நேபாள வெள்ளத்தில் 288 இந்தியர்களை காணவில்லை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கிய 288 இந்தியர்களைக் காணவில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் போடே கோஷி ஆற்றில் நேற்று (ஆகஸ்ட் 26) காலை 9 மணியளவில் திபெத் பகுதியில் இருந்து திடீரென வெள்ளம் கீழ்நோக்கி பல அடி உயரத்துக்கு கரைபுரண்டு வந்தது. இந்தச் சம்பவத்தில், கோஷி ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த பாலங்கள், ஆற்றங்கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. பனிப் பாறை உடைந்து சரிவு ஏற்பட்டதே இந்த வெள்ளத்திற்கு காரணம் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த திடீர் வெள்ளப்பெருக்கில் இதுவரை 289 பேர் பலியானதாகவும் 1,500 பேரைக் காணவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நேபாளத்தில் 177 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 517 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்பட 823 பேர் இன்னும் காணவில்லை எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது. திபெத்தின் கியிராங் மாவட்டத்தில் 3 பேர் பலியானதாகவும், 260 வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் உள்பட 558 பேர் காணாமல் போனதாகவும் சீன அரசு அறிவித்துள்ளது. கைலாஷ் மானசரோவருக்கு ஆனமிகச் சுற்றுலா சென்றிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேபாளத்தில் 288 இந்தியர்கள் காணாமல் போனதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “ திரிசூலி மின்னுற்பத்தி நிலையத்தில் பணியாற்றி வந்த 73 இந்தியர்களும் மாயமாகியுள்ளனர். ஜிலாங் நகரில் 4 பேரும், சாகா செல்லும் வழியில் உள்ள ஜுதுல்புக்கில் 30 பேரும், அருகில் சில இடங்களில் 60 முதல் 70 பேரும் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திபெத்தில் உள்ள சீன எல்லைப் பகுதியில் இந்தியர்கள் பலர் சிக்கித் தவித்து வருகின்றனர். 200-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உதவி கோரியுள்ள நிலையில், அவர்களில் 95 பேர் தற்போது டார்செனில் உள்ளனர். இந்தத் துயரமான நேரத்தில் நேபாளத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்திய அரசு மேற்கொள்ளும். மேலும், காத்மாண்டுவில் உள்ள இந்தியாவுக்கான நேபாள தூதருடன் தொடர்பு கொண்டுள்ளோம்” என்றார்.
நேபாள வெள்ளத்தில் 288 இந்தியர்களை காணவில்லை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கிய 288 இந்தியர்களைக் காணவில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் போடே கோஷி ஆற்றில் நேற்று (ஆகஸ்ட் 26) காலை 9 மணியளவில் திபெத் பகுதியில் இருந்து திடீரென வெள்ளம் கீழ்நோக்கி பல அடி உயரத்துக்கு கரைபுரண்டு வந்தது. இந்தச் சம்பவத்தில், கோஷி ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த பாலங்கள், ஆற்றங்கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. பனிப் பாறை உடைந்து சரிவு ஏற்பட்டதே இந்த வெள்ளத்திற்கு காரணம் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த திடீர் வெள்ளப்பெருக்கில் இதுவரை 289 பேர் பலியானதாகவும் 1,500 பேரைக் காணவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நேபாளத்தில் 177 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 517 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்பட 823 பேர் இன்னும் காணவில்லை எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது. திபெத்தின் கியிராங் மாவட்டத்தில் 3 பேர் பலியானதாகவும், 260 வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் உள்பட 558 பேர் காணாமல் போனதாகவும் சீன அரசு அறிவித்துள்ளது. கைலாஷ் மானசரோவருக்கு ஆனமிகச் சுற்றுலா சென்றிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேபாளத்தில் 288 இந்தியர்கள் காணாமல் போனதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “ திரிசூலி மின்னுற்பத்தி நிலையத்தில் பணியாற்றி வந்த 73 இந்தியர்களும் மாயமாகியுள்ளனர். ஜிலாங் நகரில் 4 பேரும், சாகா செல்லும் வழியில் உள்ள ஜுதுல்புக்கில் 30 பேரும், அருகில் சில இடங்களில் 60 முதல் 70 பேரும் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திபெத்தில் உள்ள சீன எல்லைப் பகுதியில் இந்தியர்கள் பலர் சிக்கித் தவித்து வருகின்றனர். 200-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உதவி கோரியுள்ள நிலையில், அவர்களில் 95 பேர் தற்போது டார்செனில் உள்ளனர். இந்தத் துயரமான நேரத்தில் நேபாளத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்திய அரசு மேற்கொள்ளும். மேலும், காத்மாண்டுவில் உள்ள இந்தியாவுக்கான நேபாள தூதருடன் தொடர்பு கொண்டுள்ளோம்” என்றார்.
- கர்ப்பிணிக்கு சிக்கலான முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை ஆரோக்கியமான குழந்தை பிறப்பு முதுகுத்தண்டுவட காசநோய் பாதிப்பால் நடக்க முடியாமல் அவதிப்பட்ட 28 வார கர்ப்பிணிக்கு, மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சவாலான முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அறுவைசிகிச்சைக்குப் பின்னர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், அந்த பெண் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தார். 28 வயதான கர்ப்பிணிக்கு தொடர்ந்து கடுமையான முதுகுத்தண்டு வலி ஏற்பட்டதுடன், நடப்பதில் சிரமமும் மார்புக்குக் கீழ் உணர்விழப்பும் ஏற்பட்டது. மருத்துவப் பரிசோதனைகளில் முதுகுத்தண்டுவடத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக நரம்புகளுக்கு அதிக அழுத்தம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, முதுகுத்தண்டுவடத்தின் மீதான அழுத்தத்தை குறைக்கும் வகையில் Decompressive Laminectomy அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தாய் மற்றும் சேய் இருவரையும் காக்க வேண்டும் மற்றும் 28 வார கர்ப்பம் என்பதால் அறுவைசிகிச்சை மருத்துவர்களுக்கு மிகப்பெரும் சவாலாக இருந்தது தாயின் உயிருக்கும் உடல்நலத்திற்கும் சிகிச்சை அளிப்பதுடன், வயிற்றில் இருந்த கருவின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியிருந்தது. பரிசோதனைகளில் T1–T2 பகுதியில் முதுகுத்தண்டு பாதிப்பு, முதுகுத்தண்டில் கூன் விழுந்தது போன்ற மாற்றம் மற்றும் நரம்பு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இது ‘பாட்ஸ் ஸ்பைன்’ எனப்படும் முதுகுத்தண்டுவட காசநோய் பாதிப்பாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். C3–T4 பகுதியில் சிக்கலான அறுவைசிகிச்சையை தொடர்ந்து முதுகுத்தண்டுவடத்தை நிலைநிறுத்தும் வகையில் C3–T4 பகுதியில் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பல மணி நேரம் நோயாளியை குப்புறப் படுக்க வேண்டியிருந்ததால், தாய் மற்றும் கருவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளின் போது கருவை கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கவும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அறுவைசிகிச்சைக்குப் பின்னர் நோயாளியின் உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் மீண்டும் நன்றாக நடக்கத் தொடங்கினார். தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்த நிலையில், பின்னர் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தார். முதுகுத்தண்டுவட அறுவைசிகிச்சை துறைத்தலைவரும் முதுநிலை நிபுணருமான டாக்டர் கே. செல்வகுமரன், முதுநிலை நிபுணர் டாக்டர் கே. எம். கவில் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அறுவைசிகிச்சையை மேற்கொண்டனர். இது மதுரையில் மருத்துவத் துறையின் மிகப்பெரிய சாதனையாக அமைந்துள்ளது.1
- மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை 28 வார கர்ப்பிணிக்கு முதுகுத்தண்டு சிகிச்சை செய்து சாதனை *மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை 28 வார கர்ப்பிணிக்கு முதுகுத்தண்டு சிகிச்சை செய்து சாதனை* மதுரை மாவட்டம் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் 28 வார கர்ப்பிணிக்கு சிக்கலான முதுகுத்தண்டு வட அறுவை சிகிச்சை செய்து சாதனை. மேலும் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்தார் என்பது கூடுதல் சிறப்பு. கிட்டத்தட்ட ஓராண்டாக கடுமையான கழுத்து வலியால் அவதிப்பட்டு வந்த 28 வயது கர்ப்பிணிப் பெண்ணுக்கு முதுகுத்தண்டுவட காசநோய் உருவானதால் நடப்பதில் சிரமமும், மார்புக்குக் கீழே உணர்ச்சியிழப்பும் ஏற்பட்டுருத்தது. முதுகுத்தண்டுவட அழுத்ததை குறைப்பதற்கான சிகிச்சையையும், திசு நீக்கம் மற்றும் நோயாளியின் சொந்த எலும்புகளைக் கொண்டு முதுகுத்தண்டை நிலைநிறுத்தும் ஒட்டு மொத்த அறுவை சிகிச்சையையும் மருத்துவர்கள் குழு வெற்றிகரமாக மேற்கொண்டது. அதே நேரத்தில் கர்ப்பத்திலுள்ள கருவுக்கு கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படாதவாறு உரிய சிகிச்சை அளித்து தாய், சேய் இருவரும் நலமாக உள்ளனர் என பத்திரிக்கையாளர் சந்திப்பில் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி நரம்பியல் அறுவை சிகிச்சை துறைத் தலைவர் மருத்துவர் செல்வமுத்துக் குமரன் கூறினார். உடன் முதுநிலை நிபுணர் மருத்துவர் செந்தில்குமார், இணை நிபுணர் மருத்துவர் கவீஸ் ஆகியோர் உடனிருந்தனர்.1
- மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் பூதமங்கலத்தில் இப்போது மழை பெய்து வருகிறது துறலுடன் கூடிய மழை பெய்து வருகிறது! மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் பூதமங்கலத்தில் இப்போது மழை பெய்து வருகிறது. தூறலுடன் கூடிய லேசான மழை பெய்து வருகிறது. அதிகமான மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. மேகம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. காலையிலிருந்து அதிக வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் இப்போது மழை பெய்து வருகிறது. மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.1
- அமைச்சர்களின் பதிலுரையை முதலில் வழங்குவது, திரைப்படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியை முதலில் காட்டுவது போன்றது : தங்கம் தென்னரசு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கூட்டத்தின்போது, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெற்ற மானியக் கோரிக்கை மீதான விவாதம் சிறப்பாக நடைபெற்றதாகத் தெரிவித்தார். மேலும், முதன்முறையாக 9 மணி 43 நிமிடங்கள் தொடர்ந்து அவை நடைபெற்றதாகவும் குறிப்பிட்டார். எனினும், அவை நேரத்தை கருத்தில்கொண்டு, அறிவிப்புகளை வெளியிடும் அமைச்சர்கள் இனி முதலில் அறிவிப்புகளை வெளியிட்ட பின்னர், அதனைத் தொடர்ந்து பதிலுரை வழங்கும் நடைமுறை கடைப்பிடிக்கப்படும் என அறிவித்தார். இதற்கு பதிலளித்த திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு, அமைச்சர்கள் அறிவிப்புகளை வெளியிட்ட பிறகு பதிலுரை வழங்குவது என்பது, திரைப்படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியை முதலில் போடுவது போல இருக்கும். தவெகவின் க்ளைமாக்ஸை அனைவரும் நிச்சயமாகப் பார்ப்போம். உங்களுடைய க்ளைமாக்ஸையும் கட்டாயம் காத்திருந்து பார்ப்போம் எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், இன்று காலையிலிருந்தே எதை முதலில் சொல்வது, எதை பின்னால் சொல்வது என்பதில் தொடர்ந்து மாற்றம் செய்து கொண்டிருக்கிறீர்கள். காலையில் வந்தவுடனே, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதில் சொல்லட்டும்; அதற்குப் பிறகு நீங்கள் பேசுங்கள் என்று சொன்னீர்கள். இப்போது அறிவிப்புகளை எல்லாம் முன்னதாக வெளியிட்டுவிட்டு, பின்னர் அதுகுறித்து பேசுங்கள் என்கிறீர்கள். மொத்தத்தில் பேரவைத் தலைவர் படுத்துக்கட்டும், போர்த்திக்கலாம்; போர்த்திவிட்டும் படுத்துக்கலாம் என்ற ஒரு முடிவுக்கு வந்துவிட்டாரா என்பதை நான் அறிய விரும்புகிறேன் என நகைச்சுவையாகக் கூறினார்.1
- குப்பைத் தொட்டியைப் பயன் படுத்தாத மக்கள் மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் வெள்ளலூர் ஊராட்ச்சியைச் சேர்ந்த கட்டைச் சோலைப்பட்டி என்ற கிராமத்தில் குப்பைத்தொட்டி இருந்தும் அதைப் பயன் படுத்தாமல் அந்த கிராம மக்கள் குப்பைத் தொட்டி அருகிழே யே குப்பையை கொட்டு கின்றனர்1
- புதிய தீயணைப்பு நிலையத்தை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் காணொளி வாயிலாக திறந்து வைத்தார் சிங்கம்புணரியில் 40 ஆண்டுகளாக வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வந்த தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. 1986-ல் துவங்கிய இந்த நிலையத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து, 2021-ல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இன்று ₹2.46 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய நிலையத்தை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். தென் மண்டல துணை இயக்குநர் குமார் குத்துவிளக்கு ஏற்றி, மரக்கன்றுகள் நட்டார்.1
- காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியத்தின் சார்பில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது காஞ்சிபுரத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மறைந்த கழகத்தின் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 74 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் விழாவானது கொண்டாடப்பட்டு வருகிறது அதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் ராஜேந்திரன் அவர்களின் வழிகாட்டுதலின்படி காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் விப்பேடு கிருபாகரன் தலைமையிலும் காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணி செயலாளர் சிம்பு அவர்களின் முன்னிலையிலும் காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியத்தின் சார்பில் மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட 24 பஞ்சாயத்துகளிலும் இனிப்புகள் மற்றும் அன்னதானங்கள் வழங்கி கொண்டாடப்பட்டது அதன் தொடர்ச்சியாக பாலு செட்டி சத்திரம் பகுதியில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 74 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 74 மரக்கன்றுகளை காஞ்சிபுரம் மாவட்ட விவசாய அணி செயலாளர் மகிமை மில்லர் ஏற்பாட்டில் காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் ராஜேந்திரன் கலந்து கொண்டு 74 மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினார்கள் அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்டா ஏழை எளிய மக்களுக்கு அறுசுவை பிரியாணி வழங்கி தேமுதிக மறைந்த தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் விழா காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியத்தின் சார்பில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய கிளை செயலாளர் விநாயகம் ஒன்றிய நிர்வாகி ஆனந்த் காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய பொருளாளர் நரசிம்மன் காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர்கள் சந்தியப்பன் தினகரன் காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி துளசிராமன் காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் நாகராஜ் புஷ்பராஜ் கோபி மோகன் ஜோதி பிரகாஷ் நவீன் முருகன் பெத்துராஜ் சுதாகர் ஜெகன் மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு கேப்டன் அவர்களின் பிறந்தநாள் விழா விமர்சியாக கொண்டாடப்பட்டது1
- மதுரையில் சினிமா பாணியில் மண் கடத்தல் மாஃபியா விரட்டிப் பிடிப்பு - பெட்ரோல் பங்க் அருகே மண்ணை கொட்டி தப்பிக்க முயன்ற டிரைவர் - தாசில்தாரை மிரட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரல்.* *மதுரை :* *மதுரையில் சினிமா பாணியில் மண் கடத்தல் மாஃபியா விரட்டிப் பிடிப்பு - பெட்ரோல் பங்க் அருகே மண்ணை கொட்டி தப்பிக்க முயன்ற டிரைவர் - தாசில்தாரை மிரட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரல்.* *வட்டாட்சியரை மிரட்டியவர்கள் மீது கொலை மிரட்டல், அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.* மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள வடகரை கண்மாயில் வண்டல் மண் எடுத்திட அனுமதி பெற்று விவசாய பணிக்கு பயன்படுத்தாமல், அனுமதியின்றி சட்டவிரோதமாக மண் அள்ளி கடத்தப்படுவதாக வாடிப்பட்டி வட்டாட்சியர் சுந்தரவேலுக்கு புகார் வந்ததையடுத்து, இன்று காலை அப்பகுதியில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, அந்த வழியாக கட்சகட்டி பகுதியில் செயல்படும் குவாரயிலிருந்து TN-65 AR 9048 வாகனத்தில் எவ்வித அனுமதியும் இன்றி குவாரி மண் கடத்தி கொண்டுவரப்பட்டதாக தெரியவந்தது. அந்த லாரியை நிறுத்துமாறு அதிகாரிகள் கூறிய நிலையில், லாரி ஓட்டுநர் நிறுத்தாமல் அதிவேகமாக அப்பகுதியில் இருந்து தப்பிக்க முயன்றார். சினிமா பாணியில் வாடிப்பட்டி தாசில்தார் சுந்தரவேல் தலைமையிலான வருவாய்த்துறையினர், மண் கடத்தி வந்த டிப்பர் லாரியை விரட்டிச் சென்று பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு வர முயன்றனர். அப்போது வாடிப்பட்டி அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே லாரியை நிறுத்திய ஓட்டுநர், டிப்பரில் இருந்த மண்ணை அங்கேயே கொட்டி தடயத்தை அழித்துவிட்டு தப்பிச் செல்ல முயன்றார். மேலும், வாகனத்திலிருந்து இறங்கி வந்த ஓட்டுநர் தாசில்தாரிடம் "பார்த்துக்கொள்ளலாம்" என்னை விட்டு விடுங்கள் என மிரட்டும் தோணியில் பேசிய வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து சமயநல்லூர் டி.எஸ்.பி-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார். சம்பந்தப்பட்ட வாகனம் மற்றும் அதன் உரிமையாளர் மீது அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தல், அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. வாடிப்பட்டி சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் பல வருடங்களாக மணல் மற்றும் கனிம வளம் உள்ளிட்டவை திருடப்படுவதாக புகார் வந்தாலும் கண்டும் காணாமல் இருப்பது போல் உள்ள காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் மத்தியில் இதுபோல் நேர்மையாக ஆய்வு மேற்கொண்டு கனிம வளத்திருட்டை தடுக்க முயலும் அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.1