Shuru
Apke Nagar Ki App…
தூத்துக்குடியில் சாலையை கடக்க முயன்றபோது பைக் மோதியதில், படுகாயம் அடைந்த நபர் பரிதாபமாக இறந்தார். தூத்துக்குடி அருகே உள்ள கச்சேரி தளவாய்புரம் கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன் மகன் மாரியப்பன் (56), இவர் டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று தூத்துக்குடி - மதுரை நெடுஞ்சாலையில் ஒயின் ஷாப் அருகே ரோட்டை கடந்து செல்ல முயன்றபோது அவ்வழியே வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். பைக்கை ஓட்டி வந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
N balu Nbalu

More news from Virudhunagar and nearby areas