தனியார் மற்றும் அரசு கட்டுமான பணிகள் அனைத்திலும் உள்ளூர் கட்டிட தொழிலாளர்களுக்கு 80 சதவீத பணியிடங்கள் ஒதுக்கி உதவாதம் செய்ய வேண்டும்-புதியம்புத்தூரில் ஏ.ஐ.டி.யு சி கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம் ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் ஏ.ஐ.டி.யு.சி கட்டுமான தொழிலாளர்சங்க 9 வது மாவட்ட மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாவட்ட மாநாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான கட்டிட தொழிலாளர்கள் மற்றும் ஏ.ஐ.டி.யு.சி மாநில, மாவட்ட நிர்வாகிகள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக புதியம்புத்தூர் பேருந்து நிலைய வளாகத்தில் இருந்து ஏ.ஐ.டி.யு.சி சங்கத்தினர் பேரணியாக பஜார் வழியாக வந்து புதியம்புத்தூர் தனியார் திருமண மண்டபத்தை வந்தடைந்தனர். தொடர்ந்து அங்கு ஏ.ஐ.டி.யு.சி சங்க கொடி ஏற்றப்பட்டது. மாநாட்டில் மாநில பொதுச் செயலாளர் செல்வராஜ் துவக்க உரை ஆற்றினார். முன்னாள் மாநில தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பெரியசாமி சிறப்புரையாற்றினார். மாநாட்டில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் ஓட்டப்பிடாரம் மற்றும் புதியம்புத்தூர் பகுதியில் பல தொழிற்சாலைகளை தொடங்கிட வேண்டும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் உதவித்தொகை 4 லட்சத்திலிருந்து 10 லட்சமாக உயர்த்திட வேண்டும், பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு மரணம் அடையும் தொழிலாளர் குடும்பத்திற்கு வழங்கப்படும் 8 லட்ச ரூபாய் உதவித்தொகையை 20 லட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக உயர்த்தி வழங்க வேண்டும். பெண் கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பிரசவ உதவித்தொகை மாதம் 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்கிற கணக்கின்படி ஆறு மாத சம்பளம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வழங்க வேண்டும், திருமண உதவித் தொகையை ரூபாய் ஒரு லட்சம் உயர்த்த வேண்டும், 3 குழந்தைகளுக்கு மட்டும் கல்வி உதவித்தொகை என்பதை கைவிட்டு, தொழிலாளர்களின் அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கல்வி உதவித் தொகையில் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை வருடம் 5000 ரூபாயும், 10, 11, 12 படிப்பதற்கு ஆண் பெண் இரு குழந்தைகளுக்கும் வருடம் பத்தாயிரம் ரூபாய் மற்றும் கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு முழு செலவுகளையும் நல வாரியமே ஏற்க அரசாணை வெளியிட வேண்டும். இயற்கை மரணத்திற்கு ரூபாய் 5 லட்சம், பணியிட விபத்து இல்லாத வேறு வகையான விபத்து மரணத்திற்கு ரூபாய் 5 லட்சம், ஈமச்சடங்கு நிதி ரூபாய் 50,000 ஓய்வூதியம் ரூபாய் 6000 வழங்குவதற்கு அரசாணை வெளியிட வேண்டும். கட்டுமான தொழிலாளர்கள் விபத்தில் பாதிக்கப்படும்போதும் சாதாரண காலங்களிலும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் மருத்துவ காப்பீடு கிடைக்கும் வகையில் இ எஸ் ஐ மருத்துவ வசதி திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அதுவரை விபத்துக்கான சிகிச்சையை வாரியம் ஏற்க வேண்டும், விபத்து காலத்தில் சம்பள இழப்பு ஏற்படாமல் சம்பள நிவாரணம் வழங்க வேண்டும் மேற்கண்ட தொழிலாளர்களின் அனைத்து பாதுகாப்புகளையும் நிறைவேற்றுவதற்காக கட்டிடம் கட்டுபவரிடம் வசூலிக்கப்படும் நலநிதி ஒரு சதம் என்பதை திட்ட மதிப்பில் 5 சதம் என்று உயர்த்தி வசூலிக்க வேண்டும் கட்டுமான தொழிலுக்காக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள குறைந்தபட்ச கூலி அரசாணைப்படி உதவியாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். மாதம் 45 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்கும் வகையில் அரசாணையை திருத்த வேண்டும் தனியார் மற்றும் அரசு கட்டுமான பணிகள் அனைத்திலும் உள்ளூர் தொழிலாளர்களுக்கு 80 சதவீத பணியிடங்கள் ஒதுக்கி உதவாதம் செய்ய வேண்டும். மாதத்தில் எல்லா நாட்களும் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வெளி மாநில தொழிலாளர்களுக்கு சட்டப்படியான பாதுகாப்புகள் தங்குமிட வசதிகள் தமிழ்நாட்டில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து புதிய நிர்வாகிகளாக மாவட்டத் தலைவர் மகாராஜன், துணைத் தலைவர் சண்முகராஜ், வைரவன் நிர்வாக குழு மேரி தங்கம், புஷ்பவல்லி, மாவட்ட பொருளாளர் ராமலிங்கம், மாவட்ட செயலாளர் சேது ஆகியோர் புதிய நிர்வாகிகளாக இன்று தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் முருகன் மாநாட்டு பொருளாளர் பால்ராஜ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கரும்பன் ஏ ஐ டி யூ சி மாவட்ட செயலாளர் கிருஷ்ணராஜ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துணைச் செயலாளர் பாலமுருகன் பாபு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் செல்வன் சிபிஐ பச்சம்மாள் ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

- புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட எம்எல்ஏ மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சேடபட்டி மணிமாறன் அவர்கள் செக்காணூரணியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய பணிகளை பார்வையிட்டதோடு, ஆ.கொக்குளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் முக்கியஸ்தர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி விரைந்து தீர்வு காணும் படி அறிவுறுத்தினார். உடன் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் இருந்தனர்.1
- தேவகோட்டை அருகே கோவில் திருவிழா முன்னிட்டு உலக நன்மை வேண்டி விளக்கு பூஜை நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள ஆவரங்காடு முத்துமாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாத திருவிழா முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்த புனித ஆடி மாதத்தில், உலக நன்மை மற்றும் அனைவரின் நலனை வேண்டி சிறப்பு திருவிளக்கு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டது. பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் கோவிலுக்கு வந்து வழிபட்டனர்.உலக அமைதி, நல்வாழ்வு, மற்றும் அனைவரின் நலனுக்காகவும் இந்த சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பக்தர்கள் தங்கள் குடும்ப நலனுக்காகவும், சமுதாய நன்மைக்காகவும் அம்மனை வேண்டி வழிபட்டனர்.1
- ஆண்டிபட்டி: வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் ஆண்டிபட்டி நகரில் மேற்கு ஓடை தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் இன்று ஆடி மாத சனிக்கிழமை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு அதிகாலையிலேயே பால் தயிர் இளநீர் சந்தனம் பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.1
- ஆண்டிபட்டி வருசநாடு அருகே சின்ன சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு குளிக்க தடை தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை ஒட்டிய மேகமலை, ஹைவேவிஸ் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் சாரல்மழையால் சின்ன சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. தேனி மாவட்டம், மேகமலை அடிவாரத்தில் கோம்பைத்தொழு வடக்கு மலைப்பகுதியில் மேகமலை அருவி உள்ளது. மேகமலை ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் சரணாலயத்தில் அமைந்துள்ள இந்த அருவிக்கு திண்டுக்கல் ,மதுரை, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆண்டு முழுவதும் அருவியில் நீர்வரத்து இருக்கும். நேற்று விடிய விடிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் சாரல்மழை பெய்து வருவதால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது ஏற்கனவே பெய்த கனமழையால் அருவிக்குச் செல்லும் சாலை பகுதியில் சாலைகள் மிகவும் மண்ணரிப்புகளால் மிகவும் சேதம் அடைந்துள்ளது மேலும் படிக்கட்டுகள் தடுப்புக்கம்பிகள் உடைந்து காணப்படுவதாகவும் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. இந்நிலையில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கிற்கான பயணிகளுக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது இதனைத் தொடர்ந்து சின்ன சுருளி அருவிக்கு மீறி செல்வோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்..1
- திருப்பாலைக்குடியில் சபடு மண் எடுப்பதில் முறைகேடு பொதுமக்கள் குற்றச்சாட்டு திருப்பாலைக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய கண்மாயிலிருந்து விவசாயப் பயன்பாட்டிற்காக மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், விவசாய நிலங்களில் கொட்டாமல், ஒரு டிராக்டர் மண் ₹1,200 என்ற விலையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட டிராக்டர் லோடு மண் திருப்பாலைக்குடி காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள மனைப்பிரிவுகளில் (பிளாட்டுகளில்) கொட்டப்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.1
- வாடிப்பட்டியில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியி... இன்று வாடிப்பட்டி சந்தை கேட் அருகில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மருத்துவ நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாலைநேர தர்னா நடைபெற்றது இந்த நிகழ்வில் மாநில கொள்கை பரப்பு செயலாளர்கள் முனைவர் மொ.சித்திராதேவி திருச்சி.சரவனண் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் இந்த நன்னாளில் மாவட்ட ஒன்றிய நகர நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்1
- தென்காசி மாவட்டம் புதுச்சுரண்டை சேகர 30வது தோத்திர பண்டிகை கொடியேற்றத்துடன் தொடங்கியது விழாவிற்கு சேகர தலைவர் அருள்திரு ஜெகன் தலைமை வகித்தார் வடக்கு சபை மன்ற தலைவர் அருள்திரு ஜெபரத்தினம் கொடியேற்றி துவக்கி வைத்தார் சுரண்டை சீயோன் சேகர தலைவர் அருள்திரு ஜான்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்1
- வெளிமாநிலங்களுக்கு கனிம வளங்களை அனுப்ப தடை விதித்திருப்பது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும், அந்தத் தடை நிரந்தரமாக தொடருமா என்பது குறித்து தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு முதல்வர் விஜய் முடிவு எடுப்பார் என்றும் சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு தெரிவித்தார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கிரவல் மண் குவாரிகள் தொடர்பாக பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அரசின் புதிய கொள்கை முடிவுகள் அடுத்த வாரம் வெளியாகும் என்றும் கூறினார். மேலும், மண்பாண்ட தொழிலாளர்கள் மண் எடுப்பதில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அதற்கான தீர்வுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். முதல்வர் விஜயின் ஊழலற்ற ஆட்சி இலக்கை வெற்றிகரமாக செயல்படுத்த அதிகாரிகளின் முழுமையான ஒத்துழைப்பு அவசியம் என்பதை இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தியதாக அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு கூறினார்.1
- வைகை அணை நீர்த்தேக்க பகுதியில் மின் மோட்டார் மூலம் நீர் திருட்டு: 3-வது நாளாக ஜேசிபி இயந்திரம் மூலம் மின் மோட்டார், பைப், புட்வால்வுகள் பறிமுதல் ஆட்சியர் அதிரடி ஆய்வை தொடர்ந்து அதிகாரிகள் தீவிர நடவடிக்கை தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் உட்பகுதியில், அனுமதியின்றி சட்டவிரோதமாக மின் மோட்டார்கள் மூலம் நீர் திருடப்படுவதாக தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து, தேனி மாவட்ட ஆட்சியர் வைத்திநாதன் வைகை அணையின் நீர்த்தேக்கப் பகுதிக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சட்டவிரோதமாக நீர் எடுப்பதை உடனடியாகத் தடுக்கும் வகையில், ஆற்றுக்குள் அமைக்கப்பட்டிருந்த நீர் உறிஞ்சும் பைப்புகள் மற்றும் புட்வால்வ்களை அப்புறப்படுத்தி பறிமுதல் செய்ய அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்டார். ஆட்சியரின் உத்தரவை தொடர்ந்து, வைகை அணை நீர்த்தேக்கப் பகுதியில் பல்வேறு இடங்களில் விவசாய பயன்பாட்டிற்காக சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின் மோட்டார்கள் நீர் உறிஞ்சும் பைப்புகள் மற்றும் புட்வால்வுகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நடைபெற்ற இந்த பணியில், வைகை அணை உதவி செயற்பொறியாளர் சேகரன் தலைமையில் உதவி பொறியாளர் நவீன் குமார் மற்றும் பரதன் உள்ளிட்ட ஏராளமான அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டனர். ஜேசிபி இயந்திரம் மூலம் நீர்த்தேக்கப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மின் மோட்டார்கள் அகற்றப்பட்டதோடு, தண்ணீரில் மூழ்கியிருந்த ஃபுட்வால்வுகள் மற்றும் பைப்புகளையும் அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர். வைகை அணையின் நீர்த்தேக்க உட்பகுதியில் இதுபோன்று சட்டவிரோதமாகத் தண்ணீர் எடுப்பில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.1