தமிழகம் முழுவதும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போர்வெல் வாகனங்கள் செயல்பட்டு வருகின்றன. பல வாகனங்கள் வெளி மாநிலங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 15 தினங்களுக்குள் போர்வெல் போட பயன்படுத்தும் பிட் என்ற பொருளின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. 25 ஆயிரம் ரூபாய்க்கு கிடைத்து வந்த இந்த பொருள் தற்போது 55 ஆயிரம் ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தொழில் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்கு காரணம் சைனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிட் செய்ய தேவைப்படும் கார்பன் என்ற மூலப்பொருள் வருவது தடைபட்டுள்ளது தான் எனவே மத்திய அரசு இதனை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுத்து விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து இந்தியா முழுவதும் ஆங்காங்கே போர்வெல் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் தேனி கரூர் திருப்பூர் திருச்செங்கோடு சேலம் நாமக்கல் ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் 2000க்கும் மேற்பட்ட ரிக் எனப்படும் போர்வெல் வாகனங்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றன. இது குறித்து தமிழ்நாடு ரிக் உரிமையாளர்கள் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் சுரேஷ் கூறும் போது கடந்த 15 நாட்களில் ரிக் வாகனத்திற்கு தேவைப்படும் பிட் இரண்டு மடங்கு விலை உயர்ந்துள்ளது இந்த விலை உயர்வை கட்டுப்படுத்தி உரிய விலையில் மத்திய அரசு வழங்க வேண்டும். மேலும் இந்த பிட்டிற்கு மூலப் பொருளாக சைனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்பன் இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளது எனவே பிட்டின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது இந்த தடையை நீக்கி மத்திய அரசு ரிக் தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும் காவல்துறையும் ரிக்கு வாகனங்கள் தொடர்பான வழக்குகள் விவகாரங்களில் எங்களுக்கு துணை நின்று எங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். நாள் ஒன்றிற்கு 19 கோடி ரூபாய் வரியாக தமிழக அரசுக்கு வழங்கி வருகிறோம். அதேபோன்று மத்திய அரசுக்கு 240 கோடி ரூபாய் டீசல் வழியாக வழங்கி வருகிறோம். எங்கள் பிரச்சனைகளை மத்திய மாநில அரசுகள் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறை போர்வெல் உரிமையாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு கூட செவி சாய்ப்பதில்லை என்றும் அதனை சரி செய்து தர வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இந்த பிரச்சினைகள் காரணமாக தற்போது போர்வெல் போடுவதற்கு சற்று விலை அதிகப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளோம். அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த விலை உயர்வு 20 சதவீதம் வரை உயர்த்தப்படும் என தெரிய வருகிறது தேனி கரூர் போன்ற மாவட்டங்களில் தற்போது 20 சதவீத விலை உயர்வுடன் போர்வெல் வாகனங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள போர்வெல் வாகனங்கள் தங்கள் போர்வெல் கட்டணத்தை 20 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்பு உள்ளதாக தெரிய வருகிறது என தலைவர் சுரேஷ்செய்தியாளர்களிடம் கூறினார்

- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கிழக்கு மற்றும் மேற்கு நகர திமுக சார்பில் நகர அளவிலான திராவிட பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள் நேற்றும் இன்றும்நடைபெற்றது. வாலிபால் மற்றும் கபடி போட்டிகள் நடைபெற்றது. இதில் கபடி போட்டிகளில் பத்துக்கும் மேற்பட்ட அணிகளும் வாலிபால் போட்டியில் 15க்கும் மேற்பட்ட அணிகளும் பங்கேற்று விளையாடினார்கள் இறுதி வாலிபால் போட்டியை திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் சேலம் கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சேலம் ஏ வி எஸ் கல்லூரியின் முதல்வர் சீனிவாசன்திருச்செங்கோடு மேற்கு நகர திமுக பொறுப்பாளர் முன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன் கிழக்கு நகர திமுக பொறுப்பாளர் நகர் மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.இந்தப் போட்டிகளில்நகர அளவிலான விளையாட்டு வீரர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.கபடி பிரிவில் முதலிடம் பிடித்த எஸ்.பி. என் A அணிக்கு 5 ஆயிரம் ரொக்கப் பரிசு கோப்பை, 2ம் இடம் பிடித்த எஸ்.பி. என் B அணிக்கு 4ஆயிரம் மற்றும் கோப்பை 3ம் இடம் பிடித்த அன்னைத் தமிழ் அணிக்கு 3 ஆயிரம் மற்றும் கோப்பை பரிசாக வழங்கப் பட்டது. இதே போல் வாலிபால் பிரிவில் முதல் பரிசு பெற்ற மாணிக் பிரண்ட்ஸ் அணிக்கு5000 ரொக்கப் பரிசு மற்றும் கோப்பை இரண்டாம் பரிசு பெற்ற சந்துரு பிரண்ட்ஸ் அணிக்கு 3000 ரொக்க பரிசு மற்றும் கோப்பை மூன்றாம் இடம் பிடித்த பி.ஆர்.சி அணிக்கு ரூ 3000 ரொக்க பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது1
- திருப்பூர் அருகே சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து1
- ஒகேனக்கல் காவேரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில தினங்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பொழியும் பருவமழையின் அளவைப் பொறுத்து நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவதுமாக காணப்படுகிறது. நேற்று 700 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று (ஜன.12) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளதாக, மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.1
- தர்மபுரி அருகே மதிகோன் பாளையம் ஏரியல் மருந்து கடை விற்பனையாளர் சடலமாக மீட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.1
- திண்டுக்கல் 12/01/26 வானிலை மேகமூட்டத்துடன் லேசான வெப்பத்துடன் 11.50க்கு மலை பெய்யத் தொடங்கியது சுமார் அரை மணி நேரம் அளவான மலை பெய்தது1
- வேடசந்தூர் பூதிபுரம் பஞ்சாயத்து மகாலட்சுமிபுரம் ஐயர் மடம் குறும்பபட்டி இந்த பகுதிகளுக்கு செல்லும் மின்சாரத்தின் மின் மாற்றி பழுதடைந்துள்ளதால் பொதுமக்கள் மின்சாரம் இன்றி சிரமம் அடைந்து வருகின்றனர் கடந்த மூன்று நாட்களாக எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த மின்மாற்றியை மாற்றி கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் சார்பாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ML வேடசந்தூர் ஒன்றிய குழு சார்பாகவும் கோரிக்கை வைக்கப்படுகிறது1
- மணப்பாறை வழியாக அடாத மழையிலும் விடாமல் பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் தை மாதம் தொடங்கும் முன்னர் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் பழனி முருகனுக்கு பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து பின்னர் பாதயாத்திரையாக செல்வது வழக்கம். இதே போல் இன்னும் சில தினங்களில் தை மாதம் தொடங்க உள்ள நிலையில் பலரும் பழனிக்கு பாதயாத்திரையாக சென்று வருகின்றனர். அதன்படி இன்று திருச்சி மாவட்டம், மணப்பாறை வழியாக திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அதிக சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரையிலும், மாற்றுத் திறனாளிகளும் பாதயாத்திரையாக சென்று வருகின்றனர். விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்து வந்தாலும் அந்த மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தங்களின் பாதயாத்திரையில் கவனம் செலுத்தி முருகனை காண பக்தி பரவசத்துடன் மகிழ்ச்சியோடு சென்று வருகின்றனர். அதிக அளவிலானோர் இந்த பாதயாத்திரையில் கலந்து கொண்டுள்ளனர்.1
- திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகே சேலத்தில் இருந்து கொடுமுடி நோக்கிச் சென்ற வந்த ஆம்னி வேனுக்குள்இருந்து திடீர் புகை எழுந்தது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி சென்று காருக்குள் இருந்த பெண்களை மீட்டு தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து புகையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ பிடிக்காமல் தடுத்தனர். கேஸ் வண்டி என்பதால் திடீரென புகை எழுந்துள்ளது.இதுகுறித்து விசாரித்தபோதுகொடுமுடியைச் சேர்ந்த அன்வர் அலி என்பவரது மகன் இமாம் ஜாபர் சாதிக் என்பவருக்கு சொந்தமான ஆம்னி வேனில் சேலத்தில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்திற்கு ஓட்டுநர், 5 பெண்கள் 2 குழந்தைகள் ஒரு குழுவினரும் மற்றவர்கள் ஒரு டெம்போ ட்ராவலர் வேனிலும் சென்றுள்ளனர். திருமணம் முடிந்து திரும்பி வந்து கொண்டிருந்த போது டெம்போ ட்ராவலர் வேன் முன்னால் சென்றுவிட பின்னால் அன்வர் அலியின் மருமகன் அக்பர்லி ஓட்டி வந்தஆம்னி வேன் திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகே வரும்போது ஆம்னி வேனுக்குள் திடீரென புகை எழ ஆரம்பித்தது உடனடியாக காரை அக்பர் அலி ஓரம் கட்டி நிறுத்திய நிலையில் புகையுடன் கார் நிற்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் காரின் கதவுகளை திறந்து காருக்குள் இருந்தவர்களை மீட்டு அருகில் அமர வைத்தனர்.அந்த வழியாக வந்த கார் மெக்கானிக் ஒருவர் கேஸ் வெடித்து தீ பரவாமல் தடுக்க கார் கேஸ் குழாயைதுண்டித்தார் இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. உடனடியாக காருக்குள் இருந்து கீழே இறங்கி விடப்பட்ட ஐந்து பெண்கள் இரண்டு குழந்தைகளும் பதட்டம் அடைந்தனர். உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து சம்பவ இடத்திற்கு நிலைய அலுவர் கரிகாலன்உத்தரவன் பேரில், சிறப்பு உதவிநிலைய அலுவலர் நடராஜன் தலைமையில் வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து புகையை கட்டுக்குள் கொண்டு வந்தனர் மேலும் தீ விபத்து ஏற்பட்டு விடாமல் பாதுகாத்தனர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காரை சாய்த்து காருக்குள் புகை வந்த இடம் முழுவதும் தண்ணீரை பீச்சி அடித்து புகையை கட்டுப்படுத்தினர்.காருக்குள் காரை ஓட்டி வந்த அக்பர் அலி அவரது மனைவி,அன்வர் அலியின் மனைவியும், அக்பர் அலியின் மாமியார் மற்றும் அன்வர் அலியின் தங்கை தம்பி மகள்கள் இரண்டு பேர் மற்றும் இரண்டு குழந்தைகள் இருந்து உள்ளனர். அதில்காருக்குள் புகை எழுந்ததால் அன்வர் அலியின் மனைவி மிகவும் பதட்டமான நிலையில் காணப்பட்டார். உடனடியாகதகவல் அறிந்து விரைந்து வந்த உறவினர்கள் அவரை ஆசுவாசப் படுத்திய வேறு காரில் அவரை ஊருக்கு அழைத்துச் சென்றனர்.சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த சம்பவத்தால் திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு பரபரப்பு ஏற்பட்டது.1