logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கும்பகோணத்தில் இருந்து தஞ்சை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு தனியார் பேருந்தும், திருச்சியில் இருந்து காரைக்கால் நோக்கிச் சென்ற ஒரு அரசுப் பேருந்தும், பாபநாசம் அருகே உள்ள உத்தானி ரயில்வே கேட் பகுதியில் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், அரசுப் பேருந்தின் ஓட்டுநர் உள்பட, இரு பேருந்துகளிலும் பயணித்த 10க்கும் மேற்பட்ட பயணிகளுக்குக் காயங்கள் ஏற்பட்டன. காயமடைந்த அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாகக் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கும், தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

7 hrs ago
user_Thanjavurnews
Thanjavurnews
Local News Reporter தஞ்சாவூர், தஞ்சாவூர், தமிழ்நாடு•
7 hrs ago
77f3eeb2-3e17-4687-bb62-6cb0fad97413

கும்பகோணத்தில் இருந்து தஞ்சை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு தனியார் பேருந்தும், திருச்சியில் இருந்து காரைக்கால் நோக்கிச் சென்ற ஒரு அரசுப் பேருந்தும், பாபநாசம் அருகே உள்ள உத்தானி ரயில்வே கேட் பகுதியில் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், அரசுப் பேருந்தின் ஓட்டுநர் உள்பட, இரு பேருந்துகளிலும் பயணித்த 10க்கும் மேற்பட்ட பயணிகளுக்குக் காயங்கள் ஏற்பட்டன. காயமடைந்த அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாகக் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கும், தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலின் ராஜகோபுரம் வாயிலில், இரவு 7 மணி முதல் இரவு 11 மணி வரை வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பொதுமக்களுக்கு மிகுந்த இடையூறு ஏற்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. இந்த வாகன நிறுத்தத்தால் பாதசாரிகள் சிரமப்படுவதாகவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. பொதுமக்களுக்கு ஏற்படும் இந்த அசௌகரியத்தைப் போக்குவரத்து காவலர்களும் மாநகராட்சி துறையும் கண்டுகொள்ளவில்லை. ஸ்ரீரங்கம் மாநகராட்சி துறை மற்றும் போக்குவரத்து காவலர்கள் உடனடியாக இந்தச் சிக்கலைச் சரிசெய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் தாழ்மையுடன் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், இந்த விவகாரத்தைப் பொதுமக்கள் ரங்கா மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்குக் கொண்டுசென்று, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர்.
    3
    திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலின் ராஜகோபுரம் வாயிலில், இரவு 7 மணி முதல் இரவு 11 மணி வரை வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பொதுமக்களுக்கு மிகுந்த இடையூறு ஏற்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. இந்த வாகன நிறுத்தத்தால் பாதசாரிகள் சிரமப்படுவதாகவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

பொதுமக்களுக்கு ஏற்படும் இந்த அசௌகரியத்தைப் போக்குவரத்து காவலர்களும் மாநகராட்சி துறையும் கண்டுகொள்ளவில்லை. ஸ்ரீரங்கம் மாநகராட்சி துறை மற்றும் போக்குவரத்து காவலர்கள் உடனடியாக இந்தச் சிக்கலைச் சரிசெய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் தாழ்மையுடன் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், இந்த விவகாரத்தைப் பொதுமக்கள் ரங்கா மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்குக் கொண்டுசென்று, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர்.
    user_Devan
    Devan
    ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழகத்தின் புதிய பொறுப்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம், கீழ்வேளூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்க, நகர செயலாளர் குணா வரவேற்புரை ஆற்றினார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் நாக. அருள் செல்வன் புதிய பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து சிறப்புரை ஆற்றினார். தனது உரையில், தமிழக முதலமைச்சர் தலைமையில் 17-வது சட்டப்பேரவைக் குழு அமைக்கப்பட்டதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வன்னி அரசு அமைச்சராக தேர்வு செய்யப்பட்டதற்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். மேலும், புதிதாக பொறுப்பேற்ற அனைத்து நிர்வாகிகளுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜேஷ், பாவேந்தன், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் சேகர், மாவட்ட வடக்கு நிர்வாகக் குழு உறுப்பினர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் மாவட்ட செய்தி தொடர்பாளர்கள் சந்திரன், மதியழகன், விவசாய பாதுகாப்பு குழு மாவட்ட அமைப்பாளர் மனோகரன், மாவட்ட விவசாய குழு துணை செயலாளர் வடிவழகி சேகர், மகளிர் விடுதலை அணி மாவட்ட செயலாளர் வனிதா, மாவட்ட இளம் சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட செயலாளர் சாந்தா அன்பழகன், மைய ஒன்றிய செயலாளர் சாமிநாதன், ஒன்றிய துணை செயலாளர் கவியரசன், மகளிர் விடுதலை இயக்கம் ரேவதி இளங்கோவன், சமூக ஊடக மையம் சந்திரமோகன், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் நகர துணை செயலாளர் கோவேந்திரன் நன்றி உரையாற்றினார்.
    1
    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழகத்தின் புதிய பொறுப்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம், கீழ்வேளூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்க, நகர செயலாளர் குணா வரவேற்புரை ஆற்றினார்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் நாக. அருள் செல்வன் புதிய பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து சிறப்புரை ஆற்றினார். தனது உரையில், தமிழக முதலமைச்சர் தலைமையில் 17-வது சட்டப்பேரவைக் குழு அமைக்கப்பட்டதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வன்னி அரசு அமைச்சராக தேர்வு செய்யப்பட்டதற்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். மேலும், புதிதாக பொறுப்பேற்ற அனைத்து நிர்வாகிகளுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜேஷ், பாவேந்தன், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் சேகர், மாவட்ட வடக்கு நிர்வாகக் குழு உறுப்பினர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட செய்தி தொடர்பாளர்கள் சந்திரன், மதியழகன், விவசாய பாதுகாப்பு குழு மாவட்ட அமைப்பாளர் மனோகரன், மாவட்ட விவசாய குழு துணை செயலாளர் வடிவழகி சேகர், மகளிர் விடுதலை அணி மாவட்ட செயலாளர் வனிதா, மாவட்ட இளம் சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட செயலாளர் சாந்தா அன்பழகன், மைய ஒன்றிய செயலாளர் சாமிநாதன், ஒன்றிய துணை செயலாளர் கவியரசன், மகளிர் விடுதலை இயக்கம் ரேவதி இளங்கோவன், சமூக ஊடக மையம் சந்திரமோகன், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் நகர துணை செயலாளர் கோவேந்திரன் நன்றி உரையாற்றினார்.
    user_MAHENDRAN
    MAHENDRAN
    Local News Reporter Kilvelur, Nagapattinam•
    5 hrs ago
  • காட்டுமன்னார்குடியில், சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான தொடர் பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்தும், பாலியல் குற்றவாளிகளுக்கு உடனடியாக தூக்கு தண்டனை வழங்கக் கோரியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் தெற்கு மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டனப் பேரணி நடைபெற்றது. 21-06-2026 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் காட்டுமன்னார்குடி யூனியன் அலுவலகத்தில் இருந்து பேருந்து நிலையம் வரை இந்தப் பேரணி நடந்தது. இந்தக் கண்டனப் பேரணி TNTJ கடலூர் தெற்கு மாவட்டத் தலைவர் ஃபஹத் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் துணைத் தலைவர் மஹ்பூப், செயலாளர் ஜபருல்லாஹ், பொருளாளர் அப்துல் அஹத், துணைச் செயலாளர் மைதீன், மருத்துவ அணிச் செயலாளர் அப்துல்லாஹ், மாணவர் அணிச் செயலாளர் அசார், தொண்டர் அணிச் செயலாளர் யாசீன் ஆகியோர் உட்பட 800-க்கும் அதிகமான ஆண்கள், பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் எனப் பெருந்திரளான பொதுமக்கள் கண்டனக் கோஷங்களை எழுப்பியும், பதாகைகளை ஏந்தியும் கலந்து கொண்டனர். மாநிலச் செயலாளர் அல் அமீன் அவர்கள் இந்தப் பேரணியில் பங்கேற்று இறுதியில் கண்டன உரை ஆற்றினார்.
    1
    காட்டுமன்னார்குடியில், சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான தொடர் பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்தும், பாலியல் குற்றவாளிகளுக்கு உடனடியாக தூக்கு தண்டனை வழங்கக் கோரியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் தெற்கு மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டனப் பேரணி நடைபெற்றது. 21-06-2026 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் காட்டுமன்னார்குடி யூனியன் அலுவலகத்தில் இருந்து பேருந்து நிலையம் வரை இந்தப் பேரணி நடந்தது.

இந்தக் கண்டனப் பேரணி TNTJ கடலூர் தெற்கு மாவட்டத் தலைவர் ஃபஹத் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் துணைத் தலைவர் மஹ்பூப், செயலாளர் ஜபருல்லாஹ், பொருளாளர் அப்துல் அஹத், துணைச் செயலாளர் மைதீன், மருத்துவ அணிச் செயலாளர் அப்துல்லாஹ், மாணவர் அணிச் செயலாளர் அசார், தொண்டர் அணிச் செயலாளர் யாசீன் ஆகியோர் உட்பட 800-க்கும் அதிகமான ஆண்கள், பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் எனப் பெருந்திரளான பொதுமக்கள் கண்டனக் கோஷங்களை எழுப்பியும், பதாகைகளை ஏந்தியும் கலந்து கொண்டனர். மாநிலச் செயலாளர் அல் அமீன் அவர்கள் இந்தப் பேரணியில் பங்கேற்று இறுதியில் கண்டன உரை ஆற்றினார்.
    user_Dhamodharan R
    Dhamodharan R
    காட்டுமன்னார்கோயில், கடலூர், தமிழ்நாடு•
    5 hrs ago
  • கீழ்வேளூர் தாலுக்காவில் உள்ள சாட்டியக்குடி ஊராட்சிக்குட்பட்ட கீழ விடங்களூர் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தண்ணீர் குழாய் உடைந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்ட நாள் முதல் இதுவரை குடிநீர் வாரியம் எந்த விதமான முயற்சியும் எடுக்கவில்லை. ஒரு மாத காலம் கடந்துவிட்ட நிலையிலும், உடைந்த குழாயை சீரமைப்பது குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை என்பதால் இப்பகுதி மக்கள் தொடர்ந்து குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு வருகின்றனர்.
    1
    கீழ்வேளூர் தாலுக்காவில் உள்ள சாட்டியக்குடி ஊராட்சிக்குட்பட்ட கீழ விடங்களூர் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தண்ணீர் குழாய் உடைந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்ட நாள் முதல் இதுவரை குடிநீர் வாரியம் எந்த விதமான முயற்சியும் எடுக்கவில்லை. ஒரு மாத காலம் கடந்துவிட்ட நிலையிலும், உடைந்த குழாயை சீரமைப்பது குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை என்பதால் இப்பகுதி மக்கள் தொடர்ந்து குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு வருகின்றனர்.
    user_சித்திரவேல்
    சித்திரவேல்
    கீழ்வேளூர், நாகப்பட்டினம், தமிழ்நாடு•
    17 hrs ago
  • விருத்தாசலத்தில் அமைந்துள்ள தமிழக வெற்றி கழக அலுவலகத்தில், அதிமுக மங்கலம்பேட்டை பேரூர் கழக செயலாளர் பாலு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். மாவட்ட செயலாளர் EMR விஜய் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், புதிதாக இணைந்த அனைவரையும் அவர் பொன்னாடை மற்றும் கட்சி துண்டு அணிவித்து வரவேற்று மகிழ்ந்தார்.
    1
    விருத்தாசலத்தில் அமைந்துள்ள தமிழக வெற்றி கழக அலுவலகத்தில், அதிமுக மங்கலம்பேட்டை பேரூர் கழக செயலாளர் பாலு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். மாவட்ட செயலாளர் EMR விஜய் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், புதிதாக இணைந்த அனைவரையும் அவர் பொன்னாடை மற்றும் கட்சி துண்டு அணிவித்து வரவேற்று மகிழ்ந்தார்.
    user_Premkumar prem Prem
    Premkumar prem Prem
    Engineer விருத்தாசலம், கடலூர், தமிழ்நாடு•
    2 hrs ago
  • திருச்சி மாவட்டம், மணப்பாறையில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ், ஸ்ரீரங்கம் தொகுதியில் தன்னை "காணவில்லை" என்று திமுகவினர் பரப்பும் அவதூறு பிரச்சாரத்திற்கு "கொஞ்சூண்டு ஜெலுசில் மருந்தை குடித்துவிட்டு வீட்டில் இருக்கலாம்" என்று காட்டமாக பதிலளித்தார். தனது வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் திருச்சியைத் தங்கள் கோட்டை என்று நினைத்துக்கொண்டிருந்த நிலையில், அது தளபதியின் கோட்டையாக மாறியதை ஏற்க முடியாமல், பொதுமக்கள் புகார் அளிப்பதாகக் கூறி திமுகவினர் திட்டமிட்ட தாக்குதலை நடத்தி வருவதாக அவர் குற்றம்சாட்டினார். இது முற்றிலும் பொய்யான பிரச்சாரம் என்றும், மக்கள் இதனை நம்ப மாட்டார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். கடந்த ஒரு மாதமாக ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் மக்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு தனது எம்எல்ஏ அலுவலக அதிகாரிகள் மற்றும் கழகத் தோழர்கள் மூலம் உடனடியாகத் தீர்வு கண்டதற்கான ஆதாரங்களாகப் புகைப்படங்களையும் நன்றி கடிதங்களையும் அமைச்சர் சமர்ப்பித்தார். குடிநீர் தொட்டிகள் திறப்பது, கழிப்பறைகள் அமைப்பது உள்ளிட்ட பல மக்கள் பணிகள் நிறைவேற்றப்பட்டதாகவும், தொலைபேசி அழைப்புகளை ஏற்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் தனது அலுவலகத்தில் பராமரிக்கப்படும் அழைப்புப் பதிவு நோட்டைக் காட்டி அவர் மறுத்தார். தமிழ்நாடு முழுவதும் கோயில்கள் சீரமைப்புப் பணிகளிலும், திருச்சி மாவட்டப் பொறுப்பு அமைச்சராக அனைத்துத் துறை அதிகாரிகளுடன் சீராய்வு கூட்டங்களை நடத்தியும் தான் செயல்பட்டு வருவதால், தொகுதிப் பணிகள் தடைபடாமல் நடைபெறுவதாகவும் அவர் விளக்கமளித்தார். சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் துறைசார்ந்த கேள்விகளுக்குப் பதிலாகத் தேவையற்ற கேள்விகளை எழுப்புவதாகவும், மாண்புமிகு முதலமைச்சரை ஒருமையில் பேசியும் கிண்டல் செய்தும் சட்டமன்றத்தின் மாண்பைக் கெடுப்பதாகவும் அமைச்சர் ரமேஷ் சாடினார். "மாற்றம் வேண்டும் என ஏமாற்றமே மிஞ்சியது" என்ற மு.க. ஸ்டாலின் அவர்களின் கூற்றை மறுத்த அவர், கடந்த ஐந்து ஆண்டுக்கால நிர்வாகச் சீர்கேட்டையும் பொருளாதாரச் சிக்கல்களையும் சரிசெய்ய கால அவகாசம் தேவை என்றும், மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், ஊழலை ஒழிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார். மு.க. ஸ்டாலின் வீட்டிலிருந்து சட்டமன்ற நிகழ்வுகளைப் பார்க்க நேர்ந்ததாலேயே இந்த விமர்சனங்களை முன்வைப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் என்ற முறையில், திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 1 முதல் செல்போன் தடை அமல்படுத்தப்படுவதாகவும், விரைவில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட வசதிகள் பெரிய கோயில்களில் முதல் கட்டமாக அமல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். மேலும், துவங்கப்படாத ₹246 கோடி மதிப்பிலான திட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, அந்த நிதி பக்தர்கள் தங்கும் இடம், அன்னதானக் கூடங்கள், கழிப்பறைகள், குடிநீர், வாகன நிறுத்துமிட வசதிகள் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் என்றும், அதற்கான புதிய திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். காவிரி உபரி நீரை மாயாற்றிலிருந்து பொன்னணியாறு அணை மற்றும் கல்லணைக்குக் கொண்டுசெல்லும் திட்டம் குறித்து அதிகாரிகளுடன் பேசி ஆய்வு அறிக்கை வந்தவுடன் முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுசென்று தீர்வு காணப்படும் என்றும் அவர் உறுதிபடக் கூறினார். இறுதியாக, மக்கள் தங்களை ஆதரித்து பாராட்டி வருவதாகவும், திருச்சி தளபதியின் கோட்டையாக மாறியுள்ளதாகவும், அடுத்த தேர்தலில் த.வே.க அனைத்து 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும் அமைச்சர் ரமேஷ் நம்பிக்கை தெரிவித்தார். திமுகவினர் பொய்யான பிரச்சாரங்களை விடுத்து மக்கள் பணி செய்யுமாறு அவர் சவால் விடுத்தார்.
    1
    திருச்சி மாவட்டம், மணப்பாறையில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ், ஸ்ரீரங்கம் தொகுதியில் தன்னை "காணவில்லை" என்று திமுகவினர் பரப்பும் அவதூறு பிரச்சாரத்திற்கு "கொஞ்சூண்டு ஜெலுசில் மருந்தை குடித்துவிட்டு வீட்டில் இருக்கலாம்" என்று காட்டமாக பதிலளித்தார். தனது வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் திருச்சியைத் தங்கள் கோட்டை என்று நினைத்துக்கொண்டிருந்த நிலையில், அது தளபதியின் கோட்டையாக மாறியதை ஏற்க முடியாமல், பொதுமக்கள் புகார் அளிப்பதாகக் கூறி திமுகவினர் திட்டமிட்ட தாக்குதலை நடத்தி வருவதாக அவர் குற்றம்சாட்டினார். இது முற்றிலும் பொய்யான பிரச்சாரம் என்றும், மக்கள் இதனை நம்ப மாட்டார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கடந்த ஒரு மாதமாக ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் மக்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு தனது எம்எல்ஏ அலுவலக அதிகாரிகள் மற்றும் கழகத் தோழர்கள் மூலம் உடனடியாகத் தீர்வு கண்டதற்கான ஆதாரங்களாகப் புகைப்படங்களையும் நன்றி கடிதங்களையும் அமைச்சர் சமர்ப்பித்தார். குடிநீர் தொட்டிகள் திறப்பது, கழிப்பறைகள் அமைப்பது உள்ளிட்ட பல மக்கள் பணிகள் நிறைவேற்றப்பட்டதாகவும், தொலைபேசி அழைப்புகளை ஏற்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் தனது அலுவலகத்தில் பராமரிக்கப்படும் அழைப்புப் பதிவு நோட்டைக் காட்டி அவர் மறுத்தார். தமிழ்நாடு முழுவதும் கோயில்கள் சீரமைப்புப் பணிகளிலும், திருச்சி மாவட்டப் பொறுப்பு அமைச்சராக அனைத்துத் துறை அதிகாரிகளுடன் சீராய்வு கூட்டங்களை நடத்தியும் தான் செயல்பட்டு வருவதால், தொகுதிப் பணிகள் தடைபடாமல் நடைபெறுவதாகவும் அவர் விளக்கமளித்தார்.

சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் துறைசார்ந்த கேள்விகளுக்குப் பதிலாகத் தேவையற்ற கேள்விகளை எழுப்புவதாகவும், மாண்புமிகு முதலமைச்சரை ஒருமையில் பேசியும் கிண்டல் செய்தும் சட்டமன்றத்தின் மாண்பைக் கெடுப்பதாகவும் அமைச்சர் ரமேஷ் சாடினார். "மாற்றம் வேண்டும் என ஏமாற்றமே மிஞ்சியது" என்ற மு.க. ஸ்டாலின் அவர்களின் கூற்றை மறுத்த அவர், கடந்த ஐந்து ஆண்டுக்கால நிர்வாகச் சீர்கேட்டையும் பொருளாதாரச் சிக்கல்களையும் சரிசெய்ய கால அவகாசம் தேவை என்றும், மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், ஊழலை ஒழிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார். மு.க. ஸ்டாலின் வீட்டிலிருந்து சட்டமன்ற நிகழ்வுகளைப் பார்க்க நேர்ந்ததாலேயே இந்த விமர்சனங்களை முன்வைப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் என்ற முறையில், திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 1 முதல் செல்போன் தடை அமல்படுத்தப்படுவதாகவும், விரைவில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட வசதிகள் பெரிய கோயில்களில் முதல் கட்டமாக அமல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். மேலும், துவங்கப்படாத ₹246 கோடி மதிப்பிலான திட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, அந்த நிதி பக்தர்கள் தங்கும் இடம், அன்னதானக் கூடங்கள், கழிப்பறைகள், குடிநீர், வாகன நிறுத்துமிட வசதிகள் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் என்றும், அதற்கான புதிய திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். காவிரி உபரி நீரை மாயாற்றிலிருந்து பொன்னணியாறு அணை மற்றும் கல்லணைக்குக் கொண்டுசெல்லும் திட்டம் குறித்து அதிகாரிகளுடன் பேசி ஆய்வு அறிக்கை வந்தவுடன் முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுசென்று தீர்வு காணப்படும் என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.

இறுதியாக, மக்கள் தங்களை ஆதரித்து பாராட்டி வருவதாகவும், திருச்சி தளபதியின் கோட்டையாக மாறியுள்ளதாகவும், அடுத்த தேர்தலில் த.வே.க அனைத்து 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும் அமைச்சர் ரமேஷ் நம்பிக்கை தெரிவித்தார். திமுகவினர் பொய்யான பிரச்சாரங்களை விடுத்து மக்கள் பணி செய்யுமாறு அவர் சவால் விடுத்தார்.
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே அமைந்துள்ள லால்பேட்டை கொல்லிமலை கீழ் பாதி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் சுவாமிகள் ஆலயத்தின் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த சிறப்புமிக்க நிகழ்வில், கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். கும்பாபிஷேக விழா இனிதே நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
    1
    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே அமைந்துள்ள லால்பேட்டை கொல்லிமலை கீழ் பாதி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் சுவாமிகள் ஆலயத்தின் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த சிறப்புமிக்க நிகழ்வில், கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். கும்பாபிஷேக விழா இனிதே நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
    user_Dhamodharan R
    Dhamodharan R
    காட்டுமன்னார்கோயில், கடலூர், தமிழ்நாடு•
    7 hrs ago
  • தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உத்தாணி பகுதியில் ஒரு அரசுப் பேருந்தும், ஜீனத் என்ற தனியார் பேருந்தும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்த 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி ஜீனத் தனியார் பேருந்து வந்துகொண்டிருந்தபோது, திருச்சியில் இருந்து காரைக்கால் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்துடன் உத்தாணி திருப்பத்தில் மோதியது. படுகாயமடைந்த பயணிகளை அருகிலிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக தஞ்சாவூர்-கும்பகோணம் செல்லும் பேருந்துகள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
    1
    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உத்தாணி பகுதியில் ஒரு அரசுப் பேருந்தும், ஜீனத் என்ற தனியார் பேருந்தும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்த 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி ஜீனத் தனியார் பேருந்து வந்துகொண்டிருந்தபோது, திருச்சியில் இருந்து காரைக்கால் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்துடன் உத்தாணி திருப்பத்தில் மோதியது. படுகாயமடைந்த பயணிகளை அருகிலிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து காரணமாக தஞ்சாவூர்-கும்பகோணம் செல்லும் பேருந்துகள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
    user_சிவகுமார்.மு
    சிவகுமார்.மு
    பத்திரிகையாளர் பாபநாசம், தஞ்சாவூர், தமிழ்நாடு•
    7 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.