திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறையில் உள்ள நாகநாத சுவாமி திருக்கோயிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டின் தொடக்கமாக, காலையில் மங்கள இசையுடன் கணபதி ஹோமம், ருத்ரஜபம், கடபூஜை, கலச ஆவாஹனம், பாராயணம், கன்யா பூஜை, லட்சுமிபூஜை மற்றும் மஹா பூர்ணாஹுதி பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, வேதநாயகி உடனுறை நாகநாத சுவாமிக்கு பால், பன்னீர், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள் நீர், திருநீறு உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சந்தனக்காப்பு மற்றும் மலர் அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. மாலையில், நந்திகேஸ்வரருக்கு பால், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், மஞ்சள் நீர், திருநீறு உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், கலசாபிஷேகமும் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் நந்திகேஸ்வரர் வெள்ளி கவச மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இக்கோயிலில் உள்ள வேதநாயகி உடனுறை சாந்தநாதசுவாமி, விநாயகர், சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை, பைரவர் மற்றும் நந்திகேஸ்வரர் ஆகியோர் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்த நிலையில், இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகிகள், குருக்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் கவனித்தனர்.

- திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த ராஜிவ் நகரில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் பிரதோஷ வழிபாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த வழிபாட்டின் போது நத்திகேஸ்வரருக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனப் பொடி உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. இக்கோயிலில் கடந்த மாதம் கும்பாபிஷேக விழா நடைபெற்ற நிலையில், அதனைத் தொடர்ந்து நேற்று முதல் பிரதோஷ விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மீனாட்சி சுந்தரேஸ்வரரின் உலா நடைபெற்றதோடு, சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.1
- திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மேட்டுக்கடை பகுதியில் இயங்கி வரும் அரசு மதுக்கடையை மூடக்கோரி அப்பகுதி பெண்கள் திரண்டு வந்து கடைக்கு பூட்டு போட்டு சுமார் 2 மணி நேரம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது வள்ளிக்கண்ணு என்ற மூதாட்டி திடீரென மயங்கி விழுந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அந்த மூதாட்டி ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். மூதாட்டி மயங்கி விழுந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, திங்கட்கிழமை அன்று இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்துவதாக போலீசார் உறுதியளித்ததை அடுத்து, பெண்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.1
- திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் எம். புதூரில் உள்ள தமிழக அரசின் வாழைப்பழம் பதப்படுத்தும் குடோனை உடனடியாக திறக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த குடோன் கட்டி முடிக்கப்பட்டு சுமார் 20 முதல் 25 ஆண்டுகள் கடந்த நிலையிலும், இதுவரை பயன்பாட்டுக்கு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், புதிதாக வந்துள்ள தமிழக அரசு போர்க்கள அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, விவசாயிகளின் இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.1
- திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி பகுதியில் தங்களது கண் முன்பாகவே தங்களின் வீடு இடிக்கப்படுவதைக் கண்டு மக்கள் கதறி அழுது தங்களது வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர். தங்களது சொந்த வீடு தங்களது கண் முன்னாடியே இப்படி இடிக்கப்படுகிறதே என்று மக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுது தங்களது பெருந்துயரத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.1
- கரூர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு நிலஅளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணிக்கு நடைபெற்றது. மாவட்டத் தலைவர் தோழர் மு. மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாநில துணைத் தலைவர் தோழர் செ. முருகேசன் சிறப்புரையாற்றினார். இதனைத் தொடர்ந்து, மாநிலத் தலைவர் தோழர் ஜெ. ராஜா நிறைவுரையாற்றி, ஒன்றிப்பின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். நிகழ்ச்சியின் நிறைவில் மாவட்ட இணைச் செயலாளர் தோழர் எ. குணசுந்தரி நன்றியுரை வழங்கிய இக்கூட்டத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் நிலஅளவை அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1
- புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் புதிதாக திறக்கப்பட்ட கண்ணன் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தீவிர சிகிச்சை மற்றும் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் கண்ணன், இதயம் மற்றும் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டனர். இந்த முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், பொது மருத்துவம் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டன. மேலும், பரிசோதனை செய்யப்பட்ட நபர்களுக்கு இலவசமாக இசிஜி எடுக்கப்பட்டு, 10 நாட்களுக்கு இலவசமாக மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டன. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது உடலைப் பரிசோதனை செய்து கொண்டனர்.1
- திண்டுக்கல் வத்தலகுண்டு சாலை முழுவதும் பள்ளங்கள் நிறைந்து மோசமான நிலையில் காணப்படுகிறது. மேலும், மழை பெய்தால் இப்பகுதியில் சாக்கடை நீர் தேங்கி கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. மக்களுக்கு அரசு அதிகாரிகள் செய்துள்ள 'நற்பணிகள்' இந்த அளவிற்கு அதிகமாக உள்ளது என்று பொதுமக்கள் கடுமையான நையாண்டியுடனும் ஆத்திரத்துடனும் குற்றம் சாட்டுகின்றனர். இந்தச் சாலை வழியாக நெடுஞ்சாலைத்துறையினர், அரசு அதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஏராளமான உள்ளாட்சி நிர்வாகிகள் என பலரும் தினசரி பயணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். பொதுமக்கள் மனு கொடுத்தால் மட்டும்தான் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்றும், இதுவரை கொடுத்த மனுக்கள் மீது எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். சாலை அவலத்தால் நடக்கும் விபத்துகளுக்கு அரசு அதிகாரிகள்தான் காரணம் என்று பொதுமக்கள் நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.1
- 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் சார்பில், 'போதையில்லா தமிழகம்' விழிப்புணர்வு மாநாடு பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் இன்று மாலை நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் அமைப்பின் தலைவர் அண்ணாமலை பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார். இந்த மாநாட்டில் அவர் வெளியிட உள்ள முக்கிய அறிவிப்புகள் குறித்து அவரது ஆதரவாளர்கள் மட்டுமின்றி, பல்வேறு அரசியல் கட்சிகளும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், பொள்ளாச்சியில் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காகத் திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் இருந்து ஏராளமான 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் உறுப்பினர்கள் பொள்ளாச்சி நோக்கித் தங்களது பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.4