logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

இளம் பெண்களை வஞ்சிக்கும் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு இளம்பெண்களை வஞ்சிக்கும் அரசாணை எண் 258, நாள் 11.9.2026-ஐ திரும்பப் பெறுக! ​தமிழ்நாடு அரசு 11.9.2026 அன்று செவிலியர்கள் பணிக்கு ஆள் எடுப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி 4,724 செவிலியர்கள் நியமிக்கப்படுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்த 4,724 பணிகளும் ஒப்பந்தம் அல்லது தற்காலிகத் தன்மையுடையவை என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தாலும் அப்படி நியமனம் செய்யப்படுபவர்கள் மாநில நலவாழ்வுச் சங்கத்தின் ஊழியர்களாகக் கருதப்படுவார்களே தவிர அரசு ஊழியர்களாகக் கருதப்பட மாட்டார்கள் என்று அந்த அரசாணை தெரிவிக்கின்றது. எந்தக் காரணத்தை முன்னிட்டும் அவர்கள் நிரந்தரம் செய்யப்பட மாட்டார்கள் என்றும் இவர்களை நிரந்தரப்படுத்துவதற்கு எந்த அடிப்படையும் இல்லை என்றும் அந்த அரசாணை தெரிவிக்கிறது. இவர்களது மாத ஊதியம் ரூ.21,000/- ஆக இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ​தற்போதைய நிலையில் தமிழ்நாட்டில் தேவையோடு ஒப்பிட்டால் அரசு மருத்துவமனைகளில் நான்கு செவிலியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஒருவர் மட்டுமே பணியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதுவரை மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டு வந்த முறை மாற்றப்பட்டு முற்றிலும் தற்காலிகம், 11 மாதம் மட்டுமே பணி, அதிகபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிய முடியாது என இந்த அரசாணை தெரிவிக்கிறது. இது முற்றிலும் நியாயமற்றதும், மிகக் கடுமையான உழைப்புச் சுரண்டலும் ஆகும். ​தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் அறிக்கையில் “ஆசிரியர், செவிலியர் உள்ளிட்ட அரசுப் பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட தற்காலிகப் பணியாளர்கள் 5 வருட பணி அனுபவம் பெற்றதும் அவர்கள் நிரந்தரப் பணியாளர்களாக நியமனம் செய்யப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளது. ​இதேபோன்று, “அரசுத்துறைகளில் உள்ள அனைத்துக் காலிப் பணியிடங்களும் விரைந்து நிரப்பப்படும்” என்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை உத்தரவாதம் அளித்திருக்கிறது. ​இந்த நிலையில் அரசாங்கத்தின் இந்த முடிவு முற்றிலும் நியாயமற்றது. வேலையில்லாக் கால நிவாரணமாக மாதம் ரூ.4,000/- வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு வேலையில்லாச் செவிலியர்களுக்கு ஒப்பந்தப் பணிதான், நிரந்தரப்படுத்துவதற்கு வாய்ப்பே இல்லை என்று சொல்வது மிகப்பெரிய அநீதியாகும். ​தமிழ்நாட்டில் நான்கு லட்சத்திற்கும் அதிகமான செவிலியர்கள் பதிவு செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அதில் ஒரு சதவீதத்தினருக்கே இப்போது வேலைவாய்ப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களும் அத்தக்கூலிகளாக மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்பது படித்த இளைஞர்களை வஞ்சிப்பதாகும். அதிலும் குறிப்பாக 90 சதவீதத்திற்கும் அதிகமானோர்கள் இளம் பெண்கள் மட்டுமே. ​எனவே, அரசு 11.9.2026 அன்று வெளியிட்டுள்ள அரசாணையையும், அதன் தொடர்ச்சியாக வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு விளம்பரத்தையும் திரும்பப் பெற்று, 4,724 செவிலியர் பணியிடங்களையும் நிரந்தரப் பணிகளாக மாற்ற வேண்டும். இளம் பெண்களை வஞ்சிப்பதை உடனடியாக மாற்றத் தமிழ்நாடு முதலமைச்சரும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் நேரடியாகத் தலையிட வேண்டும்.

3 hrs ago
user_N-KIPSRA
N-KIPSRA
மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
3 hrs ago
0a352ac7-f481-432a-a4e0-6a03cb9314dc

இளம் பெண்களை வஞ்சிக்கும் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு இளம்பெண்களை வஞ்சிக்கும் அரசாணை எண் 258, நாள் 11.9.2026-ஐ திரும்பப் பெறுக! ​தமிழ்நாடு அரசு 11.9.2026 அன்று செவிலியர்கள் பணிக்கு ஆள் எடுப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி 4,724 செவிலியர்கள் நியமிக்கப்படுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்த 4,724 பணிகளும் ஒப்பந்தம் அல்லது தற்காலிகத் தன்மையுடையவை என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தாலும் அப்படி நியமனம் செய்யப்படுபவர்கள் மாநில நலவாழ்வுச் சங்கத்தின் ஊழியர்களாகக் கருதப்படுவார்களே தவிர அரசு ஊழியர்களாகக் கருதப்பட மாட்டார்கள் என்று அந்த அரசாணை தெரிவிக்கின்றது. எந்தக் காரணத்தை முன்னிட்டும் அவர்கள் நிரந்தரம் செய்யப்பட மாட்டார்கள் என்றும் இவர்களை நிரந்தரப்படுத்துவதற்கு எந்த அடிப்படையும் இல்லை என்றும் அந்த அரசாணை தெரிவிக்கிறது. இவர்களது மாத ஊதியம் ரூ.21,000/- ஆக இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ​தற்போதைய நிலையில் தமிழ்நாட்டில்

137065e2-210c-4c12-b681-c94c5d1b0567

தேவையோடு ஒப்பிட்டால் அரசு மருத்துவமனைகளில் நான்கு செவிலியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஒருவர் மட்டுமே பணியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதுவரை மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டு வந்த முறை மாற்றப்பட்டு முற்றிலும் தற்காலிகம், 11 மாதம் மட்டுமே பணி, அதிகபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிய முடியாது என இந்த அரசாணை தெரிவிக்கிறது. இது முற்றிலும் நியாயமற்றதும், மிகக் கடுமையான உழைப்புச் சுரண்டலும் ஆகும். ​தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் அறிக்கையில் “ஆசிரியர், செவிலியர் உள்ளிட்ட அரசுப் பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட தற்காலிகப் பணியாளர்கள் 5 வருட பணி அனுபவம் பெற்றதும் அவர்கள் நிரந்தரப் பணியாளர்களாக நியமனம் செய்யப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளது. ​இதேபோன்று, “அரசுத்துறைகளில் உள்ள அனைத்துக் காலிப் பணியிடங்களும் விரைந்து நிரப்பப்படும்” என்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை உத்தரவாதம் அளித்திருக்கிறது. ​இந்த

ba9d98d8-4aa5-48d3-8dcd-ca664894e54b

நிலையில் அரசாங்கத்தின் இந்த முடிவு முற்றிலும் நியாயமற்றது. வேலையில்லாக் கால நிவாரணமாக மாதம் ரூ.4,000/- வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு வேலையில்லாச் செவிலியர்களுக்கு ஒப்பந்தப் பணிதான், நிரந்தரப்படுத்துவதற்கு வாய்ப்பே இல்லை என்று சொல்வது மிகப்பெரிய அநீதியாகும். ​தமிழ்நாட்டில் நான்கு லட்சத்திற்கும் அதிகமான செவிலியர்கள் பதிவு செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அதில் ஒரு சதவீதத்தினருக்கே இப்போது வேலைவாய்ப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களும் அத்தக்கூலிகளாக மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்பது படித்த இளைஞர்களை வஞ்சிப்பதாகும். அதிலும் குறிப்பாக 90 சதவீதத்திற்கும் அதிகமானோர்கள் இளம் பெண்கள் மட்டுமே. ​எனவே, அரசு 11.9.2026 அன்று வெளியிட்டுள்ள அரசாணையையும், அதன் தொடர்ச்சியாக வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு விளம்பரத்தையும் திரும்பப் பெற்று, 4,724 செவிலியர் பணியிடங்களையும் நிரந்தரப் பணிகளாக மாற்ற வேண்டும். இளம் பெண்களை வஞ்சிப்பதை உடனடியாக மாற்றத் தமிழ்நாடு முதலமைச்சரும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் நேரடியாகத் தலையிட வேண்டும்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • மாணவர்களுடன் காலை உணவு அருந்திய விருதுநகர் மாவட்ட ஆட்சியர். விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா ஹரி இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.09.2026) திருவில்லிபுத்தூர் நகராட்சிக்குட்பட்ட திரு.வி.க. தொடக்கப்பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வரும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரம், சுகாதாரம் மற்றும் உணவு வழங்கப்படும் முறைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை அருந்தி, அவர்களுடன் கலந்துரையாடினார். மாணவர்களின் கல்வி, பள்ளியில் வழங்கப்படும் அடிப்படை வசதிகள் மற்றும் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார்.
    1
    மாணவர்களுடன் காலை உணவு அருந்திய விருதுநகர் மாவட்ட ஆட்சியர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா ஹரி இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.09.2026) திருவில்லிபுத்தூர் நகராட்சிக்குட்பட்ட திரு.வி.க. தொடக்கப்பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வரும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரம், சுகாதாரம் மற்றும் உணவு வழங்கப்படும் முறைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை அருந்தி, அவர்களுடன் கலந்துரையாடினார்.
மாணவர்களின் கல்வி, பள்ளியில் வழங்கப்படும் அடிப்படை வசதிகள் மற்றும் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார்.
    user_குமார்
    குமார்
    Local News Reporter காரியாபட்டி, விருதுநகர், தமிழ்நாடு•
    1 day ago
  • விநாயகர் சதுர்த்தி அன்று வலம் வந்த ஒற்றைக் காட்டு யானை (எஸ்டேட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு) திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே உள்ள சேம்பிலியூத்து என்ற மலை கிராமத்தில் உள்ள எஸ்டேட்டில் நேற்று விநாயகர் சதுர்த்தி அன்று வலம் வந்த ஒற்றைக் காட்டு யானை. (எஸ்டேட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு)
    1
    விநாயகர் சதுர்த்தி அன்று வலம் வந்த ஒற்றைக் காட்டு யானை (எஸ்டேட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு)
திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே உள்ள சேம்பிலியூத்து என்ற மலை கிராமத்தில் உள்ள எஸ்டேட்டில் நேற்று விநாயகர் சதுர்த்தி அன்று வலம் வந்த ஒற்றைக் காட்டு யானை. (எஸ்டேட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு)
    user_RAJA
    RAJA
    பத்திரிகையாளர் ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    12 hrs ago
  • தேவகோட்டையில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 118-ஆவது பிறந்தநாள் விழா , சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தியாகிகள் பூங்கா அருகில், 23-ஆவது வட்டக் கழகம் சார்பாக பேரறிஞர் அண்ணாவின் 118-ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நிகழ்வில், திமுக நிர்வாகியும் முன்னாள் கவுன்சிலருமான ஜாஹிர் உசேன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திமுக, திக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் அண்ணாவின் மலர் மாலை அணிவிக்கப்பட்ட புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அண்ணாவின் சிந்தனைகளைப் போற்றும் வகையில் அமைந்த இந்நிகழ்வு, கலந்துகொண்ட அனைவராலும் சிறப்பிக்கப்பட்டது.
    1
    தேவகோட்டையில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 118-ஆவது பிறந்தநாள் விழா , 
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தியாகிகள் பூங்கா அருகில், 23-ஆவது வட்டக் கழகம் சார்பாக பேரறிஞர் அண்ணாவின் 118-ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
நிகழ்வில், திமுக நிர்வாகியும் முன்னாள் கவுன்சிலருமான ஜாஹிர் உசேன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திமுக, திக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் அண்ணாவின் மலர் மாலை அணிவிக்கப்பட்ட புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அண்ணாவின் சிந்தனைகளைப் போற்றும் வகையில் அமைந்த இந்நிகழ்வு, கலந்துகொண்ட அனைவராலும் சிறப்பிக்கப்பட்டது.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    14 hrs ago
  • ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சயனர் புரட்டாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ வடபத்ரசயனர் திருக்கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது. மகாலட்சுமியின் அம்சமான ஸ்ரீ ஆண்டாள் மானிட பெண்ணாக அவதரித்து பாமாலை பாடி பின் பூமாலை சுற்றி ஸ்ரீரங்கநாதரை அடைந்தார் என்பது ஐதீகம்.ஆண்டாள் தினமும் தான் சூடி கலைந்த மாலையை ஸ்ரீரங்கநாதரின் அம்சமான ஸ்ரீ வடபத்ரசயனருக்குத்தான் சாற்றி வந்துள்ளார். இந்த வடபத்ர சயனருக்கான புரட்டாசி பிரமோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று துவங்கும் உற்சவம் 12 நாட்கள் நடைபெறும்.ஐந்தாம் திருநாள் தங்க கருட சேவையும், ஒன்பதாம் திருநாள்(23.09.26) செப்பு திருத்தேரோட்டமும் நடைபெற உள்ள நிலையில் தினந்தோறும் பூதேவி ஸ்ரீதேவி சமேத வடபத்ரசயனர் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பர். கொடியேற்ற நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.
    1
    ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சயனர் புரட்டாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ வடபத்ரசயனர் திருக்கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது. மகாலட்சுமியின் அம்சமான ஸ்ரீ ஆண்டாள் மானிட பெண்ணாக அவதரித்து பாமாலை பாடி பின் பூமாலை சுற்றி ஸ்ரீரங்கநாதரை அடைந்தார் என்பது ஐதீகம்.ஆண்டாள் தினமும் தான் சூடி கலைந்த மாலையை ஸ்ரீரங்கநாதரின் அம்சமான ஸ்ரீ வடபத்ரசயனருக்குத்தான் சாற்றி வந்துள்ளார். இந்த வடபத்ர சயனருக்கான புரட்டாசி பிரமோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. 
இன்று துவங்கும் உற்சவம் 12 நாட்கள் நடைபெறும்.ஐந்தாம் திருநாள் தங்க கருட சேவையும், ஒன்பதாம் திருநாள்(23.09.26) செப்பு திருத்தேரோட்டமும் நடைபெற உள்ள நிலையில் தினந்தோறும் பூதேவி ஸ்ரீதேவி சமேத வடபத்ரசயனர் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பர். கொடியேற்ற நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.
    user_Virudhunagar
    Virudhunagar
    Virudhunagar, Tamil Nadu•
    15 hrs ago
  • வருசநாடு அருகே உள்ள தங்கம்மாள்புரம் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் வழங்கவில்லை என குற்றம் சாட்டி அப்பகுதி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வருசநாடு சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட தங்கம்மாள்புரம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காலிகுடங்களுடன் வருசநாடு சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு சென்ற பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் இரண்டுபுறமும் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது கூட்டுகுடிநீர் திட்டத்திலிருந்து தங்கம்மாள்புரம் குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதற்கான மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு வரும் குடிநீரை புதிதாக கடைகள் வணிக நிறுவனங்களுக்கு இணைப்பு கொடுத்து முழுவதுமாக எடுத்து கொள்வதால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குடியிருப்புகளுக்கு குடிநீரே வழங்கப்படவில்லை என்றும் இதை கேட்டால் குடிநீர் எடுத்து விடும் குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்களும், ஊராட்சி பணியாளர்களும் அலட்சியமாக பதில் கூறுவதாகவும் குற்றம் சாட்டி தொடர்ச்சியாக மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த கடமலைக்குண்டு காவல்துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்றும் தெரிவித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர் குடிநீர் கேட்டு நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தால் கடமலைகுண்டு- வருசநாடு சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது
    1
    வருசநாடு அருகே உள்ள தங்கம்மாள்புரம் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் வழங்கவில்லை என குற்றம் சாட்டி அப்பகுதி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வருசநாடு சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட தங்கம்மாள்புரம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் 
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காலிகுடங்களுடன் வருசநாடு சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் 
இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு சென்ற பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் இரண்டுபுறமும் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது 
கூட்டுகுடிநீர் திட்டத்திலிருந்து தங்கம்மாள்புரம் குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதற்கான மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு வரும் குடிநீரை 
புதிதாக கடைகள் வணிக நிறுவனங்களுக்கு இணைப்பு கொடுத்து முழுவதுமாக எடுத்து கொள்வதால் 
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குடியிருப்புகளுக்கு குடிநீரே வழங்கப்படவில்லை என்றும் இதை கேட்டால் குடிநீர் எடுத்து விடும் குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்களும், ஊராட்சி பணியாளர்களும் அலட்சியமாக பதில் கூறுவதாகவும் குற்றம் சாட்டி 
தொடர்ச்சியாக மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் 
சம்பவ இடத்திற்கு வந்த கடமலைக்குண்டு காவல்துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்றும் தெரிவித்ததையடுத்து 
போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர் 
குடிநீர் கேட்டு நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தால் கடமலைகுண்டு- வருசநாடு சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    21 min ago
  • பொன்னமராவதியில் திமுக சார்பாக பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி திமுக கட்சி அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் பொன்னமராவதி திமுக நகரச் செயலாளர் அழகப்பன் தலைமையில் நடைபெற்ற விழாவில் தொடர்ந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டன. அதில் திராவிடர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    1
    பொன்னமராவதியில் திமுக சார்பாக பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி திமுக கட்சி அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் பொன்னமராவதி திமுக நகரச் செயலாளர் அழகப்பன் தலைமையில் நடைபெற்ற விழாவில் தொடர்ந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டன. அதில் திராவிடர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    user_Kavin
    Kavin
    பொன்னமராவதி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    21 hrs ago
  • *தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள தங்கம்மாள்புரம் பகுதியில் ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் வழங்கவில்லை என்று குற்றம் சாட்டி, பெண்கள் உள்ளிட்ட கிராமமக்கள் காலிகுடங்களுடன் வருசநாடு சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம்* தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட தங்கம்மாள்புரம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை என்றும், குடிநீர் கேட்டால் ஊராட்சி செயலர், குடிநீர் எடுத்துவிடும் நபர் உள்ளிட்டோர் அலட்சியமாக பதில் அளிப்பதாகவும் புதிதாக கடைகள் வணிக நிறுவனங்களுக்கு குடிநீர் இணைப்புகளை கொடுத்து மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு வரும் குடிநீரை அப்படியே கடைகள் வணிக நிறுவனங்களுக்கு வழங்குவதால் வீடுகளுக்கு குடிநீரே வருவதில்லை என்றும் குற்றம்சாட்டி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காலிகுடங்களுடன் வருசநாடு சாலையில் அமர்ந்து உடனடியாக குடிநீர் வழங்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடமலைகுண்டு - வருசநாடு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருப்பதால் இரண்டு புறமும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட பேருந்துகள் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
    1
    *தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள தங்கம்மாள்புரம் பகுதியில் ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் வழங்கவில்லை என்று குற்றம் சாட்டி, பெண்கள் உள்ளிட்ட கிராமமக்கள் காலிகுடங்களுடன் வருசநாடு சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம்*
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட தங்கம்மாள்புரம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக  முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை என்றும்,
குடிநீர் கேட்டால் ஊராட்சி செயலர், குடிநீர் எடுத்துவிடும் நபர் உள்ளிட்டோர் அலட்சியமாக பதில் அளிப்பதாகவும் புதிதாக கடைகள் வணிக நிறுவனங்களுக்கு குடிநீர் இணைப்புகளை கொடுத்து மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு வரும் குடிநீரை அப்படியே கடைகள் வணிக நிறுவனங்களுக்கு வழங்குவதால் 
வீடுகளுக்கு குடிநீரே வருவதில்லை என்றும் குற்றம்சாட்டி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காலிகுடங்களுடன் வருசநாடு சாலையில் அமர்ந்து உடனடியாக குடிநீர் வழங்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடமலைகுண்டு - வருசநாடு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருப்பதால் இரண்டு புறமும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட பேருந்துகள் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    55 min ago
  • தவெகாவின் நிலைப்பாடு பிடிக்காததன் காரணமாகவே இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை நிறுத்தி தனித்துப் போட்டியிடுகிறது- சிவகாசிகள் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேட்டி... தவெக ஆட்சிக்கு, கூட்டணி கட்சிகள் கொடுக்கின்ற முட்டுக்கட்டை நிலையானது அல்ல, எந்த நேரத்திலும் தவெக ஆட்சிக்கு பேராபத்து வரக்கூடிய சூழலில்தான் கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் விமர்சனம்... அறிஞர் அண்ணா அவர்களின் 118 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சிவகாசி காவல் நிலையம் எதிரே அமைந்துள்ள அவரது திருவுருவர் சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திர பாலாஜி, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக மக்கள் விரும்புகின்ற ஆட்சியாகவும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வேண்டும் என்பதுதான் மக்கள் மனதில் ஆழமாக இருக்கிறது இடையில் ஏற்பட்ட சில சருக்கல்கள், கருத்து திணிப்புகள், அரசியல் கோல்மால்கள், வாட்ஸாப், பேஸ்புக், இன்டஸ்ட்ராகிராம் போன்ற குழப்பங்க அண்ணா திமுக ளால் ஆட்சி மாற்றம் வந்துள்ளது தற்போது நடைபெறும் ஆட்சி மக்களால் விரும்பும் ஆட்சி கிடையாது நகைப்புக்குரிய ஆட்சியாக விஜய் ஆட்சி உள்ளது இடைத்தேர்தலில் அதிமுக முதன்மையான கட்சியாக வெற்றி பெறும், தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் லட்சக்கணக்கான வாக்குகள் பெற்று அதிக வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும் எடப்பாடியார் தலைமை தமிழகத்திற்கு வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு மக்கள் வாக்களிக்க தயாராகிவிட்டார்கள் தவெக ஆட்சிக்கு இடைத்தேர்தல் பாடம் புகட்டும் முதல்வரின் லண்டன் பயணம் குறித்து முதல்வர் சார்பில் வெளியிட்டுள்ள புகைப்படம் பேசுபொருளாக தமிழகத்தில் உலாவி வருகிறது, அதை தார்மீகமாக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, ஒரு நாட்டின் முதல்வர் எப்படி வாழ வேண்டும், எப்படி இருக்க வேண்டும், பிறருக்கு முன் உதாரணமாக வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு இருக்க வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள் ஆனால் அந்த நிலைப்பாட்டில் வாழக்கூடியவராக இன்றைய தமிழக முதல்வர் இருக்கவில்லை முதல்வரின் லண்டன் பயணத்தை சந்தேக கண்ணோடு தமிழக மக்கள் பார்க்கிறார்கள் வெளிநாட்டில் முதலீடை ஈர்க்க சென்றுள்ள முதல்வர், தொழில்துறை அமைச்சர் இல்லாமல் சென்றாலும் சம்பந்தப்பட்ட பணிகளை செய்து வெற்றிகரமாக திரும்பினால் சந்தோஷம் ஆனால் முதல்கட்டமாக ஊடகத்தில் வந்த செய்திகளை பார்க்கும்போது முதல்வர் வெளிநாடு சென்ற நோக்கமே வேறாக தெரிகிறது மக்கள், அரசியல் கட்சி தலைவர்களின் எதிர்ப்புகளை தொடர்ந்து சில பணிகளை செய்வதாக கேள்விப்படுகிறோம் மொத்தத்தில் முதல்வர் தடம் மாறி, தடம் புரண்டு நடவடிக்கையில் ஈடுப்பட்டுக்கொண்டிருப்பதாக தமிழக மக்கள் எண்ணுகிறார்கள், இதை முதல்வர் மாற்றிக்கொள்ள வேண்டும் தமிழக முதலமைச்சராக வந்த பின்னர், அனைத்து முதலமைச்சர்களும் முதல்வர்களுக்கான பண்போடும், தகுதியோடும், தன்மையோடு வாழ்ந்துகொண்டு தமிழகத்தை ஆண்டிருக்கிறார்கள் அதேபோல் விஜயும் முதல்வருக்கான பண்போடும், தகுதியோடும் தன்மையோடும் வாழ்ந்து ஆட்சி செய்ய வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள், ஆனால் அதற்கு எதிர்மறையான நிலைப்பாட்டோடு முதல்வர் விஜய்யின் ஆட்சியும் அவரது செயல்பாடும் இருக்கிறது முதல்வர் விஜய் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என தமிழக மக்கள் விரும்புகிறார்கள் தவெக ஆட்சி விளையாட்டுத்தனமான ஆட்சி காவல்துறையினர் மானிய கோரிக்கையின் போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் சார்பாக பல்வேறு கேள்விகளை முன் வைத்தபோது, எந்த கேள்விகளுக்கும் பதிலளிக்காத முதல்வர் விஜய் அவருக்கே தெரிந்த பாணியில் வசனத்தை பேசி பதில் உரையை முடித்து விட்டார் முதல்வர் விஜயின் பதிலுரை பார்ப்பதற்கு வேண்டுமானால் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும், சிரிப்பாகவும், ஜோக்காகவும் இருக்கலாமே தவிர நல்ல விவரம் தெரிந்த, அரசியல் தெரிந்தவர்கள் முதல்வர் விஜயின் பேச்சை எள்ளி நகையாடுகிறார்கள் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள், முன்னாள் ஆட்சியாளர்கள் கேட்ட ஒரு கேள்விக்கு கூட முதல்வர் விஜய் பதிலளிக்கவில்லை காவல்துறை உள்ளிட்ட சீருடை பணியாளர்களுக்கு எந்தவிதமான முன்னேற்ற அறிவிப்புகளும் காவல்துறை மானிய கோரிக்கையில் வரவில்லை இதை காவல்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை சங்கடத்துடன் வாழ்வதை காண முடிகிறது தமிழக மக்களுக்காக 24 மணி நேரமும் உழைக்கின்ற காவல் துறைக்கு எந்தவிதமான அறிவிப்புகளோ சலுகைகளோ வழங்கப்படாததை தமிழக மக்கள், காவல்துறையினரால் ஏற்றுக்கொள்ளவில்லை மொத்தத்தில் பிறரை ஏளனமாக பேசுவதற்கும், தமக்கு பிடிக்காதவர்களை எள்ளி நகையாடுவதற்கும் சட்டமன்றத்தை ஒரு கருவியாக முதல்வர் விஜய் பயன்படுத்திக்கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி ஆண்ட காலத்திலும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலத்திலும் சட்டமன்றத்தின் புனிதத் தன்மை காக்கப்பட்டது தற்போது சட்டமன்றத்தின் புனிதத் தன்மை குறைந்து பாலாகிவிட்டது, இந்த நிலை மாற வேண்டும் என்றால் முதல்வர் விஜய் தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் தவெக ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள், அதே நேரத்தில் தவெக ஆட்சிக்கு ஆதரவாக தேர்தல் களத்தில் பணி செய்ய விரும்பவில்லை தவெகாவின் நிலைப்பாடு பிடிக்காததன் காரணமாகவே இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை நிறுத்தி தனித்துப் போட்டியிடுகிறது ஆளுநர் ஆட்சி வந்துவிடக்கூடாது, மத்திய அரசின் மறைமுக ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காக மட்டுமே தவெகவிற்கு ஆதரவு கொடுத்தோமே தவிர தவெகாவின் தலைவரை பிடித்தோ, தவெகவின் கொள்கையை பிடித்தோ ஆதரவு கொடுக்கவில்லை என கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் சொல்லிவிட்டார்கள் தவெக ஆட்சிக்கு, கூட்டணி கட்சிகள் கொடுக்கின்ற முட்டுக்கட்டை நிலையானது அல்ல, எந்த நேரத்திலும் தவெக ஆட்சிக்கு பேராபத்து வரக்கூடிய சூழலில்தான் கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது நிலையான ஆட்சியமைக்கும் தன்மை முதல்வர் விஜய்கோ, தவெக கட்சிக்கோ கிடையாது ஆட்சி நிலைக்க முதல்வர் விஜய் தனது நிலைய மாற்றிக்கொள்ள வேண்டும் பிறரை பழி வாங்குவதற்கோ, பிறரை இகழ்ந்து, புகழ்ந்து பேசுவதற்கோ, தன்னை புகழ்ந்து பேசுவதற்கோ சட்டமன்றத்தை கருவியாக பயன்படுத்த நினைத்தால் தமிழக மக்கள் காலப்போக்கில் தூக்கி எறிந்து விடுவார்கள் இதற்கு ஆதரவு தர மாட்டார்கள் தமிழக மக்கள் எப்பொழுதும் முழிப்போடும் இருக்கக்கூடியவர்கள், தமிழக மக்களும், தமிழ் அறிஞர்கள், அரசியல் அறிந்தவர்கள் எள்ளி நகையாட கூடிய சூழ்நிலையை பார்க்கிறோம் இந்த நிலை மாற வேண்டும் என்றால் சட்டமன்றம் தனி சிறப்போடு இயங்க வேண்டும் சட்டமன்றத்தில் இன்றைக்கு என்ன பாடல் பாடப்போகிறார்கள், யார் பாடப் போகிறார்கள் என பட்டிமன்றம் போல் செயல்படும் சட்டமன்றத்தின் நிலையை மாற்ற வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள், முதல்வர் விஜய் அதனை மாற்றுவாரா என்றால் அது கேள்விகுறியாகவே இருக்கிறது
    1
    தவெகாவின் நிலைப்பாடு பிடிக்காததன் காரணமாகவே இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை நிறுத்தி தனித்துப் போட்டியிடுகிறது- சிவகாசிகள் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேட்டி...
தவெக ஆட்சிக்கு, கூட்டணி கட்சிகள்  கொடுக்கின்ற முட்டுக்கட்டை நிலையானது அல்ல, எந்த நேரத்திலும் தவெக ஆட்சிக்கு பேராபத்து வரக்கூடிய சூழலில்தான்  கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் விமர்சனம்...
அறிஞர் அண்ணா அவர்களின் 118 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சிவகாசி காவல் நிலையம் எதிரே அமைந்துள்ள அவரது திருவுருவர் சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திர பாலாஜி, 
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக மக்கள் விரும்புகின்ற ஆட்சியாகவும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வேண்டும் என்பதுதான் மக்கள் மனதில் ஆழமாக இருக்கிறது 
இடையில் ஏற்பட்ட  சில சருக்கல்கள்,  கருத்து திணிப்புகள், அரசியல் கோல்மால்கள், வாட்ஸாப், பேஸ்புக், இன்டஸ்ட்ராகிராம் போன்ற குழப்பங்க அண்ணா திமுக ளால் ஆட்சி மாற்றம் வந்துள்ளது
தற்போது நடைபெறும் ஆட்சி மக்களால் விரும்பும் ஆட்சி கிடையாது 
நகைப்புக்குரிய ஆட்சியாக விஜய் ஆட்சி உள்ளது 
இடைத்தேர்தலில் அதிமுக முதன்மையான கட்சியாக வெற்றி பெறும், 
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில்  லட்சக்கணக்கான வாக்குகள் பெற்று அதிக வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும்
எடப்பாடியார் தலைமை தமிழகத்திற்கு வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு மக்கள் வாக்களிக்க தயாராகிவிட்டார்கள் 
தவெக ஆட்சிக்கு இடைத்தேர்தல் பாடம் புகட்டும்
முதல்வரின் லண்டன் பயணம் குறித்து முதல்வர் சார்பில்  வெளியிட்டுள்ள புகைப்படம் பேசுபொருளாக தமிழகத்தில் உலாவி வருகிறது, அதை தார்மீகமாக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, 
ஒரு நாட்டின் முதல்வர் எப்படி வாழ வேண்டும், எப்படி இருக்க வேண்டும், பிறருக்கு முன் உதாரணமாக வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு இருக்க வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள் 
ஆனால் அந்த நிலைப்பாட்டில் வாழக்கூடியவராக இன்றைய தமிழக முதல்வர் இருக்கவில்லை 
முதல்வரின் லண்டன் பயணத்தை சந்தேக கண்ணோடு தமிழக மக்கள் பார்க்கிறார்கள்
வெளிநாட்டில் முதலீடை ஈர்க்க சென்றுள்ள முதல்வர், தொழில்துறை அமைச்சர் இல்லாமல் சென்றாலும் சம்பந்தப்பட்ட பணிகளை செய்து வெற்றிகரமாக திரும்பினால் சந்தோஷம்
ஆனால் முதல்கட்டமாக ஊடகத்தில் வந்த செய்திகளை பார்க்கும்போது முதல்வர் வெளிநாடு சென்ற நோக்கமே வேறாக தெரிகிறது 
மக்கள், அரசியல் கட்சி தலைவர்களின் எதிர்ப்புகளை தொடர்ந்து சில பணிகளை செய்வதாக கேள்விப்படுகிறோம் 
மொத்தத்தில் முதல்வர் தடம் மாறி, தடம் புரண்டு நடவடிக்கையில் ஈடுப்பட்டுக்கொண்டிருப்பதாக தமிழக மக்கள் எண்ணுகிறார்கள், இதை முதல்வர் மாற்றிக்கொள்ள வேண்டும் 
தமிழக முதலமைச்சராக வந்த பின்னர்,  அனைத்து முதலமைச்சர்களும் முதல்வர்களுக்கான பண்போடும், தகுதியோடும், தன்மையோடு வாழ்ந்துகொண்டு தமிழகத்தை ஆண்டிருக்கிறார்கள்
அதேபோல் விஜயும் முதல்வருக்கான பண்போடும்,  தகுதியோடும் தன்மையோடும் வாழ்ந்து ஆட்சி செய்ய வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள், ஆனால் அதற்கு எதிர்மறையான நிலைப்பாட்டோடு முதல்வர் விஜய்யின் ஆட்சியும் அவரது செயல்பாடும் இருக்கிறது
முதல்வர் விஜய் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என தமிழக மக்கள் விரும்புகிறார்கள்
தவெக ஆட்சி விளையாட்டுத்தனமான ஆட்சி
காவல்துறையினர் மானிய கோரிக்கையின் போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் சார்பாக பல்வேறு கேள்விகளை முன் வைத்தபோது, எந்த கேள்விகளுக்கும் பதிலளிக்காத முதல்வர் விஜய் அவருக்கே தெரிந்த பாணியில்  வசனத்தை பேசி பதில் உரையை முடித்து விட்டார்
முதல்வர் விஜயின் பதிலுரை பார்ப்பதற்கு வேண்டுமானால் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும், சிரிப்பாகவும், ஜோக்காகவும் இருக்கலாமே தவிர 
நல்ல விவரம் தெரிந்த, அரசியல் தெரிந்தவர்கள் முதல்வர் விஜயின் பேச்சை எள்ளி நகையாடுகிறார்கள்
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள், முன்னாள் ஆட்சியாளர்கள் கேட்ட ஒரு கேள்விக்கு கூட முதல்வர் விஜய் பதிலளிக்கவில்லை 
காவல்துறை உள்ளிட்ட சீருடை பணியாளர்களுக்கு எந்தவிதமான முன்னேற்ற அறிவிப்புகளும் காவல்துறை மானிய கோரிக்கையில் வரவில்லை
இதை காவல்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை சங்கடத்துடன் வாழ்வதை காண முடிகிறது
தமிழக மக்களுக்காக 24 மணி நேரமும் உழைக்கின்ற காவல் துறைக்கு எந்தவிதமான அறிவிப்புகளோ சலுகைகளோ வழங்கப்படாததை  தமிழக மக்கள்,  காவல்துறையினரால் ஏற்றுக்கொள்ளவில்லை
மொத்தத்தில் பிறரை ஏளனமாக பேசுவதற்கும், தமக்கு பிடிக்காதவர்களை எள்ளி நகையாடுவதற்கும் சட்டமன்றத்தை ஒரு கருவியாக முதல்வர் விஜய் பயன்படுத்திக்கொண்டார்
எடப்பாடி பழனிச்சாமி ஆண்ட  காலத்திலும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலத்திலும் சட்டமன்றத்தின் புனிதத் தன்மை காக்கப்பட்டது
தற்போது சட்டமன்றத்தின் புனிதத் தன்மை குறைந்து பாலாகிவிட்டது,
இந்த நிலை மாற வேண்டும் என்றால் முதல்வர் விஜய் தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்
தவெக ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள், அதே நேரத்தில் தவெக ஆட்சிக்கு ஆதரவாக தேர்தல் களத்தில் பணி செய்ய விரும்பவில்லை
தவெகாவின் நிலைப்பாடு பிடிக்காததன் காரணமாகவே இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை நிறுத்தி தனித்துப் போட்டியிடுகிறது
ஆளுநர் ஆட்சி வந்துவிடக்கூடாது, மத்திய அரசின் மறைமுக ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காக மட்டுமே தவெகவிற்கு ஆதரவு கொடுத்தோமே தவிர தவெகாவின் தலைவரை பிடித்தோ, தவெகவின்  கொள்கையை பிடித்தோ ஆதரவு கொடுக்கவில்லை என கம்யூனிஸ்ட் கட்சி  தலைவர்கள் சொல்லிவிட்டார்கள்
தவெக ஆட்சிக்கு, கூட்டணி கட்சிகள்  கொடுக்கின்ற முட்டுக்கட்டை நிலையானது அல்ல, எந்த நேரத்திலும் தவெக ஆட்சிக்கு பேராபத்து வரக்கூடிய சூழலில்தான்  கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது 
நிலையான ஆட்சியமைக்கும் தன்மை முதல்வர் விஜய்கோ,  தவெக கட்சிக்கோ கிடையாது 
ஆட்சி நிலைக்க முதல்வர் விஜய் தனது நிலைய மாற்றிக்கொள்ள வேண்டும் 
பிறரை பழி வாங்குவதற்கோ,  பிறரை இகழ்ந்து, புகழ்ந்து பேசுவதற்கோ, தன்னை புகழ்ந்து பேசுவதற்கோ சட்டமன்றத்தை கருவியாக பயன்படுத்த நினைத்தால் தமிழக மக்கள் காலப்போக்கில் தூக்கி எறிந்து விடுவார்கள் இதற்கு ஆதரவு தர மாட்டார்கள் 
தமிழக மக்கள் எப்பொழுதும் முழிப்போடும் இருக்கக்கூடியவர்கள், தமிழக மக்களும், தமிழ் அறிஞர்கள்,  அரசியல் அறிந்தவர்கள் எள்ளி நகையாட கூடிய சூழ்நிலையை பார்க்கிறோம் 
இந்த நிலை மாற வேண்டும் என்றால் சட்டமன்றம் தனி சிறப்போடு இயங்க வேண்டும் 
சட்டமன்றத்தில் இன்றைக்கு என்ன பாடல் பாடப்போகிறார்கள், யார் பாடப் போகிறார்கள் என பட்டிமன்றம் போல் செயல்படும் சட்டமன்றத்தின் நிலையை மாற்ற வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள், முதல்வர் விஜய் அதனை மாற்றுவாரா என்றால் அது கேள்விகுறியாகவே இருக்கிறது
    user_Virudhunagar
    Virudhunagar
    Virudhunagar, Tamil Nadu•
    16 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.