தமிழ்நாடு முதல்வர், பொதுப்பணித்துறை அமைச்சருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை தேர்தல் தொடர்பான வழக்கில் முதலமைச்சர் விஜய்க்கும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பெரம்பூர் தொகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதுபோல, திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் மனு தாக்கல் செய்திருந்தார். இதே போல வில்லிவாக்கம் தொகுதியில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பெற்ற வெற்றியை எதிர்த்தும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதி லட்சுமி நாராயணன் முன் இன்று (ஆக.25) விசாரணைக்கு வந்தது. அப்போது முதலமைச்சர் விஜய் சார்பில் தேர்தல் வழக்குகளை நிராகரிக்க கோரி மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் அதற்கு இரண்டு வாரங்கள் அவகாசம் வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு நீதிபதி,“ மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 86-வது பிரிவின்படி தேர்தல் வழக்குகளை ஆறு மாதத்துக்குள் முடிக்க வேண்டும். கடந்த முறையே வழக்கை நிராகரிக்க கோரி மனு தாக்கல் செய்யக்கூடுதல் அவகாசம் வழங்கப்பட மாட்டாது என்று கூறியிருந்தேன். இந்த முறையும் அவகாசம் கேட்கிறீர்கள்” என்று குறிப்பிட்டார். ஆதவ் அர்ஜுனா சார்பிலும் தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி மனுதாக்கல் செய்ய இருப்பதாகவும் அதற்கு அவகாசம் வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையையும் ஏற்க மறுத்த நீதிபதி இரண்டு வார கால அவகாசம் எல்லாம் வழங்க முடியாது. ஆகஸ்ட் 27-ம் தேதிக்குள் நிராகரிப்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி, ஒரு நாள் மட்டும் அவகாசம் வழங்கினார். அதற்குள் நிராகரிப்பு மனு தாக்கல் செய்யாவிட்டால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு எச்சரிக்கை விடுத்தார்
தமிழ்நாடு முதல்வர், பொதுப்பணித்துறை அமைச்சருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை தேர்தல் தொடர்பான வழக்கில் முதலமைச்சர் விஜய்க்கும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பெரம்பூர் தொகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதுபோல, திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் மனு தாக்கல் செய்திருந்தார். இதே போல வில்லிவாக்கம் தொகுதியில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பெற்ற வெற்றியை எதிர்த்தும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதி லட்சுமி நாராயணன் முன் இன்று (ஆக.25) விசாரணைக்கு வந்தது. அப்போது முதலமைச்சர் விஜய் சார்பில் தேர்தல் வழக்குகளை நிராகரிக்க கோரி மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் அதற்கு இரண்டு வாரங்கள் அவகாசம் வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு நீதிபதி,“ மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 86-வது பிரிவின்படி தேர்தல் வழக்குகளை ஆறு மாதத்துக்குள் முடிக்க வேண்டும். கடந்த முறையே வழக்கை நிராகரிக்க கோரி மனு தாக்கல் செய்யக்கூடுதல் அவகாசம் வழங்கப்பட மாட்டாது என்று கூறியிருந்தேன். இந்த முறையும் அவகாசம் கேட்கிறீர்கள்” என்று குறிப்பிட்டார். ஆதவ் அர்ஜுனா சார்பிலும் தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி மனுதாக்கல் செய்ய இருப்பதாகவும் அதற்கு அவகாசம் வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையையும் ஏற்க மறுத்த நீதிபதி இரண்டு வார கால அவகாசம் எல்லாம் வழங்க முடியாது. ஆகஸ்ட் 27-ம் தேதிக்குள் நிராகரிப்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி, ஒரு நாள் மட்டும் அவகாசம் வழங்கினார். அதற்குள் நிராகரிப்பு மனு தாக்கல் செய்யாவிட்டால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு எச்சரிக்கை விடுத்தார்
- டாஸ்மாக் கடைகள் விடுமுறை: மதுபான கடைகளில் குவிந்த மது பிரியர்கள். தமிழகத்தில் மிலாடி நபியை முன்னிட்டு நாளை (ஆக.26) டாஸ்மார்க் கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டு கடைகள் அடைக்கப்படும் என்று தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து இன்று (ஆக.25) இரவில் மதுரை நகரில் பல்வேறு பகுதிகளில் டாஸ்மார்க் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பல டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று தங்களுக்கு வேண்டிய மது பாட்டில்களை வாங்கி சென்றார்கள்.1
- हेडलाइन: गंगा बैराज हाईवे पर मिला अज्ञात व्यक्ति का शव, नवाबगंज पुलिस जांच में जुटी कानपुर नगर के नवाबगंज थाना क्षेत्र स्थित गंगा बैराज हाईवे पर मंगलवार सुबह एक अज्ञात व्यक्ति का शव मिलने से इलाके में हड़कंप मच गया हाईवे से गुजर रहे राहगीरों ने सड़क किनारे शव पड़ा देखा और पुलिस को सूचना दी सूचना मिलते ही नवाबगंज थाना पुलिस टीम मौके पर पहुंची पुलिस ने घटनास्थल को सुरक्षित कर आसपास के लोगों से पूछताछ की मौके पर कई पुलिसकर्मी मौजूद रहे और मामले की छानबीन करते नजर आए पुलिस के अनुसार, मृतक की उम्र लगभग 35-40 वर्ष के आसपास लग रही है और उसकी अभी तक शिनाख्त नहीं हो सकी है शव को कब्जे में लेकर पंचनामा भर पोस्टमार्टम के लिए भेज दिया गया है थाना प्रभारी ने बताया कि पोस्टमार्टम रिपोर्ट आने के बाद ही मौत के सही कारणों का पता चल सकेगा फिलहाल आसपास के थानों में गुमशुदा लोगों के बारे में जानकारी जुटाई जा रही है और शव की पहचान कराने का प्रयास किया जा रहा है पुलिस मामले की हर एंगल से जांच कर रही है3
- கொல்லங்குடியில் கோவில் திருவிழா முன்னிட்டு களைகட்டிய மாட்டு வண்டி பந்தயம், சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள கொல்லங்குடியில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கொல்லங்குடியில் இருந்து முதல் வலையம்பட்டி வரை நடைபெற்ற இந்தப் போட்டி, பெரிய மாடு மற்றும் சிறிய மாடு என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது. சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 38 ஜோடி மாடுகள் பங்கேற்றன. மதுரை தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 7 கிலோமீட்டர் பந்தய எல்லையாக நிர்ணயிக்கப்பட்ட பெரிய மாடு பிரிவில் 11 ஜோடிகளும், 5 கிலோமீட்டர் பந்தய எல்லையாக நடைபெற்ற சிறிய மாடு பிரிவில் 27 ஜோடிகளும் கலந்து கொண்டு சீறிப் பாய்ந்தன. பந்தயத்தில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த மாடுகளின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அழகாபுரி, மேப்பல், நரிக்கோட்டை, காளையார்கோவில், விட்டனேரி, கொல்லங்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறமும் திரண்டு நின்று, ஆர்வத்துடன் மாட்டு வண்டி பந்தயத்தை கண்டுகளித்தனர்.1
- விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று திண்டுக்கல் மாநகர் மாவட்டம் சார்பில் பாரதி புரத்தில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.1
- 2006 ஆண்டு வனஉரிமை சட்டப்படி அனைத்து வீடுகளுக்கும் பட்டா வழங்கவேண்டும் தங்களை வெளியேற்ற முயற்சிக்கும் வனத்துறையை கண்டித்தும் நரியூத்து கிராமத்தில் நடந்த சிறப்பு மக்கள் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மேகமலை மற்றும் தும்மக்குண்டு உள்ளிட்ட ஒன்பது ஊராட்சிகளுக்கு உட்பட்ட 108 கிராமங்களில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக 5000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அவர்களை வெளியேற்ற உச்ச நீதிமன்றம் புலிகள் காப்பகம் என்ற காரணம் காட்டி தீர்ப்பை அளித்துள்ளது வனப்பகுதியில் வசிப்பவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக கருதப்படுவார்கள் என்றும் அவர்களை வெளியேற்ற வனத்துறை மற்றும் தேனி மாவட்ட நிர்வாகம் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது இதை எதிர்த்து கடமலை மயிலை ஒன்றிய பகுதியைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராமமக்கள் ஆர்ப்பாட்டம் தர்ணா பொதுக்கூட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுமை போராட்டம் என பலகட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர் தமிழக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தங்களது வெளியேற்றக் கூடாது என்றும் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர் ஆனால் தேனி மாவட்டம் நிர்வாகம் மற்றும் வனத்துறை இணைந்து வனப்பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற்ற தொடர் முயற்சிகளை எடுத்து வருவது இப்பகுதி மக்களை வேதனைக்குள்ளாக்கி உள்ளது இந்நிலையில் இன்று நரியூத்து கிராமத்தில் வனப்பகுதியில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது கிராமத்தில் உள்ள அரசு சமுதாயக்கூடத்தில் மக்கள் கிராமசபை கூட்டம் என்ற சிறப்பு கூட்டத்தை நடத்தினார்கள் இக்கூட்டத்தில் கிராமத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் தங்களது வேலைகளுக்கு செல்லாமல் கலந்து கொண்டனர் கூட்டத்தில் 2006 ஆம் ஆண்டு வன உரிமை சட்டப்படி வனப்பகுதியில் வசிக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் பட்டா வழங்க வேண்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தங்களை வெளியேற்ற முயற்சிக்கும் வனத்துறை அந்த நடவடிக்கையை கைவிடவேண்டும் தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனுதாக்கல் செய்ய வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது மேலும் இதற்கான உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் 9 ஊராட்சிகளை சேர்ந்த 108 கிராம மக்களும் ஒன்று சேர்ந்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று அங்கேயே தங்கி உணவு சமைத்து உண்டு தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்1
- மல்லையா சிவன் கோயிலில் ஆவணி மாத முதல் பிரதோஷ சிறப்பு வழிபாடு தேனி மாவட்டம் போடி கொண்டரங்கி மல்லையா சிவன் கோயிலில் ஆவணி மாத முதல் பிரதோஷ சிறப்பு வழிபாடு ஓணம் திருநாளை முன்னிட்டு 6 அடி உயர சிவலிங்கத்திற்கு வண்ணச் செவ்வந்தி மலர்களால் சிறப்பு அலங்காரம் நந்தியம் பெருமானுக்கு 16 வகை திரவியங்களால் அபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு கொண்டரங்கி மல்லையா சிவன் கோவிலில், ஆவணி மாத முதல் பிரதோஷம் மற்றும் ஓணம் திருநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு மஞ்சள், பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து, உற்சவமூர்த்தி கோவில் பிரகாரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் ஓணம் திருநாளை முன்னிட்டு, கருவறையில் உள்ள 6 அடி உயர சிவலிங்கத்திற்குப் பல வண்ணச் செவ்வந்தி மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு 'நமசிவாய' கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.1
- இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் பிரதோஷ வழிபாட்டில் குவிந்த பக்தர்கள் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் இன்று (25.08.2026) செவ்வாய்க்கிழமை அங்காரக வார பிரதோசத்தை முன்னிட்டு மாலை ஸ்ரீ நந்தியம் பெருமானுக்கு மூலவர் பிரதோஷ நாயகர் நாயகி சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் நாயகி திருக்கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பிரதோஷ பூஜை நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்று சென்றனர்.1
- விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீடு புகுந்து தந்தை மகனை வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.... ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட பிரிவை சேர்ந்தோர் வீடு புகுந்து வெட்டிய கும்பல் வசிக்கும் பகுதிக்குச் சென்று 15 இருசக்கர வாகனங்கள் 3 ஆட்டோக்களை அடித்து நொறுக்கியதால் பதட்டம்... போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கான்சாபுரம் கிராமம், மங்கம்மாள் கோயில் தெருவை சேர்ந்த கணேச பாண்டி (49), மற்றும் அவரது மகன் கௌதம் (20) இருவரும் நேற்று நள்ளிரவு வழக்கம் போல் வீட்டில் தூக்கிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அருகில் வசிக்கும் மற்றொரு பிரிவை சேர்ந்த ஒரு கும்பல் வீடு புகுந்து தந்தை கணேச பாண்டி மற்றும் மகன் கௌதமை வெட்டி விட்டு தப்பி ஓடி உள்ளனர். இதில் இருவரும் பலத்த காயமடைந்த நிலையில் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை கண்டு ஆத்திரமடைந்த கணேசபாண்டி மற்றும் அவரது உறவினர் தரப்பைச் சேர்ந்த ஒரு பிரிவினர் வீடு புகுந்து அறிவாளால் வெட்டிய கும்பல் வசித்த பகுதிக்கு சென்று அங்கிருந்த 15 ற்கும் இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 ஆட்டோக்களை அடித்து நொறுக்கினர். இதனால் இப்பகுதியில் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படும் பதட்டமான சூழல் நிலவுவதால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் திருமண ஊர்வலம் நடந்த போது இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டு சமாதான கூட்டம் மூலம் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்ட நிலையில், அதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.1