தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த பாகல்அள்ளி கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மாண்புமிகு C. ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாளை முன்னிட்டு, பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தமிழக வெற்றிக் கழக நிர்வாகியும், தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க மாவட்ட தலைவருமான எம். சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் நல்லம்பள்ளி மத்திய ஒன்றிய செயற்குழு உறுப்பினர் லெனின்ராஜ், வணிகர் அணி அமைப்பாளர் மணி, தகவல் தொழில்நுட்ப அமைப்பாளர் வெங்கடேஷ் மற்றும் பாகல்அள்ளி கிளைச்செயலாளர் வெற்றி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பள்ளி மாணவர்களுக்கு இனிப்புக்களுடன் நோட்டுபுத்தகம், பேனா, பென்சில் ஆகியவை விநியோகிக்கப்பட்டன. மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் முதலமைச்சரின் உருவப் படம் பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கப்பட்டது. இந்த கொண்டாட்டத்தில் தவெக நிர்வாகிகள் அரங்கநாதன், வினோத்குமார் மற்றும் திரளான கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த பாகல்அள்ளி கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மாண்புமிகு C. ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாளை முன்னிட்டு, பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தமிழக வெற்றிக் கழக நிர்வாகியும், தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க மாவட்ட தலைவருமான எம். சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் நல்லம்பள்ளி மத்திய ஒன்றிய செயற்குழு உறுப்பினர் லெனின்ராஜ், வணிகர் அணி அமைப்பாளர் மணி, தகவல் தொழில்நுட்ப அமைப்பாளர் வெங்கடேஷ் மற்றும் பாகல்அள்ளி கிளைச்செயலாளர் வெற்றி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பள்ளி மாணவர்களுக்கு இனிப்புக்களுடன் நோட்டுபுத்தகம், பேனா, பென்சில் ஆகியவை விநியோகிக்கப்பட்டன. மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் முதலமைச்சரின் உருவப் படம் பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கப்பட்டது. இந்த கொண்டாட்டத்தில் தவெக நிர்வாகிகள் அரங்கநாதன், வினோத்குமார் மற்றும் திரளான கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
- தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு சனத்குமார் நதியை உடனடியாகத் தூய்மைப்படுத்தாவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக பாஜகவினர் அறிவித்துள்ளனர். சனத்குமார் நதியானது பாலக்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளான கணபதி கொட்டாய், ஜெர்தலாவ், சித்திரப்பட்டி, பூவன்கொட்டாய், கொட்டாவூர், மல்லசமுத்திரம், காவாப்பட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ளது. மேலும், பஞ்சப்பள்ளி அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் இந்த நதி வழியாக தும்பலஅள்ளி அணையைச் சென்றடைகிறது. பாலக்கோடு பேரூராட்சிப் பகுதியில் உள்ள அனைத்துக் குப்பை கழிவுகள், கோழி, ஆடு, மாடு இறைச்சி கழிவுகள் இந்த நதியில் கொட்டப்படுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாலக்கோடு பேரூராட்சியில் புகார் அளித்தால், சம்மந்தப்பட்ட இடம் ஜெர்தலாவ் பஞ்சாயத்தில் உள்ளது எனவும், ஜெர்தலாவ் பஞ்சாயத்தில் புகார் அளித்தால் பாலக்கோடு நகரப் பகுதியைச் சேர்ந்தவர்கள்தான் அசுத்தப்படுத்துவதாகவும் கூறி, மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் சாக்குப்போக்குகளைச் சொல்லி வருவதாகவும், இதுவரை யாரும் நதியைத் தூய்மைப்படுத்தவில்லை எனவும் பாஜகவினர் வேதனையுடன் குறிப்பிட்டனர். கோயில்களில் சுவாமிகளுக்குப் புனித நீராட்டல் மற்றும் கங்கை பூஜை செய்யப் பயன்படுத்தி வந்த இந்த ஆற்று நீர் தற்போது அசுத்தமாகி கோயில்களுக்குப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும், விவசாயம், குடிநீர் மற்றும் கால்நடைகளுக்குப் பயன்படுத்தப்படும் நீரில் நோய் பரப்பும் பல்வேறு கழிவுகள், இறந்த கால்நடைகள் என அசுத்தப்படுத்துவதால் சனத்குமார் நதி நஞ்சாகி விட்டதாகவும் அவர்கள் கூறினர். நதியை அசுத்தப்படுத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சனத்குமார் நதியில் உள்ள கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி, பாஜக நகர மண்டல் அமைப்பாளர் பெரியசாமி தலைமையில் பாஜகவினர் பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஒரு வார காலத்திற்குள் சனத்குமார் நதி தூய்மைப்படுத்தப்படாவிட்டால், சாலை மறியல், ஆர்ப்பாட்டம், கண்டனப் போராட்டங்களில் ஈடுபடுவோம் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.1
- ஜூன் 22 அன்று காரிமங்கலம் வாரச்சந்தையில் தேங்காய் வரத்து அபரிமிதமாக அதிகரித்த போதிலும், விலை கடுமையாகச் சரிந்ததால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம் வாரச்சந்தையானது செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெற்று வந்தாலும், திங்கட்கிழமை காலை முதலே தேங்காய் சந்தை செயல்படுகிறது. இன்று நடந்த சந்தைக்கு, காரிமங்கலம், காவேரிப்பட்டணம், பாரூர், அரசம்பட்டி, பண்ணத்தூர், தட்ரஅள்ளி, குடிமேனஅள்ளி, செல்லம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து விவசாயிகள் சுமார் 2.50 லட்சம் தேங்காய்களை விற்பனைக்காகக் கொண்டு வந்திருந்தனர். கடந்த வாரங்களில் சிறிய அளவிலான தேங்காய் ரூ.12க்கும், பெரிய சைஸ் தேங்காய் ரூ.18க்கும் விற்பனையான நிலையில், நேற்று நடந்த சந்தையில் தேங்காய் அளவுக்கேற்ப ரூ.8 முதல் ரூ.14 வரையிலான விலையில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக ரூ.20 லட்சம் அளவுக்கு விற்பனை நடைபெற்ற போதிலும், வரத்தும், விற்பனையும் அதிகரித்திருந்தும் விலை குறைந்தது விவசாயிகளுக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.1
- சேலம் மாநகரக் காவல் துறையின் 'சிங்கப்பெண்' சிறப்பு அதிரடிப் படையினர், பெத்தாம்பட்டி வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்வின்போது, பெண்கள் பாதுகாப்பு குறித்த முக்கிய அம்சங்கள் குறித்து மாணவிகளுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், அவசரகால உதவி எண்களான 181, 1098 மற்றும் 1930 ஆகியவற்றின் அவசியம் மற்றும் அவற்றைப் பயன்படுத்தும் முறைகள் குறித்தும் மாணவிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.1
- திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகராட்சி 35-வது வார்டில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு விழா நடைபெற்றது. 2026 ஜூன் 22 அன்று காலை 11 மணியளவில் தவெக நிர்வாகி சோனியா டேனியல் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அன்னதானமும் 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. இந்த விழாவில் மாவட்ட பொருளாளர் அருண், நகரச் செயலாளர் விமல், திருப்பத்தூர் நகர செயற்குழு உறுப்பினர் சிவா, மற்றும் த.வெ.க. நிர்வாகி டி.டி. குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர். இவர்கள் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியதுடன், 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவசமாகப் புடவைகளையும் வழங்கி சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள் மற்றும் பெண்கள் நலத்திட்ட உதவிகளைப் பெற்றுக்கொண்டு, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.3
- தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள சித்திரைப்பட்டி கிராமத்தில் இன்று தர்மராஜன் சுவாமி மற்றும் திரெளபதி அம்மன் கோயில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்தத் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நாளான இன்று அதிகாலை முதலே தர்மராஜா, திரெளபதி அம்மன், பீமன், அர்ஜூனன், நகுலன், சகாதேவன் ஆகிய மூர்த்திகளுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சித்திரைப்பட்டி கிராம மக்கள் ஒன்றிணைந்து கொண்டாடிய இத்திருவிழாவில், ஒரு அடிக்கு ஒரு தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினால் மழை பொழிந்து, விவசாயம் செழித்து, நோய் நொடி இன்றி வாழ தெய்வம் அருள் புரியும் என்பது ஐதீகமாகப் பின்பற்றப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மேள தாளங்கள் முழங்க, வாண வேடிக்கைகளுடன் சுவாமிகளின் வீதி உலா நடைபெற்றது. தர்மராஜா கோயில் தொடங்கி கடை வீதி, பேருந்து நிலையம், தக்காளி மார்க்கெட், பைபாஸ் சாலை வழியாக ஊர்வலமாகச் சென்று, திரெளபதி அம்மன் கோயிலை அடைந்தது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, ஒரு அடிக்கு ஒரு தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டன. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தர்மகர்த்தா, ஊர் கவுண்டர்கள், மந்திரி கவுண்டர்கள், நாட்டு கவுண்டர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் சிறப்பாகச் செய்திருந்தனர்.1
- பர்கூர் அருகே உள்ள கந்திகுப்பத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாள் விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு, கிழக்கு மாவட்ட செயலாளர் முரளிதரன் 2500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும், பொதுமக்களுக்குச் சேலைகளும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கும் வகையில் மரக்கன்றுகளும் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் விநியோகிக்கப்பட்டன.1