logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

விருதுநகர் மாவட்டம் e-KYC பதிவினை 100% நிறைவு செய்யும் பொருட்டு 29.08.2026 அன்று அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது- மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் தகவல். விருதுநகர் மாவட்டத்தில் e-KYC பதிவினை 100% நிறைவு செய்யும் பொருட்டு 29.08.2026 அன்று அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள e-KYC பதிவு மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கு 29.08.2026 அன்று நேரில் சென்று e-KYC பதிவு செய்யமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களில் e-KYC பதிவு செய்யாத எவரேனும் பணிநிமித்தமாக தமிழ்நாட்டின் வேறு பகுதிகளில் தற்காலிகமாக வசிப்பவர் எனில், அவர்களும் தற்போது வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கு தமது குடும்ப அட்டை விபரத்துடன் சென்று e-KYC பதிவு செய்யலாம். எனவே, e-KYC பதிவு செய்யாமல் உள்ள குடும்ப அட்டை உறுப்பினர்கள் அனைவரும் 29.08.2026 அன்று நடைபெறும் சிறப்பு முகாமில் அவசியம் e-KYC பதிவு மேற்கொண்டு விருதுநகர் மாவட்டத்தில் e-KYC பதிவு செய்யும் பணி 100% நிறைவு பெற்றிடுவதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 hr ago
user_குமார்
குமார்
Firefighter Kariapatti, Virudhunagar•
1 hr ago

விருதுநகர் மாவட்டம் e-KYC பதிவினை 100% நிறைவு செய்யும் பொருட்டு 29.08.2026 அன்று அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது- மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் தகவல். விருதுநகர் மாவட்டத்தில் e-KYC பதிவினை 100% நிறைவு செய்யும் பொருட்டு 29.08.2026 அன்று அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள e-KYC பதிவு மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கு 29.08.2026 அன்று நேரில் சென்று e-KYC பதிவு செய்யமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களில் e-KYC பதிவு செய்யாத எவரேனும் பணிநிமித்தமாக தமிழ்நாட்டின் வேறு பகுதிகளில் தற்காலிகமாக வசிப்பவர் எனில், அவர்களும் தற்போது வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கு தமது குடும்ப அட்டை விபரத்துடன் சென்று e-KYC பதிவு செய்யலாம். எனவே, e-KYC பதிவு செய்யாமல் உள்ள குடும்ப அட்டை உறுப்பினர்கள் அனைவரும் 29.08.2026 அன்று நடைபெறும் சிறப்பு முகாமில் அவசியம் e-KYC பதிவு மேற்கொண்டு விருதுநகர் மாவட்டத்தில் e-KYC பதிவு செய்யும் பணி 100% நிறைவு பெற்றிடுவதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

More news from Virudhunagar and nearby areas
  • காரியாபட்டி பகுதிகளில் தீவிர வாகன சோதனை – 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல்; ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வட்டாரப் போக்குவரத்துத் துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். விருதுநகர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மாணிக்கம் மற்றும் காரியாபட்டி காவல் சார்பு ஆய்வாளர் வீரணன் தலைமையில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் காரியாபட்டி பகுதிகளில் முக்கிய சாலைகள் மற்றும் வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது வாகனங்களின் RC, FC, காப்பீடு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. அப்போது முறையான ஆவணங்கள் இன்றியும், போக்குவரத்து விதிமுறைகளை மீறியும் இயக்கப்பட்ட செப்டிக் டேங்க் வாகனம், தண்ணீர் வாகனம், டாடா ஏசி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் கண்டறியப்பட்டன. இதையடுத்து விதிமுறைகளை மீறிய வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து காரியாபட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், விதிமீறல் செய்த வாகனங்களுக்கு சுமார் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களுக்கான அனைத்து ஆவணங்களையும் முறையாக வைத்திருப்பதுடன், செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமத்துடன் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர். மேலும், சாலை பாதுகாப்பை கருத்தில் கொண்டு காரியாபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து வாகன சோதனைகள் நடத்தப்படும் என்றும், போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர். தீவிர வாகன சோதனை காரணமாக காரியாபட்டி பகுதியில் வாகன ஓட்டிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.
    1
    காரியாபட்டி பகுதிகளில் தீவிர வாகன சோதனை – 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல்; ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் அபராதம்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வட்டாரப் போக்குவரத்துத் துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
விருதுநகர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மாணிக்கம் மற்றும் காரியாபட்டி காவல் சார்பு ஆய்வாளர் வீரணன் தலைமையில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் காரியாபட்டி பகுதிகளில் முக்கிய சாலைகள் மற்றும் வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின்போது வாகனங்களின் RC, FC, காப்பீடு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. அப்போது முறையான ஆவணங்கள் இன்றியும், போக்குவரத்து விதிமுறைகளை மீறியும் இயக்கப்பட்ட செப்டிக் டேங்க் வாகனம், தண்ணீர் வாகனம், டாடா ஏசி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் கண்டறியப்பட்டன.
இதையடுத்து விதிமுறைகளை மீறிய வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து காரியாபட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், விதிமீறல் செய்த வாகனங்களுக்கு சுமார் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களுக்கான அனைத்து ஆவணங்களையும் முறையாக வைத்திருப்பதுடன், செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமத்துடன் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
மேலும், சாலை பாதுகாப்பை கருத்தில் கொண்டு காரியாபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து வாகன சோதனைகள் நடத்தப்படும் என்றும், போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.
தீவிர வாகன சோதனை காரணமாக காரியாபட்டி பகுதியில் வாகன ஓட்டிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.
    user_குமார்
    குமார்
    Firefighter Kariapatti, Virudhunagar•
    4 hrs ago
  • சாத்தூர் அருகே கிணற்றுக்குள் விழுந்த புள்ளி மானை மீட்ட தீயணைப்புத் துறையினர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சின்னத்தம்பியாபுரம் கிராமத்தில் அருகே உள்ள காட்டு பகுதியில் புள்ளி மான்கள் இருக்கின்றன இந்த நிலையில் ஆண் புள்ளிமான் ஒன்று காட்டுப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த நிலையில் புள்ளி மானை தெரு நாய்கள் விரட்டியதில் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள கிணற்றுக்குள் புள்ளிமான் தவறி விழுந்து உள்ளது. இந்த நிலையில் புள்ளிமான் கிணற்றுக்குள் தவறி விழுந்ததை பார்த்த பொதுமக்கள் சாத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் விழுந்த புள்ளி மானை போராடி மீட்டனர். மேலும் கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்ட புள்ளி மானை தீயணைப்பு துறை துறையினர் மீண்டும் காட்டுப் பகுதியில் விட்டனர்.
    1
    சாத்தூர் அருகே கிணற்றுக்குள் விழுந்த புள்ளி மானை மீட்ட தீயணைப்புத் துறையினர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சின்னத்தம்பியாபுரம் கிராமத்தில் அருகே உள்ள காட்டு பகுதியில்  புள்ளி மான்கள் இருக்கின்றன
இந்த நிலையில் ஆண் புள்ளிமான் ஒன்று காட்டுப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த நிலையில் புள்ளி மானை தெரு நாய்கள் விரட்டியதில் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள கிணற்றுக்குள் புள்ளிமான் தவறி விழுந்து உள்ளது. 
இந்த நிலையில் புள்ளிமான் கிணற்றுக்குள் தவறி விழுந்ததை  பார்த்த பொதுமக்கள் சாத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் விழுந்த புள்ளி மானை போராடி மீட்டனர்.
மேலும் கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்ட புள்ளி மானை தீயணைப்பு துறை துறையினர் மீண்டும் காட்டுப் பகுதியில் விட்டனர்.
    user_Virudhunagar
    Virudhunagar
    Virudhunagar, Tamil Nadu•
    4 hrs ago
  • RR AARI WORK, Aari Work, Aari Embroidery, Aari Blouse, RR AARI WORK
    1
    RR AARI WORK, Aari Work, Aari Embroidery, Aari Blouse,
RR AARI WORK
    user_RR AARI WORK
    RR AARI WORK
    Tailor சிவகாசி, விருதுநகர், தமிழ்நாடு•
    48 min ago
  • குப்பைத் தொட்டியைப் பயன் படுத்தாத மக்கள் மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் வெள்ளலூர் ஊராட்ச்சியைச் சேர்ந்த கட்டைச் சோலைப்பட்டி என்ற கிராமத்தில் குப்பைத்தொட்டி இருந்தும் அதைப் பயன் படுத்தாமல் அந்த கிராம மக்கள் குப்பைத் தொட்டி அருகிழே யே குப்பையை கொட்டு கின்றனர்
    1
    குப்பைத் தொட்டியைப் பயன் படுத்தாத மக்கள்
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் வெள்ளலூர் ஊராட்ச்சியைச் சேர்ந்த கட்டைச் சோலைப்பட்டி என்ற கிராமத்தில் குப்பைத்தொட்டி இருந்தும் அதைப் பயன் படுத்தாமல் அந்த கிராம மக்கள் குப்பைத்  தொட்டி அருகிழே யே குப்பையை கொட்டு கின்றனர்
    user_Melur n❤️ws
    Melur n❤️ws
    Social worker மேலூர், மதுரை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • கொல்லங்குடியில் கோவில் திருவிழா முன்னிட்டு களைகட்டிய மாட்டு வண்டி பந்தயம், சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள கொல்லங்குடியில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கொல்லங்குடியில் இருந்து முதல் வலையம்பட்டி வரை நடைபெற்ற இந்தப் போட்டி, பெரிய மாடு மற்றும் சிறிய மாடு என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது. சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 38 ஜோடி மாடுகள் பங்கேற்றன. மதுரை தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 7 கிலோமீட்டர் பந்தய எல்லையாக நிர்ணயிக்கப்பட்ட பெரிய மாடு பிரிவில் 11 ஜோடிகளும், 5 கிலோமீட்டர் பந்தய எல்லையாக நடைபெற்ற சிறிய மாடு பிரிவில் 27 ஜோடிகளும் கலந்து கொண்டு சீறிப் பாய்ந்தன. பந்தயத்தில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த மாடுகளின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அழகாபுரி, மேப்பல், நரிக்கோட்டை, காளையார்கோவில், விட்டனேரி, கொல்லங்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறமும் திரண்டு நின்று, ஆர்வத்துடன் மாட்டு வண்டி பந்தயத்தை கண்டுகளித்தனர்.
    1
    கொல்லங்குடியில் கோவில் திருவிழா முன்னிட்டு களைகட்டிய மாட்டு வண்டி பந்தயம், 
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள கொல்லங்குடியில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கொல்லங்குடியில் இருந்து முதல் வலையம்பட்டி வரை நடைபெற்ற இந்தப் போட்டி, பெரிய மாடு மற்றும் சிறிய மாடு என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது.
சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 38 ஜோடி மாடுகள் பங்கேற்றன.
மதுரை தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 7 கிலோமீட்டர் பந்தய எல்லையாக நிர்ணயிக்கப்பட்ட பெரிய மாடு பிரிவில் 11 ஜோடிகளும், 5 கிலோமீட்டர் பந்தய எல்லையாக  நடைபெற்ற  சிறிய மாடு பிரிவில் 27 ஜோடிகளும் கலந்து கொண்டு சீறிப் பாய்ந்தன.
பந்தயத்தில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த மாடுகளின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அழகாபுரி, மேப்பல், நரிக்கோட்டை, காளையார்கோவில், விட்டனேரி, கொல்லங்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறமும் திரண்டு நின்று, ஆர்வத்துடன் மாட்டு வண்டி பந்தயத்தை கண்டுகளித்தனர்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    9 hrs ago
  • திருமண ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததில் முன் விரோதம் வத்திராயிருப்பு அருகே வீடு புகுந்து தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு  பொதுமக்கள் போராட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கான்சாபுரத்தில் திருமண ஊர்வலத்தில் பட்டாசு வெடித்தது தொடர்பான முன்விரோதத்தில் வீடு புகுந்து தந்தை, மகனை அரிவாளால் வெட்டிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு கான்சாபுரம் மங்கம்மாள் கோயில் தெருவை சேர்ந்தவர் கணேசபாண்டி(49). இவரது மனைவி தமிழ் செல்வி(46). இவர்களது மகன் கவுதம்(21). கணேசபாண்டி கூலிவேலை செய்து வருகிறார். செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணேச பாண்டியை இரு பைக்குகளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டினர். சத்தம் கேட்டு தடுக்க வந்த அவரது மகன் கவுதமையும் அரிவாளால் வெட்டிவிட்டு அந்த கும்பல் தப்பி சென்றது. இதுகுறித்த புகாரின் பேரில் கான்சாபுரம் கீழத்தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் முனியசாமி, பூபதி மகன் முனியசாமி, ராஜேஷ் மகன் கண்ணபிரான், ராஜலிங்கம் மகன் ராகேஷ், முத்தையன் மகன் பிரகாஷ் ஆகிய 5 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த வத்திராயிருப்பு போலீஸார், 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். புதன்கிழமை காயமடைந்த கணேச பாண்டியின் உறவினர்கள் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த போது, சாலையோரம் நின்றிருந்த  ஆட்டோக்கள் மற்றும்  பைக்குகள் மீது கல் வீச்சில் சேதமடைந்தது. சம்பவ இடத்தில் மதுரை சரக டிஐஜி அபினவ்குமார் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். விருதுநகர் பொறுப்பு எஸ்பி சரவணன் தலைமையில், ஏடிஎஸ்பி, 3 டிஎஸ்பிக்கள், 5 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 250- க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிவகாசி சார் ஆட்சியர் முகமது இர்ஃபான் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் காயமடைந்த இளைஞர் துணை ராணுவ படைக்கு தேர்வாகி உள்ளதால், காயம் காரணமாக  வேலைக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளதால்  அவருக்கு தகுதிக்கேற்ற அரசு பணி வழங்க வேண்டும். தொடர்ந்து இதுபோன்று சம்பவங்கள் நடக்காமல் இருக்க பட்டாசு வெடிப்பதை தடை செய்ய வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில்:  கடந்த 15-ம் தேதி மங்கம்மாள் கோயில் தெரு வழியாக சென்ற திருமண ஊர்வலத்தில் ட்ரம்ஸ் அடித்து பட்டாசு வெடித்து ஆடியபடி சென்றுள்ளனர். அப்போது அப்பகுதி மக்கள் பட்டாசுகளை பார்த்து வெடிக்குமாறு கூறிதால் மணப்பெண்ணின் சகோதரர் ராகேஷ், கணேச பாண்டி உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த முன் விரோதத்தில் நேற்று இரவு ராகேஷ் தனது நண்பர்கள் உடன் சேர்ந்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணேசப்பாண்டியை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டினர். அப்போது தடுக்கச் சென்ற கவுதமும் அரிவாள் வெட்டில் காயமடைந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து புதன்கிழமை ஆர்ப்பாட்டம் செய்ய வந்த பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், எதிர் தரப்பினரின் வீடு மற்றும் வாகனங்கள் மீது கல் வீசி தாக்கினர். இதையடுத்து ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்து விசாரித்து வருகிறோம், என்றனர்.
    1
    திருமண ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததில் முன் விரோதம்

வத்திராயிருப்பு அருகே வீடு புகுந்து தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு 

பொதுமக்கள் போராட்டம்


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கான்சாபுரத்தில் திருமண ஊர்வலத்தில் பட்டாசு வெடித்தது தொடர்பான முன்விரோதத்தில் வீடு புகுந்து தந்தை, மகனை அரிவாளால் வெட்டிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு கான்சாபுரம் மங்கம்மாள் கோயில் தெருவை சேர்ந்தவர் கணேசபாண்டி(49). இவரது மனைவி தமிழ் செல்வி(46). இவர்களது மகன் கவுதம்(21). கணேசபாண்டி கூலிவேலை செய்து வருகிறார். செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணேச பாண்டியை இரு பைக்குகளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டினர். சத்தம் கேட்டு தடுக்க வந்த அவரது மகன் கவுதமையும் அரிவாளால் வெட்டிவிட்டு அந்த கும்பல் தப்பி சென்றது. இதுகுறித்த புகாரின் பேரில் கான்சாபுரம் கீழத்தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் முனியசாமி, பூபதி மகன் முனியசாமி, ராஜேஷ் மகன் கண்ணபிரான், ராஜலிங்கம் மகன் ராகேஷ், முத்தையன் மகன் பிரகாஷ் ஆகிய 5 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த வத்திராயிருப்பு போலீஸார், 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். புதன்கிழமை  காயமடைந்த கணேச பாண்டியின் உறவினர்கள் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த போது, சாலையோரம் நின்றிருந்த  ஆட்டோக்கள் மற்றும்  பைக்குகள் மீது கல் வீச்சில் சேதமடைந்தது. சம்பவ இடத்தில் மதுரை சரக டிஐஜி அபினவ்குமார் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். விருதுநகர் பொறுப்பு எஸ்பி சரவணன் தலைமையில், ஏடிஎஸ்பி, 3 டிஎஸ்பிக்கள், 5 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 250- க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிவகாசி சார் ஆட்சியர் முகமது இர்ஃபான் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் காயமடைந்த இளைஞர் துணை ராணுவ படைக்கு தேர்வாகி உள்ளதால், காயம் காரணமாக  வேலைக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளதால்  அவருக்கு தகுதிக்கேற்ற அரசு பணி வழங்க வேண்டும். தொடர்ந்து இதுபோன்று சம்பவங்கள் நடக்காமல் இருக்க பட்டாசு வெடிப்பதை தடை செய்ய வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில்: 
கடந்த 15-ம் தேதி மங்கம்மாள் கோயில் தெரு வழியாக சென்ற திருமண ஊர்வலத்தில் ட்ரம்ஸ் அடித்து பட்டாசு வெடித்து ஆடியபடி சென்றுள்ளனர். அப்போது அப்பகுதி மக்கள் பட்டாசுகளை பார்த்து வெடிக்குமாறு கூறிதால் மணப்பெண்ணின் சகோதரர் ராகேஷ், கணேச பாண்டி உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த முன் விரோதத்தில் நேற்று இரவு ராகேஷ் தனது நண்பர்கள் உடன் சேர்ந்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணேசப்பாண்டியை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டினர். அப்போது தடுக்கச் சென்ற கவுதமும் அரிவாள் வெட்டில் காயமடைந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து புதன்கிழமை  ஆர்ப்பாட்டம் செய்ய வந்த பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், எதிர் தரப்பினரின் வீடு மற்றும் வாகனங்கள் மீது கல் வீசி தாக்கினர். இதையடுத்து ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்து விசாரித்து வருகிறோம், என்றனர்.
    user_Prabakaran Praba
    Prabakaran Praba
    ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    1 hr ago
  • फ़िरोज़ाबाद में बंजारा समाज पर धारदार हथियारों से हमला, बाल-बाल बची जान पीड़ितों ने थाना एका में दी तहरीर कार्रवाई की मांग फ़िरोज़ाबाद जनपद के एका थाना एका थाना के क्षेत्र के हरी सिंह पुर गाँव में बंजारा समाज की महिलाओं एवं लोगों पर दबंगों द्वारा धारदार हथियारों से जानलेवा हमला करने का मामला सामने आया है जहां बंजारा समाज को दबाने वाली बात सामने आयी है घटना का एक वीडियो भी सोशल मीडिया पर वायरल हो रहा है, जिसमें महिलाएं और बच्चे सड़क पर भागते हुए दिखाई दे रहे हैं पीड़ितों के अनुसार दिनांक 22 अगस्त 2026 को दोपहर के समय गाँव के ही कुछ लोग लाठी-डंडा और धारदार हथियार लेकर उनके घरों पर आ गए और गाली-गलौज करते हुए हमला कर दिया अचानक हुए इस हमले से पूरे गाँव में अफरा-तफरी मच गई। महिलाओं और बच्चों ने भाग कर किसी तरह अपनी जान बचाई पीड़ित गांव वालो का आरोप है कि वे गरीब बंजारा समाज से हैं इसलिए उन्हें आए दिन डराया-धमकाया जाता है। इस घटना के बाद से पूरा समाज दहशत में है ग्रामीणों ने बताया कि बड़ी मुश्किल से उन लोगों ने कर मामला शांत कराया गया इस संबंध में पीड़ित गाँव के लोगों ने थाना एका पुलिस को लिखित तहरीर दी है और आरोपियों के खिलाफ सख्त कार्रवाई व सुरक्षा की मांग की है लिखे हुए आरोपी बार बार गांव पर चढ़ाई करते हुए जान से मारने की धमकी दे रहे हैं पुलिस द्वारा मामले की जांच ही नहीं की जा रही है। थाना प्रभारी एका से बात करने पर बताया कि तहरीर मिलने पर जाँच कर उचित कार्रवाई की जाएगी
    2
    फ़िरोज़ाबाद में बंजारा समाज पर धारदार हथियारों से हमला, बाल-बाल बची जान
पीड़ितों ने थाना एका में दी तहरीर कार्रवाई की मांग
फ़िरोज़ाबाद जनपद के एका थाना एका थाना के क्षेत्र के  हरी सिंह पुर गाँव में बंजारा समाज की महिलाओं एवं लोगों पर दबंगों द्वारा धारदार हथियारों से जानलेवा हमला करने का मामला सामने आया है जहां बंजारा समाज को दबाने वाली बात सामने आयी है घटना का एक वीडियो भी सोशल मीडिया पर वायरल हो रहा है, जिसमें महिलाएं और बच्चे सड़क पर भागते हुए दिखाई दे रहे हैं पीड़ितों के अनुसार दिनांक 22 अगस्त 2026 को दोपहर के समय गाँव के ही कुछ लोग लाठी-डंडा और धारदार हथियार लेकर उनके घरों पर आ गए और गाली-गलौज करते हुए हमला कर दिया अचानक हुए इस हमले से पूरे गाँव में अफरा-तफरी मच गई। महिलाओं और बच्चों ने भाग कर किसी तरह अपनी जान बचाई पीड़ित गांव वालो का आरोप है कि वे गरीब बंजारा समाज से हैं इसलिए उन्हें आए दिन डराया-धमकाया जाता है। इस घटना के बाद से पूरा समाज दहशत में है ग्रामीणों ने बताया कि बड़ी मुश्किल से उन लोगों ने कर मामला शांत कराया गया इस संबंध में पीड़ित गाँव के लोगों ने थाना एका पुलिस को लिखित तहरीर दी है और आरोपियों के खिलाफ सख्त कार्रवाई व सुरक्षा की मांग की है  लिखे हुए आरोपी बार बार गांव पर चढ़ाई करते हुए जान से मारने की धमकी दे रहे हैं  पुलिस द्वारा मामले की जांच ही नहीं की जा रही है। थाना प्रभारी एका से बात करने पर बताया कि तहरीर मिलने पर जाँच कर उचित कार्रवाई की जाएगी
    user_S News
    S News
    News Anchor India•
    7 hrs ago
  • விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீடு புகுந்து தந்தை மகனை வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.... ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட பிரிவை சேர்ந்தோர் வீடு புகுந்து வெட்டிய கும்பல் வசிக்கும் பகுதிக்குச் சென்று 15 இருசக்கர வாகனங்கள் 3 ஆட்டோக்களை அடித்து நொறுக்கியதால் பதட்டம்... போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கான்சாபுரம் கிராமம், மங்கம்மாள் கோயில் தெருவை சேர்ந்த கணேச பாண்டி (49), மற்றும் அவரது மகன் கௌதம் (20) இருவரும் நேற்று நள்ளிரவு  வழக்கம் போல் வீட்டில் தூக்கிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அருகில் வசிக்கும் மற்றொரு பிரிவை சேர்ந்த ஒரு கும்பல் வீடு புகுந்து தந்தை  கணேச பாண்டி மற்றும் மகன் கௌதமை வெட்டி விட்டு தப்பி ஓடி உள்ளனர். இதில் இருவரும் பலத்த காயமடைந்த நிலையில் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்த சம்பவத்தை கண்டு ஆத்திரமடைந்த கணேசபாண்டி மற்றும் அவரது உறவினர் தரப்பைச் சேர்ந்த ஒரு பிரிவினர் வீடு புகுந்து அறிவாளால் வெட்டிய கும்பல் வசித்த பகுதிக்கு சென்று அங்கிருந்த 15 ற்கும்  இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 ஆட்டோக்களை அடித்து நொறுக்கினர். இதனால் இப்பகுதியில் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படும் பதட்டமான சூழல் நிலவுவதால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.  கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் திருமண ஊர்வலம் நடந்த போது இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டு சமாதான கூட்டம் மூலம் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்ட நிலையில், அதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
    1
    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீடு புகுந்து தந்தை மகனை வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.... ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட பிரிவை சேர்ந்தோர் வீடு புகுந்து வெட்டிய கும்பல் வசிக்கும் பகுதிக்குச் சென்று 15 இருசக்கர வாகனங்கள் 3 ஆட்டோக்களை அடித்து நொறுக்கியதால் பதட்டம்... போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கான்சாபுரம் கிராமம், மங்கம்மாள் கோயில் தெருவை சேர்ந்த  கணேச பாண்டி (49), மற்றும் அவரது மகன் கௌதம் (20) இருவரும் நேற்று நள்ளிரவு  வழக்கம் போல் வீட்டில் தூக்கிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அருகில் வசிக்கும் மற்றொரு பிரிவை சேர்ந்த ஒரு கும்பல் வீடு புகுந்து தந்தை  கணேச பாண்டி மற்றும் மகன் கௌதமை வெட்டி விட்டு தப்பி ஓடி உள்ளனர். இதில் இருவரும் பலத்த காயமடைந்த நிலையில் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்த சம்பவத்தை கண்டு ஆத்திரமடைந்த கணேசபாண்டி மற்றும் அவரது உறவினர் தரப்பைச் சேர்ந்த ஒரு பிரிவினர் வீடு புகுந்து அறிவாளால் வெட்டிய கும்பல் வசித்த பகுதிக்கு சென்று அங்கிருந்த 15 ற்கும்  இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 ஆட்டோக்களை அடித்து நொறுக்கினர். இதனால் இப்பகுதியில் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படும் பதட்டமான சூழல் நிலவுவதால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. 
கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் திருமண ஊர்வலம் நடந்த போது இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டு சமாதான கூட்டம் மூலம் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்ட நிலையில், அதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
    user_Virudhunagar
    Virudhunagar
    Virudhunagar, Tamil Nadu•
    12 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.