பாலக்கோடு சார் பதிவாளரை மிரட்டும் தேமுதிக நிர்வாகியின் வீடியோ வைரல் தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது, சக்திவேல் என்பவர் சார்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார். தேமுதிகவை சேர்ந்த தருமபுரி மேற்கு மாவட்ட துணை செயலாளர் ராஜதுரை, பத்திர எழுத்தராக உள்ளார். இவர் கடந்த வாரம் பத்திர பதிவு செய்ய பாலக்கோடு சார் பதிவாளர் அலுவலகத்திற்க்கு சென்றுள்ளார். இவரது ஆவணங்களை சரிபார்த்த சார்பதிவாளர், ராஜதுரை சமர்ப்பித்த ஆவணத்தில் வாரிசு சான்றிழதல் குறித்து சந்தேகம் ஏற்பட்டதால், வருவாய்த்துறை இணையதளத்தில் சரி பார்த்ததில் ராஜதுரை சமர்பித்த வாரிசு சான்றிதழ் போலியானது என்பது தெரியவந்தது, இதனால் இவரது பத்திர பதிவை நிராகரித்தார், ஆனால் ராஜதுரை சார்பதிவாளரை ஆவணத்தை பதிவு செய்யுமாறு மிரட்டி உள்ளார். பத்திரம் பதிவு செய்ய மறுத்ததால், கோபமடைந்த ராஜதுரை பத்திரப்பதிவாளர் சக்திவேல், ஆவணம் பதிவு செய்ய தன்னிடம் பணம் கேட்பதாக சமூக வலைதளங்களில் பொய்யாக தன் மீது அவதூறு பரப்பி, தவறாக விமர்சனம் செய்து வருவதாகவும், தனது பெயருக்கும், பணிக்கும் குந்தகம் ஏற்படுத்தி வரும் ராஜதுரை மீது நடவடிக்கை எடுக்க கோரி ராஜதுரை மிரட்டும் வீடியோ ஆதாரத்துடன் பாலக்கோடு காவல் நிலையத்தில் சார்பதிவாளர் சக்திவேல் புகார் அளித்தார். இது குறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சார்பதிவாளரை மிரட்டும் தேமுதிக நிர்வாகியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போலிபத்திர பதிவுகளை தடுக்க சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

- நல்லம்பள்ளியில் இடைவிடாமல் பொழியும் சாரல் மழை தர்மபுரி மாவட்டம் பல்வேறு பகுதியில் கடந்த ஒரு சில தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது ஒரு சில இடங்களில் சாரல் மழை பொழிந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் நல்லம்பள்ளி லளிகம், கோவிலூர், பாலக்கோடு புலிக்கரை கடமடை என பல்வேறு பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் சாரல் மலையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பொழிந்து வருகிறது இதனால் கடும் குளிர் நிலவுகிறது1
- உதகை அருகே முதுமலை வனப்பகுதிற்குட்பட்ட வாழைத் தோட்டம் பகுதியில் சாலையின் நடுவே கம்பீரமாக நின்ற காட்டு யானை... சுமார் ஒரு மணி நேரமாக நின்றதால் போக்குவரத்து பாதிப்பு... உதகை அருகே முதுமலை புலிகள் காப்பக வனப் பகுதி சாலையிலுள்ள வாழைத் தோட்டம் - மசினகுடி சாலையில் ஒற்றை காட்டு யானை சாலையின் நடுவே கம்பீரமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நின்றது. இதனால் சாலையின் இரு புறமும் வாகனங்கள் அணி வகுத்து நின்றன். இதனால் வாழைத்தோட்டம் - மசினகுடி சாலையில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது1
- ஜனநாயகன் படம் வெளியிடாதது பாஜகவுக்கு நஷ்டம், திமுகவுக்குத்தான் லாபம்-விஜய் தரப்பினர் யாரும் பேசாமல் இருப்பதால், காணவில்லை அறிவிப்புத்தான் கொடுக்க வேண்டும் என மொரப்பூரில் பாஜக நிர்வாகி நடிகை கஸ்தூரி பேட்டி.1
- கொடிகாத்த குமரன் என்று அழைக்கப்படும் திருப்பூர் குமரன் அவர்களின் 94 வது நினைவேந்தல் நிகழ்ச்சி திருச்செங்கோட்டில் நடைபெற்றது. திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர் ஈஸ்வரன்,திமுக முன்னாள் நகர்மன்ற தலைவரும் நகர செயலாளருமான ஆர் நடேசன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் ராயல் செந்தில் உள்ளிட்டவர்கள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருப்பூர் குமரன் அவர்களின் திரு உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் ஆதவன் சிலம்ப பயிற்சி பள்ளி மாணவர்கள் சிலம்பம் சுற்றி நினைவேந்தல் நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.2
- கரூர் மாவட்டம் குளித்தறையில் ஏபிஎஸ் ஜவுளிக்கடை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு விலை இல்லா வேட்டி சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இந்நிகழ்வில் குளித்தலை நகரில் உள்ள நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு குளித்தலை ஏபிஎஸ் ஜவுளி நிறுவனம் உரிமையாளர் பொங்கல் பண்டிகை முன்னிட்டு அவர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறி இலவச வேட்டி சேலை வழங்கினார்2
- தாராபுரத்தை சேர்ந்த சமூக சேவகருக்கு சேவை நாயகன் விருது ஜன.9 கோவையில் பிரமாண்ட ஹோட்டலில் சாதனையாளர்களுக்கு (வாகை) விருது வழங்கும் விழா நடைபெற்றது இதில் பிரபல திரைபட நடிகர் வையாபுரி அவர்கள் கலந்து கொண்டு ஒவ் ஒரு துறையிலும் சாதித்தவர்களுக்கு பாராட்டி அவர்களை கௌரிவித்து அவர்களை மென்மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது விழாவில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த சமூக சேவகரும் தினதளம் பத்திரிக்கை நிருபருமான ரஜினிகுமார் அவர்களின் 15 ஆண்டு கால சமூக சேவையை பாராட்டி 2026 ஆம் ஆண்டின் சேவை நாயகன் விருது வழங்கப்பட்டது அவர் இதற்கு முன் சமூக சேவகர் சேவை செம்மல் அண்ணல் அம்பேத்கர் போன்ற விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது2
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- தருமபுரி நகரில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு 10வயதிற்குட்பட்ட ஆண் பெண் பிள்ளைகளுக்கு தபால் அலுவலகத்தில் சேமிப்பு திட்டம் கணக்கு தொடக்கம் அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ பெற்றோரிடம் வழங்கினார். தருமபுரி நகருக்குட்பட்ட 33வார்டுகளை சேர்ந்த 601 ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் அம்மாவின் பிறந்தநாளையொட்டி 10வயதிற்குட்பட்ட ஆண் மற்றும் பெண் பிள்ளைகளுக்கு கழக மருத்துவர் அணி இணை செயலாளர் அசோகன் தன் சொந்த பணத்திலிருந்து தபால் அலுவலகத்தில் 601 பிள்ளைகளுக்கு ரூபாய் 500 வீதம் செல்வ மகன் சேமிப்பு திட்டம் மற்றும் செல்வமகள் சேமிப்பு திட்டம் என மொத்தம் 601 பிள்ளைகளுக்கு கணக்கினை தொடங்கினார்.அதனையடுத்து இன்று தருமபுரி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் கே.பி.அன்பழகன் ஆண் மற்றும் பெண் பிள்ளைகளின் பெற்றோரிடம் கணக்கு புத்தகத்தை வழங்கினார். இந்நிகழ்வில் மாநில விவசாயப்பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன்,பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வெற்றிவேல், நகர செயலாளர் பூக்கடை ரவி, உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.1