logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

மணப்பாறை அருகே குடிபோதையில் கீழே விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு : காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா கரட்டுப்பட்டியை சேர்ந்த முருகேசன் (45). இவருக்கு சுமார் 25 வருடங்களுக்கு முன்பு சுமதி என்பவருடன் திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை மட்டும் உள்ள நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தனது மனைவி சுமதி இறந்துவிட்டார். இந்நிலையில் தனது தாயார் பொன்னி என்பவருடன் கரட்டுப்பட்டியில் வசித்து கொண்டு கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் எப்போதும் குடித்துவிட்டு ஆங்காங்கே கீழே விழுந்து கிடப்பதாக கூறும் நிலையில், நேற்று (14.09.26) மதியம் சுமார் 2:00 மணிக்கு கரட்டுப்பட்டியில் இருந்து புதூர் செல்லும் பஞ்சாயத்து தார் சாலை ஓரத்தில் இறந்த நிலையில் இருந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த வையம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை பரிசோதனை செய்து பார்த்த போது உடலில் வலது பக்க காதில் பின்புறம் ரத்த காயம் இருந்துள்ளது. இறந்தவரின் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்துவிட்டு. வழக்கு பதிவு செய்து வையம்பட்டி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

22 hrs ago
user_Usha arun News
Usha arun News
Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
22 hrs ago
32d23e8b-9301-419c-a55b-5cd0d97332c7

மணப்பாறை அருகே குடிபோதையில் கீழே விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு : காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா கரட்டுப்பட்டியை சேர்ந்த முருகேசன் (45). இவருக்கு சுமார் 25 வருடங்களுக்கு முன்பு சுமதி என்பவருடன் திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை மட்டும் உள்ள நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தனது மனைவி சுமதி இறந்துவிட்டார். இந்நிலையில் தனது தாயார் பொன்னி என்பவருடன் கரட்டுப்பட்டியில் வசித்து கொண்டு கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் எப்போதும் குடித்துவிட்டு ஆங்காங்கே கீழே விழுந்து கிடப்பதாக கூறும் நிலையில், நேற்று (14.09.26) மதியம் சுமார் 2:00 மணிக்கு கரட்டுப்பட்டியில் இருந்து புதூர் செல்லும் பஞ்சாயத்து தார் சாலை ஓரத்தில் இறந்த நிலையில் இருந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த வையம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை பரிசோதனை செய்து பார்த்த போது உடலில் வலது பக்க காதில் பின்புறம் ரத்த காயம் இருந்துள்ளது. இறந்தவரின் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்துவிட்டு. வழக்கு பதிவு செய்து வையம்பட்டி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • குடிதண்ணீர் இல்லாமல் தவிக்கும் திண்டுக்கல் மாவட்ட வனவிலங்குகள் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தண்ணீருக்காக சாலையில் திரியும் அரிய வகை சிங்கவால் குரங்குகள் சாலையில் ஓடிய மழைநீரை குரங்குகள் அருந்திய நிலையில், வனவிலங்குகளுக்கு குடிநீர் வசதி அமைத்து தர விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை
    1
    குடிதண்ணீர் இல்லாமல் தவிக்கும் திண்டுக்கல் மாவட்ட வனவிலங்குகள்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தண்ணீருக்காக சாலையில் திரியும் அரிய வகை சிங்கவால் குரங்குகள்
சாலையில் ஓடிய மழைநீரை குரங்குகள் அருந்திய நிலையில், வனவிலங்குகளுக்கு குடிநீர் வசதி அமைத்து தர விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை
    user_Natarajan Pitchaimani
    Natarajan Pitchaimani
    Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    19 hrs ago
  • விநாயகர் சதுர்த்தி அன்று வலம் வந்த ஒற்றைக் காட்டு யானை (எஸ்டேட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு) திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே உள்ள சேம்பிலியூத்து என்ற மலை கிராமத்தில் உள்ள எஸ்டேட்டில் நேற்று விநாயகர் சதுர்த்தி அன்று வலம் வந்த ஒற்றைக் காட்டு யானை. (எஸ்டேட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு)
    1
    விநாயகர் சதுர்த்தி அன்று வலம் வந்த ஒற்றைக் காட்டு யானை (எஸ்டேட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு)
திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே உள்ள சேம்பிலியூத்து என்ற மலை கிராமத்தில் உள்ள எஸ்டேட்டில் நேற்று விநாயகர் சதுர்த்தி அன்று வலம் வந்த ஒற்றைக் காட்டு யானை. (எஸ்டேட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு)
    user_RAJA
    RAJA
    பத்திரிகையாளர் ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    5 hrs ago
  • ராசிபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் பலத்த காற்றுடன் மழை ராசிபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. நகரில் பெய்த இந்த மழையால் பஸ் நிலையத்தில் மழை நீர் வெளியேற வழி இன்றி குளம் போல் நீர் தேங்கியது. இதனால் அங்கு கூடிய வார சந்தை வியாபாரிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். காய்கறி பழங்கள் உள்ளிட்ட வார சந்தை பொருட்கள் நீரில் மூழ்கின. பயணிகள் மாணவர்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் என பலரும் பெரும் அவதிக்கு ஆளாகினர்.
    1
    ராசிபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் பலத்த காற்றுடன் மழை
ராசிபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. நகரில் பெய்த இந்த மழையால் பஸ் நிலையத்தில் மழை நீர் வெளியேற வழி இன்றி குளம் போல் நீர் தேங்கியது. இதனால் அங்கு கூடிய வார சந்தை வியாபாரிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். காய்கறி பழங்கள் உள்ளிட்ட வார சந்தை பொருட்கள் நீரில் மூழ்கின. பயணிகள் மாணவர்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் என பலரும் பெரும் அவதிக்கு ஆளாகினர்.
    user_DHINESH KUMAR
    DHINESH KUMAR
    Local News Reporter Namakkal, Tamil Nadu•
    6 hrs ago
  • ஶ்ரீ வைத்தியநாத தண்டாயுதபாணி ஆலயத்தில், செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஶ்ரீ வைத்தியநாத தண்டாயுதபாணி ஆலயத்தில், செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூசை நடைபெற்றது. தண்டாயுதபாணிக்கு 16 வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சந்தானம் மற்றும் மலர் அலங்கரித்து மகா தீபராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து வெற்றிலை விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    1
    ஶ்ரீ வைத்தியநாத தண்டாயுதபாணி ஆலயத்தில்,  செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு  சிறப்பு 
சிவகங்கை மாவட்டம் 
காரைக்குடி மாநகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள 
ஶ்ரீ வைத்தியநாத தண்டாயுதபாணி ஆலயத்தில்,  செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு  சிறப்பு பூசை நடைபெற்றது. தண்டாயுதபாணிக்கு 16 வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சந்தானம் மற்றும் மலர் அலங்கரித்து மகா தீபராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து வெற்றிலை விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    user_Nirmala Devi R
    Nirmala Devi R
    காரைக்குடி, சிவகங்கை, தமிழ்நாடு•
    7 hrs ago
  • ஒட்டன்சத்திரம் 2 வது வார்டு பெரியாஞ் செட்டி பட்டியில் கண் திருஸ்டி கணபதியை இளைஞர் அணி சார்பாக வழிபாடு செய்தனர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட 2 வது வார்டு, பெரியாஞ்செட்டிபட்டியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கண்திருஷ்டி கணபதியை சிறப்பு வழிபாடு செய்தனர். இக்கண்திருஸ்டி கணபதி இராஜகணபதியாய் சிம்மாசனத்தில் அமர்ந்து கம்பீரமாய் கண்திருஷ்டி களை நீக்குவதை தம் பணியாய் வைத்திருப்பது‌ போல் சிலை அமைந்திருந்தது. இன்று கணபதிக்கு சிறப்புபூஜைகள் செய்து வழிபாடு செய்தனர். அதன் பின்னர் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் இருந்து கண்திருஷ்டி கணபதியை தரிசனம் செய்தனர் பக்தர்களுக்கு விழா கமிட்டியாரின் சார்பாக கொழுக்கட்டை, சுண்டல், தக்காளி சாதம், அவல் பிரசாதமாக வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பி.கண்ணன் ,நா.மதன்குமார், ப.முருகானந்தம் ,விஷ்ணு,சரவணன்,தமிழரசன்,அருண்குமார்,பிரவீன்,ஆ.இ.ஹரிகிருஷ்ணன், ஆ.ஹரிகிருஸ்ணன் தலைமையிலான விழாக்கமிட்டியார்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
    2
    ஒட்டன்சத்திரம் 2 வது வார்டு பெரியாஞ் செட்டி பட்டியில் கண் திருஸ்டி கணபதியை இளைஞர் அணி சார்பாக வழிபாடு செய்தனர்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட 2 வது வார்டு, பெரியாஞ்செட்டிபட்டியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு  கண்திருஷ்டி கணபதியை சிறப்பு வழிபாடு செய்தனர். 
இக்கண்திருஸ்டி கணபதி
இராஜகணபதியாய்  சிம்மாசனத்தில் அமர்ந்து கம்பீரமாய் கண்திருஷ்டி களை நீக்குவதை தம் பணியாய் வைத்திருப்பது‌ போல் சிலை அமைந்திருந்தது. 
இன்று கணபதிக்கு  சிறப்புபூஜைகள் செய்து  வழிபாடு செய்தனர். அதன் பின்னர் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் இருந்து கண்திருஷ்டி கணபதியை தரிசனம் செய்தனர் பக்தர்களுக்கு விழா கமிட்டியாரின் சார்பாக கொழுக்கட்டை, சுண்டல், தக்காளி சாதம், அவல் பிரசாதமாக வழங்கப்பட்டது. 
விழாவிற்கான ஏற்பாடுகளை பி.கண்ணன் ,நா.மதன்குமார், ப.முருகானந்தம் ,விஷ்ணு,சரவணன்,தமிழரசன்,அருண்குமார்,பிரவீன்,ஆ.இ.ஹரிகிருஷ்ணன், ஆ.ஹரிகிருஸ்ணன் தலைமையிலான விழாக்கமிட்டியார்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
    user_Elangovan
    Elangovan
    Local News Reporter ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தமிழ்நாடு•
    13 hrs ago
  • தேவகோட்டையில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 118-ஆவது பிறந்தநாள் விழா , சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தியாகிகள் பூங்கா அருகில், 23-ஆவது வட்டக் கழகம் சார்பாக பேரறிஞர் அண்ணாவின் 118-ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நிகழ்வில், திமுக நிர்வாகியும் முன்னாள் கவுன்சிலருமான ஜாஹிர் உசேன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திமுக, திக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் அண்ணாவின் மலர் மாலை அணிவிக்கப்பட்ட புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அண்ணாவின் சிந்தனைகளைப் போற்றும் வகையில் அமைந்த இந்நிகழ்வு, கலந்துகொண்ட அனைவராலும் சிறப்பிக்கப்பட்டது.
    1
    தேவகோட்டையில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 118-ஆவது பிறந்தநாள் விழா , 
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தியாகிகள் பூங்கா அருகில், 23-ஆவது வட்டக் கழகம் சார்பாக பேரறிஞர் அண்ணாவின் 118-ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
நிகழ்வில், திமுக நிர்வாகியும் முன்னாள் கவுன்சிலருமான ஜாஹிர் உசேன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திமுக, திக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் அண்ணாவின் மலர் மாலை அணிவிக்கப்பட்ட புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அண்ணாவின் சிந்தனைகளைப் போற்றும் வகையில் அமைந்த இந்நிகழ்வு, கலந்துகொண்ட அனைவராலும் சிறப்பிக்கப்பட்டது.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    7 hrs ago
  • மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாள் தினம் திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். முசிறியில் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை 118 வது பிறந்த தின விழா திமுகவினர் மாலை அணிவித்து இடுப்பு வழங்கி கொண்டாட்டம். முசிறியில் மறைந்த முதல்வர் அண்ணாதுரை 118 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கைகாட்டில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி தியாகராஜன் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கருணை ராஜா கோட்டூர் முருகேசன், முசிறி நகரச் செயலாளர் சிவக்குமார், முன்னாள் தொட்டிய ஒன்றிய பெருந்தலைவர் ரவிச்சந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சோழன், முன்னாள் அரசு வழக்கறிஞர் சப்தரிசி,மாவட்ட துணைச் செயலாளர் மயில்வாகனன், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் சிவ நடராஜன், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் ரியல் எஸ்டேட், கார்த்திக், நகராட்சி கவுன்சிலர்கள் விஸ்வநாதன் முகேஷ் தகவல் தொழில்நுட்ப பிரிவு வழக்கறிஞர் சண்முகராஜ், சிவசண்முகம், உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கிளைக்கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
    1
    மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாள் தினம் திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
முசிறியில் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை 118 வது பிறந்த தின விழா திமுகவினர் மாலை அணிவித்து இடுப்பு வழங்கி கொண்டாட்டம்.
முசிறியில் மறைந்த முதல்வர் அண்ணாதுரை 118 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கைகாட்டில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி தியாகராஜன் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கருணை ராஜா கோட்டூர் முருகேசன், முசிறி நகரச் செயலாளர் சிவக்குமார், முன்னாள் தொட்டிய ஒன்றிய பெருந்தலைவர் ரவிச்சந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சோழன், முன்னாள் அரசு வழக்கறிஞர் சப்தரிசி,மாவட்ட துணைச் செயலாளர் மயில்வாகனன், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் சிவ நடராஜன், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் ரியல் எஸ்டேட், கார்த்திக், நகராட்சி கவுன்சிலர்கள் விஸ்வநாதன் முகேஷ் தகவல் தொழில்நுட்ப பிரிவு வழக்கறிஞர் சண்முகராஜ், சிவசண்முகம், உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கிளைக்கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி  கொண்டாடினர்.
    user_நா. முருகன்
    நா. முருகன்
    முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    15 hrs ago
  • ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் குளம்போல் தேங்கிய மழைநீரால் வாரச்சந்தை வியாபாரிகள், பயணிகள் கடும் அவதி... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. நகரில் பெய்த மழையால் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் மழைநீர் வெளியேற வழியின்றி குளம்போல் தேங்கியது. அதே பகுதியில் வாரச்சந்தை நடைபெற்ற நிலையில், சந்தை வியாபாரிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு சந்தை பொருட்கள் மழைநீரில் மூழ்கின. மேலும், பேருந்து நிலையத்தில் தேங்கிய மழைநீரால் பயணிகள், மாணவர்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். மழைநீர் முறையாக வெளியேறுவதற்கான வசதி இல்லாததே தண்ணீர் தேங்குவதற்கு காரணம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
    1
    ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் குளம்போல் தேங்கிய மழைநீரால் வாரச்சந்தை வியாபாரிகள், பயணிகள் கடும் அவதி...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. நகரில் பெய்த மழையால் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் மழைநீர் வெளியேற வழியின்றி குளம்போல் தேங்கியது.
அதே பகுதியில் வாரச்சந்தை நடைபெற்ற நிலையில், சந்தை வியாபாரிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு சந்தை பொருட்கள் மழைநீரில் மூழ்கின.
மேலும், பேருந்து நிலையத்தில் தேங்கிய மழைநீரால் பயணிகள், மாணவர்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். மழைநீர் முறையாக வெளியேறுவதற்கான வசதி இல்லாததே தண்ணீர் தேங்குவதற்கு காரணம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
    user_Aravinth
    Aravinth
    ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    6 hrs ago
  • தாராபுரம் இடை தேர்தலுக்கான வேட்பு மனுவை வழக்கறிஞர் சுகன்யா இன்று தாக்கல் செய்தார் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வழக்கறிஞர் சுகன்யா இன்று தாக்கல் செய்தார் . வேற அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் இன்று அண்ணா அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் சாமிநாதன் அவர்களும் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் பிரகாஷ் அவர்களும் முன்னாள் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் என் கயல்விழி செல்வராஜ் அவர்களும் திருப்பூர் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ் அவர்களும் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்பு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திமுக சார்பில் வழக்கறிஞர் சுகன்யா வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
    1
    தாராபுரம் இடை தேர்தலுக்கான வேட்பு மனுவை வழக்கறிஞர் சுகன்யா இன்று தாக்கல் செய்தார் 
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வழக்கறிஞர் சுகன்யா இன்று தாக்கல் செய்தார் . வேற அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் இன்று அண்ணா அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் சாமிநாதன் அவர்களும் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர்  பிரகாஷ் அவர்களும் முன்னாள் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் என் கயல்விழி செல்வராஜ் அவர்களும் திருப்பூர் மாவட்ட வழக்கறிஞர் அணி  அமைப்பாளர் செல்வராஜ் அவர்களும் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்பு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திமுக சார்பில் வழக்கறிஞர் சுகன்யா வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிகழ்வில்  கட்சி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
    user_Dpm news
    Dpm news
    Photographer தாராபுரம், திருப்பூர், தமிழ்நாடு•
    12 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.