Shuru
Apke Nagar Ki App…
கடலூர் மாவட்டத்தில் இன்று எந்தெந்த இடங்களில் எவ்வளவு மிமீ மழை பதிவு கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக நேற்று மழை பெய்தது. அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 27) காலை 8.30 மணி நிலவரப்படி பண்ருட்டியில் 4 மில்லி மீட்டர், வானமாதேவி 3 மில்லி மீட்டர், கடலூர் ஆட்சியர் அலுவலகம் 0.40 மில்லி மீட்டர், கடலூர் 0.20 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 7.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
Kalai
கடலூர் மாவட்டத்தில் இன்று எந்தெந்த இடங்களில் எவ்வளவு மிமீ மழை பதிவு கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக நேற்று மழை பெய்தது. அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 27) காலை 8.30 மணி நிலவரப்படி பண்ருட்டியில் 4 மில்லி மீட்டர், வானமாதேவி 3 மில்லி மீட்டர், கடலூர் ஆட்சியர் அலுவலகம் 0.40 மில்லி மீட்டர், கடலூர் 0.20 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 7.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
More news from தமிழ்நாடு and nearby areas
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்1
- காணாமல் போன மலைகள் குறித்து அமைச்சர் பேச்சு. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் என குறிப்பிட்டது மக்களிடையே அதிர்ச்சி காணாமல் போன மலைகள்” ,மலை வளங்கள் அழிக்கப்பட்டு வருவது குறித்து அமைச்சர் புகைப்படங்களுடன் கூடிய ஆதாரங்களை சுட்டிக்காட்டி விளக்கமாகப் பேசினார். அப்போது, மலைகள் மற்றும் இயற்கை வளங்கள் தொடர்பான புகைப்படங்களை சட்டசபையில் காண்பித்து, அவற்றின் தற்போதைய நிலை குறித்தும் அமைச்சர் எடுத்துரைத்தது சமூக வலைத்தளங்களில் பரவியது . இதில், #திருப்பத்தூர் மாவட்டம் – #ஆம்பூர் எனக் குறிப்பிட்டு அமைச்சர் பேசியது திருப்பத்தூர் மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம்பூர் பகுதியில் மலை வளங்கள் மற்றும் இயற்கைச் சூழல் தொடர்பாக அமைச்சர் குறிப்பிட்டுள்ள தகவல்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் தற்போது கவனம் ஏற்பட்டுள்ளது. அமைச்சர் குறிப்பிட்ட புகைப்படங்கள் மற்றும் அதன் பின்னணி குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.1
- கறம்பக்குடியில் கடும் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்ட 108 ஆம்புலன்ஸ் *புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் கடும் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்ட 108 ஆம்புலன்ஸ் அவசர தேவைக்கு செல்ல முடியாத சூழ்நிலை கூடுதல் காவலர்கள் மற்றும் போக்குவரத்து காவல்துறையை நியமிக்க கோரி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை* புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் சுப முகூர்த்த தினங்கள் மற்றும் கோயில் விசேஷ நாட்களில் அதிகளவில் பொதுமக்கள் கூடுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் 108 ஆம்புலன்ஸ் வாகனமும் சிக்கியது. இதனால் அவசர தேவைக்காக செல்ல வேண்டிய ஆம்புலன்ஸ் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கறம்பக்குடியில் போக்குவரத்து காவலர்கள் மற்றும் காவல்துறையினர் போதிய அளவில் பணியில் இல்லாததே போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணம் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே கறம்பக்குடி காவல் நிலையத்திற்கு கூடுதல் காவலர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து காவலர்களை நியமிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- நேபாளில் வெள்ளம் கோரத்தாண்டவம்..... சோகம் நிறைந்த மக்கள்....1
- லட்சுமிபுரம் பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் வேண்டுகோள் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியது திருப்பத்தூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் தமிழக அரசால் கிடப்பில் வைத்துள்ள தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டம் நிறைவேற்ற வேண்டும். வெலக்கல்நாத்தம் ஊராட்சி லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட குடும்பம் வசித்து வருகிறது அவர்களுக்கு நிரந்தர பட்டா வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்களை அப்புறப்படுத்த கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்திற்கு அரசு மருத்துவக் கல்லூரி வேண்டும் அதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் பரந்தூர் விமான நிலையத்தை கைவிடப்பட்டதற்கு அரசை வரவேற்கிறேன் என கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெரிவித்துள்ளார். ஆசிரியர் தேர்வில் நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும். நமது மாநிலத்தின் கடை கோடி பணியாளரான தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும் தற்காலிக பணியாளர்களை நிரந்தர பணியாளராக பணியமர்த்த வேண்டும். வேளாண் பயிர் கடன்களை 100% தள்ளுபடி செய்ய முதலமைச்சர் அரசாணை வெளியிட வேண்டும் தமிழக வெற்றி கழக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும். தமிழக வெற்றி கழக அரசு ஆட்சி அமைப்பதை வெளியில் இருந்து ஆதரிக்கிறோம். ஆனால் கூட்டணி வைக்க மாட்டோம். மேலும் விலைவாசி உயர்வு, போக்குவரத்து கட்டணம் உயர்வு பால் விலை உயர்வு போன்றவற்றிற்கு எதிர்ப்பு குரலாய் நிற்போம் என அவர் செய்தியாளர்கள் மூலம் தெரிவித்துள்ளார் இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் நந்தி மாவட்ட பொருளாளர் வேணுகோபால் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் முல்லை மாநில நிர்வாக குழு உறுப்பினர் லெனின் ஆகியோர் உடன் இருந்தனர்1
- திருவொற்றியூர் பட்டினத்தார் கோவிலில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திடீர் தரிசனம்! சென்னை, ஆக.27:- திருவொற்றியூர் திருத்தலங்களில் ஒன்றான பட்டினத்தார் திருக்கோவிலில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திடீர் தரிசனம் மேற்கொண்டார். திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி திருக்கோவிலுக்கு அவர் அவ்வப்போது வருகை தந்து தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் பட்டினத்தார் திருக்கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தது ஆன்மீக பக்தர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்1
- கறம்பக்குடி அருகே வெள்ளாள கொல்லை வடுவச்சியம்மன் கோயில் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுப்பு விழா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வெள்ளாளகொல்லை ஸ்ரீ.வடுவச்சியம்மன் கோயில் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுப்பு விழா நடைபெற்றது இதில் திரளான பெண்கள் பங்கேற்று முளைப்பாரியை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா பிலாவிடுதி ஊராட்சி வெள்ளாளகொல்லை கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த ஸ்ரீ.வடுவச்சியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு வள்ளுவர் திடலில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் பெண்கள் முளைப்பாரியை வைத்து நல்ல மழை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், உலக ஒற்றுமை வேண்டியும் சிறப்பு வழிபாடு செய்து செண்டை மேளங்கள் முழங்க, குதிரை நடனத்துடன் பெண்கள் திரளானோர் பங்கேற்று முளைப்பாரியை தலையில் சுமந்தவாறு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இந்நிகழ்ச்சியில் கருப்பர் மற்றும் முத்துமாரியம்மன் வேடம் அணிந்து நடனமாடிய நிகழ்வு பொதுமக்களையும், விழாவைக் காண வந்தவர்களையும் வெகுவாக கவர்ந்தது.1
- Cinema cinema cinema cinema cinema cinema cinema cinema1