logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

என் தலைவர் தாடையை உடைச்சாங்கனு சைகை காட்டுறீங்களே! – மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ ஆவேசம்! அதிகார பலம் இருக்கிறது என்பதற்காக எதிர்க்கட்சியினரை ஒடுக்கும் நோக்கில் தவெக அரசு செயல்பட்டு வருகிறது" என்று மார்க்கண்டேயன் எம்எல்ஏ பேசினார். நான் எலும்பை உடைப்பேன் என்று பேசியதற்கு உடனடியாக என்னைச் சிறையில் அடைத்தீர்கள்; ஆனால், என் தலைவரின் தாடையையே உடைத்தார்கள் என்று சைகை காட்டுகிறார்களே, இதற்குப் புகார் அளிக்க யாரும் இல்லையா?" என்று விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கேள்வி எழுப்பியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், "முன்பு ஒருமுறை 'எலும்பை உடைப்பேன்' என்று நான் பேசியதற்காகக் காவல்துறையினர் என் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். ஆனால், இன்று எனது தலைவரின் தாடையை உடைத்துவிட்டார்கள் என்பது போலச் சைகை காட்டிக் கொண்டு திரிகிறார்களே, இந்தச் செயலுக்கு எதிராகக் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க நாட்டில் யாருமே இல்லையா? அதிகார பலம் இருக்கிறது என்பதற்காக எதிர்க்கட்சியினரையும், மாற்றுக்கருத்து கொண்டவர்களையும் ஒடுக்கும் நோக்கில் தவெக அரசு செயல்பட்டு வருகிறது." என்று அவர் காட்டமாகப் பேசினார்.

20 hrs ago
user_AMS MEDIA
AMS MEDIA
Local News Reporter ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
20 hrs ago
1412287e-4c58-44c5-a358-e0b06b43fa8e

என் தலைவர் தாடையை உடைச்சாங்கனு சைகை காட்டுறீங்களே! – மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ ஆவேசம்! அதிகார பலம் இருக்கிறது என்பதற்காக எதிர்க்கட்சியினரை ஒடுக்கும் நோக்கில் தவெக அரசு செயல்பட்டு வருகிறது" என்று மார்க்கண்டேயன் எம்எல்ஏ பேசினார். நான் எலும்பை உடைப்பேன் என்று பேசியதற்கு உடனடியாக என்னைச் சிறையில் அடைத்தீர்கள்; ஆனால், என் தலைவரின் தாடையையே உடைத்தார்கள் என்று சைகை காட்டுகிறார்களே, இதற்குப் புகார் அளிக்க யாரும் இல்லையா?" என்று விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கேள்வி எழுப்பியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், "முன்பு ஒருமுறை 'எலும்பை உடைப்பேன்' என்று நான் பேசியதற்காகக் காவல்துறையினர் என் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். ஆனால், இன்று எனது தலைவரின் தாடையை உடைத்துவிட்டார்கள் என்பது போலச் சைகை காட்டிக் கொண்டு திரிகிறார்களே, இந்தச் செயலுக்கு எதிராகக் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க நாட்டில் யாருமே இல்லையா? அதிகார பலம் இருக்கிறது என்பதற்காக எதிர்க்கட்சியினரையும், மாற்றுக்கருத்து கொண்டவர்களையும் ஒடுக்கும் நோக்கில் தவெக அரசு செயல்பட்டு வருகிறது." என்று அவர் காட்டமாகப் பேசினார்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் நியாய விலை கடையில் திடீர் ஆய்வு
    1
    ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் நியாய விலை கடையில் திடீர் ஆய்வு
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Local News Reporter ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • எட்டயபுரம் பாரதியார் கூட்டுறவு நூற்பாலை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் தூத்துக்குடி Thursday எட்டையாபுரத்தில் பாரதியார் கூட்டுறவு உட்பட ஒன்று உள்ளது. இந்த ஆலையை தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் விஜய பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதிகாரிகளிடம் ஆலையின் செயல்பாடுகள் பற்றி கேட்டறிந்தார்.
    1
    எட்டயபுரம் பாரதியார்  கூட்டுறவு நூற்பாலை நேரில் ஆய்வு செய்த அமைச்சர்
தூத்துக்குடி Thursday எட்டையாபுரத்தில் பாரதியார் கூட்டுறவு உட்பட ஒன்று உள்ளது. இந்த ஆலையை தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் விஜய பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதிகாரிகளிடம் ஆலையின் செயல்பாடுகள் பற்றி கேட்டறிந்தார்.
    user_Mithun
    Mithun
    City Star தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    1 hr ago
  • தூத்துக்குடி சுனாமி காலனியை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நியாயம் கிடைக்க காவல்துறையினர் உரிய முறையில் விசாரணை செய்ய வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் மா. மாரிச்செல்வம் கோரிக்கை. புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் சமூக போராளி திரு மா மாரிச்செல்வம் அவர்கள் கூறியதாவது14 9 2026 இன்று திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு முன்பு புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மாநகர் மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் திருமதி த வேலம்மாள் அவர்களை கொடூரமாக தாக்கிய சுனாமி குடியிருப்பு பகுதியை சார்ந்த நபர் மீது 3 நாட்களாகியும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க தவறிய காவல்துறை நிர்வாகத்தை கண்டித்து புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் திரு மா மாரி செல்வம் அவர்கள் கட்சி தலைமை அறிவுறுத்தலின் பேரில் தெர்மல் நகர் காவல் நிலையம் முன்போ அல்லது மாவட்ட காவல் துறை அலுவலகம் முன்பு புரட்சி பாரதம் கட்சி சார்பில் தோழமை அமைப்புகளையும் பொதுமக்களையும் பாதிக்கப்பட்ட குடும்பத்தார்களையும் சமூக ஆர்வலர்களையும் ஒன்று திரட்டி முற்றுகை போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தார் பின்னர் பாதிக்கப்பட்ட பெண் திருமதி T வேலம்மாள் அவர்கள் பத்திரிகையாளர்களிடம் 3 நாட்களாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் உள்ள O P காவல் நிலைய அதிகாரியோ அல்லது சம்பந்தப்பட்ட தெர்மல் நகர் காவல் நிலைய அதிகாரிகளோ என்னிடம் விசாரணை செய்யவில்லை எனவும் அவரை அடித்து கல்லால் மார்பு பகுதியில் எரிந்து கையை முறுக்கி கெட்ட வார்த்தைகளை சொல்லி மனம் வேதனை படும்படியாகவும் கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது சட்டப்படி தக்க நடவடிக்கை எடுத்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் விதமாக செயல்படும் காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்இந்த நிகழ்ச்சியில் புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மாநகர் மாவட்ட பொருளாளர் திரு மு மணிகண்டன் புரட்சி பாரதம் கட்சி மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் திரு த மகேந்திரன் சமூக ஆர்வலர்AICCTU தேசிய செயற்குழு உறுப்பினர் மின்னல் அம்ஜத் மற்றும் பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்தார்கள் சுனாமி குடியிருப்பை சார்ந்த பொதுமக்கள் என பலர் இருந்தனர் இப்படிக்கு செய்தி பிரிவு புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மாநகர் மாவட்டம் தொடர்புக்கு 95979477 7 6
    4
    தூத்துக்குடி சுனாமி காலனியை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நியாயம் கிடைக்க காவல்துறையினர் உரிய முறையில் விசாரணை செய்ய வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் மா. மாரிச்செல்வம் கோரிக்கை.
புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் சமூக போராளி திரு மா மாரிச்செல்வம் அவர்கள் கூறியதாவது14 9 2026 இன்று திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு முன்பு புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மாநகர் மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் திருமதி த வேலம்மாள் அவர்களை கொடூரமாக தாக்கிய சுனாமி குடியிருப்பு பகுதியை சார்ந்த நபர் மீது 3 நாட்களாகியும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க தவறிய காவல்துறை நிர்வாகத்தை கண்டித்து    புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் திரு மா மாரி செல்வம் அவர்கள் கட்சி தலைமை அறிவுறுத்தலின் பேரில்  தெர்மல் நகர் காவல் நிலையம் முன்போ அல்லது மாவட்ட காவல் துறை அலுவலகம் முன்பு புரட்சி பாரதம் கட்சி சார்பில் தோழமை அமைப்புகளையும் பொதுமக்களையும் பாதிக்கப்பட்ட குடும்பத்தார்களையும் சமூக ஆர்வலர்களையும் ஒன்று திரட்டி முற்றுகை போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தார் பின்னர் பாதிக்கப்பட்ட பெண் திருமதி T வேலம்மாள் அவர்கள் பத்திரிகையாளர்களிடம் 3 நாட்களாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் உள்ள O P காவல் நிலைய அதிகாரியோ அல்லது  சம்பந்தப்பட்ட தெர்மல் நகர் காவல் நிலைய அதிகாரிகளோ என்னிடம் விசாரணை செய்யவில்லை எனவும்  அவரை அடித்து கல்லால் மார்பு பகுதியில் எரிந்து கையை முறுக்கி கெட்ட வார்த்தைகளை சொல்லி மனம் வேதனை படும்படியாகவும் கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது சட்டப்படி தக்க நடவடிக்கை எடுத்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் விதமாக செயல்படும் காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்இந்த நிகழ்ச்சியில் புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மாநகர் மாவட்ட பொருளாளர் திரு மு மணிகண்டன் புரட்சி பாரதம் கட்சி மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் திரு த மகேந்திரன் சமூக ஆர்வலர்AICCTU  தேசிய செயற்குழு உறுப்பினர் மின்னல் அம்ஜத் மற்றும் பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்தார்கள் சுனாமி குடியிருப்பை சார்ந்த பொதுமக்கள் என பலர் இருந்தனர் இப்படிக்கு செய்தி பிரிவு புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மாநகர் மாவட்டம் தொடர்புக்கு 95979477 7 6
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    22 hrs ago
  • திருநெல்வேலிஅரசு மருத்துவமனை பிணவறையில் குளிர்பதன வசதி பராமரிப்பு… சடலங்கள் பாதுகாப்பில் கேள்வி எழுப்பும் நிலை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வரும் பிணவறையில் உள்ள குளிர்பதன வசதிகளில் பராமரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால், இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களுக்கு பிரேத பரிசோதனைக்கான ஏற்பாடுகள் பழைய சவக்கிடங்கிற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளன. பிணவறையில் உள்ள குளிர்பதன வசதிகளுக்கு ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தம் (AMC) செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுப்பணித்துறை மின் துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் ஏசி மற்றும் மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தில் வெப்பநிலை அதிகரித்து வரும் சூழலில் பிணவறையின் குளிர்பதன வசதிகள் தொடர்பாக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்றும் நாளையும் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்படும் சடலங்கள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள பழைய சவக்கிடங்கில் வைத்து பரிசோதனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குளிர்பதன அறையில் வைக்கப்பட்டுள்ள சடலங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும், குளிர்பதன வசதி தொடர்ந்து இயங்கி வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், பிணவறையின் குளிர்பதன வசதிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் சூழல் பொதுமக்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது. சடலங்களை பாதுகாப்பாக பராமரிப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளதா என்பதையும், பராமரிப்புப் பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்பதையும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். பராமரிப்புப் பணிகளை விரைந்து முடித்து வழக்கமான முறையில் பிரேத பரிசோதனைகள் நடைபெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    1
    திருநெல்வேலிஅரசு மருத்துவமனை பிணவறையில் குளிர்பதன வசதி பராமரிப்பு… சடலங்கள் பாதுகாப்பில் கேள்வி எழுப்பும் நிலை
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வரும் பிணவறையில் உள்ள குளிர்பதன வசதிகளில் பராமரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால், இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களுக்கு பிரேத பரிசோதனைக்கான ஏற்பாடுகள் பழைய சவக்கிடங்கிற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளன.
பிணவறையில் உள்ள குளிர்பதன வசதிகளுக்கு ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தம் (AMC) செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுப்பணித்துறை மின் துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் ஏசி மற்றும் மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தில் வெப்பநிலை அதிகரித்து வரும் சூழலில் பிணவறையின் குளிர்பதன வசதிகள் தொடர்பாக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது 
பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்றும் நாளையும் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்படும் சடலங்கள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள பழைய சவக்கிடங்கில் வைத்து பரிசோதனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே குளிர்பதன அறையில் வைக்கப்பட்டுள்ள சடலங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும், குளிர்பதன வசதி தொடர்ந்து இயங்கி வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், பிணவறையின் குளிர்பதன வசதிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் சூழல் பொதுமக்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது. சடலங்களை பாதுகாப்பாக பராமரிப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளதா என்பதையும், பராமரிப்புப் பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்பதையும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
பராமரிப்புப் பணிகளை விரைந்து முடித்து வழக்கமான முறையில் பிரேத பரிசோதனைகள் நடைபெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    user_Subramanian
    Subramanian
    திருநெல்வேலி, திருநெல்வேலி, தமிழ்நாடு•
    1 hr ago
  • கோவில்பட்டியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மத நல்லிணக்கத்தையும், ஒற்றுமையும் வலியுறுத்தும் வகையில்  சிறுவர் சிறுமியர் விநாயகர், முருகன், வேடம் அணிந்து,பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புது கிராமத்தில் அமைந்துள்ள சக்தி விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா ஊர்வலம் ரயில் நிலையம் முன்பு மத நல்லிணக்கத்தையும்,ஒற்றுமையும் வலியுறுத்தும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவில் - சிறுவர் சிறுமியர் விநாயகர், முருகன், மேடம் அணிந்து,பக்தர்கள் 1008 பால்குடம், மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. பால்குடம் ஊர்வலத்தை கோவில்பட்டி திமுக கிழக்கு நகர செயலாளர் சுரேஷ்,தலைமையில் கோவில்பட்டி ரஜினிகாந்த் நற்பணி மன்றம் நகர செயலாளர் மகேஷ் பாலா முன்னணியில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார் இந்த ஊர்வலம் சாத்தூர் மெயின் ரோடு புது கிராமம் மெயின் ரோடு வழியாக வந்து ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோவிலுக்கு வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேத்திக்கடனை செலுத்தினர். இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    1
    கோவில்பட்டியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மத நல்லிணக்கத்தையும், ஒற்றுமையும் வலியுறுத்தும் வகையில்  சிறுவர் சிறுமியர் விநாயகர், முருகன், வேடம் அணிந்து,பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புது கிராமத்தில் அமைந்துள்ள சக்தி விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா ஊர்வலம் ரயில் நிலையம் முன்பு மத நல்லிணக்கத்தையும்,ஒற்றுமையும் வலியுறுத்தும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவில் - சிறுவர் சிறுமியர் விநாயகர், முருகன், மேடம் அணிந்து,பக்தர்கள் 1008 பால்குடம், மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. பால்குடம் ஊர்வலத்தை கோவில்பட்டி திமுக கிழக்கு நகர செயலாளர் சுரேஷ்,தலைமையில் கோவில்பட்டி ரஜினிகாந்த் நற்பணி மன்றம் நகர செயலாளர் மகேஷ் பாலா முன்னணியில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார் இந்த ஊர்வலம் சாத்தூர் மெயின் ரோடு புது கிராமம் மெயின் ரோடு வழியாக வந்து ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோவிலுக்கு வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேத்திக்கடனை செலுத்தினர். இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    user_News
    News
    கோவில்பட்டி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • தமிழக வெற்றிக்கழக அமைச்சர் வெங்கட்ராமன் அவர்கள் திடீர் ஆய்வு ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் நியாய விலை கடையில் திடீர் ஆய்வு தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் பா.வெங்கட்ராமன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து, ஆறுமுகநேரி பேரூர் கழகச் செயலாளர் ஜே.பி.வி. நிவாஸ் கண்ணன், காந்திபுரம் பகுதியில் புதிய நியாய விலைக் கடை அமைக்க வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளார். இந்த நிலையில் காந்திபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் குறிப்பாக முதியோர்கள் மற்றும் பெண்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு காந்திபுரம் பகுதியில் புதிய நியாய விலைக் கடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் பா . வெங்கட்ராமனிடம் நிவாஸ் கண்ணன் வலியுறுத்தினார்.
    2
    தமிழக வெற்றிக்கழக அமைச்சர் வெங்கட்ராமன் அவர்கள் திடீர் ஆய்வு 
ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் நியாய விலை கடையில் திடீர் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் பா.வெங்கட்ராமன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து, ஆறுமுகநேரி பேரூர் கழகச் செயலாளர் ஜே.பி.வி. நிவாஸ் கண்ணன், காந்திபுரம் பகுதியில் புதிய நியாய விலைக் கடை அமைக்க வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த நிலையில் காந்திபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் குறிப்பாக முதியோர்கள் மற்றும் பெண்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு காந்திபுரம் பகுதியில் புதிய நியாய விலைக் கடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அமைச்சர் பா . வெங்கட்ராமனிடம் நிவாஸ் கண்ணன் வலியுறுத்தினார்.
    user_Jegan
    Jegan
    திருச்செந்தூர், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • பிரசித்தி பெற்ற கோடி அற்புதர் அந்தோணியார் திருத்தல திருவிழா நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் பிரசித்தி பெற்ற புனித அந்தோனியார் திருத்தல திருவிழா தேர் பவனி நேற்று மாலை நடைபெற்றது அலங்கரிக்கப்பட்ட புனித அந்தோணியார் தேர் பவனி பக்தர்களுக்கு காட்சியளித்தது
    1
    பிரசித்தி பெற்ற கோடி அற்புதர் அந்தோணியார் திருத்தல திருவிழா 
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் பிரசித்தி பெற்ற புனித அந்தோனியார் திருத்தல திருவிழா தேர் பவனி நேற்று மாலை நடைபெற்றது அலங்கரிக்கப்பட்ட புனித அந்தோணியார் தேர் பவனி பக்தர்களுக்கு காட்சியளித்தது
    user_S.Maria selvam
    S.Maria selvam
    சேரன்மகாதேவி, திருநெல்வேலி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • தூத்துக்குடியில் பெண் நிர்வாகியை தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் மா. மாரிச்செல்வம் கண்டனத்தை தெரிவித்தார்.
    1
    தூத்துக்குடியில் பெண் நிர்வாகியை தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் மா. மாரிச்செல்வம் கண்டனத்தை தெரிவித்தார்.
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Local News Reporter ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    23 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.