Shuru
Apke Nagar Ki App…
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் யாசகர்களால் பயணிகளுக்கு அவதி திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் ஏராளமான யாசகர்கள் பேருந்தில் பயணம் செல்லும் பயணிகளிடம் யாசகம் கேட்டு பயணிகள் சில்லறை இல்லை என தர மறுத்தால் பேருந்தில் பயணம் செயலையும் பயணிகளை தகாத வார்த்தையால் திட்டுவதாக புகார் தொடர்ந்து புகார் வருகிறது. காவல்துறையினர் யாசகர்களை பேருந்து நிலையத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என திண்டுக்கல் பேருந்து பயணிகள் இன்று கோரிக்கை வைத்துள்ளனர்.
RAJA news
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் யாசகர்களால் பயணிகளுக்கு அவதி திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் ஏராளமான யாசகர்கள் பேருந்தில் பயணம் செல்லும் பயணிகளிடம் யாசகம் கேட்டு பயணிகள் சில்லறை இல்லை என தர மறுத்தால் பேருந்தில் பயணம் செயலையும் பயணிகளை தகாத வார்த்தையால் திட்டுவதாக புகார் தொடர்ந்து புகார் வருகிறது. காவல்துறையினர் யாசகர்களை பேருந்து நிலையத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என திண்டுக்கல் பேருந்து பயணிகள் இன்று கோரிக்கை வைத்துள்ளனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- ஒட்டன்சத்திரம் மற்றும் ஒட்டன்சத்திரத்தை சுற்றியுள்ள மாணவர்கள், மாணவியர்கள் ஒட்டன்சத்திரம் நகரில் வந்து கல்வி கற்று சொந்த ஊருக்கு திரும்பி செல்கிறனர். இந்நிலையில் பள்ளி விடும் நேரத்தில் அரசு சார்பில் ஊதிய பேருந்துகள் இயக்கப்படாத நிலையில் நீண்ட நேரம் காத்திருந்து தாருங்கள் பேருந்து தங்களுடைய ஊருக்கு செல்ல வேண்டியதாக மாணவியர்கள் குற்றம் சாட்டி வருகிறனர். மேலும் பள்ளி விடும் நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க பள்ளி மாணவியர்கள் கோரிக்கை.1
- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா குளத்துபட்டி அரசு மகளிர் கலை கல்லூரியில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டது சுமார் 4 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள கூடுதல் கட்டிடத்திற்கு நிலக்கோட்டை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகால பாண்டியன் கலந்து கொண்டு பூமி பூஜையை துவக்கி வைத்தார். நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் சக்தி ஸ்ரீ தலைமை வகித்தார். மேலும் இவ்விழாவில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் திமுக முக்கிய பிரமுகர்களான சேசுராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மலையாளம் துணை அமைப்பாளர் கந்த பிரபு, கல்லூரி பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.1
- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் எ. சித்தூர் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ சர்வ மங்கள ரூபிணி சாமுண்டீஸ்வரி திருக்கோவிலில் பெண்கள் பொங்கல் வைக்கும் விழா பெண்களுக்கு சீர்வரிசை வழங்கும் திருவிழா அன்னதானமும் வெகு விமர்சையாக நடைபெற்றது இக்கோயிலில் சுற்று வட்டார ஊர் பொதுமக்கள் விழா குழுவினர் வெகு விமர்சையாக திருவிழா நடைபெற்றது1
- தேனியில் 13வது நாளாக தொடரும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம் தேனி ஆட்சியர் அலுவலகம் முன் சாப்பாட்டு தட்டை கடண்டியல் அடித்து "ஓசை எழுப்பி" அதன் மூலம்தமிழக முதல்வருக்கு கோரிக்கையை வலியுறுத்தும் "கவன ஈர்ப்பு" போராட்டம் * தேனியில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் காலவரையற்ற போராட்டத்தின் 13 வது நாளில், தேனி ஆட்சியர் அலுவலகம் முன், சாப்பாட்டு தட்டை கடண்டியல் அடித்து "ஓசை எழுப்பி " அதன் மூலம் தமிழக முதல்வருக்கு கோரிக்கையை வலியுறுத்தும் "கவன ஈர்ப்பு" போராட்டம் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆளும் திமுக அரசின் கடந்த தேர்தல் வாக்குறுதி 313ன் படி, காலமுறை ஊதிய உயர்வு, காலிப்பணியிடங்கள் நிரப்புதல், ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேனியில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கடந்த ஃபெப்ரவரி மூன்றாம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களின் இந்த "ஓசை எழுப்பும்" போராட்டம் பலரின் கவனத்தையும் ஈர்ப்பதாய் அமைந்துள்ளது.1
- முன்னாள் மதுரை துணை மேயரும் திமுக பிரமுகருமன பி.எம். மன்னன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் இன்று சந்தித்தார்1
- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சத்துணவு -அங்கன்வாடி பணியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒப்பாரி வைத்தல் போராட்டம் காத்திருப்பு போராட்டம் சாலை மறியல் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து இன்று சாப்பிடும் தட்டை கொண்டு கரண்டியை கொண்டும் தாளம் அடித்து வித்தியாசமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் கால முறை ஊதியம்,வழங்க வேண்டும் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்1
- பெரியகுளத்தில் புது பஸ் நிலையம் அருகில் உள்ள மதுபான பார் கடை மூலம் மத கலவரம் ஏற்படும் அபாயம்; மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ன பொதுமக்கள் கோரிக்கை. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் புது பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மதுபானகடை பார் என்பது பொதுமக்களுக்கு மிக பெரிய இடையூறு தர கூடியது, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகும் என கடந்த இரண்டு வருடங்களாக போராட்டம் நடத்த பட்ட நிலையில் பொய்யான காரணங்களைக் கூறி நீதிமன்றம் மூலம் அந்த மதுபான கடை திறக்கப்பட்டது. அந்த கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மதுரை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த மதுபான கடை மூலம் தினம் தினம் பிரச்சினை அரங்கேறி வருகிறது. இன்று இரவு மதுபான பாரில் மது அருந்தி விட்டு சிலர் அந்த பகுதியில் உள்ள பெண்கள் இடத்தில் மிக அசிங்கம் பேசி அத்து மீறி உள்ளனர். இதை தட்டி கேட்டவர்களை மத ரீதியாக பேசியதாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். இதையடுத்து அந்த பகுதி மக்கள் நூற்றுக்கணக்கான பேர் பெரியகுளம் காவல் நிலையத்தில் குவிந்து புகார் அளித்து உள்ளனர். தமிழ் நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ் நாடு காவல் துறை தேனி மாவட்டம் ஆட்சியர் மற்றும் தேனி மாவட்டம் காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோர் மத கலவரத்தை தூண்டும் விதமாக செயல் படும் மதுபான பாரை பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக மூட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்ன பொதுமக்கள் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.1
- பானி பூரி விற்பனையாளர் ஒருவர் தண்ணீரில் இருந்து உயிருள்ள எலியை அகற்றும் அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரலாகி, 25 மில்லியன் பார்வைகளைத் தாண்டியுள்ளது. சாலையோரக் கடையில் ஒரு இளைஞர் சவால் வீடியோவை படமாக்கிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் காட்சிகள் பெரும் சுகாதாரக் கவலைகளைத் தூண்டியுள்ளது1