🚨 கரூர் மாவட்டம்: வெள்ளியணையில் மீண்டும் காவேரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பு – சேதமடைந்த சாலையால் பொதுமக்கள் அவதி கரூர் மாவட்டம், வெள்ளியணை பகுதியில் காவேரி கூட்டுக் குடிநீர் குழாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் வீணாக வெளியேறுவதுடன், அப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதே பகுதியில் அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்படுவதால், ஒவ்வொரு முறையும் சாலை தோண்டப்பட்டு பழுதுபார்க்கப்படுகிறது. ஆனால், பணிகள் முடிந்த பிறகும் சாலை முழுமையாக சீரமைக்கப்படாமல் இருப்பதால் பல இடங்களில் மேடு, பள்ளங்கள் உருவாகி, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, காவேரி கூட்டுக் குடிநீர் குழாயை நிரந்தரமாக சீரமைப்பதுடன், சேதமடைந்த சாலையையும் தரமான முறையில் முழுமையாக புதுப்பித்து, பொதுமக்களின் சிரமத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்
🚨 கரூர் மாவட்டம்: வெள்ளியணையில் மீண்டும் காவேரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பு – சேதமடைந்த சாலையால் பொதுமக்கள் அவதி கரூர் மாவட்டம், வெள்ளியணை பகுதியில் காவேரி கூட்டுக் குடிநீர் குழாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் வீணாக
வெளியேறுவதுடன், அப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதே பகுதியில் அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்படுவதால், ஒவ்வொரு முறையும் சாலை தோண்டப்பட்டு பழுதுபார்க்கப்படுகிறது. ஆனால், பணிகள் முடிந்த பிறகும் சாலை முழுமையாக சீரமைக்கப்படாமல் இருப்பதால் பல இடங்களில் மேடு, பள்ளங்கள் உருவாகி, வாகன
ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, காவேரி கூட்டுக் குடிநீர் குழாயை நிரந்தரமாக சீரமைப்பதுடன், சேதமடைந்த சாலையையும் தரமான முறையில் முழுமையாக புதுப்பித்து, பொதுமக்களின் சிரமத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்
- திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் நிலமோசடி சம்பந்தமாக சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் அவர்கள் இரண்டாவது நாளாக சிபிசிஐடி காவல்துறையினரிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்1
- தவெக அரசுக்கு எதிராக விவசாயிகளை திரட்டி போராட்டம்! இபிஎஸ் அறிவிப்பு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்தில் இருந்து விமான மூலம் சென்னை செல்வதற்கு முன் சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறும் போது, தமிழக வெற்றிக்கழக அரசு தேர்தல் வாக்குறுதியின் அளித்தபடி விவசாயிகளின் முழு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், மேலும் கடன் தள்ளுபடி காண அறிவிப்பு நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அறிவிக்க வேண்டும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடு விளையாடுவதை விட்டுவிட்டு முதல்வர் மௌனத்தை கலைத்து விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், ஒருவேளை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய அறிவிப்பு தவறும் பட்சத்தில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளையும் ஒன்றிணைத்து அதிமுக சார்பில் விரைவில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.1
- ஸ்ரீராமர் ஆலயத்தில் பெண்கள் 108 திருவிளக்கு பூஜை செய்தனர் சிங்கம்புணரி அண்ணா நகரில் உள்ள ஸ்ரீராமர் ஆலயத்தில் இன்று மூன்றாவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு பெண்கள் 108 திருவிளக்கு பூஜை செய்தனர். நல்ல மழை, நோயற்ற வாழ்வு, மாங்கல்ய பலம், குழந்தைகள் கல்வி ஆகியவற்றிற்காக விரதம் இருந்து குத்துவிளக்கு பூஜை செய்தனர். குங்கும அர்ச்சனை, லலிதா சகஸ்ரநாமம், மகாலட்சுமி பூஜைக்குப் பிறகு அன்னை சீதாதேவிக்கும் மூலவர்களுக்கும் மகாதீபாரத்தி காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.1
- கொடைக்கானல்-பூம்பாறை தூய்மை காவலர் ராமர் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி காத்திருப்பு போராட்டம். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறை அருகில் திண்டுக்கல் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம்.கொடைக்கானல் பூம்பாறை தூய்மை காவலர் ராமர் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் கொலையான ராமரின் பெற்றோர்களை மிரட்டும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூம்பாறை பகுதியில் விவசாயம் செய்து வரும் ராமர் இவரது தாய்,தந்தை பூம்பாறை ஊராட்சியில் தூய்மை காவலராக பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு கூர்மையான ஆயுதங்களால் கொடூரமாக ராமரை உடலில் பல இடங்களில் வெட்டிக்கொலை செய்துள்ளனர். கொடைக்கானல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.1
- திருமயம் அருகே குருவிக் கொண்டான் பட்டியில் முன்னாள் அமைச்சர் எஸ் ரகுபதி பேட்டி புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள குருவி கொண்டான் பட்டி சொக்கலிங்கம் மீனாட்சி நடுநிலைப் பள்ளியில் AI தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன கணினி பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது. இVவிழாவில் கலந்து கொண்டு கணினி பயிற்சி அறையை திருமயம் MLA ரகுபதி தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.1
- திண்டுக்கல் மாநகராட்சி ஆணையரின் வேண்டுகோள் ஆத்தூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து உள்ளதால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்1
- புதுக்கோட்டை, திருமயம் அருகே உள்ள குருவி கொண்டான் பட்டி சொக்கலிங்கம் மீனாட்சி நடுநிலைப் பள்ளியில், AI தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன கணினி பயிற்சி தொடக்க விழா புதுக்கோட்டை, திருமயம் அருகே உள்ள குருவி கொண்டான் பட்டி சொக்கலிங்கம் மீனாட்சி நடுநிலைப் பள்ளியில், AI தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன கணினி பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு கணினி பயிற்சி அறையை ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி, முன்னாள் அமைச்சரும் திருமயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ரகுபதி தொடங்கி வைத்தார். அதன் பின்னர் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.1
- வாடிப்பட்டியில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியி... இன்று வாடிப்பட்டி சந்தை கேட் அருகில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மருத்துவ நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாலைநேர தர்னா நடைபெற்றது இந்த நிகழ்வில் மாநில கொள்கை பரப்பு செயலாளர்கள் முனைவர் மொ.சித்திராதேவி திருச்சி.சரவனண் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் இந்த நன்னாளில் மாவட்ட ஒன்றிய நகர நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்1
- துவரங்குறிச்சி ஶ்ரீ பூத நாயகி அம்மனுக்கு ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமை யொட்டி மலர் அபிஷேகம் திருச்சி மாவட்டம் மருங்காபுரியை அடுத்த துவரங்குறிச்சியில் அருள்மிகு ஶ்ரீ பூத நாயகி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமை யொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் மலர் அபிஷேகமும் நடைபெற்றன. இந்த வழிபாட்டில் இப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து அம்மனின் அருளை பெற்று சென்றனர்.1