வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல். தேனி மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் (Block Coordinator) பணிக்கு முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பூதியம் அடிப்படையில் பணிபுரிய தகுதியுடைய பெண் விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். இப்பதவிக்கு விண்ணப்பிக்க, ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், கணினியில் 3 மாத கால சான்றிதழ் (MS Office) பெற்றிருக்க வேண்டும். கணினி យល់ (Computer Science) அல்லது கணினி பயன்பாடுகளில் (Computer Applications) பட்டதாரியாக இருக்க வேண்டும். வயது வரம்பு 35 வயதுக்குள் இருக்க வேண்டும். வாழ்வாதாரத் திட்டங்களான மகளிர் சுய உதவிக்குழு மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளில் குறைந்தது 5 வருடங்கள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் வட்டாரத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும். மேலும், நிர்வாகம், நிதி முறைகேடுகள் மற்றும் பிற காரணங்களால் முந்தைய தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், புதுவாழ்வுத்திட்டம், IFAD திட்டம் மற்றும் அரசு திட்டங்களின் திட்டங்கள், பணிகளிலிருந்தும் நீக்கப்பட்டிருக்கக்கூடாது. விண்ணப்பத்தினை திட்ட இயக்குநர் / இணை இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தேனி ஒருங்கிணைந்த அலுவலக வளாகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தரைத்தளம், தேனி 625 531 என்ற முகவரிக்கு 19.02.2026 இன்று மாலை 5.30 மணிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட தேதிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. மேலும், இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மகளிர் திட்ட அலுவலகத்தில் நேரில் அணுகி தகவல் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

- தேனி நகரத்தின் நீண்டகால பிரச்சினையை தீர்த்து தர இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் பெத்தாச்சி ஆசாத் தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார். தேனி நகரத்தில் நீண்ட கால பிரச்சனையும் 3000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள பிரச்சனையுமான நத்தமா வால் கரடா என்பதை தீர்த்து வைக்குமாறு பேட்டி மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.1
- போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து 225 கர்ப்பிணி பெண்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு வளைகாப்பு நடைபெற்றது. காலை 10:30 மணி முதல் 12 மணி வரை நடைபெறுவதாக அறிவித்திருந்த நிலையில் காலை 10 மணியிலிருந்து கர்ப்பிணி பெண்கள் வரத் தொடங்கினர். இந்நிலையில் சுமார் 2 மணி நேரம் காத்திருப்பதற்குப் பின்பு 12 மணிக்கு மேல் தேனி பாராளுமன்ற தொகுதி எம் பி தங்க தமிழ்ச்செல்வன் விழா நடைபெறும் இடத்துக்கு வருகை தந்தார் இதனால் நீண்ட நேரமாக காத்திருந்த கர்ப்பிணிப் பெண்களின் உறவினர்கள் எவ்வளவு நேரம் தான் மண்டபத்தில் இருப்பது என கொந்தளிப்புடன் அங்கு உள்ளவர்களிடம் ஆக்குவாதத்தில் ஈடுபட்டனர்1
- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேனி மாவட்ட பாஜக பட்டியல் அணி சார்பாக ஆர்ப்பாட்டம் திமுக அரசை கண்டித்து நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக முழுவதும் பட்டியல்சமுதாய மக்களுக்காக மத்திய அரசு வழங்கிய 400 கோடி ரூபாயை திமுக அரசு அனுப்பியதாக கூறி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தேனி மாவட்ட பாஜக தலைவர் இராஜபாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்1
- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மெயின் பாதை பூட்டப்பட்டதால் பரபரப்பு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் சங்கம் சார்பில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்ததை தொடர்ந்து காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மெயின் பாதையினை அடைத்து தடுப்பு வேலிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்3
- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாளையங்கோட்டை, கூலம்பட்டி,மேட்டுகாமன் பட்டி பகுதியில் வசிக்கும் விவசாயிகள் பூக்களை அதிகப்படியாக விவசாயம் செய்து, அதனை நிலக்கோட்டை பூ மார்க்கெட்டிற்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் மேட்டுகாமன் பட்டியலில் இருந்து நிலக்கோட்டை பிரிவு வரை உள்ள சாலை சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்பின்றி குண்டும்,குழியுமாக உள்ளதால் மார்க்கெட்டிற்கு பூக்களை வாகனங்களில் கொண்டு செல்லும் விவசாயிகள் கடும் சிரமத்துடன் சாலையை கடந்து செல்லும் நிலை உள்ளதால் துறை சார்ந்த அதிகாரிகள் கவனம் செலுத்தி சாலையை சீரமைத்து தந்து உதவிட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- மதுரையில் பந்தல்குடி பகுதியை சேர்ந்த ஆதிதிராவிட மக்கள் டாக்டர் சரவணனை சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவு அளித்தனர். ஐந்து ஆண்டுகளாக மக்களை ஏமாற்றிய திமுக மீது குற்றச்சாட்டு. தங்கள் கோரிக்கைகளை பொதுச் செயலாளருக்கு எடுத்துச் சென்று தீர்வு ஏற்படுத்தவும் கோரிக்கை மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட பந்தல்குடி பகுதியில் 5,000-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகின்றனர், பந்தல்குடி வாய்கால் ஓரங்களிலும், வாடகை வீடுகளிலும் வசித்து வரக்கூடிய இம்மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாகும், சமீபத்தில் திராவிட மாடல் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு இலட்சம் பேருக்கு பட்டா வழங்கிய விளம்பர நிகழ்வில் கூட இவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவில்லை, இதனையடுத்து ஏராளமான ஆதிதிராவிட மக்கள் அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணனை சந்தித்து தங்களுடைய கோரிக்கை மற்றும் கஷ்டங்களை தெரிவித்தனர், ஒவ்வொருவரின் கோரிக்கைகளை கேட்டுக் கொண்ட டாக்டர் பா.சரவணன் பந்தல்குடி பகுதி மக்களின் கோரிக்கைகளை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார். இதனையடுத்து அம்மக்கள் திமுக எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றும், டாக்டர் சரவணனை சந்தித்து பேசியது மன நிறைவை தருவதாகவும் தெரிவித்தனர், மேலும், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.1
- வாடிப்பட்டி தாதம்பட்டி நீரேத்தான் மந்தை திடல் அருகில் உள்ள பஞ்சாயத்து யூனியன்க்கு சொந்தமான அரசு ஆரம்ப பள்ளி உள்ளது அரசுக்கு சொந்தமான பல கட்டிடங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது சமூக விரோதிகள் தவறு செய்யும் சூழல் உள்ளது இதைசீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சமூக ஆர்வலர்கள் விரும்புகிறார்கள்1
- சசிகலா நடராஜனின் அரசியல் வருகையை வரவேற்கும் ஆண்டிபட்டியார்! தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள, "ஆண்டிபட்டியார் இராஜஹரிகாந்த் மக்கள் முன்னேற்ற இயக்க"த்தின் நிறுவனர்/ தலைவர் இராஜஹரிகாந்த், சசிகலா நடராஜனின் அரசியல் வாழ்க்கையை வரவேற்று பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியை இதில் காணலாம்.1