கின்னஸ் சாதனைக்காகவே போட்டியிடும் பத்ம ராஜன் சேலம்: தேர்தல் மன்னன் பத்மராஜன் 253-வது முறையாக மேட்டூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அடுத்து பெரம்பூர் தொகுதியில் விஜய்யை எதிர்த்து களம் காண உள்ளார். மேட்டூரை சேர்ந்த பத்மராஜன், கின்னஸ் சாதனைக்காக 1988 முதல் தொடர்ந்து அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டு வருகிறார். இதுவரை மோடி, ராகுல் காந்தி, ஸ்டாலின் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களை எதிர்த்து மனுத்தாக்கல் செய்துள்ளார். சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டூர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது 253-வது மனுவை அவர் இன்று அளித்தார். இதன் மூலம் இந்திய அளவில் அதிக முறை போட்டியிட்ட வேட்பாளர் என்ற தனது சாதனையை அவர் தொடர்ந்து நிலைநாட்டி வருகிறார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்து பெரம்பூர் தொகுதியில் 254-வது மனுவை தாக்கல் செய்ய உள்ளதாகக் கூறினார். கடந்த 2011 தேர்தலில் மேட்டூரில் 6,700 வாக்குகள் பெற்றதே தனது அதிகபட்சம் என்றும், தேர்தலுக்காக இதுவரை ரூ.1 கோடி வரை செலவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கின்னஸ் சாதனைக்காகவே போட்டியிடும் பத்ம ராஜன் சேலம்: தேர்தல் மன்னன் பத்மராஜன் 253-வது முறையாக மேட்டூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அடுத்து பெரம்பூர் தொகுதியில் விஜய்யை எதிர்த்து களம் காண உள்ளார். மேட்டூரை சேர்ந்த பத்மராஜன், கின்னஸ் சாதனைக்காக 1988 முதல் தொடர்ந்து அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டு வருகிறார். இதுவரை மோடி, ராகுல் காந்தி, ஸ்டாலின் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களை எதிர்த்து மனுத்தாக்கல் செய்துள்ளார். சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டூர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது 253-வது மனுவை அவர் இன்று அளித்தார். இதன் மூலம் இந்திய அளவில் அதிக முறை போட்டியிட்ட வேட்பாளர் என்ற தனது சாதனையை அவர் தொடர்ந்து நிலைநாட்டி வருகிறார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்து பெரம்பூர் தொகுதியில் 254-வது மனுவை தாக்கல் செய்ய உள்ளதாகக் கூறினார். கடந்த 2011 தேர்தலில் மேட்டூரில் 6,700 வாக்குகள் பெற்றதே தனது அதிகபட்சம் என்றும், தேர்தலுக்காக இதுவரை ரூ.1 கோடி வரை செலவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
- இன்று வாடிப்பட்டியில் அ.இ.அ.தி.மு.க.நகர் சார்பாக அருணா காம்பளக்சில் காலை பத்து மணிக்கு சட்டமன்ற வேட்பாளர் மாணிக்கம் அறிமுக மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் பதினெட்டு வார்டு செயலாளர்களும் மற்றும். நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்1
- சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேவகோட்டை சார் ஆட்சியர் அலுவலகத்தில் தனது மனைவி கயல்விழி, தாயார் அண்ணமாளுடன் வந்து சார் ஆட்சியர் ஆயூஸ் வெங்கட் வர்ஸிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, வேலையில்லாதவனுக்கு நான்காயிரம் கொடுப்பவன் நல்ல தலைவன் இல்லை என்றும், வேலை கொடுப்பவனே தலைவன். அவன்தான் சிறந்த ஆட்சியாளர் என்றவர், டாஸ்மார்க் கடையை திறந்து வைத்து விட்டு பெண்களுக்கு பாதுகாப்பு என்பது இப்படி சாத்தியம். மதுக்கடை வருமானத்தை வைத்து கொடுமையான ஆட்சி நடைபெறுவதை எப்படி சகித்து கொண்டு இருக்க முடியும் என கேள்வி எழுப்பினார். ஏற்கனவே 10.5 லட்சம் கோடி கடன் உள்ள நிலையில் மேலும் இலவச திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றால் மேலும் பல லட்சம் கோடி கடன் வாங்கும் நிலை ஏற்படும் என குற்றம் சாட்டியவர், ஒவ்வொரு ஆண்டும் மக்களை வெள்ளத்தில் மிதக்கவிட்டு வெள்ள நிவாரணம் கொடுப்பது நல்ல ஆட்சி இல்லை. வெள்ள பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பது தான் நல்லாட்சி என கூறியவர், ஸ்டாலின் எதிர்கட்சியாக இருந்த போது இலவசங்களை மக்கள் விரும்பவில்லை என்று கூறிவிட்டு இப்போது திருப்பி இலவச திட்டங்களை அறிவிப்பதாக என குற்றம் சாட்டினார். ஸ்டாலின் 23 கட்சியுடன் கூட்டணி அமைத்து இருப்பது பயத்தினால் அவர்களிடம் நேர்மை துளி அளவும் இல்லை. ஐயா ராமதாஸ் எனக்கு மிகவும் பிடிக்கும். சாட்டை துரைமுருகன் ஐய்யாவை விமர்சனம் செய்ததை நான் கண்டித்தேன் என்றவர், நாடாளுமன்ற உறுப்பிரான திருமாவளவன் சட்டமன்ற தேர்தலில் நிற்பது ஏற்புடையது அல்ல என்றார். தொடர்ந்து ஓட்டுக்காக 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை காங்கிரஸ் மற்றும் பாஜக கொண்டு வந்ததாக குற்றம் சாட்டியவர், திட்டத்தால் எந்த ஒரு பலனும் இல்லை என்றவர், தனது கிராமத்தில் உள்ள அனைவரும் 100 நாள் திட்டத்திற்கு சென்று விட்டதால் தனியாக இருப்பதால் எனது தாயும் 100 நாள் வேலைக்கு சென்றதாகவும், அங்கு சென்று வேலை செய்யாமல் அமர்ந்து இருந்ததாகவும் கூறினார், இத்திட்டம் மூலம் நட்டு வைத்த மரங்கள் எத்தனை, சீரமைத்த சாலைகள் எத்தனை, தூர்வாரிய குளங்கள் எத்தனை என கேள்வி சீமான் எழுப்பினார்.1
- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026ஐ முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் திரு. கா. பொற்கொடி, இ.ஆ.ப., அவர்கள் பயிற்சியை ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு தேவையான வழிமுறைகளை எடுத்துரைத்தார். வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்துவது, வாக்காளர் அடையாள சரிபார்ப்பு உள்ளிட்ட நடைமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. தேர்தலை சீராகவும், தவறில்லாமலும் நடத்த அலுவலர்கள் முழுமையாக தயார் நிலையில் இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதில் பல்வேறு துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.1
- ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக ஆண்டிபட்டியில் மலரால் அலங்கரிக்கப்பட்ட முருகன் வேலை கையில் ஏந்தி, தப்பாட்டம் முழங்க ஊர்வலமாக வந்து முதல் ஆளாக தனது வேட்பு மனுவை தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோமதி அன்பரசன் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று மாநிலம் முழுவதும் துவங்கியது அதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோமதி அன்பரசன்.ஆண்டிபட்டி தேர்தல் நடத்தும் அலுவலர் கவிதாவிடம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.முன்னதாக ஆண்டிபட்டி - பாலக்கோம்பை பிரிவில் இருந்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோமதி அன்பரசன் மலரால் அலங்கரிக்கப்பட்ட முருகன் வேலுடன் தப்பாட்டம் முழங்க தனது கட்சியினருடன் ஊர்வலமாக வந்த நிலையில் தேனி சாலையில் வந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் ஊர்வலம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு 100 மீட்டர் தொலைவில் முன்பாகவே நிறுத்தப்பட்டது.பின்னர் தேர்தல் நடத்தை விதிமுறைகள்படி, அனுமதிக்கப்பட்ட நபர்களுடன் சென்று தனது வேட்பு மனுவை கோமதி அன்பரசன் தாக்கல் செய்தார்.தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 35 வயதான பெண்மணி கோமதி.மென்பொருள் பட்டதாரியான இவர் அப்பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார்.இவரது கணவர் அன்பரசன், நாம் தமிழர் கட்சியின் வணிகர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.1
- *ஆண்டிப்பட்டி மற்றும் கம்பம் தொகுதி திமுக வேட்பாளருக்கு ஆண்டிப்பட்டியில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து, கிரேன் வாகனம் மூலம் ராட்சத மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு* தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினராக உள்ள மகாராஜன் தொடர்ந்து ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கும், கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமகிருஷ்ணன் கம்பம் சட்டமன்ற தொகுதிக்கும் மீண்டும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னையில் இருந்து சொந்த மாவட்டத்திற்கு வருகை புரிந்த இருவருக்கும் ஆண்டிபட்டி நகரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர் பட்டாசு வெடித்தும் மலர் தூவியும் வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் கொண்டமநாயக்கன்பட்டி பகுதியில் கிரேன் வாகனம் மூலம் ராட்சத மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டது தொடர்ந்து ஆண்டிப்பட்டி பேருந்து நிலையம் முன்பு கலர் பலூன்களை கட்டி வேட்பாளர்களிடம் தொண்டர்கள் ஆர்வமாக கொடுக்க அதனை வாங்கிய வேட்பாளர்கள் மேலே பறக்க விட்டனர் இதையடுத்து தொண்டர்கள் உற்சாகமாக கோஷம் எழுப்ப உற்சாக வெள்ளத்தில் ஆண்டிப்பட்டி நகர் பகுதி முழுவதும் வேட்பாளர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.1
- இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்த விராலிமலை தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பேட்டி1
- மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள கொடிக்குளம் கிராமத்தில் உள்ள மலைச்சாமி கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு அனைத்து சமுதாய மக்களுக்கும் இணைந்து விரதமிருந்து பங்குனி உத்திர திருவிழா கொண்டாட உள்ள நிலையில் ஒரு தரப்பினர் திருவிழா நடத்தக்கூடாது என்று தகராறு செய்து தடை செய்வதால் இதுகுறித்து போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் ஒருதரப்பினருக்கு ஆதரவாக போலீசார் ஈடுபட்டு திருவிழா நடைபெறாமல் தடுத்து வருவதால் கிராம மக்கள் தங்களுடைய வாக்காளர்கள் அடையாள அட்டையை திருப்பி ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று (மார்ச்.30) காலை சுமார் நூறு பெண்கள் உள்பட முந்நூறு பேர் வந்திருந்தனர். அங்கிருந்த போலீசார் கிராம மக்களின் முக்கிய நபர்கள் ஐந்து பேரை மட்டும் அழைத்து கொண்டு உயர் அதிகாரியை இது குறித்து சந்திக்க அழைத்து சென்றனர். இதனால் அப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.1
- இன்று சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி(190) வேட்புமனு தாக்கல் செய்ய முதல்நாளில். அடுத்த பணியில் தேர்தல் அலுவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அனைத்து பாதுகாப்பு கருடன் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் ஏற்பாடு செய்துள்ளனர்1
- மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத ஸ்ரீ சோமநாத சுவாமி ஆலயத்தில் இன்று பிரதோஷம் விழா பக்தி பரவசமாக நடைபெற்றது. இதையொட்டி நந்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பிரதோஷம் நாளை முன்னிட்டு ஆலயத்தில் பக்தர்கள் நெரிசல் காணப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தது.1