கடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெறும் தேமுதிக மாநாட்டில் ...... கட்சியினர் குடும்பம் குடும்பமாக பங்கேற்க வேண்டும் ..... தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் இசக்கி முத்து அழைப்பு ........ தேமுதிக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சித்திரை ராஜ் வழிகாட்டுதலின் படி மாவட்ட இளைஞரணி செயலாளர் ஏரல் அரியபுரம் இசக்கிமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :நாட்டில் லஞ்சத்தையும், ஊழலையும், வறுமையையும், விலைவாசி உயர்வையும், வேலையில்லாத் திண்டாட்டத்தையும் ஒழிப்போம் என்ற சூளுரையோடும், ஜாதி, மதம், இனம் என எந்தவித வேறுபாடும் பார்க்காமல் நாம் அனைவரும் ஒரே ஜாதி, ஒரே மதம், ஒரே இனம் என்ற கோட்பாட்டுடனும் தமிழ்நாட்டிற்கு நன்மைகள் நடந்திட வேண்டும் என்கின்ற உயர்ந்த நோக்குடனும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 2.30 மணியளவில் கடலூர் மாவட்டம், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாசார் கிராமத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 நடத்திட கழக பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டது.தற்பொழுது தமிழகத்தில் டாஸ்மாக், கஞ்சா, போதை கலாச்சாரத்தால் இளைஞர்கள், மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்தியாவிலேயே தமிழ்நாடு வல்லரசு நாடாக வரவேண்டும் என்ற கனவோடு, மக்களுக்கு தன் உழைப்பால் செய்த நன்மைகள் அனைத்தும், அரசு அமைப்பதின் மூலம் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் நன்மைகள் போய் சேர வேண்டும் என்ற ஒரே நோக்கோடு, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை நமது தலைவர் தூய எண்ணத்துடன் தொடங்கினார். நேர்மையான, வெளிப்படையான ஒரு ஆட்சியை கொண்டு வந்து, ஒட்டு மொத்த தமிழகத்திற்கும் சிறந்த முறையில் ஆட்சி செய்து, அது மக்கள் ஆட்சியாக மலர வேண்டும் என்று தலைவர் கேப்டன் விரும்பினார். கேப்டன் கனவு லட்சியத்தை இந்த மாநாடு மூலம் நாம் நிரூபித்து, நம் கேப்டனுக்கு காட்டும் விஸ்வாசமாக,நன்றி உணர்வாக சட்டமன்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான மாநாடாக அமைந்திட வேண்டும். அனைவரும் குடும்பம், குடும்பமாக வந்து மாநாட்டை வெற்றியடையச் செய்ய வேண்டும் என அன்போடு அழைக்கிறேன்.

- *திருப்பாவை சேவித்தல் நிகழ்ச்சியை முன்னிட்டு தேனியில் பழமை வாய்ந்த சிவ சக்தி விநாயகர் திருக்கோயிலில் ஆண்டாள் நகர்வள புறப்பாடு சிறப்பாக நடைபெற்றது* *ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு திருப்பாவை சேவித்தபடியே ஊர்வலமாக சென்றனர்* தேனி அருகே அல்லிநகரத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ சிவசக்தி விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில் இன்று ஆண்டாளுக்கு நான்காம் ஆண்டு திருப்பாவை சேவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது முன்னதாக கோயில் வளாகத்தில் வண்ண மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அமர்ந்திருந்த ஆண்டாளுக்கு ஆபரணங்கள் அணிவித்து கிரீடம் வைத்து வண்ணமலர் மாலைகள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு இருந்தார் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த ஆண்டாளுக்கு தீபம் காட்டப்பட்டு கற்பூரம் சுற்றி புறப்பாடு தொடங்கியது பக்தர்கள் சப்பரத்தை இழுத்துச் செல்ல பெண்கள் சீர் வரிசைகளுடன் திருப்பாவை சேவித்தபடியே ஊர்வலம் சென்றனர் தேனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஆண்டாளை வழிநடக பக்தர்கள் தரிசனம் செய்தனர் பின்னர் அல்லிநகரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலுக்கு சென்று புறப்பாடு நிறைவு பெற்றது இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திருப்பாவை சேவித்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆண்டாளை தரிசனம் செய்து சென்றனர்1
- மும்மதத்தினர் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா திண்டுக்கல் மாநகராட்சி 44. வது வார்டு மேட்டுப்பட்டியில் திமுக சார்பில் மும்மதத்தினர் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகராட்சி கவுன்சிலர் மார்த்தாண்டன் தலைமை வகித்த இந்த நிகழ்ச்சியில், திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி எம்எல்ஏயுமான ஐ. பி. செந்தில்குமார் வாழ்த்துரை வழங்கினார். ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சமத்துவ பொங்கலைத் துவக்கி வைத்தார். மேலும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கி, தனது பிறந்தநாளை முன்னிட்டு 10 கிலோ எடையில் கேக் வெட்டி திமுகவினருடன் கொண்டாடி மகிழ்ந்தார்.1
- கரூரை அடுத்த குளித்தலை அருகே மணத்தட்டை காவிரி ஆற்றின் படுகையிலிருந்து காவிரி குடிநீர் மணப்பாறை-குளித்தலை சாலையோரம் குழாய்கள் பதிக்கப்பட்டு மணப்பாறை மற்றும் மருங்காபுரி பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மாலை மணப்பாறை அடுத்த கலிங்கப்பட்டி அருகே அமைத்துள்ள 2மீட்டர் அகலமும், 46.6 மீட்டர் நீளம் கொண்ட காவிரி குடிநீர் பிரதான குழாய் திடீரென உடைப்பு ஏற்பட்டு சுமார் 10 அடி தூரத்திற்கு குடிநீர் நாலாபக்கமும் பீறிட்டு அடித்து வருகிறது. இதையறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- பொங்கல் பண்டிகை முன்னிட்டு கரும்பு அறுவடை புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பொங்கல் பண்டிகை முன்னிட்டு அறுவடைக்காக கரும்பு பயிரிட்டு வந்தனர். இந்நிலையில் ஆலவயல், அம்மன்குறிச்சி, நகரப்பட்டி, செமலாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் சிறு, குறு விவசாயிகள் அறுவடை பணியில் ஈடுபட்டுள்ளனர்.1
- திருப்பூர் அருகே சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து1
- இது உண்மையா இல்லை AI யா.1
- சுரண்டையிலிருந்து பாவூர்சத்திரம் செல்லும் ரோட்டில் தாமிரபரணி குடிநீர் சப்ளை செய்யும் பைப்பின் வால்வு பொருத்தப்பட்ட இடத்தில் வீடுகளுக்கு செல்லும் தண்ணீர் கசிந்து வீணாக கழிவுநீர் ஓடையில் கலக்கிறது இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்1
- தேவதானப்பட்டி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் வளாகத்தில் கூடாரவல்லி முன்னிட்டு பெண்கள் திருவிளக்கு பூஜை நடைபெற்றது இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகள் செய்தனர் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பகுதியில் அமைந்துள்ள இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது இக்கோவிலில் மார்கழி மாதம் 27ஆம் தேதி கூடாரவல்லி முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜை நடைபெற்றது இதில் பெண்கள் வாழை இலையில் வளையல் மஞ்சள் குங்குமம் மற்றும் குத்துவிளக்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு குடும்ப பிரச்சினைகள், மாணவர்களின் கல்வி, தொழில், விவசாயம் உள்ளிட்டவைகளுக்கு சிறப்பு வழிபாடு செய்தனர் அதனைத் தொடர்ந்து ஸ்ரீ பத்ரகாளியம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாரணைகள் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர் அதன்பின்பு இந்து நாடார் உறவின்முறை சமுதாயம் சார்பாக திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண் பக்தர்களுக்கு அன்பளிப்பு மற்றும் பிரசாதங்கள் வழங்கினார்1
- ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது எப்பொழுதும் கிடையாது அமைச்சர் பேச்சு திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுகவை பொறுத்தவரை ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்பது என்பது எப்பொழுதும் கிடையாது என்றும், தனிப்பட்ட முறையில் ஆட்சி தான் என்றும், தமிழக முதல்வர் உறுதியாக உள்ளார் என்றும் தெரிவித்தார். மேலும், தைத்திருநாளை முன்னிட்டு பெண்களுக்கு இனிப்பான புதிய அறிவிப்பை தமிழக முதல்வர் அறிவிக்க உள்ளார் என்றும் அவர் கூறினார்.1