Shuru
Apke Nagar Ki App…
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே இன்று பிற்பகல் 1 மணியளவில், சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கனரக லாரி மீது பின்னால் வந்த ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்தவர்கள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரத்தில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் தொடர்ச்சியாக விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த விபத்து குறித்து ஆம்பூர் காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் தொடரும் கனரக வாகனங்களால் ஏற்படும் விபத்துகள், ஆம்பூர் போக்குவரத்து காவல்துறையின் செயல்பாடு குறித்து கேள்விகளை எழுப்புகின்றன.
Flower
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே இன்று பிற்பகல் 1 மணியளவில், சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கனரக லாரி மீது பின்னால் வந்த ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்தவர்கள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரத்தில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் தொடர்ச்சியாக விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த விபத்து குறித்து ஆம்பூர் காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் தொடரும் கனரக வாகனங்களால் ஏற்படும் விபத்துகள், ஆம்பூர் போக்குவரத்து காவல்துறையின் செயல்பாடு குறித்து கேள்விகளை எழுப்புகின்றன.
More news from தமிழ்நாடு and nearby areas
- திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி - ஆலங்காயம் சாலையில் உள்ள ஆலங்காயம் பெரிய ஏரியில் இருந்து, இன்று இரவு 8 மணியளவில் அரிய வகை பெண் ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக வெளியேறி வருகின்றன. ஏரிக் கரை பகுதியில் இருந்து வெளிவரும் இந்த ஆமைகள், சாலையில் செல்லும் வாகனங்களில் சிக்கிக் கொள்ளும் அபாயம் உள்ளதால், ஆலங்காயம் வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து அவற்றை பாதுகாக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகம் சார்பில் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை எதிரில் மாபெரும் சிலம்பாட்ட சாலை பேரணி நடைபெற்றது. 38 மாவட்டங்களில் நடைபெறவுள்ள இந்த சிலம்பாட்டப் பேரணியை மத்திய மாவட்ட தவெக செயலாளர் சுரேஷ் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தவெக நிர்வாகிகளான கோல்டன் சுரேஷ், தென்னரசு, வேலன், ஆனந்த், டாக்டர் ஐயப்பன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.1
- காரிமங்கலத்தில் இன்று எம்ஜிஆர் மன்ற நகர செயலாளர் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர் ராமச்சந்திரன் - இந்திராணி தம்பதியின் மகன் சேது ஹரிஹரன் மற்றும் சத்யபிரியா ஆகியோரின் திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் பாலக்கோடு தொகுதி எம்எல்ஏவுமான கேபி அன்பழகன் கலந்துகொண்டு மணமக்களுக்கு ஆசி வழங்கினார். மேலும், பாசறை மாவட்ட செயலாளர் டாக்டர் சந்திரமோகன், ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், கூட்டுறவு ஒன்றிய முன்னாள் தலைவர் பொன்னுவேல், மாணவர் அணி வக்கீல் பாரதி உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகளும் இந்த விழாவில் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.2
- தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு இரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாம் பாலக்கோடு தொகுதி பொறுப்பாளர் குமார் தலைமையில் நடத்தப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், முன்னால் சட்டமன்ற உறுப்பினர் மாதப்பன், நகர செயலாளர் விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக வெற்றி கழகம் மற்றும் தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இணைந்து நடத்திய இந்த முகாமிற்கு தருமபுரி மாவட்ட கழகச் செயலாளர் சிவன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள் இரத்த தானம் செய்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு தங்கள் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இரத்த தானம் செய்தவர்களுக்கு பழங்கள், ரொட்டி, ஊட்டச்சத்து சாறு மற்றும் முதலமைச்சரின் புகைப்படம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் வீரமணி, மூர்த்தி, மணி, தங்கராஜ், பச்சையப்பன், சக்திவேல், சிவா, சங்கர், ரஞ்சித், சஞ்சிவன், மகளிர் அணி நிர்வாகிகள் ஜோதி, இந்திரா, ஈஸ்வரி, கோவிந்தம்மாள், அத்துடன் சிலம்பு, குமார், தங்கராஜ், சேதுபதி, மணிகண்டன், சிவசண்முகம், சபரி, அரவிந்த், பிரகாஷ், நவாஸ் உள்ளிட்ட நகர, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.1
- தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள பூக்காரன் கொட்டாய் பகுதியில், வீட்டில் தனியாகத் தூங்கிக் கொண்டிருந்த 50 வயதுடைய லட்சுமி என்ற பெண் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரக் கொலை, இருவருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படும் இளைஞனைக் பென்னாகரம் காவல்துறையினர் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.1
- திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீ எல்லையம்மன் ஆலயத்தின் புனருத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா, பக்தர்களின் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி மங்கள இசை, திருவிளக்கு வழிபாடு, விக்னேஸ்வர பூஜை மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தங்கள் கோயில் கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டு, மகா தீபாராதனையுடன் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தேறியது. இந்த கும்பாபிஷேக விழாவில், மாடப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீ எல்லையம்மன் மற்றும் ஸ்ரீ செல்வ விநாயகரை தரிசித்தனர். மேலும், வருகை தந்த பக்தர்கள் அனைவருக்கும் ரத்த கணபதி வேலுச்சாமி அன்னதானம் வழங்கினார். ஆலய பூசாரிகள் சத்தியன் வெங்கடசாமி, ஊர் நாட்டாண்மை அகிரி ராஜா உள்ளிட்டோர் மற்றும் கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்ட இந்த மகா கும்பாபிஷேக விழா, பக்தர்களின் பக்தி பரவசத்துடன் ஆன்மிக எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.1
- திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே இன்று சாலையோரம் நின்றிருந்த லாரி மீது ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஆட்டோவில் பயணித்த 18 வயது சிறுவன் விமல் படுகாயமடைந்தார். உடனடியாக பொதுமக்கள் அந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் விமல் உயிரிழந்தார்.1