Shuru
Apke Nagar Ki App…
ஒட்டன்சத்திரத்தில் காவல்துறையினர் மற்றும் துணை ராணுவ படையினர் தீவிர வாகன பரிசோதனை திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் -தாராபுரம் சாலையில் இன்று வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பணங்கள் வாகனங்களில் எடுத்துச் செல்லப்படுகிறதா? என துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து தீவிர வாகன பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
RAJA news
ஒட்டன்சத்திரத்தில் காவல்துறையினர் மற்றும் துணை ராணுவ படையினர் தீவிர வாகன பரிசோதனை திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் -தாராபுரம் சாலையில் இன்று வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பணங்கள் வாகனங்களில் எடுத்துச் செல்லப்படுகிறதா? என துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து தீவிர வாகன பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட செம்பட்டி, கோடாங்கி பட்டி, புது கோடாங்கி பட்டி, சீவல் சரகு , அக்கரைப்பட்டி, வேல கவுண்டன்பட்டி, இராமநாதபுரம், மல்லையாபுரம், பாறைப்பட்டி, வீரக்கல், கூத்தாம்பட்டி , ஆத்தூர் போன்ற பகுதிகளில் தமிழக வெற்றி க்கழக ஆத்தூர் சட்டமன்ற வேட்பாளர் நா. கலைச்செல்வி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் தங்கள் கட்சிகளின் பத்து அம்ச மகளிர்க்கான தேர்தல் வாக்குறுதிகள்: 1 -பெண்கள் குழந்தைகளுக்கு தனி இலாகா உருவாக்கப்படும், 2 -அன்னபூரணி சூப்பர் ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் வழங்கப்படும், 3 -மகளிர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வேலு நாச்சியார் படை ஏற்படுத்தப்படும் ,4 -மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 5லட்சம் கடன் மானியத்துடன் வழங்கப்படும், 5 -தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும், 6 -60 வயது வரையிலான அனைத்து மகளிர்க்கும் உதவித்தொகை மாதம் ரூபாய் 2500 வழங்கப்படும், 7 தமிழகம் முழுவதும் அனைத்துப் பெண்களுக்கும் இலவச பேருந்து சேவை வழங்கப்படும், 8 -அண்ணன் சிர் திட்டத்தின் படி திருமணத்தின்போது ஒரு சவரன் தங்கம் ,பட்டு சேலை வழங்கப்படும், 9 -இலவச சானிட்டரி ஃபேட்ஸ் பொது விநியோகம் இடமான ரேஷன் கடைகள், பள்ளிகள், கல்லூரிகளில் வழங்கப்படும், 10 -பொது போக்குவரத்தில் ஸ்மார்ட் அவசர பொத்தான்கள் பொருத்தப்படும் உள்ளிட்ட பத்து அம்ச வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துக் கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் அனைத்து பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வேட்பாளருக்கு பூர்ண கும்பம் மரியாதை செய்து ஆரத்தி எடுத்து உற்சாகத்துடன் வரவேற்றனர். இந்நிகழ்வில் உடன் தமிழக வெற்றிக்கழக மத்திய மாவட்ட செயலாளர்ML. வாசுதேவன், ஒன்றிய செயலாளர்கள் முருகானந்தம் ,லக்ஷ்மணன் , அருண்குமார், மாவட்ட ஒன்றிய பேரூர் கிளை கழக மகளிர் அணி நிர்வாகிகள், மாணவ இளைஞர் அணி நிர்வாகிகள், மற்றும் தவெக பொறுப்பாளர்கள் ,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்..1
- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு அஇஅதிமுக சார்பாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் A. விஸ்வநாதன் நகர செயலாளர் K.முகமது ஹாஜியார் தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.1
- பெரியகுளத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நகர செயலாளர் என்னை கவனிக்கவில்லை பிரச்சார வாகனத்தில் என் அனுமதி இல்லாமல் எவ்வாறு பாமக கட்சிக் கொடியை கட்டலாம் என குடிபோதையில் ஓட்டுனரிடம் வாக்குவாதம் இந்த என் டி ஏ கூட்டணியில் உள்ள கூட்டணி கட்சி நிர்வாகிகள் இடையே ஒற்றுமை இல்லை என்பது வெட்ட வெளிச்சமாக தற்போது தெரிந்துள்ளது தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில் என்டிஎ கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளது இந்நிலையில் தற்போது தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தலில் இந்திய கூட்டணியில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு பெரியகுளம் சட்டமன்ற தனி தொகுதி போட்டியிடுவதற்காக ஒதுக்கப்பட்டனர் அதனைத் தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக பெரியகுளம் சட்டமன்ற தனி தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ டாக்டர் கதிர்காமு அவரை அக்கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்து தற்போது எலக்சன் பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருகின்றனர் இந்நிலையில் என் டி ஏ கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் பெரியகுளம் நகரச் செயலாளர் குணசேகரன் என்பவர் மது போதையில் பெரியகுளம் பகுதியில் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் வாகனம் வீதி வீதியாக சென்று வருகின்றனர் அந்த வாகனத்தை மறித்து நான் அன்புமணியின் பாட்டாளி மக்கள் கட்சியின் பெரியகுளம் நகரச் செயலாளர் எனக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் எந்த ஒரு மரியாதையும் செய்யவில்லை என்னை கவனிப்பும் செய்யாததால் பிரச்சார வாகனத்தில் என் அனுமதி இல்லாமல் எப்படி கொடி கட்டலாம் என ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அப்போது ஓட்டுநர் கொடியை நான் கழட்டி விடுகிறேன் நான் வேலை தான் செய்கிறேன் என கூறியதற்கு நான் நகரச் செயலாளர் எனக்கு எந்த ஒரு கவனிப்பும் செய்யவில்லை நீ குடியை கழட்ட வேண்டாம் ஆனால் நான் சொன்னேன் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகளும் கூறுவீர்கள் என மது போதையில் என்ன செய்வது என்று தெரியாமல் பிரச்சார வாகன ஓட்டுனரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது என்டிஏ கூட்டணி கட்சியில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது மேலும் கூட்டணி கட்சியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி நகரச் செயலாளர் மது போதையில் தனக்கு எந்த ஒரு கவனிப்பும் அம்மாள் மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளரோடு நிர்வாகிகளோ செய்யவில்லை என பிரச்சார வாகனத்தை மதித்து ரகளையில் ஈடுபட்டது பெரியகுளம் பகுதியில் உள்ள கூட்டணி கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஒற்றுமை இல்லாதது தற்போது வெட்ட வெளிச்சமாக வெளிவந்துள்ளது கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது1
- Post by K.M.Parameshwaran1
- வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி. பரமசிவத்திற்கு ஆதரவாக எரியோடு பேரூராட்சி மணியக்காரன்பட்டி கிராமத்தில் இன்று வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.1
- பெரியகுளம் சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் பெ.சக்திவேல் அவர்களுக்கு தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியம் தாமரைக்குளம் பேரூராட்சி 13 -வது வார்டு பொதுமக்களை சந்தித்து பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர் நிகழ்வில் 13 வது வார்டு கவுன்சிலர் மற்றும் திமுக வார்டு செயலாளர் தேவகி தென்னரசு மற்றும் முருகன் நாகராஜ் மற்றும் திமுக பிரதிநிதிகள் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.1
- மணப்பாறை அருகே திடீரென சில கோரிக்கைகளை செய்து கொடுக்க கூறி திமுக வேட்பாளர் காலில் விழுந்த நபரால் பரபரப்பு திருச்சி மாவட்டம், மணப்பாறை தொகுதி, வையம்பட்டி ஒன்றியபகுதிகளில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் அப்துல் சமது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். ஆனாங்கரைப்பட்டியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது அங்கிருந்த மக்கள் சிலர் தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்று கூறி முறையிட்டனர். அப்போது அங்கிருந்த ஒருவர் திடீரென சாலை வசதி இல்லை, குடிநீர் வசதி இல்லை, ஜெயிச்சுட்டு போய் 5 வருடமா செஞ்சு தரவில்லை என்று கூறி எம்எல்ஏ காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.1
- தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட பகுதிகளில் இன்று வயதான முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களிடம் தபால் வாக்குபதிவு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் வருகின்ற 23ம் தேதி சட்டமன்றத் தேர்தல் பொது வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் வாக்குச்சாவடிக்கு வர முடியாத முதியவர்கள் மாற்றுத் திறனாளிகள் மற்றும் மருத்துவ சிகிச்சையில் உள்ள நபர்களிடம் அவர்களது வீடுகளுக்கு சென்று தபால் வாக்குகள் பெரும் பணிகள் நடைபெற்று வருகிறது. போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்ப்பட்ட நகர் பகுதி மற்றும் கிராமப் பகுதிகளில் இன்று தபால் வாக்குகள் பெறப்பட்டு வருகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி வயதான முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மருத்துவ சிகிச்சையில் உள்ளவர்கள் வீடுகளில் சென்று வாக்குகள் பதிவு பெறப்பட்டு சீல் வைக்கப்பட்ட வாக்குப் பெட்டியில் செலுத்தப்பட்டது.1