சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், பில்கேட்ஸ் அளித்த ஒரு பதில் அனைவரையும் ஆச்சரியத்திலும் எதிர்பாராத பதிலாகவும் அமைந்தது. செய்தியாளர்கள் அவரிடம், "மண்ணையும் விண்ணையும் ஆராய்ச்சி செய்கிற மனிதன் வருங்காலத்தில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற கருத்து பரவலாக நிலவுகிறது. அது பற்றி உங்களுடைய கருத்து என்ன?" என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பில்கேட்ஸ், செயற்கை நுண்ணறிவு வந்த பின்பு, அவைகளின் செயல்பாடுகள் பற்றி ஆராய்ச்சி செய்யக்கூடிய மனிதன் கூட இனி பல தரப்பட்ட வேலைகளுக்கு தேவைப்படாத சூழ்நிலை ஏற்படும் என்றும், "ஆகவே நாம் இதைப் பற்றி சிந்திக்க வேண்டும்" என்றும் கூறினார். குறிப்பாக, அவர் தனது பதிலில் பயன்படுத்திய "நாம்" என்ற வார்த்தை பல கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்த 'நாம்' என்றால் யார், அவர் யாரைக் குறிப்பிடுகிறார் என்ற விவாதம் உருவாகியுள்ளது. தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களையா, அல்லது அந்த நிறுவனங்களின் நிறுவனர்களையா, அல்லது அதில் பணிபுரியும் ஊழியர்களையா என்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும், இந்தக் கேள்வியில் நாடுகள் கூட அடங்கும் என்பதும் செய்தியாளர்களின் கேள்வியாக இருக்கிறது. இந்த "நாம்" என்ற வார்த்தை எழுப்பியுள்ள பல கேள்விகளுக்கு வரும் காலங்கள் பதில் சொல்லும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், பில்கேட்ஸின் பதில் ஒரு கேள்வியாகவே மாறியுள்ளது. மனித இனம் அழிந்து போவதற்கு முன் இதற்கு பதில் நமக்கு கிடைக்கும் என்பது தங்கள் எண்ணமாகவும் கருத்தாகவும் இருப்பதாக செய்தியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

- ஒருவருக்குக் கேட்கப்படாமல் உதவி செய்யப்படும்போது, அந்த உதவியின் உண்மையான மதிப்பும் அதன் முக்கியத்துவமும் அவருக்குத் தெரியாமல் போய்விடும்.1
- தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சன்னாசி (34) என்பவர், தனது மனைவி தனலட்சுமி மீது திருமண மோசடி புகார் அளித்துள்ளார். தனலட்சுமி தன்னை ஏமாற்றி, நகைகளை அபகரித்து, தற்போது வேறொருவருடன் நான்காவது திருமணம் செய்துகொண்டதாகவும், காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் சன்னாசி குற்றம்சாட்டியுள்ளார். ஓட்டுனராகப் பணிபுரியும் சன்னாசி, 2024 ஆம் ஆண்டு தேனி அம்மாபுரத்தைச் சேர்ந்த தனலட்சுமியை திருமணம் செய்துள்ளார். இருவரும் ஒன்றாக வசித்து வந்த சமயத்தில், சன்னாசி பணி நிமித்தமாக வெளியூர் சென்றபோது, தனலட்சுமி வீட்டில் இருந்த 6 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு தனது அம்மா வீட்டிற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் வீடு திரும்பிய சன்னாசி நகைகள் குறித்து கேட்டபோது, அவற்றை அடமானம் வைத்திருப்பதாகவும், மீட்டுத் தருவதாகவும் தனலட்சுமி கூறி காலம் தாழ்த்தி வந்துள்ளார். தனலட்சுமி வீட்டிற்கு வராமலும், நகைகளைத் திருப்பிக் கொடுக்காமலும், தனது மனைவியும் அவரது தாயாரும் தன்னை ஏமாற்றி வந்ததாகவும் சன்னாசி குறிப்பிட்டுள்ளார். நேரில் சென்று கேட்க முயன்றபோது, தனது மனைவி கோயம்புத்தூர் சென்றுவிட்டதாக அவரது தாயார் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். பின்னர் விசாரித்ததில், தனலட்சுமி கோயம்புத்தூரில் வேறு ஒரு நபரை திருமணம் செய்துகொண்டு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்ததாக சன்னாசி கூறியுள்ளார். தனக்கு முன்னால் தனலட்சுமி இரண்டு நபர்களை திருமணம் செய்து அவர்களிடமிருந்தும் நகைகளைப் பறித்து ஏமாற்றியுள்ளதாகவும், இப்போது தன்னிடமும் நகைகளை அபகரித்து கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒருவரை நான்காவது திருமணம் செய்துகொண்டு தன்னை ஏமாற்றியதாகவும் சன்னாசி புகார் தெரிவித்துள்ளார். தன்னைப்போல் வேறு யாரும் ஏமாறக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தேனி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், மோசடி செய்த தனது மனைவி மற்றும் அவரது தாயார் மீது உரிய நடவடிக்கை எடுத்து தனது நகைகளை மீட்டுத் தர வேண்டும் என்றும் சன்னாசி கோரிக்கை விடுத்துள்ளார்.1
- தேனி மாவட்டம் பெரியகுளம் செங்கரையில் அமைந்துள்ள 1500 ஆண்டு பழமையான அருள்மிகு பாலசுப்பிரமணியம் திருக்கோவிலில், இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு யாக பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் வெகு சிறப்பாக நடைபெற்றன. கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு, ஓம் என்ற வடிவத்தில் சங்குகள் அடுக்கி வைத்து சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர், வள்ளி, தெய்வானை மற்றும் முருகப்பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், குங்குமம், இளநீர், விபூதி, பேரிச்சம்பழம், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. யாகசாலையில் வைக்கப்பட்ட சங்குகளில் உள்ள தீர்த்தங்களைக் கொண்டு 108 சங்க அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, சுவாமிக்கு வண்ணப் பட்டுத் துணிகள் மற்றும் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனைகள் காட்டப்பட்டன. பெரியகுளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு "அரோகரா அரோகரா" எனக் கோஷங்களை எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பாகவும், பொதுமக்கள் சார்பாகவும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.1
- பழனியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, திருத்தேர் விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த முக்கிய நிகழ்வின் ஒரு பகுதியாக, அருள்மிகு பெரியநாயகி அம்மன் கோயிலின் தேரோட்டமும் இன்று சிறப்பாக இடம்பெற்றது. திருத்தேர் விழா நடைபெற்றபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.1
- திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகாவில் உள்ள சித்தரேவு ஊராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பிற பகுதிகளிலும் தற்போது கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.1
- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலூகா பகுதியில் கடும் வெயிலின் காரணமாக அதிக வெப்பம் நிலவி வந்த நிலையில், தற்போது சித்தரேவு ஊராட்சி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்துள்ளது. இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவுகிறது. மேலும், விவசாயத்திற்கு மிகவும் ஏற்ற மழையாக இது அமைந்திருப்பதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.1
- ரெட்டியார்சத்திரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்தத் தொடர் கனமழையால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.1
- பெரியகுளத்தில் உள்ள அருள்மிகு பாலசுப்ரமணியர் கோவிலில் வைகாசி விசாக திருநாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கோவில் வளாகத்தில் ஒரு யாகசாலை அமைக்கப்பட்டு, 'ஓம்' என்ற வடிவத்தில் 108 சங்குகள் அடுக்கப்பட்டு சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த பூஜைகளைத் தொடர்ந்து தீபாராதனைகள் நடைபெற்றன.1