ஒட்டன்சத்திரம் அருகே காட்டு யானைகள் தென்னந் தோப்பை அழித்து அட்டூழியம் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தாசிரிபட்டியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஈரோட்டை சேர்ந்த தொழில் அதிபர் வஜ்ரவேல் மனைவி தேவசேனா பெயரில் 80 ஏக்கர் அளவில் தென்னந்தோப்பு உள்ளது. கடந்த ஐந்து நாட்களாக மூன்று யானை 2 குட்டிகளுடன் வந்து தொடர்ந்து தென்னை மரங்களை சேதப்படுத்தி வந்தது.இந்நிலையில் நேற்று (திங்கட்கிழமை) அதிகாலையில் அதே யானைகள் வந்து 25 தென்னை மரங்களை சேதப்படுத்தி கொண்டிருந்தது இதைத் தோட்டத்தில் பணியாற்றும் கூலித் தொழிலாளர்கள் பார்த்து சத்தம் போடவே யானைகள் அங்கிருந்து மலைப் பகுதிக்கு சென்று விட்டது. இந்தத் தோட்டத்தில் கடந்த ஐந்து நாட்களாக 115 தென்னை மரங்களை சேதப்படுத்தி உள்ளது. சம்பவ இடத்திற்கு ஒட்டன்சத்திரம் வனச்சரக அலுவலர் ராஜா தலைமையில் வனத்துறையினர் விரைந்து சென்று சேதங்களை பார்வையற்றனர். ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்கள் மற்றும் அடிவார பகுதியில் உள்ள மலை கிராமங்களில் விவசாயத் தோட்டங்களில் யானைகள் அடிக்கடி கூட்டமாக வந்து தென்னை மரம் மற்றும் மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்திவிட்டு செல்வது வழக்கமாகக் கொண்டுள்ளது. இந்த யானைகளால் விவசாயிகள் பெரும் அச்சமடைந்து விவசாயத் தோட்டத்திற்கு செல்வதற்கே பயந்து வருகிறார்கள். திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் உடன் தலையிட்டு காட்டு யானைகளை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம் அருகே காட்டு யானைகள் தென்னந் தோப்பை அழித்து அட்டூழியம் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தாசிரிபட்டியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஈரோட்டை சேர்ந்த தொழில் அதிபர் வஜ்ரவேல் மனைவி தேவசேனா பெயரில் 80 ஏக்கர் அளவில் தென்னந்தோப்பு உள்ளது. கடந்த ஐந்து நாட்களாக மூன்று யானை 2 குட்டிகளுடன் வந்து தொடர்ந்து தென்னை மரங்களை சேதப்படுத்தி வந்தது.இந்நிலையில் நேற்று (திங்கட்கிழமை) அதிகாலையில் அதே யானைகள்
வந்து 25 தென்னை மரங்களை சேதப்படுத்தி கொண்டிருந்தது இதைத் தோட்டத்தில் பணியாற்றும் கூலித் தொழிலாளர்கள் பார்த்து சத்தம் போடவே யானைகள் அங்கிருந்து மலைப் பகுதிக்கு சென்று விட்டது. இந்தத் தோட்டத்தில் கடந்த ஐந்து நாட்களாக 115 தென்னை மரங்களை சேதப்படுத்தி உள்ளது. சம்பவ இடத்திற்கு ஒட்டன்சத்திரம் வனச்சரக அலுவலர் ராஜா தலைமையில் வனத்துறையினர் விரைந்து சென்று சேதங்களை பார்வையற்றனர். ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்கள் மற்றும்
அடிவார பகுதியில் உள்ள மலை கிராமங்களில் விவசாயத் தோட்டங்களில் யானைகள் அடிக்கடி கூட்டமாக வந்து தென்னை மரம் மற்றும் மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்திவிட்டு செல்வது வழக்கமாகக் கொண்டுள்ளது. இந்த யானைகளால் விவசாயிகள் பெரும் அச்சமடைந்து விவசாயத் தோட்டத்திற்கு செல்வதற்கே பயந்து வருகிறார்கள். திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் உடன் தலையிட்டு காட்டு யானைகளை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சித்தரேவு ஊராட்சி 5-வது வார்டு பகுதியில் செயல்படும் பால்வாடி அருகில் உள்ள செப்டிக் டேங்க் மேற்பகுதி திறந்த நிலையில் இருந்ததால் குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் நிலை இருந்ததை கருத்தில் கொண்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்ததின் பேரில் ஊராட்சி பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி திறந்து கிடந்த செப்டிக் டேங்க் மேல் புரத்தை பட்டிய கற்களால் உடனடியாக மூடினர். ஊராட்சி நிர்வாகத்தின் உடனடி நடவடிக்கையால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.1
- வேடசந்தூர் திண்டுக்கல் டு கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கல்வார்பட்டி சோதனை சாவடி அருகில் இரவு சரக்கு வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து யூடேன்னில் இருந்து சுமார் 100 அடிக்கு சாலையின் நடுவே தடுப்பிற்காக வைக்கப்பட்ட அலுமினிய தகடுகளை சேதப்படுத்தி நின்றது விபத்து சம்பந்தமாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்1
- ஆண்டிபட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த காளியம்மன் கோவில் பங்குனித் திருவிழா சிங்கமுக வாகனத்தில் எழுந்தருளி இரவு முழுவதும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த காளியம்மனுக்கு 10அடி உயர மாலை சாத்தி வீதிகள் தோறும் நீண்ட நேரம் காத்திருந்து சாமி சரிசனம் செய்த பக்தர்கள் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது நூற்றாண்டு பழமையான காளியம்மன் கோவில் நகரில் உருவான முதல் கோவிலாக விளங்கிவரும் இந்த காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் 4ம் நாள் நிகழ்ச்சியான இன்று காளியம்மன் சிங்கமுக வாகனத்தில் எழுந்தருளி நவரத்தன நகை மாலை அணிந்து அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த நிலையில் காளியம்மனுக்கு தேனி மதுரை தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள கடைகள் தோறும் 10அடி உயர மாலை அணிவித்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் இரவு முழுவதும் ஆண்டிபட்டி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்த காளியம்மனுக்கு வீதிகள் தோறும் தூங்காமல் இரவு முழுவதும் நீண்ட நேரமாக காத்திருந்து தங்களது வீடுகளுக்கு முன்பு மாலைகள் பூ பழம் பூஜை பொருள்களுடன் அம்மனுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.பின்னர் இரவு முழுவதும் ஆண்டிபட்டி நகரில் முக்கிய வீதிகளில் வலம் வந்த காளியம்மன் அதிகாலையில் மீண்டும் கோவிலை வந்து அடைந்தார். .1
- திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் இந்திய ஜனநாயக புலிகள் அமைப்பின் தலைவரும் நடிகருமான மன்சூர் அலிகான் சுயேச்சையாக போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை லால்குடி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீதரிடம் தாக்கல் செய்தார். இதன் மூலம் அவர் லால்குடி தொகுதியில் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். இந்த நிகழ்வில் இப்பகுதியை சேர்ந்த ஏராளமான ஜனநாயக புலிகள் அமைப்பின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.1
- மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா அவர்கள் தனது தொகுதியின் தலைமை தேர்தல் பணிமனையை இன்று (மார்ச் .30) மாலை திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் திறந்து வைத்து பேசினார். இந்நிகழ்வில் கூட்டணி கட்சி முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். வரும் ஏப்ரல் 4ம்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் அன்றே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருப்பதாகவும் கூறினார்.1
- மதுரை: திமுக ஐடி விங் இணையதளத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளது. அந்த வீடியோவின் கீழ் வெயிலில் மண்டை சூடாகி விட்டது போல்... என்ற வாசகம் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐடி விங் இணையதளத்தில் இருந்து பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பதிவேற்றம் செய்துள்ள இந்த வீடியோவிற்கு கீழே வெயிலில் மண்டை சூடாகி விட்டது போல்... என்ற வாசகம் பதிவிடப்பட்டுள்ளது. அதை அப்படியே வாசகர்களுக்கு ஒரு செய்தியாளர் என்ற அடிப்படையில் தந்துள்ளேன். கூடுதல் விவரங்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐடி விங் முகநூல் பக்கத்தில் காணலாம்.1
- *ஆண்டிப்பட்டி மற்றும் கம்பம் தொகுதி திமுக வேட்பாளருக்கு ஆண்டிப்பட்டியில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து, கிரேன் வாகனம் மூலம் ராட்சத மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு* தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினராக உள்ள மகாராஜன் தொடர்ந்து ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கும், கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமகிருஷ்ணன் கம்பம் சட்டமன்ற தொகுதிக்கும் மீண்டும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னையில் இருந்து சொந்த மாவட்டத்திற்கு வருகை புரிந்த இருவருக்கும் ஆண்டிபட்டி நகரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர் பட்டாசு வெடித்தும் மலர் தூவியும் வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் கொண்டமநாயக்கன்பட்டி பகுதியில் கிரேன் வாகனம் மூலம் ராட்சத மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டது தொடர்ந்து ஆண்டிப்பட்டி பேருந்து நிலையம் முன்பு கலர் பலூன்களை கட்டி வேட்பாளர்களிடம் தொண்டர்கள் ஆர்வமாக கொடுக்க அதனை வாங்கிய வேட்பாளர்கள் மேலே பறக்க விட்டனர் இதையடுத்து தொண்டர்கள் உற்சாகமாக கோஷம் எழுப்ப உற்சாக வெள்ளத்தில் ஆண்டிப்பட்டி நகர் பகுதி முழுவதும் வேட்பாளர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.1
- போடிநாயக்கனூர் ஜக்கமநாயக்கன்பட்டி அருகே உள்ள காளியம்மன் கோவில் திருவிழா. 300, மேற்பட்ட பெண்கள் பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஜக்கம்மா நாயக்கன்பட்டி திருமலாபுரம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது அருள்மிகு காளியம்மன் கோவில். இங்கு இன்று பங்குனி மாத உற்சவத்தை முன்னிட்டு செண்டை மேளம் முழங்க,சிலம்பாட்டம், கோலாட்டம், ஆட்டம் பாட்டத்துடன் சுமார் 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் சுமந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் ஊர்வலமாக நடந்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த பால் குடங்களை கொண்டு காளியம்மன் கோவிலில் உள்ள மூலவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.1