Shuru
Apke Nagar Ki App…
திருவண்ணாமலை செய்யாறு பகுதியிலுள்ள காழியூர் பெரிய ஏரியில், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பாரம்பரிய மீன்பிடித் திருவிழா மிக உற்சாகமாக நடைபெற்றது. நமது கிராமத்து பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் நடைபெற்ற இந்த திருவிழாவில், ஏரியில் ஜிலேபி, கெண்டை மற்றும் விரால் போன்ற மீன்கள் அதிக அளவில் குவிந்தன. இதனால் காழியூர் கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் இந்த விழாவில் பங்கேற்று மீன்களைப் பிடித்து மகிழ்ந்தனர்.
David
திருவண்ணாமலை செய்யாறு பகுதியிலுள்ள காழியூர் பெரிய ஏரியில், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பாரம்பரிய மீன்பிடித் திருவிழா மிக உற்சாகமாக நடைபெற்றது. நமது கிராமத்து பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் நடைபெற்ற இந்த திருவிழாவில், ஏரியில் ஜிலேபி, கெண்டை மற்றும் விரால் போன்ற மீன்கள் அதிக அளவில் குவிந்தன. இதனால் காழியூர் கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் இந்த விழாவில் பங்கேற்று மீன்களைப் பிடித்து மகிழ்ந்தனர்.
More news from Tamil Nadu and nearby areas
- சேலம் அம்மாபேட்டை அடுத்த உரையாப்பட்டி பகுதியில் இருந்து சீலநாயக்கன்பட்டி செல்லும் புறவழிச் சாலையில் உள்ள குமரகிரி மலை ஒட்டிய பகுதி கிராம மக்கள், அடிக்கடி ஏற்படும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைத் தடுக்க அங்கு மேம்பாலம் அமைக்கக் கோரி இன்று காலை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பகுதியில் சாலை கடக்கும் போது தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால் மேம்பாலம் கட்டக் கோரி பொதுமக்கள் பலமுறை அரசிடம் வலியுறுத்தியும், போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை எடுக்கப்படாததால், பொறுமையிழந்த அப்பகுதி ஆண்கள் மற்றும் பெண்கள் சேலம் - சென்னை புறவழிச்சாலையின் நடுவே அமர்ந்து தங்களுக்கு உடனடியாக மேம்பாலம் கட்டித் தர வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். இந்த சாலை மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்மாபேட்டை போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இக்கோரிக்கை குறித்து அரசுக்குத் தெரிவித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பிரதான சாலை என்பதால் இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசலும் பாதிப்பும் ஏற்பட்டது.1
- திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சி சோலையூர் பகுதியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ செல்வவிநாயகர், ஸ்ரீ கெங்கையம்மன், ஸ்ரீ மாரியம்மன் மற்றும் நவகிரக மூர்த்திகள் ஆலய அஷ்டபந்த மஹா கும்பாபிஷேக விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவின் போது காலையில் சுவாமிக்கு மகா அஷ்டபந்த ஹோமம் மற்றும் திருமாங்கல்யதாரணம் ஆகிய வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த ஆன்மீக வழிபாட்டு நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் நேரில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து, கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பான அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.1
- தமிழகத்தில் அரசியல் கட்சி நிர்வாகிகள் யாரும் அரசுப் பள்ளிகளுக்குள் நுழைந்து ஆய்வு செய்யக்கூடாது என்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜமோகனின் கடுமையான உத்தரவை மீறி, திருவிடைமருதூர் அருகே தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் அரசுப் பள்ளிக்குள் புகுந்து ஆய்வு நடத்தியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள திருமலைராஜபுரம் ஊராட்சி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் இச்சம்பவம் நடந்துள்ளது. இப்பள்ளியில் உள்ள கழிவறைகள் பழுதடைந்து, மாணவர்கள் பயன்படுத்த முடியாத அவல நிலையில் இருப்பது குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானது. இதையடுத்து, தமிழக வெற்றிக்கழகத்தின் திருவிடைமருதூர் மத்திய கிழக்கு ஒன்றிய செயலாளர் ரத்னவேல் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் அங்கு நேரில் சென்று பழுதடைந்த கழிவறைகளை ஆய்வு செய்தனர். மேலும், திருவிடைமருதூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலரை (BDO) உடனடியாக பள்ளிக்கு வரவழைத்து, கழிவறைகளை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என உத்தரவு போடும் பாணியில் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். அரசுப் பள்ளிக்குள் நுழைந்து ஆய்வு நடத்தியது மட்டுமின்றி, தாங்கள் ஆய்வு செய்த புகைப்படங்களை தவெக நிர்வாகிகள் தங்களது வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிர்ந்துள்ளனர். அமைச்சரின் தடையையும் மீறி தவெக நிர்வாகிகள் அரசுப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட இச்சம்பவம், அரசுத்துறை அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1
- தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் குளத்தை தூர்வார வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அத்துடன், அங்கு வளர்ந்துள்ள வேலிக் கருவை மரங்களை வெட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.1
- சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள தனியார் கூடத்தில், ஆதித்தமிழர் பேரவையின் சேலம் மத்திய மாவட்ட செயலாளரும் மாநில துணைப் பொதுச் செயலாளருமான ஏ.டி.ஆர். சந்திரன் தலைமையில் சேலம் மாவட்ட ஆதித்தமிழர் பேரவை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனத் தலைவர் அதியமான் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் அருந்ததியர் மக்களின் வாழ்க்கை தரம், பொருளாதாரம், முன்னேற்றம் மற்றும் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு ஆகியவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதில் மாநகர மாவட்ட நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர். கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அதியமான், சாதிவாரி கணக்கெடுப்பின்போது ஆதிதிராவிடர் என ஒட்டுமொத்தமாகக் குறிப்பிடாமல், தனிப்பட்ட முறையில் அருந்ததியர் என தனியாகக் கணக்கீடு செய்ய வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். தற்சமயம் ஆதிதிராவிடர் என்பது தனிப்பட்ட ஒரு சாதியை மட்டுமே குறிப்பதால் தங்களுக்குரிய இட ஒதுக்கீடு அனைத்தும் பறிபோகிறது என்று விளக்கிய அவர், எனவே பொதுவாகக் குறிப்பிடாமல் அருந்ததியர் என தனியாகக் குறித்துக் கொண்டு கணக்கெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.1
- சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள ஒதியத்தூர் ஊராட்சியில், இரண்டாவது நாளாக ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுப்பதற்காக, பகல் மற்றும் இரவு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புப் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையில், சிலைகள் மூடப்பட்டிருந்த இடத்தை ஆத்தூர் கோட்டாட்சியர் தமிழ்மணி தலைமையில் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏதும் ஏற்படாமல் தடுக்கவே இந்த பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.1