Shuru
Apke Nagar Ki App…
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
Vinayagam Vinayagam
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
More news from Tamil Nadu and nearby areas
- தருமபுரி சந்தைப்பேட்டை ஆட்டுச் சந்தையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு 2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. தர்மபுரி சந்தப்பேட்டை ஆட்டுச் சந்தையில் பல்வேறு பகுதியிலிருந்து சோலை கொட்டாய் . செட்டிகரை.. நல்லம்பள்ளி. குள்ளனூர் . குண்டலபட்டி நார்த்தம்பட்டி அதியமான் கோட்டை தடங்கம் .ஒட்டப்பட்டி. வெண்ணாம்பட்டி பெரியாம்பட்டி. மாட்லாம்பட்டி. ராஜா பேட்டை. லளிகம் தோப்பூர் போன்ற பகுதியில் இருந்து வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் 1000 ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர் பொதுமக்கள் வியாபாரிகள் ஆடு வாங்க வந்திருந்தனர் சிறிய ஆட்டுக்குட்டியின் விலை 2000 தொடங்கி பெரிய அளவிலான ஆடுகள் 30000 வரை விற்பனையானது தர்மபுரியை சந்தைப்பேட்டை ஆட்டுச் சந்தையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு இன்று 2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது வியாபாரிகள் தெரிவித்தனர்.1
- தருமபுரி நகரில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு 10வயதிற்குட்பட்ட ஆண் பெண் பிள்ளைகளுக்கு தபால் அலுவலகத்தில் சேமிப்பு திட்டம் கணக்கு தொடக்கம் அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ பெற்றோரிடம் வழங்கினார். தருமபுரி நகருக்குட்பட்ட 33வார்டுகளை சேர்ந்த 601 ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் அம்மாவின் பிறந்தநாளையொட்டி 10வயதிற்குட்பட்ட ஆண் மற்றும் பெண் பிள்ளைகளுக்கு கழக மருத்துவர் அணி இணை செயலாளர் அசோகன் தன் சொந்த பணத்திலிருந்து தபால் அலுவலகத்தில் 601 பிள்ளைகளுக்கு ரூபாய் 500 வீதம் செல்வ மகன் சேமிப்பு திட்டம் மற்றும் செல்வமகள் சேமிப்பு திட்டம் என மொத்தம் 601 பிள்ளைகளுக்கு கணக்கினை தொடங்கினார்.அதனையடுத்து இன்று தருமபுரி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் கே.பி.அன்பழகன் ஆண் மற்றும் பெண் பிள்ளைகளின் பெற்றோரிடம் கணக்கு புத்தகத்தை வழங்கினார். இந்நிகழ்வில் மாநில விவசாயப்பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன்,பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வெற்றிவேல், நகர செயலாளர் பூக்கடை ரவி, உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.1
- கள்ளக்காதல் விவரம் கொழுந்தியாளை கொன்று புதைத்த கட்டிட காண்ட்ராக்டர் கைது தர்மபுரி ஓசஅள்ளி புதூர் கிராமத்தை சேர்ந்த பிரபு என்பவரின் மனைவி ராஜேஸ்வரி இவர் தீடீரென சில நாட்களுக்கு முன்பு மாயமானார். தொடர்ந்து அவரது குடும்பத்தினர் தேடி வந்த நிலையில் கல்லக்கொள்ளை மேடு பகுதியில் ராஜேஸ்வரி அடித்து கொலை செய்யப்பட்டதாக குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்ததன் பேரில் காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நேற்று மாலை காவல் ஆய்வாளர் தமிழரசி காவலர்கள் அங்கு சென்று புதைக்கப்பட்ட இடத்தில் தோன்றியது ராஜேஸ்வரி உடலை மீட்டனர் பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விசாரணையில் ராஜேஸ்வரியின் அக்கா கணவர் அனுமந்தன் கள்ளக்காதல் விவகாரத்தில் ராஜேஸ்வரியை கொன்று புதைத்ததாக இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.1
- கரூர் மாவட்டம் குளித்தறையில் ஏபிஎஸ் ஜவுளிக்கடை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு விலை இல்லா வேட்டி சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இந்நிகழ்வில் குளித்தலை நகரில் உள்ள நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு குளித்தலை ஏபிஎஸ் ஜவுளி நிறுவனம் உரிமையாளர் பொங்கல் பண்டிகை முன்னிட்டு அவர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறி இலவச வேட்டி சேலை வழங்கினார்2
- புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி பேட்டி! புதுகை கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அதில், "அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு என்ன செய்ய வேண்டுமோ, அதை சிறப்பாக செய்துள்ளது. இதை அனைவரும் ஏற்றுள்ளனர். ஒரு சிலர் ஏற்றுக்கொள்ளவில்லை. சட்டியில் இருந்தால் தானே ஆப்பையில் வரும், ஜனநாயகன் திரைப்படத்தில் கோர்ட்டின் உத்தரவு படியே நடந்து கொள்ளப்படுகிறது. பாஜகவில் புதிய கூட்டணியாக தணிக்கை வாரியம் திகழ்கிறது" என்றார்.1
- தமிழ்நாட்டில் சில இடங்களில் 10/01/26 மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மைய அறிவிப்பு வெளியிடபட்டது போல திருச்செங்கோடு பகுதியில் லேசான மழை தூறல்கள் பெய்து வருகிறது1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் எண்ணெய் காப்பு உற்சவத்தில் மூன்றாம் திருநாள் இன்று கண்ணன் அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீ ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் மார்கழி மாத எணெய்க்காப்பு உற்சவம் தொடங்கியது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் மார்கழி நீராட்டு உற்சவமான எண்ணெய்ககாப்பு உற்சவம் ஒவ்வொரு வருடமும் நடைபெறுவது வழக்கம். ஸ்ரீ ஆண்டாள் நோன்பு நோற்று பூமாலை சூடி பின் பாமாலை பாடி இறைவனை அடைந்தார். ஸ்ரீஆண்டாள் நோன்பு நோற்ற காலமான இந்த மார்கழி மாதத்தில் 8 நாட்கள் நடைபெறும் இந்த எட்டு நாட்களும் ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளம் அருகே உள்ள எண்ணை காப்பு உற்சவம் மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். இந்நிலையில் இந்த வருடத்திற்கான எண்ணெய் காப்பு உற்சவம் கடந்த 8ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில் மூன்றாம் திருநாள் இன்று திருமுக்குளம் அருகே உள்ள எண்ணெய் காப்பு மண்டபத்தில் கண்ணன் திருக்கோளத்தில் ஸ்ரீ ஆண்டாள் எழுந்தருளினார். தொடர்ந்து நடைபெற்ற எண்ணெய்க்காப்பு உற்சவத்தின் போது ஒரு நாட்டின் மகாராணிக்கு எவ்வித உபசாரங்கள் நடைபெறுகிறதோ அவை அனைத்தும் ஸ்ரீ ஆண்டாளுக்கு நடைபெறும். அதாவது காலையில் எழுந்து பல் துலக்குவது முதல் வெற்றிலை பாக்கு போட்டு வாய் சுத்தம் செய்வது, தலைக்கு எண்ணெய் சாற்றுவது உள்ளிட்ட அனைத்தையும் பட்டாச்சாரியார் ஸ்ரீ ஆண்டாளுக்கு செய்விப்பார் தொடர்ந்து நடைபெற்ற மூன்றாம் நாள் சிறப்பு திருமஞ்சனத்தில் உற்சவருக்கு மா பொடி, மஞ்சள் பொடி, திரவிய பொடி, பால், தயிர் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு திருமஞ்சனம் எனப்படும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இன்றைய சிறப்பு திருமஞ்சனம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.1
- ஜனநாயகன் படம் வெளியிடாதது பாஜகவுக்கு நஷ்டம், திமுகவுக்குத்தான் லாபம்-விஜய் தரப்பினர் யாரும் பேசாமல் இருப்பதால், காணவில்லை அறிவிப்புத்தான் கொடுக்க வேண்டும் என மொரப்பூரில் பாஜக நிர்வாகி நடிகை கஸ்தூரி பேட்டி.1