விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வ.புதுப்பட்டி – அர்ச்சுனாபுரம் சாலையில், இன்று (30.05.2026) சார்பு ஆய்வாளர் கோட்டியப்பசாமி தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்தி விசாரித்தபோது, அவர் ஓட்டி வந்த TN 84 Q 6213 என்ற பதிவு எண்ணுடைய இருசக்கர வாகனம் திருட்டு வாகனம் என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில், பிடிபட்டவர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயதான செண்பகராஜ் என்பதும், கிருஷ்ணன்கோவில் பேருந்து நிறுத்தம் அருகே நிறுத்தப்பட்டிருந்த திருநாவுக்கரசு என்பவரின் இருசக்கர வாகனத்தை அவர் திருடிச் சென்றதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் செண்பகராஜை கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வ.புதுப்பட்டி – அர்ச்சுனாபுரம் சாலையில், இன்று (30.05.2026) சார்பு ஆய்வாளர் கோட்டியப்பசாமி தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்தி விசாரித்தபோது, அவர் ஓட்டி வந்த TN 84 Q 6213 என்ற பதிவு எண்ணுடைய இருசக்கர வாகனம் திருட்டு வாகனம் என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில், பிடிபட்டவர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயதான செண்பகராஜ் என்பதும், கிருஷ்ணன்கோவில் பேருந்து நிறுத்தம் அருகே நிறுத்தப்பட்டிருந்த திருநாவுக்கரசு என்பவரின் இருசக்கர வாகனத்தை அவர் திருடிச் சென்றதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் செண்பகராஜை கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- பெரியகுளத்தில் உள்ள அருள்மிகு பாலசுப்ரமணியர் கோவிலில் வைகாசி விசாக திருநாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கோவில் வளாகத்தில் ஒரு யாகசாலை அமைக்கப்பட்டு, 'ஓம்' என்ற வடிவத்தில் 108 சங்குகள் அடுக்கப்பட்டு சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த பூஜைகளைத் தொடர்ந்து தீபாராதனைகள் நடைபெற்றன.1
- தூத்துக்குடி மத்திய மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில், வைகாசி விசாகத் திருநாளை முன்னிட்டு, திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாகச் சென்ற 2500 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வு முத்தையாபுரம் கனநீர் ஆலை குடியிருப்பு முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தூத்துக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக மீன்வளத்துறை அமைச்சருமான ஸ்ரீநாத் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. பாதயாத்திரையாக வந்த பக்தர்களுக்கு புரோட்டா, இடியாப்பம், கேசரி மற்றும் குருமா ஆகியவை தட்டில் வைத்து வழங்கப்பட்டன. பக்தர்கள் இந்த அன்னதான உணவை ஆர்வமுடன் பெற்றுச் சென்றனர். இந்த நிகழ்வில் மத்திய மாவட்ட செயலாளர் எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ், எஸ்.டி.ஆர். விஜயசீலன், வழக்கறிஞர் வாரியார், பகுதி செயலாளர் இசக்கிமுத்து, பொன்ராஜ், ஜோயல், ரவிக்குமார், சுந்தரலிங்கம், பத்மநாபன், இசக்கிராஜா, தனபாலன், திருப்பதி, கஜன் அஸ்வின், தினகரன் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- Post by Maatram World news Theni1
- புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பி. அழகாபுரி கிராமத்தில் செயல்பட்டு வந்த நாட்டு வெடி தயாரிக்கும் பட்டாசு கிடங்கில் நிகழ்ந்த ஒரு வெடி விபத்தில், அதன் உரிமையாளர் கருப்பையா (எ) கணேசன் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் மற்றும் மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோர் விபத்தில் உயிரிழந்த கணேசனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.1
- இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள வெள்ளையாபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தற்போது எலும்புக்கூடு போல் காட்சியளிக்கும் அவல நிலையில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். திருவாடானை தாலுகாவில் அதிக கிராமங்கள், மக்கள் தொகை மற்றும் வணிக நிறுவனங்கள் கொண்ட ஒரு முக்கிய பகுதியாக வெள்ளையாபுரம் ஊராட்சி திகழ்கிறது. மனித உயிர்களைக் காக்க வேண்டிய இந்த மருத்துவமனையின் தற்போதைய பரிதாப நிலை, அருகிலிருந்து பார்ப்பவர்களுக்கு அதன் குமுறல் வேதனையை உணர்த்தும் என கூறப்படுகிறது. இந்த மருத்துவமனையைச் சுற்றிலும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதோடு, இரவு நேரங்களில் நோயாளிகள் விஷப் பூச்சிகளின் அச்சுறுத்தலால் மருத்துவமனைக்கு வரப் பயப்படுகின்றனர். மேலும், அடிக்கடி ஏற்படும் மின்சாரத் தடையால் இருளில் மூழ்கி, டார்ச் லைட் வெளிச்சத்தில் பார்க்கும்போது மருத்துவமனையின் எலும்புக் கூடுதான் தெரிகிறது. மழைக்காலங்களில் மருத்துவமனையின் உட்பகுதி முழுவதும் மழை நீரால் குளம்போல் தேங்கி நிற்கிறது. அவ்வப்போது மேற்கூரைகள் பெயர்ந்து இடிந்து விழுவதால், நோயாளிகள் மற்றும் பணியாளர்களின் உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத கேள்விகுறியான நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அவல நிலையை கருத்தில் கொண்டு, தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி உடனடியாக மாற்று கட்டிடம் கட்டி, வெள்ளையாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தை தீவிர சிகிச்சை மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு விஜய் அவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- ரெட்டியார்சத்திரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்தத் தொடர் கனமழையால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.1
- மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று (மே 30) வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், பறவை காவடி சுமந்தும் ஊர்வலமாக திருப்பரங்குன்றத்தை நோக்கி வந்தனர். திருக்கோவிலில் உள்ள விசாக கொறடு மண்டபத்தில், பக்தர்கள் கொண்டு வந்த பால் சண்முகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மதுரை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து பெருந்திரளான மக்கள் வருகை தந்ததால், 500க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். மாநகராட்சி தரப்பில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. திருப்பரங்குன்றம் முழுவதும் விண்ணை முட்டும் அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.1
- வைகாசி விசாகத் திருநாளை முன்னிட்டு, தேனி மாவட்டம் பெரியகுளம் செங்கரையில் அமைந்துள்ள 1500 ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு பாலசுப்பிரமணியம் திருக்கோவிலில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. வள்ளி தெய்வானை முருகப்பெருமானுக்கும், பாலசுப்பிரமணியம் சுவாமிக்கும் பால் அபிஷேகம் மற்றும் 108 சங்க அபிஷேகம் செய்யப்பட்டன. பால், தயிர், பன்னீர், சந்தனம், குங்குமம், இளநீர், விபூதி, பேரிச்சம்பழம் மற்றும் பல்வேறு வகையான பழங்கள் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருட்களைக் கொண்டு இந்தச் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.1
- திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அங்கு வந்த பக்தர்கள் கடலில் புனித நீராடி, பின்னர் வழிபாடு நடத்தினர்.1