மருங்காபுரி அருகே வயலில் அரசு கல்லூரி மாணாக்கர்கள் வீரக்கல் கண்டுபிடிப்பு திருச்சிராப்பள்ளி மாவட்டம் மருங்காபுரி ஊராட்சிக்கு உட்பட்ட 'கல்லாமேடு' என்ற ஊருக்கருகில் வீரன் ஒருவனுக்கு எடுக்கப்பட்ட வீரக்கல்லை மணப்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் அ.செல்வராசு உள்ளிட்டக் குழுவினர் கண்டு பிடித்துள்ளனர். இது பற்றித் தமிழ்த்துறைத் தலைவர் கூறியதாவது: ‘எங்கள் துறை வகுப்பறையில் மணப்பாறையின் தொன்மை குறித்துப் பேசிய பொழுது இளநிலை முதலாமாண்டு மாணவி ரா.பூபதி என்பவர் எங்கள் ஊரில் எனது சித்தப்பா வயலில் சிலை செதுக்கப்பட்டக் கல் இருப்பதாகக் குறிப்பிட்டார். உடனடியாக 24.08.2026 அன்று நானும் எங்கள் துறை மாணவர்களான திலீப்குமார், சஞ்சீவ்குமார் உள்ளிட்டக் குழுவினரோடு கள ஆய்வு மேற்கொண்டோம். அங்கே சென்று பார்த்த போது பருத்தி வயலுக்குள் மூன்று நடுகற்கள் இருப்பதைக் கண்டு அவை வீரக்கற்கள் என்பதைக் கண்டறிந்தோம். நான்கு அடி உயரமும் மூன்றடி அகலமும் கொண்டதாக அடிப்பகுதி மண்ணுள் புதைந்து நிறுத்தப்பட்டிருந்தது. மூன்று நடுகற்களிலும் ஒரு வீரனது உருவமே செதுக்கப்பட்டிருந்தது. வலது கை மேலே தூக்கிய நிலையில் ஒரு கூரிய ஆயுதம் இருந்தது. இடது கையில் வில் இருந்தது. மூன்று நடுகற்களில் ஒன்று ஏறக்குறைய சிதைந்து போயிருக்கிறது. வீரன் அம்பு செலுத்துவதற்கான வீரியத்தோடு இருப்பது போன்று அவனது கால்கள் செதுக்கப்பட்டிருப்பது. வியப்புக்குரியதாக இருந்தது. ஒரே வீரனுக்குச் செதுக்கப்பட்ட மூன்று நடுகற்கள் கிடைத்திருப்பது மிக அரிதாகும். தமிழகத்தில் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள வீரக்கல்கள் ஆநிரை மீட்கும் போரில் இறந்த வீரன், காட்டெருமையை எதிர்த்துத் தாக்கிய வீரன், பன்றியைக் கொன்ற வீரன் போன்றோருக்கானதாகக் கிடைத்துள்ளன. தற்போது கண்டுபிடிக்கப்பட்ட நடுகல், வளநாடு கைகாட்டி அருகில் கீழபழுவஞ்சி, மேலபழுவஞ்சி, கோட்டைப்பழுவஞ்சி ஆகிய ஊர்களை மையமிட்டப் பகுதியாகும். பழுவஞ்சி என்றால் வஞ்சிமரக் காடடு என்பது பொருள். எனவே வேளாண் நிலத்தை பாழ்படுத்த காட்டெருமையையோ, பிற விலங்கையோ அம்பெய்திக் கொன்ற ஒரு வீரனின் சிலையாக தற்போது கண்டுபிடிக்கப்பட்ட சிலை இருக்க வேண்டும் எனலாம். நடுகற்களில் வீரனின் பெயரும் அவன் எந்தப் போரில் இறந்து போனான் என்பதும் குறிக்கப்படுவதுண்டு. ஆனால் நாங்கள் கண்டுபிடித்த நடுகல்லில் பெயரோ பிற செய்திகளோ இல்லை. ஒருவேளை மண்ணுக்குள் புதைந்திருக்கும் அடிப்பகுதியில் எழுத்துப்பொறிப்புகள் இருக்கக்கூடும். அவ்வாறு இருக்குமானால் நடுகல் நடப்பட்ட ஆண்டைக் கணக்கிட முடியும். தனி வீரன் ஒருவனுக்கு நடுகல் எடுக்கப்படுவதில்லை. ஓர் ஊருக்காகவோ ஓர் இனத்திற்காகவோ உயிர்விட்ட வீரனுக்காகத்தான் நடுகல் எடுக்கப்படும். எனவே மேற்கண்ட நடுகல்லில் இருக்கும் வீரன் வேளாண் மக்களை /வேளாண்மையைக் காப்பதற்காகப் போரிட்டு இறந்த வீரன் எனக் கொள்ளலாம். இந்த நடுகற்கள் மழையிலும் வெயிலிலும் கிடந்து விரைவில் சிதைந்து போக வாய்ப்புள்ளது. எனவே அவற்றை ஊராட்சி நிர்வாகத்தின் பாதுகாக்கப்பட்டால் அது பண்பாட்டைக் மூலமாகவே நம் காப்பாற்றுவதாக அமையும்' எனக் குறிப்பிட்டார்.
மருங்காபுரி அருகே வயலில் அரசு கல்லூரி மாணாக்கர்கள் வீரக்கல் கண்டுபிடிப்பு திருச்சிராப்பள்ளி மாவட்டம் மருங்காபுரி ஊராட்சிக்கு உட்பட்ட 'கல்லாமேடு' என்ற ஊருக்கருகில் வீரன் ஒருவனுக்கு எடுக்கப்பட்ட வீரக்கல்லை மணப்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் அ.செல்வராசு உள்ளிட்டக் குழுவினர் கண்டு பிடித்துள்ளனர். இது பற்றித் தமிழ்த்துறைத் தலைவர் கூறியதாவது: ‘எங்கள் துறை வகுப்பறையில் மணப்பாறையின் தொன்மை குறித்துப் பேசிய பொழுது இளநிலை முதலாமாண்டு மாணவி ரா.பூபதி என்பவர் எங்கள் ஊரில் எனது சித்தப்பா வயலில் சிலை செதுக்கப்பட்டக் கல் இருப்பதாகக் குறிப்பிட்டார். உடனடியாக 24.08.2026 அன்று நானும் எங்கள் துறை மாணவர்களான திலீப்குமார், சஞ்சீவ்குமார்
உள்ளிட்டக் குழுவினரோடு கள ஆய்வு மேற்கொண்டோம். அங்கே சென்று பார்த்த போது பருத்தி வயலுக்குள் மூன்று நடுகற்கள் இருப்பதைக் கண்டு அவை வீரக்கற்கள் என்பதைக் கண்டறிந்தோம். நான்கு அடி உயரமும் மூன்றடி அகலமும் கொண்டதாக அடிப்பகுதி மண்ணுள் புதைந்து நிறுத்தப்பட்டிருந்தது. மூன்று நடுகற்களிலும் ஒரு வீரனது உருவமே செதுக்கப்பட்டிருந்தது. வலது கை மேலே தூக்கிய நிலையில் ஒரு கூரிய ஆயுதம் இருந்தது. இடது கையில் வில் இருந்தது. மூன்று நடுகற்களில் ஒன்று ஏறக்குறைய சிதைந்து போயிருக்கிறது. வீரன் அம்பு செலுத்துவதற்கான வீரியத்தோடு இருப்பது போன்று அவனது கால்கள் செதுக்கப்பட்டிருப்பது. வியப்புக்குரியதாக இருந்தது. ஒரே வீரனுக்குச் செதுக்கப்பட்ட மூன்று
நடுகற்கள் கிடைத்திருப்பது மிக அரிதாகும். தமிழகத்தில் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள வீரக்கல்கள் ஆநிரை மீட்கும் போரில் இறந்த வீரன், காட்டெருமையை எதிர்த்துத் தாக்கிய வீரன், பன்றியைக் கொன்ற வீரன் போன்றோருக்கானதாகக் கிடைத்துள்ளன. தற்போது கண்டுபிடிக்கப்பட்ட நடுகல், வளநாடு கைகாட்டி அருகில் கீழபழுவஞ்சி, மேலபழுவஞ்சி, கோட்டைப்பழுவஞ்சி ஆகிய ஊர்களை மையமிட்டப் பகுதியாகும். பழுவஞ்சி என்றால் வஞ்சிமரக் காடடு என்பது பொருள். எனவே வேளாண் நிலத்தை பாழ்படுத்த காட்டெருமையையோ, பிற விலங்கையோ அம்பெய்திக் கொன்ற ஒரு வீரனின் சிலையாக தற்போது கண்டுபிடிக்கப்பட்ட சிலை இருக்க வேண்டும் எனலாம். நடுகற்களில் வீரனின் பெயரும் அவன் எந்தப் போரில் இறந்து போனான் என்பதும் குறிக்கப்படுவதுண்டு. ஆனால்
நாங்கள் கண்டுபிடித்த நடுகல்லில் பெயரோ பிற செய்திகளோ இல்லை. ஒருவேளை மண்ணுக்குள் புதைந்திருக்கும் அடிப்பகுதியில் எழுத்துப்பொறிப்புகள் இருக்கக்கூடும். அவ்வாறு இருக்குமானால் நடுகல் நடப்பட்ட ஆண்டைக் கணக்கிட முடியும். தனி வீரன் ஒருவனுக்கு நடுகல் எடுக்கப்படுவதில்லை. ஓர் ஊருக்காகவோ ஓர் இனத்திற்காகவோ உயிர்விட்ட வீரனுக்காகத்தான் நடுகல் எடுக்கப்படும். எனவே மேற்கண்ட நடுகல்லில் இருக்கும் வீரன் வேளாண் மக்களை /வேளாண்மையைக் காப்பதற்காகப் போரிட்டு இறந்த வீரன் எனக் கொள்ளலாம். இந்த நடுகற்கள் மழையிலும் வெயிலிலும் கிடந்து விரைவில் சிதைந்து போக வாய்ப்புள்ளது. எனவே அவற்றை ஊராட்சி நிர்வாகத்தின் பாதுகாக்கப்பட்டால் அது பண்பாட்டைக் மூலமாகவே நம் காப்பாற்றுவதாக அமையும்' எனக் குறிப்பிட்டார்.
- சிங்கம்புணரி அருகே பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழை சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள சுற்றுப்புற கிராமங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த சூறைக்காற்று, இடிமின்னலுடன் கனமழை பெய்தது. மார்ச் முதல் ஆறு மாதங்களாக கடுமையான வெப்பத்தால் வாடிய மக்களுக்கு இன்று மாலை திடீர் மழை நிவாரணம் அளித்தது. கோழிக்குடிபட்டி, ஆறுகுடிபட்டி, சூரக்குடி, அய்யாபட்டி, கரடிபட்டி, வையாபுரிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர் மழையால் நகர் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது.1
- அடையாள அட்டை வாங்க ஒரே நேரத்தில் குவிந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்ததால் வட்டார வளர்ச்சி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது புதுக்கோட்டை. விதவை அடையாள அட்டை வாங்க ஒரே நேரத்தில் குவிந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்ததால் வட்டார வளர்ச்சி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது புதுக்கோட்டை திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலத்துறையில் விதவைகளுக்கு உதவித்தொகை வழங்க விண்ணப்பம் பெறப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அடையாள அட்டை இருந்தால்தான் தமிழக அரசின் உதவித்தொகை வழங்கப்படும் மற்றும் அரசின் உதவிகளை பெறுவதற்கு அடையாள அட்டை கட்டாயம் என்று வதந்தி பரவியதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குவிந்து விண்ணப்பங்களை வழங்கி வருகின்றனர் தமிழக முதல்வரின் வெற்றி பயணம் திட்டத்திற்கு 60 வயதுக்குட்பட்ட விதவைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் அந்த அட்டையால் அவர்களுக்கு உதவித்தொகை மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கப்படும் என்ற அறிவிப்பால் ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மனு கொடுக்க வந்திருந்தனர் இந்நிலையில் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களும் விண்ணப்பங்கள் வழங்க வருகை தந்ததால் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பெரிதும் பரபரப்பாக காணப்பட்டது1
- புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் பெரிய அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாபெரும் குதிரை வண்டி பந்தயம் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் பெரிய அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா இரண்டாம் ஆண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 21 ஜோடி குதிரை வண்டிகள் கலந்து கொண்டன. இறுதியில் வெற்றி பெற்ற குதிரை வண்டி உரிமையாளர்களுக்கு ரொக்க பணம் மற்றும் கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டது.1
- குப்பைத் தொட்டியைப் பயன் படுத்தாத மக்கள் மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் வெள்ளலூர் ஊராட்ச்சியைச் சேர்ந்த கட்டைச் சோலைப்பட்டி என்ற கிராமத்தில் குப்பைத்தொட்டி இருந்தும் அதைப் பயன் படுத்தாமல் அந்த கிராம மக்கள் குப்பைத் தொட்டி அருகிழே யே குப்பையை கொட்டு கின்றனர்1
- கறம்பக்குடியில் கடும் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்ட 108 ஆம்புலன்ஸ் *புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் கடும் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்ட 108 ஆம்புலன்ஸ் அவசர தேவைக்கு செல்ல முடியாத சூழ்நிலை கூடுதல் காவலர்கள் மற்றும் போக்குவரத்து காவல்துறையை நியமிக்க கோரி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை* புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் சுப முகூர்த்த தினங்கள் மற்றும் கோயில் விசேஷ நாட்களில் அதிகளவில் பொதுமக்கள் கூடுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் 108 ஆம்புலன்ஸ் வாகனமும் சிக்கியது. இதனால் அவசர தேவைக்காக செல்ல வேண்டிய ஆம்புலன்ஸ் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கறம்பக்குடியில் போக்குவரத்து காவலர்கள் மற்றும் காவல்துறையினர் போதிய அளவில் பணியில் இல்லாததே போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணம் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே கறம்பக்குடி காவல் நிலையத்திற்கு கூடுதல் காவலர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து காவலர்களை நியமிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- हेडलाइन: गंगा बैराज हाईवे पर मिला अज्ञात व्यक्ति का शव, नवाबगंज पुलिस जांच में जुटी कानपुर नगर के नवाबगंज थाना क्षेत्र स्थित गंगा बैराज हाईवे पर मंगलवार सुबह एक अज्ञात व्यक्ति का शव मिलने से इलाके में हड़कंप मच गया हाईवे से गुजर रहे राहगीरों ने सड़क किनारे शव पड़ा देखा और पुलिस को सूचना दी सूचना मिलते ही नवाबगंज थाना पुलिस टीम मौके पर पहुंची पुलिस ने घटनास्थल को सुरक्षित कर आसपास के लोगों से पूछताछ की मौके पर कई पुलिसकर्मी मौजूद रहे और मामले की छानबीन करते नजर आए पुलिस के अनुसार, मृतक की उम्र लगभग 35-40 वर्ष के आसपास लग रही है और उसकी अभी तक शिनाख्त नहीं हो सकी है शव को कब्जे में लेकर पंचनामा भर पोस्टमार्टम के लिए भेज दिया गया है थाना प्रभारी ने बताया कि पोस्टमार्टम रिपोर्ट आने के बाद ही मौत के सही कारणों का पता चल सकेगा फिलहाल आसपास के थानों में गुमशुदा लोगों के बारे में जानकारी जुटाई जा रही है और शव की पहचान कराने का प्रयास किया जा रहा है पुलिस मामले की हर एंगल से जांच कर रही है3
- फ़िरोज़ाबाद में बंजारा समाज पर धारदार हथियारों से हमला, बाल-बाल बची जान पीड़ितों ने थाना एका में दी तहरीर कार्रवाई की मांग फ़िरोज़ाबाद जनपद के एका थाना एका थाना के क्षेत्र के हरी सिंह पुर गाँव में बंजारा समाज की महिलाओं एवं लोगों पर दबंगों द्वारा धारदार हथियारों से जानलेवा हमला करने का मामला सामने आया है जहां बंजारा समाज को दबाने वाली बात सामने आयी है घटना का एक वीडियो भी सोशल मीडिया पर वायरल हो रहा है, जिसमें महिलाएं और बच्चे सड़क पर भागते हुए दिखाई दे रहे हैं पीड़ितों के अनुसार दिनांक 22 अगस्त 2026 को दोपहर के समय गाँव के ही कुछ लोग लाठी-डंडा और धारदार हथियार लेकर उनके घरों पर आ गए और गाली-गलौज करते हुए हमला कर दिया अचानक हुए इस हमले से पूरे गाँव में अफरा-तफरी मच गई। महिलाओं और बच्चों ने भाग कर किसी तरह अपनी जान बचाई पीड़ित गांव वालो का आरोप है कि वे गरीब बंजारा समाज से हैं इसलिए उन्हें आए दिन डराया-धमकाया जाता है। इस घटना के बाद से पूरा समाज दहशत में है ग्रामीणों ने बताया कि बड़ी मुश्किल से उन लोगों ने कर मामला शांत कराया गया इस संबंध में पीड़ित गाँव के लोगों ने थाना एका पुलिस को लिखित तहरीर दी है और आरोपियों के खिलाफ सख्त कार्रवाई व सुरक्षा की मांग की है लिखे हुए आरोपी बार बार गांव पर चढ़ाई करते हुए जान से मारने की धमकी दे रहे हैं पुलिस द्वारा मामले की जांच ही नहीं की जा रही है। थाना प्रभारी एका से बात करने पर बताया कि तहरीर मिलने पर जाँच कर उचित कार्रवाई की जाएगी2
- குளித்தலையில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவர் பலி கரூர் மாவட்டம்,குளித்தலையில் சரக்கு லாரிகள் இரண்டும் நேருக்கு நேர் மோதி சம்பவ இடத்திலேயே இரண்டு லாரி ஓட்டுனரும் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குமாரமங்கலம் அருகே காலை நான்கு முப்பது மணி அளவில் திருச்சியில் இருந்து கரூர் நோக்கி நெல் மூட்டை ஏற்றி வந்த வந்த டாரஸ் லாரி கரூரிலிருந்து திருச்சி நோக்கி எம் சாண்டை ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் டாரஸ் லாரியில் வந்த ஓட்டுனரும் மற்றும் எம் சாண்ட் டிப்பர் ஓட்டி வந்த ஓட்டுனரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் இரண்டு கார்களும் ஒன்றும் பின் ஒன்றாக மோதிக்கொண்டது காரில் வந்தவர்களுக்கு எந்த காயமும் இல்லை சம்பவம் அறிந்து குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு குளித்தலை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர் பிறகு போலீசார் விசாரணையில் நெல் மூட்டை ஏற்றி வந்த லாரியின் ஓட்டுனர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிய சேர்ந்த மேகநாதன் என்று தெரியவந்தது மேலும் எம் சாண்ட் லாரியை ஓட்டி வந்த மயிலாடுதுறை அருகே சேந்தங்குடியை சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன் என்பவர் என்று தெரியவந்தது விபத்து ஏற்பட்ட லாரிகளை கிரேன் இயந்திரம் மூலம் போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர் விபத்து குறித்து குளித்தலை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.1