Shuru
Apke Nagar Ki App…
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியம், செவ்வத்தூர் ஊராட்சிக்குட்பட்ட புதூர் ஆதிதிராவிடர் காலனியில் நீண்ட நாட்களாகக் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண, ஊராட்சி நிர்வாகம் உடனடியாகச் செயல்பட்டு, பழைய ஆழ்துளைக் கிணற்றில் இருந்த மின் மோட்டாரைச் சரிசெய்தது. மேலும், புதிய குழாய்களைக் கிணற்றில் இறக்கி குடிநீர் விநியோகத்தைச் சீரமைத்தது. ஊராட்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் காலனியின் குடிநீர் தட்டுப்பாடு முழுமையாகச் சரிசெய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, புதூர் ஆதிதிராவிடர் காலனி ஊர் பொதுமக்கள் சார்பாக, சமூக ஆர்வலர் கே. மூர்த்தி, ஊராட்சி நிர்வாகத்திற்கும் ஊராட்சி செயலாளருக்கும் தனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.
KALAI REPORTER
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியம், செவ்வத்தூர் ஊராட்சிக்குட்பட்ட புதூர் ஆதிதிராவிடர் காலனியில் நீண்ட நாட்களாகக் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண, ஊராட்சி நிர்வாகம் உடனடியாகச் செயல்பட்டு, பழைய ஆழ்துளைக் கிணற்றில் இருந்த மின் மோட்டாரைச் சரிசெய்தது. மேலும், புதிய குழாய்களைக் கிணற்றில் இறக்கி குடிநீர் விநியோகத்தைச் சீரமைத்தது. ஊராட்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் காலனியின் குடிநீர் தட்டுப்பாடு முழுமையாகச் சரிசெய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, புதூர் ஆதிதிராவிடர் காலனி ஊர் பொதுமக்கள் சார்பாக, சமூக ஆர்வலர் கே. மூர்த்தி, ஊராட்சி நிர்வாகத்திற்கும் ஊராட்சி செயலாளருக்கும் தனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.
More news from தமிழ்நாடு and nearby areas
- திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி - ஆலங்காயம் சாலையில் உள்ள ஆலங்காயம் பெரிய ஏரியில் இருந்து, இன்று இரவு 8 மணியளவில் அரிய வகை பெண் ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக வெளியேறி வருகின்றன. ஏரிக் கரை பகுதியில் இருந்து வெளிவரும் இந்த ஆமைகள், சாலையில் செல்லும் வாகனங்களில் சிக்கிக் கொள்ளும் அபாயம் உள்ளதால், ஆலங்காயம் வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து அவற்றை பாதுகாக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட புதுமனை பகுதியில், ரஜினிகாந்தி என்பவர் உரிய மருத்துவ படிப்பு படிக்காமல் பொதுமக்களுக்கு பொதுமருத்துவம் பார்த்து வருவதாக ஆம்பூர் அரசு மருத்துவமனை, மருத்துவ அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில், மருத்துவ அதிகாரிகள் அப்பகுதியில் சோதனை நடத்தினர். சோதனையில், ரஜினிகாந்தி முறையான மருத்துவ படிப்பு இல்லாமல் மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, மருத்துவ அதிகாரிகள் அவரை ஆம்பூர் நகர காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர், மேலும் அவரது கிளினிக்கிற்கு சீல் வைத்தனர். பின்னர், ரஜினிகாந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.1
- காரிமங்கலம் அருகே ஒரு இருசக்கர வாகனம் மீது மாங்காய் ஏற்றி வந்த பிக்கப் வாகனம் நேருக்கு நேர் மோதியது. இந்த பயங்கரமான விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.1
- தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மாங்காய் லோடு ஏற்றி வந்த பிக்கப்வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில், எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி இருவர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பாலக்கோடு அடுத்த சூடப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிக்கப்வேன் ஓட்டுநர் சுமன் (30), வெள்ளிச்சந்தை தோட்டத்தில் இருந்து மாம்பழங்களை ஏற்றி மாம்பழத் தொழிற்சாலைக்கு காரிமங்கலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, முதலிப்பட்டி தனியார் பட்டாசுக் கடை அருகே இந்த விபத்து ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தில் வந்த சொன்னம்பட்டியைச் சேர்ந்த வேடியப்பன் (45) மற்றும் கேத்தனஅள்ளியைச் சேர்ந்த ராஜப்பன் (55) ஆகியோர் படுகாயமடைந்தனர். விபத்தில் காயமடைந்த இருவரையும் காரிமங்கலம் போலீசார் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.1
- சேலம் மாவட்டம், தாரமங்கலம் சின்னப்பம்பட்டி பகுதியில் நீட் தேர்வு பயத்தால் உயிரிழந்த மாணவி கோபிகாவின் இல்லத்திற்கு திமுகவினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். முன்னாள் அமைச்சர் திரு. இரா. ராஜேந்திரன், திமுக எம்பிக்களான எஸ்.ஆர். சிவலிங்கம் மற்றும் செல்வகணபதி ஆகியோர் நிர்வாகிகளுடன் இணைந்து பேரணியாகச் சென்று மாணவி கோபிகாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும், அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்ததோடு, சேலம் மேற்கு மாவட்ட திமுக சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கப்பட்டது.1
- கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலையின் வெள்ளிமலை அருகே அமைந்துள்ள மொட்டையனூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி மற்றும் நூலகத்தை சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் ராகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, அப்பகுதி பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகள் மற்றும் அடிப்படைத் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், நீண்ட நாட்களாக பயன்பாடின்றி மூடப்பட்டிருக்கும் நூலகத்தை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சட்டமன்ற உறுப்பினர் உறுதியளித்தார். அத்துடன், மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் புதிய விளையாட்டு மைதான வசதியை ஏற்படுத்தவும், போதிய பாதுகாப்பு இல்லாத அரசுப் பள்ளிக்கு தடுப்புச் சுவர் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினரின் இந்த ஆய்வு மற்றும் அவர் அளித்த வாக்குறுதிகளால் அப்பகுதி மக்களும், மாணவர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்களின் நீண்டகாலக் கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கை மக்களிடையே ஏற்பட்டுள்ளது.1
- திருப்பத்தூர் மாவட்டத்தில் 'BETA SMART' என்ற நிறுவனம், முதலீடு செய்தால் மிகப்பெரிய லாபம் கிடைக்கும் என்றும், 22 ஆண்டுகள் வருமானம் தரக்கூடிய திட்டம் என்றும் கூறி பொதுமக்களை ஏமாற்றியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த வர்மா, மனோஜ்குமார் மற்றும் சந்தோஷ்குமார் ஆகிய நிறுவன உரிமையாளர்கள், தங்களுக்கு ஆப்பிரிக்காவில் தங்கச் சுரங்கம் இருப்பதாகவும், துபாயில் ஹோட்டல் தொழிலில் முதலீடு செய்திருப்பதாகவும் நம்பகத்தன்மையை ஏற்படுத்தினர். முதலீடு செய்தவர்களின் செல்போன்களில் அக்டோபர் 20, 2024 அன்று BETA SMART ID ஒன்றை உருவாக்கி, முதற்கட்டமாக ₹9,000/- பெற்றுக்கொண்டு 100 டாலர் முதலீடு செய்யப்பட்டதாகக் கூறினர். இத்திட்டத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும், டாலர் மற்றும் BTR காயின் மூலம் வருமானம் பெறலாம் என்றும் வாக்குறுதி அளித்தனர். அவர்களின் வழிகாட்டுதலின்படி கமல், ஜெகதீசன், பழனி, அம்சவேணி, சாமு, அன்புக்கரசு, திலீப்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தனர். வாணியம்பாடி சுப்ரபாதம், ஏலகிரி மலை AGS மற்றும் யாத்திரி நிவாஸ் போன்ற இடங்களில் நடைபெற்ற கூட்டங்களில் வர்மா, மனோஜ்குமார் மற்றும் சந்தோஷ்குமார் ஆகியோர் பல லட்சம் ரூபாய்களைக் காட்டி நம்பகத்தன்மை குறித்து விளக்கமளித்தனர். புதிய முதலீட்டாளர்களைச் சேர்த்தால் 5% கமிஷன் வழங்கப்படும் என்றும், முதலீட்டுத் தொகைக்கு தினசரி வருமானம் கிடைக்கும் என்றும் கூறி பலரை இதில் ஈடுபடுத்தினர். திருப்பத்தூர், வாணியம்பாடி, சேலம், திருவண்ணாமலை, ஆம்பூர், ஆரணி, செங்கம், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் 2500-க்கும் மேற்பட்டோர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். பின்னர், BETA SMART செயலியில் காண்பிக்கப்பட்ட தொகையை பணமாக மாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. முதலீட்டாளர்களிடமிருந்து பெறப்பட்ட பணத்தை வர்மா, மனோஜ்குமார் மற்றும் சந்தோஷ்குமார் ஆகியோர் மோசடி செய்துவிட்டனர். திருப்பத்தூர் பகுதியிலேயே சுமார் ₹20 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதுடன், சேலம், திருவண்ணாமலை, ஆம்பூர், ஆரணி, செங்கம், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ₹40 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக ₹60 கோடி அளவிற்கு மக்களின் பணம் மோசடியில் ஈடுபட்டுள்ளது. மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு முதலீட்டாளர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.2
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவேரிப்பட்டணம் அருகே கோசமேடு முதல் சாப்பரம் செல்லும் சாலை பல ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் உள்ளது. குறிப்பாக கோசமேடு அன்னா கொட்டாய் அருகே சாலை கடுமையாகச் சேதமடைந்து, மழை பெய்யும்போது தண்ணீர் குளம் போலத் தேங்கி நிற்கும் அவல நிலை நீடிக்கிறது. இந்தச் சாலையின் மேடு பள்ளங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துடன் திணறிச் செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இது குறித்து பலமுறை கோரிக்கைகள் வைக்கப்பட்டும், அரசு அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதுடன் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனம் காட்டி வருகின்றனர். வாகன ஓட்டிகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள இந்தச் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.1