logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் இடதுசாரிகளை வெற்றி பெறச் செய்வீர் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் இடதுசாரிக் கட்சிகள் ஏன் வெற்றி பெற வேண்டும், மக்கள் ஏன் இடதுசாரிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மூத்த பத்திரிகையாளர் குமரேசன் அவர்கள் ஒரு தனியார் தொலைக்காட்சிக்குத் தெரிவித்துள்ள கருத்துக்கள்: ​இடைத்தேர்தல்: இடதுசாரிக் கட்சிகளின் முடிவு யாருக்குச் சாதகம் என்றால்... ​இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுமே தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்தது கொள்கை உடன்பாட்டுக் கூட்டின் அடிப்படையில் அல்ல. அன்றைய சூழலைப் பயன்படுத்திக்கொண்டு ஆளுநர் ஆட்சியின் பெயரால், குடியரசுத் தலைவர் ஆட்சியின் வழியாக ஒன்றிய ஆளுங்கட்சியின் ஆட்சி வந்துவிடக்கூடாது என்ற நோக்கத்துடன்தான் அந்த ஆதரவு அளிக்கப்பட்டது. ​இப்போதும் அதே நிலைப்பாடுதான். ஆகவேதான் ஆட்சியிலும் பங்கேற்கவில்லை; தவெக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணியிலும் கம்யூனிஸ்ட்டுகள் இணையவில்லை. ​மதச்சார்பற்ற சமூகநீதிக் கூட்டணி என்று உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசின் நிலைப்பாடுகளுக்கு மாறான சில கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் தவெக அரசு எடுத்திருக்கிறது – அது வரவேற்கத்தக்கதே. ஆனால், மதவாத அரசியலுக்கு எதிராக வலுவான குரல் தவெக தலைவரான முதலமைச்சரிடமிருந்தோ, அடுத்த மட்டத் தலைவர்களிடமிருந்தோ ஒலிக்கவில்லையே? ​சமூகநீதி நல்ல லட்சியம்தான் – ஆனால் சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச்சட்டம் தேவையென்று கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர்ந்து கோரி வந்திருக்கின்றன. முந்தைய ஆட்சிகளும் அதை ஏற்கவில்லை, இந்த அரசும் அதை ஏற்பதாக அறிவிக்கவில்லையே? சமூகநீதியை நோக்கிய ஒரு வழியாகிய இடஒதுக்கீட்டுக் கொள்கை பற்றிய ஆவணத்தில் பெரியார், அம்பேத்கர், நேரு பெயர்கள் விடுபட்டதற்குக் கடும் கண்டனம் எழுந்த பிறகு, தார்மீகப் பொறுப்பேற்பதாக அமைச்சர் சொன்னதோடு விட்டுவிட்டார்களே? இந்தக் கூட்டணியில் இணைவதற்கான வலுவான தளம் அமையவில்லை. ​ஒன்றிய அரசு திணித்திருக்கிற நீட் தேர்வு வேண்டாம் என்பதே தனது நிலைப்பாடு என்று தவெக கூறுகிறது. ஆனால், அந்த நீட் தேர்வை எதிர்த்து நடந்த போராட்டங்களைக் காவல்துறை மூலம் ஒடுக்க முயன்றதைப் பார்த்தோம். நேற்று கூட, விவசாயிகள் போராட்டத்தின்போது வெயிலுக்காகப் பந்தல் போட முயன்றதைக் காவல்துறையினர் தடுத்துவிட்டார்கள்; விவசாயிகள் கீற்றுகளைத் தலைக்கு மேல் பிடித்தபடி போராட்டம் நடத்தியதை ‘புதிய தலைமுறை’ செய்தியில் காட்டினீர்கள். எந்த நம்பிக்கையில் கூட்டணியில் இணைவது? ​தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல்கள் இயல்பாக வந்தவை அல்ல. எப்படிப்பட்ட நிலைமைகளில் இடைத்தேர்தல் வரும் என்று நமக்குத் தெரியும். செயற்கையாக அந்த மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறது. அதிமுக பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சில நாட்களிலேயே பதவி விலகி தவெகவில் சேர்ந்ததால்தான் இந்த இடைத்தேர்தல். அவர்களையே மறுபடி வேட்பாளர்களாக நிறுத்தியிருப்பதில் என்ன அரசியல் அறம் இருக்கிறது? ​ஒருவேளை அவர்கள் வெற்றிபெற்றால், அடுத்தடுத்த இடைத்தேர்தல்களிலும் கட்சி மாறி வந்தவர்களை நிறுத்தி அவர்களும் வெற்றிபெற்றால், பெரும்பான்மை பலத்திற்கு இடதுசாரிகள் உள்பட மற்ற கட்சிகளைச் சார்ந்திருக்க வேண்டியதில்லை என்று கூட தவெக தலைமை நினைக்கலாம். ​இடைத்தேர்தலில் போட்டி என்பதே இந்த அரசின் மீதான ஒரு விமர்சனம்தான். இந்த முடிவு யாருக்குச் சாதகம் என்ற கோணத்தில் பார்க்க வேண்டியதில்லை. சட்டமன்றத்தில் ஏற்கெனவே நான்கு கம்யூனிஸ்ட்டுகள் இருக்கிறார்கள் – அவர்கள் என்ன பேசுகிறார்கள், யாருக்காகப் பேசுகிறார்கள் என்று மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். மற்றவர்கள் லாவணியும் பாட்டுப்போட்டியும் நடத்திக்கொண்டிருப்பதை மக்கள் கவனிக்கிறார்கள். ஆகவே இடதுசாரிகளின் இந்த முடிவு மக்களுக்குத்தான் சாதகம். ​சட்டமன்றத்தில் இடதுசாரிகளின் குரல் மேலும் வலுவாக ஒலிப்பது இரண்டு தொகுதிகளுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கே நன்மையளிக்கும். மக்களின், உழைப்பாளிகளின், தலித்துகளின், பெண்களின், நலிவுற்றோரின் குரலாக கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் ஒலிப்பார்கள். ​அந்த நோக்கத்துடன்தான் இடைத்தேர்தலில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் போட்டியிடுகின்றன. இந்த வாய்ப்பைத் தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளின் மக்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ​தவெக ஆட்சியமைத்தபோது இருந்த “ஃபிரெஷ்” நிலைமை இப்போது இல்லை. ஆண்டுக்கணக்கில் அல்ல, நாட்கணக்கில்தான் ஆகியிருக்கிறது என்றாலும் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு இல்லை. ​எடுத்துக்காட்டாக மின்வெட்டு – தமிழ்நாட்டில் மின்வெட்டே இல்லை, எதிர்க்கட்சிகள் அரசியலுக்காக அப்படிச் சொல்கின்றன என்கிறார் ஓர் அமைச்சர். அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனே, அதிகாரிகள் சரியான தகவல்களை அமைச்சர்களுக்குச் சொல்ல வேண்டும் என்று கூறியிருக்கிறார். ​அதிகாரிகளை அரசு ஆள்கிறதா அல்லது அரசை அதிகாரிகள் ஆள்கிறார்களா என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழல்களில்தான் இடதுசாரிக் கட்சிகள், முதலில் சொன்ன காரணத்திற்காக இந்த ஆட்சியை ஆதரித்துக்கொண்டே இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றன. தொடக்கத்திலேயே தெளிவுபடுத்தப்பட்டுவிட்ட நிலைப்பாடு இது – இதில் அதிர்ச்சியடைய என்ன இருக்கிறது? ​ஆட்சி தொடர வேண்டுமா வேண்டாமா என்று தீர்மானிக்கிற தேர்தல் அல்ல இது. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்களுடைய கண்ணோட்டங்களையும் கருத்துகளையும் மக்களிடம் கொண்டுசெல்வதற்கான வாய்ப்பாக இதைப் பயன்படுத்திக்கொள்வார்கள். ​தொகுதி நிலவரங்களின் சதவீதக் கணக்குகளைத் தாண்டி இரண்டு கருத்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்: ​இதுவரையில் தமிழகத்திலும் நாடு தழுவிய அளவிலும் நிலவிய அரசியல், சமூகச் சூழல்களைப் பொறுத்துக் கூட்டணிகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்றிருக்கின்றன. அந்த அரசியல், சமூகத் தேவைகள் நிறைவேறின என்றாலும், கம்யூனிஸ்ட்டுகள் மக்களுக்கான போராட்டங்களைக் கைவிடாமல் தொடர்ந்து நடத்திவந்தார்கள் என்ற போதிலும், கம்யூனிஸ்ட்டுகளின் தனித்துவம் பின்தங்கிவிட்டது என்ற தோற்றமும் ஏற்பட்டது. இப்போது அந்தத் தோற்றத்தை மாற்றுவதற்கு ஒரு வாய்ப்பாக இந்த இடைத்தேர்தல் அமைகிறது. ​அடுத்து – முன்னெப்போதையும் விட இப்போது கம்யூனிஸ்ட் கட்சிகளின் மீது மக்களின் பார்வை அதிகரித்திருக்கிறது. கம்யூனிஸ்ட்டுகளின் அணுகுமுறைகளையும் செயல்பாடுகளையும் மக்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள். இதனை இடதுசாரிக் கட்சிகள் தக்க முறையில் பயன்படுத்திக்கொண்டு தங்கள் அரசியல், சமூகக் கண்ணோட்டங்களைக் கொண்டுசெல்வார்கள்.

1 hr ago
user_N-KIPSRA
N-KIPSRA
மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
1 hr ago
b89a7abb-7941-4be4-91f6-a7b5024c1730

More news from தமிழ்நாடு and nearby areas
  • மாணவர்களுடன் காலை உணவு அருந்திய விருதுநகர் மாவட்ட ஆட்சியர். விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா ஹரி இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.09.2026) திருவில்லிபுத்தூர் நகராட்சிக்குட்பட்ட திரு.வி.க. தொடக்கப்பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வரும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரம், சுகாதாரம் மற்றும் உணவு வழங்கப்படும் முறைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை அருந்தி, அவர்களுடன் கலந்துரையாடினார். மாணவர்களின் கல்வி, பள்ளியில் வழங்கப்படும் அடிப்படை வசதிகள் மற்றும் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார்.
    1
    மாணவர்களுடன் காலை உணவு அருந்திய விருதுநகர் மாவட்ட ஆட்சியர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா ஹரி இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.09.2026) திருவில்லிபுத்தூர் நகராட்சிக்குட்பட்ட திரு.வி.க. தொடக்கப்பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வரும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரம், சுகாதாரம் மற்றும் உணவு வழங்கப்படும் முறைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை அருந்தி, அவர்களுடன் கலந்துரையாடினார்.
மாணவர்களின் கல்வி, பள்ளியில் வழங்கப்படும் அடிப்படை வசதிகள் மற்றும் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார்.
    user_குமார்
    குமார்
    Local News Reporter காரியாபட்டி, விருதுநகர், தமிழ்நாடு•
    22 hrs ago
  • விநாயகர் சதுர்த்தி அன்று வலம் வந்த ஒற்றைக் காட்டு யானை (எஸ்டேட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு) திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே உள்ள சேம்பிலியூத்து என்ற மலை கிராமத்தில் உள்ள எஸ்டேட்டில் நேற்று விநாயகர் சதுர்த்தி அன்று வலம் வந்த ஒற்றைக் காட்டு யானை. (எஸ்டேட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு)
    1
    விநாயகர் சதுர்த்தி அன்று வலம் வந்த ஒற்றைக் காட்டு யானை (எஸ்டேட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு)
திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே உள்ள சேம்பிலியூத்து என்ற மலை கிராமத்தில் உள்ள எஸ்டேட்டில் நேற்று விநாயகர் சதுர்த்தி அன்று வலம் வந்த ஒற்றைக் காட்டு யானை. (எஸ்டேட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு)
    user_RAJA
    RAJA
    பத்திரிகையாளர் ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    10 hrs ago
  • தேவகோட்டையில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 118-ஆவது பிறந்தநாள் விழா , சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தியாகிகள் பூங்கா அருகில், 23-ஆவது வட்டக் கழகம் சார்பாக பேரறிஞர் அண்ணாவின் 118-ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நிகழ்வில், திமுக நிர்வாகியும் முன்னாள் கவுன்சிலருமான ஜாஹிர் உசேன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திமுக, திக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் அண்ணாவின் மலர் மாலை அணிவிக்கப்பட்ட புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அண்ணாவின் சிந்தனைகளைப் போற்றும் வகையில் அமைந்த இந்நிகழ்வு, கலந்துகொண்ட அனைவராலும் சிறப்பிக்கப்பட்டது.
    1
    தேவகோட்டையில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 118-ஆவது பிறந்தநாள் விழா , 
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தியாகிகள் பூங்கா அருகில், 23-ஆவது வட்டக் கழகம் சார்பாக பேரறிஞர் அண்ணாவின் 118-ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
நிகழ்வில், திமுக நிர்வாகியும் முன்னாள் கவுன்சிலருமான ஜாஹிர் உசேன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திமுக, திக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் அண்ணாவின் மலர் மாலை அணிவிக்கப்பட்ட புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அண்ணாவின் சிந்தனைகளைப் போற்றும் வகையில் அமைந்த இந்நிகழ்வு, கலந்துகொண்ட அனைவராலும் சிறப்பிக்கப்பட்டது.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    12 hrs ago
  • ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சயனர் புரட்டாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ வடபத்ரசயனர் திருக்கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது. மகாலட்சுமியின் அம்சமான ஸ்ரீ ஆண்டாள் மானிட பெண்ணாக அவதரித்து பாமாலை பாடி பின் பூமாலை சுற்றி ஸ்ரீரங்கநாதரை அடைந்தார் என்பது ஐதீகம்.ஆண்டாள் தினமும் தான் சூடி கலைந்த மாலையை ஸ்ரீரங்கநாதரின் அம்சமான ஸ்ரீ வடபத்ரசயனருக்குத்தான் சாற்றி வந்துள்ளார். இந்த வடபத்ர சயனருக்கான புரட்டாசி பிரமோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று துவங்கும் உற்சவம் 12 நாட்கள் நடைபெறும்.ஐந்தாம் திருநாள் தங்க கருட சேவையும், ஒன்பதாம் திருநாள்(23.09.26) செப்பு திருத்தேரோட்டமும் நடைபெற உள்ள நிலையில் தினந்தோறும் பூதேவி ஸ்ரீதேவி சமேத வடபத்ரசயனர் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பர். கொடியேற்ற நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.
    1
    ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சயனர் புரட்டாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ வடபத்ரசயனர் திருக்கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது. மகாலட்சுமியின் அம்சமான ஸ்ரீ ஆண்டாள் மானிட பெண்ணாக அவதரித்து பாமாலை பாடி பின் பூமாலை சுற்றி ஸ்ரீரங்கநாதரை அடைந்தார் என்பது ஐதீகம்.ஆண்டாள் தினமும் தான் சூடி கலைந்த மாலையை ஸ்ரீரங்கநாதரின் அம்சமான ஸ்ரீ வடபத்ரசயனருக்குத்தான் சாற்றி வந்துள்ளார். இந்த வடபத்ர சயனருக்கான புரட்டாசி பிரமோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. 
இன்று துவங்கும் உற்சவம் 12 நாட்கள் நடைபெறும்.ஐந்தாம் திருநாள் தங்க கருட சேவையும், ஒன்பதாம் திருநாள்(23.09.26) செப்பு திருத்தேரோட்டமும் நடைபெற உள்ள நிலையில் தினந்தோறும் பூதேவி ஸ்ரீதேவி சமேத வடபத்ரசயனர் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பர். கொடியேற்ற நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.
    user_Virudhunagar
    Virudhunagar
    Virudhunagar, Tamil Nadu•
    13 hrs ago
  • பொன்னமராவதியில் திமுக சார்பாக பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி திமுக கட்சி அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் பொன்னமராவதி திமுக நகரச் செயலாளர் அழகப்பன் தலைமையில் நடைபெற்ற விழாவில் தொடர்ந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டன. அதில் திராவிடர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    1
    பொன்னமராவதியில் திமுக சார்பாக பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி திமுக கட்சி அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் பொன்னமராவதி திமுக நகரச் செயலாளர் அழகப்பன் தலைமையில் நடைபெற்ற விழாவில் தொடர்ந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டன. அதில் திராவிடர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    user_Kavin
    Kavin
    பொன்னமராவதி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    19 hrs ago
  • தேனி மாவட்டம் பெரியகுளத்தில் காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலம் வராக நதியில் சிலைகள் கரைப்பு தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இந்து முன்னணி சார்பில் 37-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள காமாட்சிபுரம், எ.புதுப்பட்டி, தாமரைக்குளம், தெ.கள்ளிப்பட்டி, வடுகபட்டி, மேல்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, இன்று காலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆனைத் தொடர்ந்து இன்று மாலை வேளையில் அனைத்துச் சிலைகளும் பெரியகுளம் மதுரை சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டன. அதைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்டம் சுருள் கத்தி, வால் சுற்றுதல், உள்ளிட்ட விளையாட்டுக்களுடன் அரண்மனைத் தெரு, வி.ஆர்.பி தெரு, தென்கரை சுதந்திர வீதி மற்றும் அக்ரகாரம் வழியாக முக்கிய வீதிகளில் விநாயகர் சிலை ஊர்வலம் சென்றது. சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற இந்த ஊர்வலத்தின் முடிவில், அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி கோவில் அருகே உள்ள வராக நதி ஆற்றில் சிலைகள் அனைத்தும் பாதுகாப்பாகக் கரைக்கப்பட்டன. அமைதியான முறையில் ஊர்வலம் நடைபெறுவதற்காக, பெரியகுளம் காவல்துறை கண்காணிப்பாளர் நல்லு தலைமையில், 18 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 650 -க்கும் மேற்பட்ட காவலர்கள் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
    1
    தேனி மாவட்டம் பெரியகுளத்தில் காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலம்  வராக நதியில் சிலைகள் கரைப்பு
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இந்து முன்னணி சார்பில் 37-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள காமாட்சிபுரம், எ.புதுப்பட்டி, தாமரைக்குளம், தெ.கள்ளிப்பட்டி, வடுகபட்டி, மேல்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, இன்று காலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஆனைத் தொடர்ந்து இன்று மாலை வேளையில் அனைத்துச் சிலைகளும் பெரியகுளம் மதுரை சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டன. 
அதைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்டம் சுருள் கத்தி, வால்  சுற்றுதல், உள்ளிட்ட விளையாட்டுக்களுடன்  அரண்மனைத் தெரு, வி.ஆர்.பி தெரு, தென்கரை சுதந்திர வீதி மற்றும் அக்ரகாரம் வழியாக முக்கிய வீதிகளில் விநாயகர் சிலை ஊர்வலம் சென்றது.
சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற இந்த ஊர்வலத்தின் முடிவில், அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி கோவில் அருகே உள்ள வராக நதி ஆற்றில் சிலைகள் அனைத்தும் பாதுகாப்பாகக் கரைக்கப்பட்டன.
அமைதியான முறையில் ஊர்வலம் நடைபெறுவதற்காக, பெரியகுளம் காவல்துறை கண்காணிப்பாளர்  நல்லு தலைமையில், 18 காவல்  ஆய்வாளர்கள் உள்ளிட்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 650 -க்கும் மேற்பட்ட காவலர்கள் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    22 hrs ago
  • தேனி மாவட்டம் போடியில் விமரிசையாக நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் காவல்துறையினரின் கட்டுப்பாடுகளால் அமைதியாக நடந்த ஆன்மீகப் பெருவிழா ​ தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, நகர் மற்றும் கிராமப்புறங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகளின் ஊர்வலம் வெகு சிறப்பாகவும் ஆன்மீக உணர்வுடனும் நடைபெற்றது. ​ கேரளா செண்டை மேளம், கைலாய வாத்தியம், பேண்ட் செட்டுகள் முழங்க, முளைப்பாரி மற்றும் கரகாட்டத்துடன் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. போடி பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய இந்த ஊர்வலம், சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வேட்டவராயன் கோவில் கொட்டகுடி ஆற்றைச் சென்றடைந்து, அங்கு சிலைகள் முறைப்படி கரைக்கப்பட்டன. கடந்த ஆண்டு ஊர்வலத்தின் போது ஒலிபெருக்கிகளில் ஆபாசப் பாடல்கள் ஒளிபரப்பப்பட்டு அசம்பாவிதங்கள் ஏற்பட்டதைச் சுட்டிக்காட்டி, இந்த ஆண்டு காவல்துறையினர் கடும் கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். வாகனங்களில் ஒலிபெருக்கிகள் அமைக்கத் தடை விதிக்கப்பட்டது. இந்து முன்னணி சார்பில் அமைக்கப்பட்டிருந்த 11 அடி விநாயகர் சிலை வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த கூம்பு வடிவ ஒலிபெருக்கியைக் காவல்துறையினர் உடனடியாக அகற்றக் கோரினர். ​காவல்துறையின் இந்த நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் காரணமாக, முந்தைய ஆண்டை விடக் குறைவான வாகனங்களே பங்கேற்ற போதிலும், எவ்வித அசம்பாவிதமும் இன்றி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மிகவும் அமைதியாகவும் பக்திப் பெருக்குடனும் நிறைவுற்றது.
    1
    தேனி மாவட்டம் போடியில் விமரிசையாக நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் காவல்துறையினரின் கட்டுப்பாடுகளால் அமைதியாக நடந்த ஆன்மீகப் பெருவிழா
​
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, நகர் மற்றும் கிராமப்புறங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகளின் ஊர்வலம் வெகு சிறப்பாகவும் ஆன்மீக உணர்வுடனும் நடைபெற்றது.
​ கேரளா செண்டை மேளம், கைலாய வாத்தியம், பேண்ட் செட்டுகள் முழங்க, முளைப்பாரி மற்றும் கரகாட்டத்துடன் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
போடி பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய இந்த ஊர்வலம், சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வேட்டவராயன் கோவில் கொட்டகுடி ஆற்றைச் சென்றடைந்து, அங்கு சிலைகள் முறைப்படி கரைக்கப்பட்டன.
கடந்த ஆண்டு ஊர்வலத்தின் போது ஒலிபெருக்கிகளில் ஆபாசப் பாடல்கள் ஒளிபரப்பப்பட்டு அசம்பாவிதங்கள் ஏற்பட்டதைச் சுட்டிக்காட்டி, இந்த ஆண்டு காவல்துறையினர் கடும் கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். வாகனங்களில் ஒலிபெருக்கிகள் அமைக்கத் தடை விதிக்கப்பட்டது.
இந்து முன்னணி சார்பில் அமைக்கப்பட்டிருந்த 11 அடி விநாயகர் சிலை வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த கூம்பு வடிவ ஒலிபெருக்கியைக் காவல்துறையினர் உடனடியாக அகற்றக் கோரினர்.
​காவல்துறையின் இந்த நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் காரணமாக, முந்தைய ஆண்டை விடக் குறைவான வாகனங்களே பங்கேற்ற போதிலும், எவ்வித அசம்பாவிதமும் இன்றி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மிகவும் அமைதியாகவும் பக்திப் பெருக்குடனும் நிறைவுற்றது.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • தவெகாவின் நிலைப்பாடு பிடிக்காததன் காரணமாகவே இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை நிறுத்தி தனித்துப் போட்டியிடுகிறது- சிவகாசிகள் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேட்டி... தவெக ஆட்சிக்கு, கூட்டணி கட்சிகள் கொடுக்கின்ற முட்டுக்கட்டை நிலையானது அல்ல, எந்த நேரத்திலும் தவெக ஆட்சிக்கு பேராபத்து வரக்கூடிய சூழலில்தான் கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் விமர்சனம்... அறிஞர் அண்ணா அவர்களின் 118 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சிவகாசி காவல் நிலையம் எதிரே அமைந்துள்ள அவரது திருவுருவர் சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திர பாலாஜி, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக மக்கள் விரும்புகின்ற ஆட்சியாகவும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வேண்டும் என்பதுதான் மக்கள் மனதில் ஆழமாக இருக்கிறது இடையில் ஏற்பட்ட சில சருக்கல்கள், கருத்து திணிப்புகள், அரசியல் கோல்மால்கள், வாட்ஸாப், பேஸ்புக், இன்டஸ்ட்ராகிராம் போன்ற குழப்பங்க அண்ணா திமுக ளால் ஆட்சி மாற்றம் வந்துள்ளது தற்போது நடைபெறும் ஆட்சி மக்களால் விரும்பும் ஆட்சி கிடையாது நகைப்புக்குரிய ஆட்சியாக விஜய் ஆட்சி உள்ளது இடைத்தேர்தலில் அதிமுக முதன்மையான கட்சியாக வெற்றி பெறும், தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் லட்சக்கணக்கான வாக்குகள் பெற்று அதிக வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும் எடப்பாடியார் தலைமை தமிழகத்திற்கு வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு மக்கள் வாக்களிக்க தயாராகிவிட்டார்கள் தவெக ஆட்சிக்கு இடைத்தேர்தல் பாடம் புகட்டும் முதல்வரின் லண்டன் பயணம் குறித்து முதல்வர் சார்பில் வெளியிட்டுள்ள புகைப்படம் பேசுபொருளாக தமிழகத்தில் உலாவி வருகிறது, அதை தார்மீகமாக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, ஒரு நாட்டின் முதல்வர் எப்படி வாழ வேண்டும், எப்படி இருக்க வேண்டும், பிறருக்கு முன் உதாரணமாக வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு இருக்க வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள் ஆனால் அந்த நிலைப்பாட்டில் வாழக்கூடியவராக இன்றைய தமிழக முதல்வர் இருக்கவில்லை முதல்வரின் லண்டன் பயணத்தை சந்தேக கண்ணோடு தமிழக மக்கள் பார்க்கிறார்கள் வெளிநாட்டில் முதலீடை ஈர்க்க சென்றுள்ள முதல்வர், தொழில்துறை அமைச்சர் இல்லாமல் சென்றாலும் சம்பந்தப்பட்ட பணிகளை செய்து வெற்றிகரமாக திரும்பினால் சந்தோஷம் ஆனால் முதல்கட்டமாக ஊடகத்தில் வந்த செய்திகளை பார்க்கும்போது முதல்வர் வெளிநாடு சென்ற நோக்கமே வேறாக தெரிகிறது மக்கள், அரசியல் கட்சி தலைவர்களின் எதிர்ப்புகளை தொடர்ந்து சில பணிகளை செய்வதாக கேள்விப்படுகிறோம் மொத்தத்தில் முதல்வர் தடம் மாறி, தடம் புரண்டு நடவடிக்கையில் ஈடுப்பட்டுக்கொண்டிருப்பதாக தமிழக மக்கள் எண்ணுகிறார்கள், இதை முதல்வர் மாற்றிக்கொள்ள வேண்டும் தமிழக முதலமைச்சராக வந்த பின்னர், அனைத்து முதலமைச்சர்களும் முதல்வர்களுக்கான பண்போடும், தகுதியோடும், தன்மையோடு வாழ்ந்துகொண்டு தமிழகத்தை ஆண்டிருக்கிறார்கள் அதேபோல் விஜயும் முதல்வருக்கான பண்போடும், தகுதியோடும் தன்மையோடும் வாழ்ந்து ஆட்சி செய்ய வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள், ஆனால் அதற்கு எதிர்மறையான நிலைப்பாட்டோடு முதல்வர் விஜய்யின் ஆட்சியும் அவரது செயல்பாடும் இருக்கிறது முதல்வர் விஜய் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என தமிழக மக்கள் விரும்புகிறார்கள் தவெக ஆட்சி விளையாட்டுத்தனமான ஆட்சி காவல்துறையினர் மானிய கோரிக்கையின் போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் சார்பாக பல்வேறு கேள்விகளை முன் வைத்தபோது, எந்த கேள்விகளுக்கும் பதிலளிக்காத முதல்வர் விஜய் அவருக்கே தெரிந்த பாணியில் வசனத்தை பேசி பதில் உரையை முடித்து விட்டார் முதல்வர் விஜயின் பதிலுரை பார்ப்பதற்கு வேண்டுமானால் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும், சிரிப்பாகவும், ஜோக்காகவும் இருக்கலாமே தவிர நல்ல விவரம் தெரிந்த, அரசியல் தெரிந்தவர்கள் முதல்வர் விஜயின் பேச்சை எள்ளி நகையாடுகிறார்கள் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள், முன்னாள் ஆட்சியாளர்கள் கேட்ட ஒரு கேள்விக்கு கூட முதல்வர் விஜய் பதிலளிக்கவில்லை காவல்துறை உள்ளிட்ட சீருடை பணியாளர்களுக்கு எந்தவிதமான முன்னேற்ற அறிவிப்புகளும் காவல்துறை மானிய கோரிக்கையில் வரவில்லை இதை காவல்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை சங்கடத்துடன் வாழ்வதை காண முடிகிறது தமிழக மக்களுக்காக 24 மணி நேரமும் உழைக்கின்ற காவல் துறைக்கு எந்தவிதமான அறிவிப்புகளோ சலுகைகளோ வழங்கப்படாததை தமிழக மக்கள், காவல்துறையினரால் ஏற்றுக்கொள்ளவில்லை மொத்தத்தில் பிறரை ஏளனமாக பேசுவதற்கும், தமக்கு பிடிக்காதவர்களை எள்ளி நகையாடுவதற்கும் சட்டமன்றத்தை ஒரு கருவியாக முதல்வர் விஜய் பயன்படுத்திக்கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி ஆண்ட காலத்திலும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலத்திலும் சட்டமன்றத்தின் புனிதத் தன்மை காக்கப்பட்டது தற்போது சட்டமன்றத்தின் புனிதத் தன்மை குறைந்து பாலாகிவிட்டது, இந்த நிலை மாற வேண்டும் என்றால் முதல்வர் விஜய் தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் தவெக ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள், அதே நேரத்தில் தவெக ஆட்சிக்கு ஆதரவாக தேர்தல் களத்தில் பணி செய்ய விரும்பவில்லை தவெகாவின் நிலைப்பாடு பிடிக்காததன் காரணமாகவே இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை நிறுத்தி தனித்துப் போட்டியிடுகிறது ஆளுநர் ஆட்சி வந்துவிடக்கூடாது, மத்திய அரசின் மறைமுக ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காக மட்டுமே தவெகவிற்கு ஆதரவு கொடுத்தோமே தவிர தவெகாவின் தலைவரை பிடித்தோ, தவெகவின் கொள்கையை பிடித்தோ ஆதரவு கொடுக்கவில்லை என கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் சொல்லிவிட்டார்கள் தவெக ஆட்சிக்கு, கூட்டணி கட்சிகள் கொடுக்கின்ற முட்டுக்கட்டை நிலையானது அல்ல, எந்த நேரத்திலும் தவெக ஆட்சிக்கு பேராபத்து வரக்கூடிய சூழலில்தான் கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது நிலையான ஆட்சியமைக்கும் தன்மை முதல்வர் விஜய்கோ, தவெக கட்சிக்கோ கிடையாது ஆட்சி நிலைக்க முதல்வர் விஜய் தனது நிலைய மாற்றிக்கொள்ள வேண்டும் பிறரை பழி வாங்குவதற்கோ, பிறரை இகழ்ந்து, புகழ்ந்து பேசுவதற்கோ, தன்னை புகழ்ந்து பேசுவதற்கோ சட்டமன்றத்தை கருவியாக பயன்படுத்த நினைத்தால் தமிழக மக்கள் காலப்போக்கில் தூக்கி எறிந்து விடுவார்கள் இதற்கு ஆதரவு தர மாட்டார்கள் தமிழக மக்கள் எப்பொழுதும் முழிப்போடும் இருக்கக்கூடியவர்கள், தமிழக மக்களும், தமிழ் அறிஞர்கள், அரசியல் அறிந்தவர்கள் எள்ளி நகையாட கூடிய சூழ்நிலையை பார்க்கிறோம் இந்த நிலை மாற வேண்டும் என்றால் சட்டமன்றம் தனி சிறப்போடு இயங்க வேண்டும் சட்டமன்றத்தில் இன்றைக்கு என்ன பாடல் பாடப்போகிறார்கள், யார் பாடப் போகிறார்கள் என பட்டிமன்றம் போல் செயல்படும் சட்டமன்றத்தின் நிலையை மாற்ற வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள், முதல்வர் விஜய் அதனை மாற்றுவாரா என்றால் அது கேள்விகுறியாகவே இருக்கிறது
    1
    தவெகாவின் நிலைப்பாடு பிடிக்காததன் காரணமாகவே இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை நிறுத்தி தனித்துப் போட்டியிடுகிறது- சிவகாசிகள் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேட்டி...
தவெக ஆட்சிக்கு, கூட்டணி கட்சிகள்  கொடுக்கின்ற முட்டுக்கட்டை நிலையானது அல்ல, எந்த நேரத்திலும் தவெக ஆட்சிக்கு பேராபத்து வரக்கூடிய சூழலில்தான்  கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் விமர்சனம்...
அறிஞர் அண்ணா அவர்களின் 118 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சிவகாசி காவல் நிலையம் எதிரே அமைந்துள்ள அவரது திருவுருவர் சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திர பாலாஜி, 
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக மக்கள் விரும்புகின்ற ஆட்சியாகவும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வேண்டும் என்பதுதான் மக்கள் மனதில் ஆழமாக இருக்கிறது 
இடையில் ஏற்பட்ட  சில சருக்கல்கள்,  கருத்து திணிப்புகள், அரசியல் கோல்மால்கள், வாட்ஸாப், பேஸ்புக், இன்டஸ்ட்ராகிராம் போன்ற குழப்பங்க அண்ணா திமுக ளால் ஆட்சி மாற்றம் வந்துள்ளது
தற்போது நடைபெறும் ஆட்சி மக்களால் விரும்பும் ஆட்சி கிடையாது 
நகைப்புக்குரிய ஆட்சியாக விஜய் ஆட்சி உள்ளது 
இடைத்தேர்தலில் அதிமுக முதன்மையான கட்சியாக வெற்றி பெறும், 
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில்  லட்சக்கணக்கான வாக்குகள் பெற்று அதிக வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும்
எடப்பாடியார் தலைமை தமிழகத்திற்கு வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு மக்கள் வாக்களிக்க தயாராகிவிட்டார்கள் 
தவெக ஆட்சிக்கு இடைத்தேர்தல் பாடம் புகட்டும்
முதல்வரின் லண்டன் பயணம் குறித்து முதல்வர் சார்பில்  வெளியிட்டுள்ள புகைப்படம் பேசுபொருளாக தமிழகத்தில் உலாவி வருகிறது, அதை தார்மீகமாக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, 
ஒரு நாட்டின் முதல்வர் எப்படி வாழ வேண்டும், எப்படி இருக்க வேண்டும், பிறருக்கு முன் உதாரணமாக வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு இருக்க வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள் 
ஆனால் அந்த நிலைப்பாட்டில் வாழக்கூடியவராக இன்றைய தமிழக முதல்வர் இருக்கவில்லை 
முதல்வரின் லண்டன் பயணத்தை சந்தேக கண்ணோடு தமிழக மக்கள் பார்க்கிறார்கள்
வெளிநாட்டில் முதலீடை ஈர்க்க சென்றுள்ள முதல்வர், தொழில்துறை அமைச்சர் இல்லாமல் சென்றாலும் சம்பந்தப்பட்ட பணிகளை செய்து வெற்றிகரமாக திரும்பினால் சந்தோஷம்
ஆனால் முதல்கட்டமாக ஊடகத்தில் வந்த செய்திகளை பார்க்கும்போது முதல்வர் வெளிநாடு சென்ற நோக்கமே வேறாக தெரிகிறது 
மக்கள், அரசியல் கட்சி தலைவர்களின் எதிர்ப்புகளை தொடர்ந்து சில பணிகளை செய்வதாக கேள்விப்படுகிறோம் 
மொத்தத்தில் முதல்வர் தடம் மாறி, தடம் புரண்டு நடவடிக்கையில் ஈடுப்பட்டுக்கொண்டிருப்பதாக தமிழக மக்கள் எண்ணுகிறார்கள், இதை முதல்வர் மாற்றிக்கொள்ள வேண்டும் 
தமிழக முதலமைச்சராக வந்த பின்னர்,  அனைத்து முதலமைச்சர்களும் முதல்வர்களுக்கான பண்போடும், தகுதியோடும், தன்மையோடு வாழ்ந்துகொண்டு தமிழகத்தை ஆண்டிருக்கிறார்கள்
அதேபோல் விஜயும் முதல்வருக்கான பண்போடும்,  தகுதியோடும் தன்மையோடும் வாழ்ந்து ஆட்சி செய்ய வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள், ஆனால் அதற்கு எதிர்மறையான நிலைப்பாட்டோடு முதல்வர் விஜய்யின் ஆட்சியும் அவரது செயல்பாடும் இருக்கிறது
முதல்வர் விஜய் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என தமிழக மக்கள் விரும்புகிறார்கள்
தவெக ஆட்சி விளையாட்டுத்தனமான ஆட்சி
காவல்துறையினர் மானிய கோரிக்கையின் போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் சார்பாக பல்வேறு கேள்விகளை முன் வைத்தபோது, எந்த கேள்விகளுக்கும் பதிலளிக்காத முதல்வர் விஜய் அவருக்கே தெரிந்த பாணியில்  வசனத்தை பேசி பதில் உரையை முடித்து விட்டார்
முதல்வர் விஜயின் பதிலுரை பார்ப்பதற்கு வேண்டுமானால் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும், சிரிப்பாகவும், ஜோக்காகவும் இருக்கலாமே தவிர 
நல்ல விவரம் தெரிந்த, அரசியல் தெரிந்தவர்கள் முதல்வர் விஜயின் பேச்சை எள்ளி நகையாடுகிறார்கள்
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள், முன்னாள் ஆட்சியாளர்கள் கேட்ட ஒரு கேள்விக்கு கூட முதல்வர் விஜய் பதிலளிக்கவில்லை 
காவல்துறை உள்ளிட்ட சீருடை பணியாளர்களுக்கு எந்தவிதமான முன்னேற்ற அறிவிப்புகளும் காவல்துறை மானிய கோரிக்கையில் வரவில்லை
இதை காவல்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை சங்கடத்துடன் வாழ்வதை காண முடிகிறது
தமிழக மக்களுக்காக 24 மணி நேரமும் உழைக்கின்ற காவல் துறைக்கு எந்தவிதமான அறிவிப்புகளோ சலுகைகளோ வழங்கப்படாததை  தமிழக மக்கள்,  காவல்துறையினரால் ஏற்றுக்கொள்ளவில்லை
மொத்தத்தில் பிறரை ஏளனமாக பேசுவதற்கும், தமக்கு பிடிக்காதவர்களை எள்ளி நகையாடுவதற்கும் சட்டமன்றத்தை ஒரு கருவியாக முதல்வர் விஜய் பயன்படுத்திக்கொண்டார்
எடப்பாடி பழனிச்சாமி ஆண்ட  காலத்திலும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலத்திலும் சட்டமன்றத்தின் புனிதத் தன்மை காக்கப்பட்டது
தற்போது சட்டமன்றத்தின் புனிதத் தன்மை குறைந்து பாலாகிவிட்டது,
இந்த நிலை மாற வேண்டும் என்றால் முதல்வர் விஜய் தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்
தவெக ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள், அதே நேரத்தில் தவெக ஆட்சிக்கு ஆதரவாக தேர்தல் களத்தில் பணி செய்ய விரும்பவில்லை
தவெகாவின் நிலைப்பாடு பிடிக்காததன் காரணமாகவே இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை நிறுத்தி தனித்துப் போட்டியிடுகிறது
ஆளுநர் ஆட்சி வந்துவிடக்கூடாது, மத்திய அரசின் மறைமுக ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காக மட்டுமே தவெகவிற்கு ஆதரவு கொடுத்தோமே தவிர தவெகாவின் தலைவரை பிடித்தோ, தவெகவின்  கொள்கையை பிடித்தோ ஆதரவு கொடுக்கவில்லை என கம்யூனிஸ்ட் கட்சி  தலைவர்கள் சொல்லிவிட்டார்கள்
தவெக ஆட்சிக்கு, கூட்டணி கட்சிகள்  கொடுக்கின்ற முட்டுக்கட்டை நிலையானது அல்ல, எந்த நேரத்திலும் தவெக ஆட்சிக்கு பேராபத்து வரக்கூடிய சூழலில்தான்  கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது 
நிலையான ஆட்சியமைக்கும் தன்மை முதல்வர் விஜய்கோ,  தவெக கட்சிக்கோ கிடையாது 
ஆட்சி நிலைக்க முதல்வர் விஜய் தனது நிலைய மாற்றிக்கொள்ள வேண்டும் 
பிறரை பழி வாங்குவதற்கோ,  பிறரை இகழ்ந்து, புகழ்ந்து பேசுவதற்கோ, தன்னை புகழ்ந்து பேசுவதற்கோ சட்டமன்றத்தை கருவியாக பயன்படுத்த நினைத்தால் தமிழக மக்கள் காலப்போக்கில் தூக்கி எறிந்து விடுவார்கள் இதற்கு ஆதரவு தர மாட்டார்கள் 
தமிழக மக்கள் எப்பொழுதும் முழிப்போடும் இருக்கக்கூடியவர்கள், தமிழக மக்களும், தமிழ் அறிஞர்கள்,  அரசியல் அறிந்தவர்கள் எள்ளி நகையாட கூடிய சூழ்நிலையை பார்க்கிறோம் 
இந்த நிலை மாற வேண்டும் என்றால் சட்டமன்றம் தனி சிறப்போடு இயங்க வேண்டும் 
சட்டமன்றத்தில் இன்றைக்கு என்ன பாடல் பாடப்போகிறார்கள், யார் பாடப் போகிறார்கள் என பட்டிமன்றம் போல் செயல்படும் சட்டமன்றத்தின் நிலையை மாற்ற வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள், முதல்வர் விஜய் அதனை மாற்றுவாரா என்றால் அது கேள்விகுறியாகவே இருக்கிறது
    user_Virudhunagar
    Virudhunagar
    Virudhunagar, Tamil Nadu•
    14 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.