Shuru
Apke Nagar Ki App…
Omsakthi Sankar
- Omsakthi SankarThoothukkudi, Tuticorinசூப்பர்2 hrs ago
More news from தமிழ்நாடு and nearby areas
- தென்காசியில் உள்ள அருள்மிகு காசி விஸ்வநாதர் கோயிலில் தென்காசி எம்எல்ஏ எஸ் பழனி நாடார் சொந்த செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பக்தர்கள் உடைமைகளை பாதுகாக்கும் அறை திறப்பு விழா இன்று நடந்தது விழாவிற்கு தென்காசி எம்எல்ஏ எஸ் பழனி நாடார் தலைமை வகித்து திறந்து வைத்தார்1
- தேனி அருகே பிறந்த பச்சிளம் குழந்தையை தொப்புள் கொடியோடு சாலையில் வீசி சென்ற மர்ம நபர்கள். தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பிரசித்தி பெற்ற வீரபாண்டிகௌமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது தேனி புறவழி சாலையில் இருந்து வீரபாண்டி கோவிலுக்கு செல்லும் சாலையில் சுமார் 10 மீட்டர் தொலைவில் பச்சிளம் குழந்தை தொப்புள் கொடியோடு கிடப்பதை அவ்வழியாக சாலையில் சென்ற நபர் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சாலையில் பச்சிளம் குழந்தையை வீசி சென்றவர்கள் யார் என்ற விவரங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.1
- மும்மதத்தினர் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா திண்டுக்கல் மாநகராட்சி 44. வது வார்டு மேட்டுப்பட்டியில் திமுக சார்பில் மும்மதத்தினர் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகராட்சி கவுன்சிலர் மார்த்தாண்டன் தலைமை வகித்த இந்த நிகழ்ச்சியில், திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி எம்எல்ஏயுமான ஐ. பி. செந்தில்குமார் வாழ்த்துரை வழங்கினார். ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சமத்துவ பொங்கலைத் துவக்கி வைத்தார். மேலும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கி, தனது பிறந்தநாளை முன்னிட்டு 10 கிலோ எடையில் கேக் வெட்டி திமுகவினருடன் கொண்டாடி மகிழ்ந்தார்.1
- திண்டுக்கல் பல இடங்களில் குண்டு குழியுமான தார் சாலைகள் உள்ளன அதில் ஈஸ்வரி ஸ்டோர்ஸ் அருகில் உள்ள சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் அவ்வப்போது டூவீலரில் செல்வோர் விபத்துக்குள்ளாகி வருகின்றனர் கரூர் திருச்சியில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் இதன் வழியாக வரும் முக்கிய சாலை1
- ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சத்தியநாராயணமூர்த்தி தலைமையில் பொங்கல் விழா கோலாகலம்.1
- மணப்பாறை வழியாக அடாத மழையிலும் விடாமல் பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் தை மாதம் தொடங்கும் முன்னர் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் பழனி முருகனுக்கு பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து பின்னர் பாதயாத்திரையாக செல்வது வழக்கம். இதே போல் இன்னும் சில தினங்களில் தை மாதம் தொடங்க உள்ள நிலையில் பலரும் பழனிக்கு பாதயாத்திரையாக சென்று வருகின்றனர். அதன்படி இன்று திருச்சி மாவட்டம், மணப்பாறை வழியாக திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அதிக சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரையிலும், மாற்றுத் திறனாளிகளும் பாதயாத்திரையாக சென்று வருகின்றனர். விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்து வந்தாலும் அந்த மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தங்களின் பாதயாத்திரையில் கவனம் செலுத்தி முருகனை காண பக்தி பரவசத்துடன் மகிழ்ச்சியோடு சென்று வருகின்றனர். அதிக அளவிலானோர் இந்த பாதயாத்திரையில் கலந்து கொண்டுள்ளனர்.1
- தென்காசி அருகே இன்ஜின் கோளாறால் செங்கோட்டை–நெல்லை பயணிகள் ரயில் நடுவழியில் நின்று, மாற்று என்ஜின் மூலம் தாமதமாக புறப்பட்டது.1
- ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது எப்பொழுதும் கிடையாது அமைச்சர் பேச்சு திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுகவை பொறுத்தவரை ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்பது என்பது எப்பொழுதும் கிடையாது என்றும், தனிப்பட்ட முறையில் ஆட்சி தான் என்றும், தமிழக முதல்வர் உறுதியாக உள்ளார் என்றும் தெரிவித்தார். மேலும், தைத்திருநாளை முன்னிட்டு பெண்களுக்கு இனிப்பான புதிய அறிவிப்பை தமிழக முதல்வர் அறிவிக்க உள்ளார் என்றும் அவர் கூறினார்.1
- சிறப்பு பேருந்தை துவக்கி வைத்த அமைச்சர் பள்ளி மாணவர்கள் சிரமத்தைபோக்கும் வகையில், தமிழ்நாடு முதலைமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் படி, இன்று புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து பள்ளி மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு பேருந்தனை தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை எஸ். ரகுபதி துவக்கி வைத்து சிறப்பித்தார். உடன் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா மாநகர மேயர் திலகவதி செந்தில் உள்ளிட்ட பலரும் உள்ளனர்.1