Shuru
Apke Nagar Ki App…
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள நடுப்பட்டியை சேர்ந்தவர் தினேஷ் (29), இந்தநிலையில் பொன்னம்பலம்பட்டி சுங்கச்சாவடி அருகே உள்ள ஒரு பேக்கரி அருகே நடுப்பட் டியை சேர்ந்த வெள்ளைச்சாமி (35) என்பவர் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த தினேஷ் வெள்ளைச்சாமியிடம் 'ஏன் இங்கே அமர்ந்திருக்கிறாய்' என்று கேட்டதாக தெரிகிறது. அப்போது, வயதில் மூத்த என்னை அண்ணன் என்று தான் அழைக்க வேண்டும் என்று வெள்ளைச்சாமி கூறியதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வெள்ளைச்சாமி தலைக்கவசத்தை எடுத்து தினேஷ் தலையில் தாக்கினார். இது குறித்த புகாரின் பேரில் வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வெள்ளைச்சாமியை கைது செய்தனர்.
Usha arun News
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள நடுப்பட்டியை சேர்ந்தவர் தினேஷ் (29), இந்தநிலையில் பொன்னம்பலம்பட்டி சுங்கச்சாவடி அருகே உள்ள ஒரு பேக்கரி அருகே நடுப்பட் டியை சேர்ந்த வெள்ளைச்சாமி (35) என்பவர் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த தினேஷ் வெள்ளைச்சாமியிடம் 'ஏன் இங்கே அமர்ந்திருக்கிறாய்' என்று கேட்டதாக தெரிகிறது. அப்போது, வயதில் மூத்த என்னை அண்ணன் என்று தான் அழைக்க வேண்டும் என்று வெள்ளைச்சாமி கூறியதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வெள்ளைச்சாமி தலைக்கவசத்தை எடுத்து தினேஷ் தலையில் தாக்கினார். இது குறித்த புகாரின் பேரில் வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வெள்ளைச்சாமியை கைது செய்தனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- மணப்பாறை அருகே தொடர் மழையால் இரண்டு வீடுகளில் ஓடுகள் இடிந்து விழுந்து சேதம். வருவாய்துறையினர் நேரில் ஆய்வு திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் மழை அவ்வபோது விட்டு விட்டு பெய்து வருகின்றது. இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக பொன்னக்கோன்பட்டி பகுதியில் கூலித் தொழிலாளியான ஆலீஸ் சோபியா ராணி (49) என்பவரின் வீட்டின் ஓட்டு வீட்டில் மேல் புறத்தில் இருந்து ஓடுகள் இடிந்து விழுந்தது. தொடர் மழையால் அவரும் அவரது மகனும் அருகில் உள்ள வீட்டில் தூங்கியதால் எந்தவித அசம்பாவிதமும் நிகழவில்லை. இருப்பினும் ஓடுகள் இடிந்து விழுந்ததால் வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்தது. இதே போல் அருகில் ஜான்பால் என்பவரின் வீட்டின் மேல்புறத்தில் இருந்த ஓடுகள் இடிந்து விழுந்தது. இதனால் இரண்டு வீடுகளும் சேதமடைந்ததை அடுத்து வருவாய்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மிகவும் வறுமையில் உள்ள நிலையில் தாங்கள் வீடு இடிந்து விட்டதால் மிகவும் சிரமத்தில் இருப்பதாகவும், அரசு வீடு வழங்கிட வேண்டும் என்று ஆலீஸ் சோபியா ராணி அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.1
- திண்டுக்கல் பல இடங்களில் குண்டு குழியுமான தார் சாலைகள் உள்ளன அதில் ஈஸ்வரி ஸ்டோர்ஸ் அருகில் உள்ள சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் அவ்வப்போது டூவீலரில் செல்வோர் விபத்துக்குள்ளாகி வருகின்றனர் கரூர் திருச்சியில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் இதன் வழியாக வரும் முக்கிய சாலை1
- வேடசந்தூர் பூதிபுரம் பஞ்சாயத்து மகாலட்சுமிபுரம் ஐயர் மடம் குறும்பபட்டி இந்த பகுதிகளுக்கு செல்லும் மின்சாரத்தின் மின் மாற்றி பழுதடைந்துள்ளதால் பொதுமக்கள் மின்சாரம் இன்றி சிரமம் அடைந்து வருகின்றனர் கடந்த மூன்று நாட்களாக எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த மின்மாற்றியை மாற்றி கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் சார்பாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ML வேடசந்தூர் ஒன்றிய குழு சார்பாகவும் கோரிக்கை வைக்கப்படுகிறது1
- மும்மதத்தினர் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா திண்டுக்கல் மாநகராட்சி 44. வது வார்டு மேட்டுப்பட்டியில் திமுக சார்பில் மும்மதத்தினர் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகராட்சி கவுன்சிலர் மார்த்தாண்டன் தலைமை வகித்த இந்த நிகழ்ச்சியில், திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி எம்எல்ஏயுமான ஐ. பி. செந்தில்குமார் வாழ்த்துரை வழங்கினார். ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சமத்துவ பொங்கலைத் துவக்கி வைத்தார். மேலும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கி, தனது பிறந்தநாளை முன்னிட்டு 10 கிலோ எடையில் கேக் வெட்டி திமுகவினருடன் கொண்டாடி மகிழ்ந்தார்.1
- திண்டுக்கல் மாவட்டம் மாநகராட்சிக்குட்பட்ட 44வது வார்டு பகுதியில் மாமன்றஉறுப்பினர் மார்த்தாண்டன் தலைமையில் சமத்துவப் பொங்கல் மற்றும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது இந்நிகழ்வில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி .செந்தில்குமார் மற்றும் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் துணை மேயர் ராசப்பா கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்1
- பொங்கல் பண்டிகை முன்னிட்டு கரும்பு அறுவடை புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பொங்கல் பண்டிகை முன்னிட்டு அறுவடைக்காக கரும்பு பயிரிட்டு வந்தனர். இந்நிலையில் ஆலவயல், அம்மன்குறிச்சி, நகரப்பட்டி, செமலாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் சிறு, குறு விவசாயிகள் அறுவடை பணியில் ஈடுபட்டுள்ளனர்.1
- *சென்னையில் தனியார் தொலைக்காட்சி சார்பில் நடந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியே வந்த பா.ஜ.க மாநில இளைஞரணி தலைவர் சூர்யா தாக்குதல் செய்யப்பட்டதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் முன்பு பா.ஜ.க இளைஞரணி சார்பில் திமுகவினரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது* சென்னையில் தனியார் தொலைக்காட்சி சார்பில் நடந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியே வந்த, பா.ஜ.க, மாநில இளைஞரணி தலைவர் சூர்யா உள்ளிட்ட, பா.ஜ.க,வினர் மீது தி.மு.க.,வினர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. தாக்குதலில் காயமடைந்த சூர்யா மற்றும் பா.ஜ.க வினர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.இச்சம்பவத்தை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் முன்பு பா.ஜ.க இளைஞரணி சார்பில் தமிழக பாஜக மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் டி.ஆர்.தவமணி தலைமையில் தி.மு.க.,வினரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய இளைஞரணி தலைவர் ராஜசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.1
- கரூரை அடுத்த குளித்தலை அருகே மணத்தட்டை காவிரி ஆற்றின் படுகையிலிருந்து காவிரி குடிநீர் மணப்பாறை-குளித்தலை சாலையோரம் குழாய்கள் பதிக்கப்பட்டு மணப்பாறை மற்றும் மருங்காபுரி பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மாலை மணப்பாறை அடுத்த கலிங்கப்பட்டி அருகே அமைத்துள்ள 2மீட்டர் அகலமும், 46.6 மீட்டர் நீளம் கொண்ட காவிரி குடிநீர் பிரதான குழாய் திடீரென உடைப்பு ஏற்பட்டு சுமார் 10 அடி தூரத்திற்கு குடிநீர் நாலாபக்கமும் பீறிட்டு அடித்து வருகிறது. இதையறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1