திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லுப்பட்டி கிராமத்தில், தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற செல்லாத்தாள் (60/26) என்ற பெண், நான்கு சக்கர வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த இவர், கடந்த ஒரு வருடமாக கல்லுப்பட்டியில் உள்ள கடைகளில் வேலை பார்த்து தங்கியிருந்துள்ளார். இன்று 10.07.2026 காலை 09:00 மணியளவில், கல்லுப்பட்டி முத்து மாரியம்மன் கோவில் அருகில் உள்ள மதுரை To திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து திருச்சி To மதுரை தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க இவர் முயன்றபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது. சென்னையிலிருந்து மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த TN 12 BU 1053 என்ற பதிவு எண் கொண்ட டொயோட்டா கிளான்சா (Toyota Glanza) காரை ஓட்டி வந்த சென்னை, பூந்தமல்லி, திருவள்ளூர் ரோட்டில் வசிக்கும் தனபால் மகன் மூர்த்தி (49) என்பவர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே செல்லாத்தாள் உயிரிழந்ததை அடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக துவரங்குறிச்சி காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

- 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் சார்பில், 'போதையில்லா தமிழகம்' விழிப்புணர்வு மாநாடு பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் இன்று மாலை நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் அமைப்பின் தலைவர் அண்ணாமலை பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார். இந்த மாநாட்டில் அவர் வெளியிட உள்ள முக்கிய அறிவிப்புகள் குறித்து அவரது ஆதரவாளர்கள் மட்டுமின்றி, பல்வேறு அரசியல் கட்சிகளும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், பொள்ளாச்சியில் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காகத் திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் இருந்து ஏராளமான 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் உறுப்பினர்கள் பொள்ளாச்சி நோக்கித் தங்களது பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.4
- திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மேட்டுக்கடை பகுதியில் இயங்கி வரும் அரசு மதுக்கடையை மூடக்கோரி அப்பகுதி பெண்கள் திரண்டு வந்து கடைக்கு பூட்டு போட்டு சுமார் 2 மணி நேரம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது வள்ளிக்கண்ணு என்ற மூதாட்டி திடீரென மயங்கி விழுந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அந்த மூதாட்டி ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். மூதாட்டி மயங்கி விழுந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, திங்கட்கிழமை அன்று இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்துவதாக போலீசார் உறுதியளித்ததை அடுத்து, பெண்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.1
- திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ மதுர காளியம்மன் கோவில் திருவிழா இன்றுடன் தொடங்குவதையொட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இவ்விழாவையொட்டி, மூலவர் மதுரகாளியம்மன், விநாயகர், முருகன் மற்றும் கருப்பண்ணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்குச் சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் செய்யப்பட்டன. இந்தத் திருவிழா பூஜையில் காட்டுப்புத்தூர், காந்திநகர், கணபதிபாளையம், சீதப்பட்டி மற்றும் தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் பக்தர்களும் திரளாகக் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.1
- திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி பகுதியில் தங்களது கண் முன்பாகவே தங்களின் வீடு இடிக்கப்படுவதைக் கண்டு மக்கள் கதறி அழுது தங்களது வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர். தங்களது சொந்த வீடு தங்களது கண் முன்னாடியே இப்படி இடிக்கப்படுகிறதே என்று மக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுது தங்களது பெருந்துயரத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.1
- திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள முசிறி எம்எல்ஏ அலுவலகத்தில், முசிறி எம்எல்ஏ விக்னேஷ் தலைமையில் காவேரி ஒன்றிய நகர செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முசிறி, தாப்பேட்டை, மேட்டுப்பாளையம், தொட்டியம் மற்றும் காட்டுப்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஒன்றிய நகர செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் போது கட்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதுடன், பொதுமக்களிடம் குறைகளையும் எம்எல்ஏ விக்னேஷ் கேட்டறிந்தார். இந்த ஆலோசனையின் போது கட்சி நிர்வாகிகள் பலர் அவருடன் உடனிருந்தனர்.1
- கரூர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு நிலஅளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணிக்கு நடைபெற்றது. மாவட்டத் தலைவர் தோழர் மு. மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாநில துணைத் தலைவர் தோழர் செ. முருகேசன் சிறப்புரையாற்றினார். இதனைத் தொடர்ந்து, மாநிலத் தலைவர் தோழர் ஜெ. ராஜா நிறைவுரையாற்றி, ஒன்றிப்பின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். நிகழ்ச்சியின் நிறைவில் மாவட்ட இணைச் செயலாளர் தோழர் எ. குணசுந்தரி நன்றியுரை வழங்கிய இக்கூட்டத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் நிலஅளவை அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1
- புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் புதிதாக திறக்கப்பட்ட கண்ணன் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தீவிர சிகிச்சை மற்றும் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் கண்ணன், இதயம் மற்றும் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டனர். இந்த முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், பொது மருத்துவம் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டன. மேலும், பரிசோதனை செய்யப்பட்ட நபர்களுக்கு இலவசமாக இசிஜி எடுக்கப்பட்டு, 10 நாட்களுக்கு இலவசமாக மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டன. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது உடலைப் பரிசோதனை செய்து கொண்டனர்.1
- திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா V. இடையப்பட்டி பஞ்சாயத்து கோவில்பட்டியில் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக சுமார் 1000 பள்ளி குழந்தைகள் தினமும் பயன்படுத்தி வரும் முக்கிய சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் பரவலாக மழை பெய்தவுடன், மழை நீர் வெளியேறிச் செல்ல வழி இல்லாத காரணத்தால் சாலையிலேயே தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன், இவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகளும் தினமும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த அவல நிலை குறித்து அறிந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.2