Shuru
Apke Nagar Ki App…
பஞ்சுப்பேட்டை அருகே கஞ்சா விற்ற இளைஞர் கைது காஞ்சிபுரம் அடுத்த பஞ்சுப்பேட்டை வேளாண்மை துறை அலுவலகம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, காஞ்சிபுரம் செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த உதயா என்பவரை சிவ காஞ்சி போலீசார் இன்று (ஜன.8) கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்து 1.200 கிலோ கஞ்சா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Naga Rajan
பஞ்சுப்பேட்டை அருகே கஞ்சா விற்ற இளைஞர் கைது காஞ்சிபுரம் அடுத்த பஞ்சுப்பேட்டை வேளாண்மை துறை அலுவலகம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, காஞ்சிபுரம் செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த உதயா என்பவரை சிவ காஞ்சி போலீசார் இன்று (ஜன.8) கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்து 1.200 கிலோ கஞ்சா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- காஞ்சிபுரம். பாலுச்செட்டிசத்திரத்தில் புதிய சாலை வசதி ஏற்படுத்திட கோரி திமுக தலைமை செயற்குழு உறுப்பினரிடம் அண்ணா நகர் முதல் தெரு பகுதிவாசிகள் கோரிக்கை விடுப்பு காஞ்சிபுரம் ஒன்றியம், பாலுச்செட்டிசத்திரம் அண்ணா நகர் முதல் தெரு பகுதிவாசிகள் தங்கள் பகுதிகளில் தேங்கும் குப்பைகளை அகற்றிடவும்,புதிய சாலை வசதி எற்படுத்திடவும்,புதிய கல்வெட்டு அமைத்திட கோரியும் திமுக காஞ்சி தெற்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமாரிடம் கோரிக்கை விடுத்தனர்.இது குறித்து உள்ளாட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு உடனடியாக எடுத்துச்சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.இந்நிகழ்வின் போது முட்டவாக்கம் ஏரி நீர் பாசன சங்க தலைவர் முட்டவாக்கம் மனோகரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- *போச்சம்பள்ளி சந்தையில் பொங்கல் முன்னிட்டு – ஆடு, கோழி, தங்கம், மளிகை, மாட்டு அலங்காரம் வரை விற்பனை ஜோர்* *தமிழ்நாடு – கர்நாடகா – ஆந்திரா மாநிலங்களிலிருந்து வியாபாரிகள் வருகை; இன்று மட்டும் 5 கோடிக்கு ஆடு விற்பனை!* கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கிய வர்த்தக மையமான போச்சம்பள்ளியில் இன்று நடைபெற்று வரும் வாரச் சந்தை, தைப்பொங்கல், , மாட்டு பொங்கல் , காணும் பொங்கல் ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு அதிகாலையிலேயே பெரும் கூட்ட நெரிசலுடன் களைகட்டியது. வாடிக்கையாளர்கள் அதிகாலை 5 மணி முதலே சந்தைக்கு திரண்டதால், வியாபாரிகள் தங்கள் கடைகளை முன்கூட்டியே அமைத்து விற்பனையைத் தொடங்கினர். இன்றைய சந்தையின் சிறப்பம்சமாக, தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களுடன் அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களிலிருந்தும் ஏராளமான வியாபாரிகள் வருகை தந்திருந்தனர். வேறுபட்ட மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆடுகள், கோழிகள், மளிகை பொருட்கள், காய்–பழங்கள் மற்றும் மசாலா பொருட்கள் மிக உயர்ந்த விற்பனையைப் பெற்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இறைச்சி தேவையும், குலதெய்வ வழிபாடு, நேர்த்திக்கடன் செலுத்துதல், பலி வழிபாடு ஆகியவற்றிற்கான ஆடுகளின் தேவை அதிகரித்ததால், இந்த வாரம் மட்டும் 5 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 20–25 கிலோ எடை கொண்ட ஆடுகள் 19,000 முதல் 23,000 ரூபாய் வரை விற்பனையாகின. மாட்டு பொங்கல் நெருங்கிவருவதால், கால்நடைகளுக்கான அலங்காரப் பொருட்கள் சந்தையில் அதிகம் தேவை பெற்றன. விற்பனையாளர்கள் கொண்டு வந்த மாட்டுக் கொம்புக்கு நிறமூட்டும் பவுடர்கள் – சிவப்பு, மஞ்சள், பச்சை கொம்புக்கு கட்டும் மணி, தாலம் கழுத்தில் அணிவிக்கும் பொன்/வெள்ளி நிற அலங்கார கயிறுகள் மாட்டிற்கு அணிவிக்கும் முத்து சங்கிலி, முல்லுறி ரிப்பன், வால் அலங்காரம் அலங்கார குட்டைகள் மற்றும் வண்ணத்துண்டுகள் இந்த பொருட்கள் அனைத்தும் அதிகாலை முதலே வேகமாக விற்று, பெரும்பாலான கடைகளில் பொருட்கள் மாலைக்குள் விற்றுவிட்டன. அரிசி, சர்க்கரை, பருப்பு வகைகள், மஞ்சள், நெய் போன்ற பண்டிகை மளிகைப் பொருட்கள் அதிக விற்பனையாகின காய்கறி விலை உயர்ந்திருந்தாலும், விற்பனை அதிகரித்தது தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த அனைத்து வியாபாரிகளும், “இன்று விற்பனை மிக சிறப்பாக உள்ளது. கடந்த வாரங்களை விட இரட்டிப்பு அளவில் மக்கள் வருகை. பண்டிகை முன்பாக சந்தை முழுவதும் விற்பனை சூடுபிடித்துள்ளது,” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.1
- தர்மபுரி குமாரசாமிபேட்டை பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் தர்மபுரி எம்எல்ஏ எஸ் பி வெங்கடேஸ்வரன் திறந்த வைத்தார். தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுத்திகரிப்பு குடிநீர் நிலையம் மூன்று இடங்களில் குமாரசாமிபேட்டை. ராஜகோபால் பகுதிகளில் சுத்திகரிப்பு குடிநீர் நிலையம் 30 லட்சம் மதிப்பிலான சுத்திகரிப்பு குடிநீர் நிலையத்தை தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் திறந்து வைத்தார். தர்மபுரி நகராட்சி ஆணையர் சேகர் நகரச் செயலாளர் வெங்கடேஷ் கிழக்கு நகர செயலாளர் ராஜ்குமார். வன்னியர் சங்க நகர செயலாளர் கௌரப்பன். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரி மோகன் மாநில செயற்குழு உறுப்பினர் டிஜி மணி . வஜ்ரம். நிர்வாகிகள் செந்தில் வெங்கடேசன் கணேசன் ஜெகன் அருள் ராஜி ஜெய்கணேஷ் பெரியவன் சீனிவாசன் சிவகுமார். ஒப்பந்ததாரர் ராஜ்குமார். கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்1
- நல்லம்பள்ளியில் இடைவிடாமல் பொழியும் சாரல் மழை தர்மபுரி மாவட்டம் பல்வேறு பகுதியில் கடந்த ஒரு சில தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது ஒரு சில இடங்களில் சாரல் மழை பொழிந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் நல்லம்பள்ளி லளிகம், கோவிலூர், பாலக்கோடு புலிக்கரை கடமடை என பல்வேறு பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் சாரல் மலையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பொழிந்து வருகிறது இதனால் கடும் குளிர் நிலவுகிறது1
- உதகை அருகே முதுமலை வனப்பகுதிற்குட்பட்ட வாழைத் தோட்டம் பகுதியில் சாலையின் நடுவே கம்பீரமாக நின்ற காட்டு யானை... சுமார் ஒரு மணி நேரமாக நின்றதால் போக்குவரத்து பாதிப்பு... உதகை அருகே முதுமலை புலிகள் காப்பக வனப் பகுதி சாலையிலுள்ள வாழைத் தோட்டம் - மசினகுடி சாலையில் ஒற்றை காட்டு யானை சாலையின் நடுவே கம்பீரமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நின்றது. இதனால் சாலையின் இரு புறமும் வாகனங்கள் அணி வகுத்து நின்றன். இதனால் வாழைத்தோட்டம் - மசினகுடி சாலையில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது1
- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அய்யம்பேட்டை அருகே பசுபதிகோவில் பகுதியில் அமைந்துள்ள புனித கபிரியேல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு கோலப்போட்டிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று வித விதமான கோலங்கள் போட்டு அசத்தினர். ஒவ்வொரு கோலமும் சிறந்தது என கூறும் அளவிற்கு மாணவிகள் தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.. இறுதியில் நடுவர்கள் சிறந்த கோலங்களை முடிவு செய்து ஒவ்வொரு வகுப்பிற்கும் தலா மூன்று பரிசுகள் வீதம் தலைமை ஆசிரியை சிஸ்டர் அடைக்கலமேரி வழங்கினார்கள். மேலும் கோலப் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவிகளுக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1