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த மேலப்பாளையம் மற்றும் பெருமாள்புரம் காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து பாளையங்கோட்டை வட்டாட்சியர் மாரிராஜா தலைமையில் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, குடிநீர் பிரச்சினையை உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் பிரதான சாலையில் பொதுமக்கள் திடீரென மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
    1
    பத்து நாட்களுக்கு மேலாக நெல்லை மாநகராட்சி சார்பில் விநியோகிக்கப்படும் குடிநீர் நிறுத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு குல வனிகர் புரம் பகுதியில் இருப்பு பாதையை மறித்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு 
திருநெல்வேலி மேலப்பாளையம் 31-வது வார்டுக்குட்பட்ட குலவணிகர்புரம் பாண்டித்துரை 1 முதல் 3-வது தெருக்கள், விநாயகர் தெரு 1 முதல் 3-வது தெருக்கள் உள்ளிட்ட 7 தெருக்களில் சுமார் 10 நாட்களாக மாநகராட்சி குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டால் அவதியடைந்து வந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பும் இதேபோன்று குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து குடிநீர் விநியோகம் சீரான நிலையில், தற்போது மீண்டும் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலப்பாளையம் மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், அதனை சீரமைக்க 2 நாட்கள் மட்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்ட பின்னரும் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறி, குலவணிகர்புரம் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருவனந்தபுரம் சாலையில் மத்திய சிறைச்சாலை அருகே உள்ள குலவணிகர்புரம் ரயில்வே கேட் பகுதியில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சிலர் திருநெல்வேலி–திருச்செந்தூர் இருப்புப்பாதையிலும் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த மேலப்பாளையம் மற்றும் பெருமாள்புரம் காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து பாளையங்கோட்டை வட்டாட்சியர் மாரிராஜா தலைமையில் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, குடிநீர் பிரச்சினையை உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் பிரதான சாலையில் பொதுமக்கள் திடீரென மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
    user_Subramanian
    Subramanian
    திருநெல்வேலி, திருநெல்வேலி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • தவெகாவின் நிலைப்பாடு பிடிக்காததன் காரணமாகவே இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை நிறுத்தி தனித்துப் போட்டியிடுகிறது- சிவகாசிகள் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேட்டி... தவெக ஆட்சிக்கு, கூட்டணி கட்சிகள் கொடுக்கின்ற முட்டுக்கட்டை நிலையானது அல்ல, எந்த நேரத்திலும் தவெக ஆட்சிக்கு பேராபத்து வரக்கூடிய சூழலில்தான் கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் விமர்சனம்... அறிஞர் அண்ணா அவர்களின் 118 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சிவகாசி காவல் நிலையம் எதிரே அமைந்துள்ள அவரது திருவுருவர் சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திர பாலாஜி, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக மக்கள் விரும்புகின்ற ஆட்சியாகவும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வேண்டும் என்பதுதான் மக்கள் மனதில் ஆழமாக இருக்கிறது இடையில் ஏற்பட்ட சில சருக்கல்கள், கருத்து திணிப்புகள், அரசியல் கோல்மால்கள், வாட்ஸாப், பேஸ்புக், இன்டஸ்ட்ராகிராம் போன்ற குழப்பங்க அண்ணா திமுக ளால் ஆட்சி மாற்றம் வந்துள்ளது தற்போது நடைபெறும் ஆட்சி மக்களால் விரும்பும் ஆட்சி கிடையாது நகைப்புக்குரிய ஆட்சியாக விஜய் ஆட்சி உள்ளது இடைத்தேர்தலில் அதிமுக முதன்மையான கட்சியாக வெற்றி பெறும், தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் லட்சக்கணக்கான வாக்குகள் பெற்று அதிக வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும் எடப்பாடியார் தலைமை தமிழகத்திற்கு வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு மக்கள் வாக்களிக்க தயாராகிவிட்டார்கள் தவெக ஆட்சிக்கு இடைத்தேர்தல் பாடம் புகட்டும் முதல்வரின் லண்டன் பயணம் குறித்து முதல்வர் சார்பில் வெளியிட்டுள்ள புகைப்படம் பேசுபொருளாக தமிழகத்தில் உலாவி வருகிறது, அதை தார்மீகமாக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, ஒரு நாட்டின் முதல்வர் எப்படி வாழ வேண்டும், எப்படி இருக்க வேண்டும், பிறருக்கு முன் உதாரணமாக வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு இருக்க வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள் ஆனால் அந்த நிலைப்பாட்டில் வாழக்கூடியவராக இன்றைய தமிழக முதல்வர் இருக்கவில்லை முதல்வரின் லண்டன் பயணத்தை சந்தேக கண்ணோடு தமிழக மக்கள் பார்க்கிறார்கள் வெளிநாட்டில் முதலீடை ஈர்க்க சென்றுள்ள முதல்வர், தொழில்துறை அமைச்சர் இல்லாமல் சென்றாலும் சம்பந்தப்பட்ட பணிகளை செய்து வெற்றிகரமாக திரும்பினால் சந்தோஷம் ஆனால் முதல்கட்டமாக ஊடகத்தில் வந்த செய்திகளை பார்க்கும்போது முதல்வர் வெளிநாடு சென்ற நோக்கமே வேறாக தெரிகிறது மக்கள், அரசியல் கட்சி தலைவர்களின் எதிர்ப்புகளை தொடர்ந்து சில பணிகளை செய்வதாக கேள்விப்படுகிறோம் மொத்தத்தில் முதல்வர் தடம் மாறி, தடம் புரண்டு நடவடிக்கையில் ஈடுப்பட்டுக்கொண்டிருப்பதாக தமிழக மக்கள் எண்ணுகிறார்கள், இதை முதல்வர் மாற்றிக்கொள்ள வேண்டும் தமிழக முதலமைச்சராக வந்த பின்னர், அனைத்து முதலமைச்சர்களும் முதல்வர்களுக்கான பண்போடும், தகுதியோடும், தன்மையோடு வாழ்ந்துகொண்டு தமிழகத்தை ஆண்டிருக்கிறார்கள் அதேபோல் விஜயும் முதல்வருக்கான பண்போடும், தகுதியோடும் தன்மையோடும் வாழ்ந்து ஆட்சி செய்ய வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள், ஆனால் அதற்கு எதிர்மறையான நிலைப்பாட்டோடு முதல்வர் விஜய்யின் ஆட்சியும் அவரது செயல்பாடும் இருக்கிறது முதல்வர் விஜய் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என தமிழக மக்கள் விரும்புகிறார்கள் தவெக ஆட்சி விளையாட்டுத்தனமான ஆட்சி காவல்துறையினர் மானிய கோரிக்கையின் போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் சார்பாக பல்வேறு கேள்விகளை முன் வைத்தபோது, எந்த கேள்விகளுக்கும் பதிலளிக்காத முதல்வர் விஜய் அவருக்கே தெரிந்த பாணியில் வசனத்தை பேசி பதில் உரையை முடித்து விட்டார் முதல்வர் விஜயின் பதிலுரை பார்ப்பதற்கு வேண்டுமானால் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும், சிரிப்பாகவும், ஜோக்காகவும் இருக்கலாமே தவிர நல்ல விவரம் தெரிந்த, அரசியல் தெரிந்தவர்கள் முதல்வர் விஜயின் பேச்சை எள்ளி நகையாடுகிறார்கள் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள், முன்னாள் ஆட்சியாளர்கள் கேட்ட ஒரு கேள்விக்கு கூட முதல்வர் விஜய் பதிலளிக்கவில்லை காவல்துறை உள்ளிட்ட சீருடை பணியாளர்களுக்கு எந்தவிதமான முன்னேற்ற அறிவிப்புகளும் காவல்துறை மானிய கோரிக்கையில் வரவில்லை இதை காவல்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை சங்கடத்துடன் வாழ்வதை காண முடிகிறது தமிழக மக்களுக்காக 24 மணி நேரமும் உழைக்கின்ற காவல் துறைக்கு எந்தவிதமான அறிவிப்புகளோ சலுகைகளோ வழங்கப்படாததை தமிழக மக்கள், காவல்துறையினரால் ஏற்றுக்கொள்ளவில்லை மொத்தத்தில் பிறரை ஏளனமாக பேசுவதற்கும், தமக்கு பிடிக்காதவர்களை எள்ளி நகையாடுவதற்கும் சட்டமன்றத்தை ஒரு கருவியாக முதல்வர் விஜய் பயன்படுத்திக்கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி ஆண்ட காலத்திலும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலத்திலும் சட்டமன்றத்தின் புனிதத் தன்மை காக்கப்பட்டது தற்போது சட்டமன்றத்தின் புனிதத் தன்மை குறைந்து பாலாகிவிட்டது, இந்த நிலை மாற வேண்டும் என்றால் முதல்வர் விஜய் தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் தவெக ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள், அதே நேரத்தில் தவெக ஆட்சிக்கு ஆதரவாக தேர்தல் களத்தில் பணி செய்ய விரும்பவில்லை தவெகாவின் நிலைப்பாடு பிடிக்காததன் காரணமாகவே இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை நிறுத்தி தனித்துப் போட்டியிடுகிறது ஆளுநர் ஆட்சி வந்துவிடக்கூடாது, மத்திய அரசின் மறைமுக ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காக மட்டுமே தவெகவிற்கு ஆதரவு கொடுத்தோமே தவிர தவெகாவின் தலைவரை பிடித்தோ, தவெகவின் கொள்கையை பிடித்தோ ஆதரவு கொடுக்கவில்லை என கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் சொல்லிவிட்டார்கள் தவெக ஆட்சிக்கு, கூட்டணி கட்சிகள் கொடுக்கின்ற முட்டுக்கட்டை நிலையானது அல்ல, எந்த நேரத்திலும் தவெக ஆட்சிக்கு பேராபத்து வரக்கூடிய சூழலில்தான் கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது நிலையான ஆட்சியமைக்கும் தன்மை முதல்வர் விஜய்கோ, தவெக கட்சிக்கோ கிடையாது ஆட்சி நிலைக்க முதல்வர் விஜய் தனது நிலைய மாற்றிக்கொள்ள வேண்டும் பிறரை பழி வாங்குவதற்கோ, பிறரை இகழ்ந்து, புகழ்ந்து பேசுவதற்கோ, தன்னை புகழ்ந்து பேசுவதற்கோ சட்டமன்றத்தை கருவியாக பயன்படுத்த நினைத்தால் தமிழக மக்கள் காலப்போக்கில் தூக்கி எறிந்து விடுவார்கள் இதற்கு ஆதரவு தர மாட்டார்கள் தமிழக மக்கள் எப்பொழுதும் முழிப்போடும் இருக்கக்கூடியவர்கள், தமிழக மக்களும், தமிழ் அறிஞர்கள், அரசியல் அறிந்தவர்கள் எள்ளி நகையாட கூடிய சூழ்நிலையை பார்க்கிறோம் இந்த நிலை மாற வேண்டும் என்றால் சட்டமன்றம் தனி சிறப்போடு இயங்க வேண்டும் சட்டமன்றத்தில் இன்றைக்கு என்ன பாடல் பாடப்போகிறார்கள், யார் பாடப் போகிறார்கள் என பட்டிமன்றம் போல் செயல்படும் சட்டமன்றத்தின் நிலையை மாற்ற வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள், முதல்வர் விஜய் அதனை மாற்றுவாரா என்றால் அது கேள்விகுறியாகவே இருக்கிறது
    1
    தவெகாவின் நிலைப்பாடு பிடிக்காததன் காரணமாகவே இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை நிறுத்தி தனித்துப் போட்டியிடுகிறது- சிவகாசிகள் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேட்டி...
தவெக ஆட்சிக்கு, கூட்டணி கட்சிகள்  கொடுக்கின்ற முட்டுக்கட்டை நிலையானது அல்ல, எந்த நேரத்திலும் தவெக ஆட்சிக்கு பேராபத்து வரக்கூடிய சூழலில்தான்  கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் விமர்சனம்...
அறிஞர் அண்ணா அவர்களின் 118 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சிவகாசி காவல் நிலையம் எதிரே அமைந்துள்ள அவரது திருவுருவர் சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திர பாலாஜி, 
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக மக்கள் விரும்புகின்ற ஆட்சியாகவும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வேண்டும் என்பதுதான் மக்கள் மனதில் ஆழமாக இருக்கிறது 
இடையில் ஏற்பட்ட  சில சருக்கல்கள்,  கருத்து திணிப்புகள், அரசியல் கோல்மால்கள், வாட்ஸாப், பேஸ்புக், இன்டஸ்ட்ராகிராம் போன்ற குழப்பங்க அண்ணா திமுக ளால் ஆட்சி மாற்றம் வந்துள்ளது
தற்போது நடைபெறும் ஆட்சி மக்களால் விரும்பும் ஆட்சி கிடையாது 
நகைப்புக்குரிய ஆட்சியாக விஜய் ஆட்சி உள்ளது 
இடைத்தேர்தலில் அதிமுக முதன்மையான கட்சியாக வெற்றி பெறும், 
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில்  லட்சக்கணக்கான வாக்குகள் பெற்று அதிக வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும்
எடப்பாடியார் தலைமை தமிழகத்திற்கு வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு மக்கள் வாக்களிக்க தயாராகிவிட்டார்கள் 
தவெக ஆட்சிக்கு இடைத்தேர்தல் பாடம் புகட்டும்
முதல்வரின் லண்டன் பயணம் குறித்து முதல்வர் சார்பில்  வெளியிட்டுள்ள புகைப்படம் பேசுபொருளாக தமிழகத்தில் உலாவி வருகிறது, அதை தார்மீகமாக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, 
ஒரு நாட்டின் முதல்வர் எப்படி வாழ வேண்டும், எப்படி இருக்க வேண்டும், பிறருக்கு முன் உதாரணமாக வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு இருக்க வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள் 
ஆனால் அந்த நிலைப்பாட்டில் வாழக்கூடியவராக இன்றைய தமிழக முதல்வர் இருக்கவில்லை 
முதல்வரின் லண்டன் பயணத்தை சந்தேக கண்ணோடு தமிழக மக்கள் பார்க்கிறார்கள்
வெளிநாட்டில் முதலீடை ஈர்க்க சென்றுள்ள முதல்வர், தொழில்துறை அமைச்சர் இல்லாமல் சென்றாலும் சம்பந்தப்பட்ட பணிகளை செய்து வெற்றிகரமாக திரும்பினால் சந்தோஷம்
ஆனால் முதல்கட்டமாக ஊடகத்தில் வந்த செய்திகளை பார்க்கும்போது முதல்வர் வெளிநாடு சென்ற நோக்கமே வேறாக தெரிகிறது 
மக்கள், அரசியல் கட்சி தலைவர்களின் எதிர்ப்புகளை தொடர்ந்து சில பணிகளை செய்வதாக கேள்விப்படுகிறோம் 
மொத்தத்தில் முதல்வர் தடம் மாறி, தடம் புரண்டு நடவடிக்கையில் ஈடுப்பட்டுக்கொண்டிருப்பதாக தமிழக மக்கள் எண்ணுகிறார்கள், இதை முதல்வர் மாற்றிக்கொள்ள வேண்டும் 
தமிழக முதலமைச்சராக வந்த பின்னர்,  அனைத்து முதலமைச்சர்களும் முதல்வர்களுக்கான பண்போடும், தகுதியோடும், தன்மையோடு வாழ்ந்துகொண்டு தமிழகத்தை ஆண்டிருக்கிறார்கள்
அதேபோல் விஜயும் முதல்வருக்கான பண்போடும்,  தகுதியோடும் தன்மையோடும் வாழ்ந்து ஆட்சி செய்ய வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள், ஆனால் அதற்கு எதிர்மறையான நிலைப்பாட்டோடு முதல்வர் விஜய்யின் ஆட்சியும் அவரது செயல்பாடும் இருக்கிறது
முதல்வர் விஜய் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என தமிழக மக்கள் விரும்புகிறார்கள்
தவெக ஆட்சி விளையாட்டுத்தனமான ஆட்சி
காவல்துறையினர் மானிய கோரிக்கையின் போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் சார்பாக பல்வேறு கேள்விகளை முன் வைத்தபோது, எந்த கேள்விகளுக்கும் பதிலளிக்காத முதல்வர் விஜய் அவருக்கே தெரிந்த பாணியில்  வசனத்தை பேசி பதில் உரையை முடித்து விட்டார்
முதல்வர் விஜயின் பதிலுரை பார்ப்பதற்கு வேண்டுமானால் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும், சிரிப்பாகவும், ஜோக்காகவும் இருக்கலாமே தவிர 
நல்ல விவரம் தெரிந்த, அரசியல் தெரிந்தவர்கள் முதல்வர் விஜயின் பேச்சை எள்ளி நகையாடுகிறார்கள்
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள், முன்னாள் ஆட்சியாளர்கள் கேட்ட ஒரு கேள்விக்கு கூட முதல்வர் விஜய் பதிலளிக்கவில்லை 
காவல்துறை உள்ளிட்ட சீருடை பணியாளர்களுக்கு எந்தவிதமான முன்னேற்ற அறிவிப்புகளும் காவல்துறை மானிய கோரிக்கையில் வரவில்லை
இதை காவல்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை சங்கடத்துடன் வாழ்வதை காண முடிகிறது
தமிழக மக்களுக்காக 24 மணி நேரமும் உழைக்கின்ற காவல் துறைக்கு எந்தவிதமான அறிவிப்புகளோ சலுகைகளோ வழங்கப்படாததை  தமிழக மக்கள்,  காவல்துறையினரால் ஏற்றுக்கொள்ளவில்லை
மொத்தத்தில் பிறரை ஏளனமாக பேசுவதற்கும், தமக்கு பிடிக்காதவர்களை எள்ளி நகையாடுவதற்கும் சட்டமன்றத்தை ஒரு கருவியாக முதல்வர் விஜய் பயன்படுத்திக்கொண்டார்
எடப்பாடி பழனிச்சாமி ஆண்ட  காலத்திலும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலத்திலும் சட்டமன்றத்தின் புனிதத் தன்மை காக்கப்பட்டது
தற்போது சட்டமன்றத்தின் புனிதத் தன்மை குறைந்து பாலாகிவிட்டது,
இந்த நிலை மாற வேண்டும் என்றால் முதல்வர் விஜய் தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்
தவெக ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள், அதே நேரத்தில் தவெக ஆட்சிக்கு ஆதரவாக தேர்தல் களத்தில் பணி செய்ய விரும்பவில்லை
தவெகாவின் நிலைப்பாடு பிடிக்காததன் காரணமாகவே இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை நிறுத்தி தனித்துப் போட்டியிடுகிறது
ஆளுநர் ஆட்சி வந்துவிடக்கூடாது, மத்திய அரசின் மறைமுக ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காக மட்டுமே தவெகவிற்கு ஆதரவு கொடுத்தோமே தவிர தவெகாவின் தலைவரை பிடித்தோ, தவெகவின்  கொள்கையை பிடித்தோ ஆதரவு கொடுக்கவில்லை என கம்யூனிஸ்ட் கட்சி  தலைவர்கள் சொல்லிவிட்டார்கள்
தவெக ஆட்சிக்கு, கூட்டணி கட்சிகள்  கொடுக்கின்ற முட்டுக்கட்டை நிலையானது அல்ல, எந்த நேரத்திலும் தவெக ஆட்சிக்கு பேராபத்து வரக்கூடிய சூழலில்தான்  கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது 
நிலையான ஆட்சியமைக்கும் தன்மை முதல்வர் விஜய்கோ,  தவெக கட்சிக்கோ கிடையாது 
ஆட்சி நிலைக்க முதல்வர் விஜய் தனது நிலைய மாற்றிக்கொள்ள வேண்டும் 
பிறரை பழி வாங்குவதற்கோ,  பிறரை இகழ்ந்து, புகழ்ந்து பேசுவதற்கோ, தன்னை புகழ்ந்து பேசுவதற்கோ சட்டமன்றத்தை கருவியாக பயன்படுத்த நினைத்தால் தமிழக மக்கள் காலப்போக்கில் தூக்கி எறிந்து விடுவார்கள் இதற்கு ஆதரவு தர மாட்டார்கள் 
தமிழக மக்கள் எப்பொழுதும் முழிப்போடும் இருக்கக்கூடியவர்கள், தமிழக மக்களும், தமிழ் அறிஞர்கள்,  அரசியல் அறிந்தவர்கள் எள்ளி நகையாட கூடிய சூழ்நிலையை பார்க்கிறோம் 
இந்த நிலை மாற வேண்டும் என்றால் சட்டமன்றம் தனி சிறப்போடு இயங்க வேண்டும் 
சட்டமன்றத்தில் இன்றைக்கு என்ன பாடல் பாடப்போகிறார்கள், யார் பாடப் போகிறார்கள் என பட்டிமன்றம் போல் செயல்படும் சட்டமன்றத்தின் நிலையை மாற்ற வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள், முதல்வர் விஜய் அதனை மாற்றுவாரா என்றால் அது கேள்விகுறியாகவே இருக்கிறது
    user_Virudhunagar
    Virudhunagar
    Virudhunagar, Tamil Nadu•
    2 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.