திண்டுக்கல் அருகே திமுக பிரமுகர் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பு - போலீசார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக பாஜக புகார் திண்டுக்கல், தோமையாா்புரம் பகுதியில் திமுக பிரமுகர் வீட்டில் கஞ்சா செடி வளா்ப்பதாக எழுந்த புகாரின் பேரில் தாலுகா காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 5 அடி உயரத்துக்கு கஞ்சா செடி வளா்க்கப்பட்டதை உறுதி செய்தனா். மேலும் அந்த செடி புறம்போக்கு நிலத்தில் இருப்பதாக கூறி, திமுக பிரமுகா் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் விட்டுவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. *இதுதொடா்பாக, பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் தனபாலன் கூறியதாவது:* திண்டுக்கல்லை அடுத்த தோமையாா்புரம் பகுதியில் திமுக பிரமுகா் ஒருவரின் வீட்டில் 5 அடி உயரத்துக்கு கஞ்சா செடி வளா்க்கப்பட்டது. இதுதொடா்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், திமுக பிரமுகா் என்பதால், அவரது வீட்டின் அருகிலுள்ள புறம்போக்கு நிலத்தில் கஞ்சா செடி வளா்ந்திருப்பதாக கூறி, அலட்சியமாக செயல்பட்டுள்ளனா். போதை கலாச்சாரத்தை வழிநடத்தும் திமுகவினருக்கு, காவல் துறையும் துணை நிற்பது அதிா்ச்சி அளிக்கிறது என்றாா்.
திண்டுக்கல் அருகே திமுக பிரமுகர் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பு - போலீசார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக பாஜக புகார் திண்டுக்கல், தோமையாா்புரம் பகுதியில் திமுக பிரமுகர் வீட்டில் கஞ்சா செடி வளா்ப்பதாக எழுந்த புகாரின் பேரில் தாலுகா காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 5 அடி உயரத்துக்கு கஞ்சா செடி வளா்க்கப்பட்டதை உறுதி செய்தனா். மேலும் அந்த செடி புறம்போக்கு நிலத்தில் இருப்பதாக கூறி, திமுக பிரமுகா் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் விட்டுவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. *இதுதொடா்பாக, பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் தனபாலன் கூறியதாவது:* திண்டுக்கல்லை அடுத்த தோமையாா்புரம் பகுதியில் திமுக பிரமுகா் ஒருவரின் வீட்டில் 5 அடி உயரத்துக்கு கஞ்சா செடி வளா்க்கப்பட்டது. இதுதொடா்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், திமுக பிரமுகா் என்பதால், அவரது வீட்டின் அருகிலுள்ள புறம்போக்கு நிலத்தில் கஞ்சா செடி வளா்ந்திருப்பதாக கூறி, அலட்சியமாக செயல்பட்டுள்ளனா். போதை கலாச்சாரத்தை வழிநடத்தும் திமுகவினருக்கு, காவல் துறையும் துணை நிற்பது அதிா்ச்சி அளிக்கிறது என்றாா்.
- தேனியில் நகராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது தேனியில் தேனி அல்லிநகரம் நகராட்சியில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் நிகழ்வு நடைபெற்றது. மேலும் தேனி அல்லிநகரம் நகராட்சி சார்பில் பொது மக்களுக்கு கோல போட்டி,பானை உடைத்தால் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது தொடர்ந்து பொங்கல் வைத்தும் கொண்டாடப்பட்ட நிலையில் அனைவருக்கும் பொங்கல் வழங்கி சிறப்பிக்கப்பட்டது இந்த நிகழ்வில் தேனி அல்லிநகரம் நகராட்சியின் சேர்மன் ரேணு ப்ரியா பாலமுருகன் ,துணை சேர்மன் செல்வம், கவுன்சிலர்கள் துறை சார்ந்த அலுவலர்கள் ,மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ,பொதுமக்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர்1
- *முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் பிறந்த நாளை முன்னிட்டு பெரியகுளத்தில் உள்ள அவரது இல்லத்தில் ஏராளமான கட்சி நிர்வாகிகள், ஆதரவாளர்கள் அவரை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்* முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் தேனி மாவட்டம் பெரியகுளம் அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் அவரை சந்தித்த அவரது ஆதரவாளர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் காலை முதலே வருகை தந்து ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பூங்கொத்து கொடுத்தும் மலர்மாலை, சால்வை அணிவித்தும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்1
- லஞ்சம் வாங்கிய கம்பம் ஊராட்சி ஒன்றியம். அடித்த கொள்ளை ஹரிஜினத் தெருவில் சாலை போடுவதில். லஞ்சம் கொடுத்து தொடங்கிய வேலை காண்ட்ராக்டர் மணிகண்டன் கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி தேனி மாவட்டம்1
- புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடக்கு கொத்தக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை. 82 வயதான இவர் தொடர்ந்து 12வது ஆண்டாக தனது அன்பு மகளுக்கு பொங்கல் சீரை சுமார் 17 கிலோமீட்டர் தூரம் சைக்கிளிலேயே கொண்டு செல்வது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரியமும் கலாச்சாரமுமாக உள்ள பொங்கல் சீர் கொடுக்கும் நிகழ்ச்சி பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பெண் பிள்ளைகளை திருமணம் செய்து கொடுப்பவர்கள் வீட்டிற்கு பெண் வீட்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது அவரவர் வசதிக்கேற்ப பொங்கல் சீர் வழங்குவது தமிழர்களின் பழக்கமாக உள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடக்கு கொத்தக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை -அமிர்தவள்ளி தம்பதியருக்கு சுந்தராம்பாள் என்ற மகளும் முருகேசன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் சுந்தராம்பாளை சுமார் 24 ஆண்டுகளுக்கு முன்பு நம்பம்ட்டியில் திருமணம் செய்து கொடுத்த நிலையில் அவருக்கு 12 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. பின்னர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தரம்பாளுக்கு இரட்டை குழந்தை பிறந்தள்ளது. அதற்கு முன்பு வரை ஆயிரம் ரூபாய் பொங்கல் சீராக வழங்கி வந்த செல்லத்துரை மகளுக்கு குழந்தை பிறந்த தினம் முதல் இன்றைய தினம் வரை தொடர்ச்சியாக 12 ஆண்டு காலமாக பாரம்பரியமும் கலாச்சாரமும் மாறாமல் இருக்கவும் மகள் மீது கொண்ட பாசத்தாலும் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது தலையில் கரும்பு கட்டும், சைக்கில் கேரியரில் சீர் பொருட்க்களையும் எடுத்துக்கொண்டு சைக்கிளில் சுமார் 17 கிமீ பயணம் செய்து பொங்கல் சீர் வழங்கி வருகிறார். குறிப்பாக இவர் 82 வயதிலையும் அவரது சைக்கிளில் விவேகானந்தர் காலண்டர் தேங்காய் பழம் மஞ்சள் கொத்து வேட்டி துண்டு பொங்கல் பூ பச்சரிசி வெள்ளம் காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொங்கல் சீரை வைத்துக்கொண்டு ஐந்து கரும்புகளை தலையில் சுமந்து கொண்டு கரும்பை கையில் வைத்து பிடிக்காமல் அவரது சைக்கிளை ஓட்டி சென்று வருகிறார். வடக்கு கொத்தக்கோட்டை பகுதியிலிருந்து சுமார் 17 கிலோ மீட்டர் தூரம் 16 வேகத் தடைகளை கடந்து நம்பம்பட்டி வரை சைக்கிளிலேயே அவர் பொங்கல் சீர் கொண்டு செல்வதை சாலை நெடுகிலும் உள்ள மக்கள் கண்டு வியந்து வருவதோடு முதியவருக்கு கைகளை காட்டி பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். காலங்கள் கடந்தும் தமிழனின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் யாராலும் மாற்ற முடியாது என்பதற்கு சான்றளிக்கும் விதத்திலும் தமிழர்கள் என்றாலே பாசத்துக்கு பெயர் பெற்றவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையிலும் தனது மகளுக்கு பாரம்பரியமாக சைக்கிளையே சென்று பொங்கல் சீர் வழங்கி வரும் தந்தைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் கொத்தக்கோட்டை வர்த்தகர்கள் சார்பில் மகளுக்கு சீர் எடுத்துச் செல்லும் செல்லத்துரைக்கு விளம்பர பதாகை வைத்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.1
- கோவை மாவட்டம் மைலம்பட்டி ராஜீவ்காந்தி நகர் பகுதியில் புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பொது மக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து டாஸ்மாக் கடையை காலி செய்த அதிகாரிகள்.1
- போகி பண்டிகை நல்வாழ்த்துக்கள்1
- பொங்கல் திருநாளை முன்னிட்டு ஆண்டிப்பட்டி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கோலப்பொட்டிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, போகிப் பண்டிகையை வரவேற்கும் வகையிலும், இந்த ஆண்டை வரவேற்கும் வகையிலும் வண்ண வண்ண கோலம் இட்டு அசத்திய பெண்கள்- பாரம்பரிய முறைப்படி குலவை இட்டு பொங்கல் பானையில் பொங்கல் வைத்து கும்மி அடித்து கொண்டாட்டம் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.இதற்காக பெண்களுக்கு கோல போட்டிகள் நடைபெற்ற நிலையில் வண்ண வண்ண நிறங்களில் பொங்கலை வரவேற்கும் விதமாகவும் இந்த ஆண்டை வரவேற்கும் விதமாகவும் புகையில்லா போகி பண்டிகையை கொண்டாடும் விதமாகவும் கண்ணைக் கவரும் வகையில் பல்வேறு கோலங்களை பெண்கள் வரைந்தனர்.தொடர்ந்து பேரூராட்சி சேர்மன் சந்திரகலா தலைமையில் தூய்மை பணியாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பெண்கள் அனைவரும் சேர்ந்து பாரம்பரிய முறைப்படி குலவை இட்டு பொங்கல் பானையில் பொங்கல் வைத்து கும்மி அடித்து மகிழ்ந்தனர்.சிறந்த கோலங்களை வரைந்த பெண்களுக்கு பேரூராட்சி தலைவர் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.1
- நன்றி நன்றி கம்பம் ஊராட்சி ஒன்றியம் நன்றி (மாற்றம்_வேர்ல்ட்)_YouTube_நடந்த_உண்மை. பாரஸ்ட்_பங்களா_தெரு. வா_உ_சி_மண்டபம்_அருகில்_2வது_வார்டு. நாராயணன்தேவன்பட்டி. கம்பம்_ஊராட்சி_ஒன்றியம், உத்தமபாளையம்_(தா)_தேனி_(மா)1
- உலகம் முழுவதும் நாளை மறு தினம் தமிழர் திருநாளாம் தைத்திருநாளை கொண்டாட பொதுமக்கள் ஆர்வமாக இருக்கும் நிலையில், அந்தத் திருநாளை நம்பி வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள் தற்போது கவலையில் ஆழ்ந்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு பொங்கல் பண்டிகைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான கரும்பு, பானை, மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை வியாபாரிகள் லட்சக்கணக்கில் முதலீடு செய்து வியாபாரத்திற்காக சாலையோரம் கடைகள் அமைத்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே ஆலங்குடி பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டாமல் வீட்டின் உள்ளையே முடங்கி இருக்கின்றனர். இதனால் வருடத்தில் ஒரு நாளை நம்பி தொழிலில் ஈடுபடும் வியாபாரிகள் பொதுமக்களின் வருகை இன்றி விற்பனைக்காக வாங்கி வைத்த பொருட்கள் விற்பனையாகாமல் இருப்பதால் இந்த பொங்கல் தங்களுக்கு கசப்பு பொங்கலாக மாறிவிடுமோ என்று அச்சத்தில் உள்ளனர். மழை ஒரு காரணமாக அமைந்தாலும் இதில் முக்கிய காரணமாக இருப்பது பொதுமக்களின் நாகரீக மாற்றமே, தைப்பொங்கல் திருநாளில் மண் பானையில் பொங்கல் வைத்து வழிபடுவது பாரம்பரியமாக இருந்தாலும் பொதுமக்களின் மாற்றத்தால் எவர்சில்வர் பாத்திரங்களையே அதிகமாக விரும்புவதாகவும் மண்பானை வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். மண்பானை உற்பத்தியில் ஈடுபடும் தொழிளாலர்கள்உள்ளூரில் பானை செய்வதற்கு மூலப்பொருளான களிமண் பற்றாக்குறையாலும் ஒரு சில இடங்களில் முற்றிலும் களிமண் கிடைக்காத காரணத்தாலும் மண்பாண்ட தொழிலாளர்கள் பல தங்களது தொழிலையே விட்டு விட்ட நிலையில் ஒரு சிலர் பணம் கொடுத்து களிமன்களை வாங்கி பானைகள் செய்து வருகின்றனர். இன்னும் சில மண்பான தொழிலாளர்கள் மண்பாண்டம் செய்வதை விட்டாலும் மண்பாண்டங்களை விலை கொடுத்து வாங்கி வந்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வளவு சிரமத்திற்கு இடயே மண்பான தொழிலாளர்கள் தங்களது தொழிலை தொடர்ந்தாலும் பொதுமக்கள் மண்பாண்டங்களில் வாங்குவதில் ஆர்வம் காட்டாததாலும் காரணத்தாலும் மண்பாண்ட வியாபாரிகள் தங்கள் கொண்டு வந்த பாணிகளை விற்பனை செய்ய முடியாமல் பரிதவித்து வருகின்றனர். தை திருநாளில் பொதுமக்களுக்கு கரும்பு, பொங்கல், கொண்டாட்டம் என ஏராளமான தித்திப்புக்கள் இருக்கும் நிலையில் அந்த தித்திப்பான பொங்கலை பாரம்பரிய முறைப்படி மண்பானையில் வைத்து கொண்டாடினால் லட்சக்கணக்கான மாண்பாண்ட தொழிளாலர்கள் வாழ்வும் தித்திப்பாக மறும் என்பதே மண்பாண்ட தொழிளாலர்களின் கோரிக்கையாக உள்ளது.1