logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

சிற்றாறு 2 அணையின் அவலநிலை - நடவடிக்கை எடுக்க கோரிக்கை சிற்றாறு - 2 அணையின் அவலநிலை! நடவடிக்கை எடுக்கபடுமா? கன்னியாகுமரி மாவட்டம் ஆலஞ்சோலை அருகே சிற்றாறு 2 அணை கடந்த பல வருடங்களாக பராமரிப்பு இன்றி முள் புதர் பிடித்து, சுகாதார மின்றி, குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. அழகிய கண்களை கவரும் வண்ணம் அழகாக அமைந்திருந்த அணை தற்போது அழகு குன்றி காணப்படுகிறது. அதுபோல முள் புதர்களுக்குள் பாம்புகள் மற்றும் விஷ ஜந்துகளுக்கு உறைவிடமாக மாறியுள்ளது. மேலும் அணை திறக்கப்படாததால் சுற்றுலாவுக்கு வரும் பயணிகள் ஏமாற்றத்துடன் முள் புதர்களையும், குப்பைகளையும் கண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொது பணி துறை அதிகாரிகள் புதர்களை மற்றும் குப்பைகளை அகற்றி அழகுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

5 hrs ago
user_Arukani Members South
Arukani Members South
Photographer Vilavancode, Kanniyakumari•
5 hrs ago
84706bf7-2a08-46fc-a333-98f8403de681
d96d4abb-1d1f-4143-a13b-11b49541582a

சிற்றாறு 2 அணையின் அவலநிலை - நடவடிக்கை எடுக்க கோரிக்கை சிற்றாறு - 2 அணையின் அவலநிலை! நடவடிக்கை எடுக்கபடுமா? கன்னியாகுமரி மாவட்டம் ஆலஞ்சோலை அருகே சிற்றாறு 2 அணை கடந்த பல வருடங்களாக பராமரிப்பு இன்றி முள் புதர் பிடித்து, சுகாதார மின்றி, குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. அழகிய கண்களை கவரும் வண்ணம் அழகாக அமைந்திருந்த அணை தற்போது அழகு குன்றி காணப்படுகிறது. அதுபோல முள் புதர்களுக்குள் பாம்புகள் மற்றும் விஷ ஜந்துகளுக்கு உறைவிடமாக மாறியுள்ளது. மேலும் அணை திறக்கப்படாததால் சுற்றுலாவுக்கு வரும் பயணிகள் ஏமாற்றத்துடன் முள் புதர்களையும், குப்பைகளையும் கண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொது பணி துறை அதிகாரிகள் புதர்களை மற்றும் குப்பைகளை அகற்றி அழகுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

More news from Tirunelveli and nearby areas
  • 🌼சதக்கத்துல்லா அப்பா கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள்🌼 அசார் மற்றும் ராஜகுரு ஆகியோர்கள் கல்லூரியில் சமர்ப்பிக்க வேண்டிய ப்ராஜெக்ட் வொர்க் சம்பந்தமாக முன்னாள் அமைச்சர், திருநெல்வேலி மத்திய மாவட்ட கழக முன்னாள் பொறுப்பாளர், கழக மாநில சிறுபான்மை நல உரிமை பிரிவு தலைவர் டி.பி.எம்.மைதீன்கான் அவர்களிடம் அரசியல் நிலவரங்கள்,சட்டமன்ற நிகழ்வுகள்,தொடர்ந்து 4 முறை பாளையங்கோட்டை சட்டப்பேரவை தொகுதியில் வெற்றிபெற்றது போன்ற விஷயங்களை கேட்டறிந்தனர்.உடன் GB.பெரோஸ்கான்,சிறுபான்மை நல உரிமை பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் மூப்பன் அப்துல் காதர்,செ.க.மு.அலி, நெல்லை சூப்பர் மார்க்கெட் தொ.மு.ச.தலைவர் பேரங்காடி ஐயப்பன்,அமீர் சுல்தான்,தொ.மு.ச. சுந்தரம் ஆகியோர்கள்.
    1
    🌼சதக்கத்துல்லா அப்பா கல்லூரி இறுதியாண்டு  மாணவர்கள்🌼 அசார் மற்றும் ராஜகுரு ஆகியோர்கள் கல்லூரியில் சமர்ப்பிக்க வேண்டிய ப்ராஜெக்ட் வொர்க் சம்பந்தமாக முன்னாள் அமைச்சர், திருநெல்வேலி மத்திய மாவட்ட கழக முன்னாள் பொறுப்பாளர், கழக மாநில சிறுபான்மை நல உரிமை பிரிவு தலைவர் டி.பி.எம்.மைதீன்கான் அவர்களிடம் அரசியல் நிலவரங்கள்,சட்டமன்ற நிகழ்வுகள்,தொடர்ந்து 4 முறை பாளையங்கோட்டை சட்டப்பேரவை தொகுதியில் வெற்றிபெற்றது போன்ற விஷயங்களை கேட்டறிந்தனர்.உடன் GB.பெரோஸ்கான்,சிறுபான்மை நல உரிமை பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் மூப்பன் அப்துல் காதர்,செ.க.மு.அலி, நெல்லை சூப்பர் மார்க்கெட் தொ.மு.ச.தலைவர் பேரங்காடி ஐயப்பன்,அமீர் சுல்தான்,தொ.மு.ச. சுந்தரம் ஆகியோர்கள்.
    user_நெல்லை வீரபாண்டியன்
    நெல்லை வீரபாண்டியன்
    Photographer Palayamkottai, Tirunelveli•
    5 hrs ago
  • தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் மகளிர் தின விழாவை முன்னிட்டு, பரிசளிப்பு விழா, இந்திய பல் மருத்துவ சங்கம் தென்காசி கிளை சார்பில் பல் மருத்துவ முகாம் ஆகியவை நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்தார் முதல்வர் (பொ) ஷீலா நவரோஸ் முன்னிலை வகித்தார் உடற்கல்வி பேராசிரியர் ஐசக் ஜான்சன் வரவேற்றார் மாணவ ஆசிரியர்கள் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன தொடர்ந்து இந்திய பல் மருத்துவர் சங்கம் சார்பில் இலவச பல் சிகிச்சை முகாம் மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது இதில் பல் மருத்துவ சங்கம் தலைவர் கலந்தர் மஸ்தான், செயலாளர் செய்யது முகமது தமீம், பல் ஆரோக்கியத்திற்கான குழு அமைப்பாளர் ஷிஃப்னாஷ் ரஃப்னா, பொருளாளர் நசிருதீன், சுரேஷ், லதா, ரதியா, வீனாராம் பட்டேல், மகாலட்சுமி, வசந்த், ஸ்டான்லி புஷ்பராஜ். ஆகியோர் கொண்ட குழுவினர் சிகிச்சை அளித்தனர் உதவி பேராசிரியர் ஐரீன் தொகுத்து வழங்கினார் உதவி பேராசிரியர் ஜெனிபர், ஜெபா எபனேசர், நூலகர் ஏஞ்சலின், அலுவலக பணியாளர்கள் பிரெட்ரிக், ஷேரோன்,பேதுரு, லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் முடிவில் உதவி பேராசிரியர் லீதியாள் சொர்ண ஜெயா நன்றி கூறினார்
    1
    தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் மகளிர் தின விழாவை முன்னிட்டு, பரிசளிப்பு விழா, இந்திய பல் மருத்துவ சங்கம் தென்காசி கிளை சார்பில் பல் மருத்துவ முகாம் ஆகியவை நடைபெற்றன.
நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்தார் முதல்வர் (பொ) ஷீலா நவரோஸ் முன்னிலை வகித்தார் உடற்கல்வி பேராசிரியர் ஐசக் ஜான்சன் வரவேற்றார் மாணவ ஆசிரியர்கள் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன 
தொடர்ந்து இந்திய பல் மருத்துவர் சங்கம் சார்பில் இலவச பல் சிகிச்சை முகாம் மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது இதில் பல் மருத்துவ சங்கம் தலைவர் கலந்தர் மஸ்தான், செயலாளர் செய்யது முகமது தமீம், பல் ஆரோக்கியத்திற்கான குழு அமைப்பாளர் ஷிஃப்னாஷ் ரஃப்னா, பொருளாளர் நசிருதீன், சுரேஷ், லதா, ரதியா, வீனாராம் பட்டேல், மகாலட்சுமி, வசந்த், ஸ்டான்லி புஷ்பராஜ். ஆகியோர் கொண்ட குழுவினர் சிகிச்சை அளித்தனர் 
உதவி பேராசிரியர் ஐரீன் தொகுத்து வழங்கினார் உதவி பேராசிரியர் ஜெனிபர், ஜெபா எபனேசர், நூலகர் ஏஞ்சலின், அலுவலக பணியாளர்கள் பிரெட்ரிக், ஷேரோன்,பேதுரு, லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் முடிவில் உதவி பேராசிரியர் லீதியாள் சொர்ண ஜெயா நன்றி கூறினார்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • தூத்துக்குடி தமிழகம் முழுவதும் போலியாக காப்பீட்டு நிறுவனங்களின் பெயரில் ஆயிரக்கணக்கான நபர்களிடம் பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட ஐந்து பேர் கொண்ட கும்பல் கைது தூத்துக்குடி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறை நடவடிக்கை தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாறைக்குட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பால்பாண்டி இவர் சொந்தமாக சரக்கு வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார் இந்த நிலையில் கடந்த 20 2 2024 ஆம் ஆண்டு பால்பாண்டியன் சரக்கு வாகனம் இருசக்கர வாகனம் ஒன்றின் மீது மோதி விபத்து ஏற்பட்டது இது தொடர்பாக மணியாச்சி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் இந்த நிலையில் பால்பாண்டி விபத்துக்குள்ளான தனது நான்கு சக்கர சரக்கு வாகனத்திற்கு மோட்டார் வாகன விபத்து காப்பீடு தொகை பெறுவதற்காக HDFC இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் வாகன காப்பீடு இருப்பதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் இந்த நிலையில் பால்பாண்டி தாக்கல் செய்த காப்பீடு பாலிசி போலியானது என தெரியவந்தது இதைத்தொடர்ந்து HDFC ஜென்ரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் மேனேஜர் ராஜேஷ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மணியாச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர் தூத்துக்குடி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் காப்பீடு சம்பந்தமான சிறப்பு புலனாய் பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயந்தி நடத்திய விசாரணையில் இணையதளம் மூலம் நான்கு சக்கர வாகனத்தின் பதிவினை இரண்டு சக்கர வாகனமாக பொய்யாக பதிவேற்றம் செய்து காப்பீட்டு நிறுவனத்திற்கு இரண்டு சக்கர வாகனத்தின் கட்டணத்தை செலுத்தி ஒரிஜினலாக காப்பீட்டு பாலிசி எடுத்து அதில் வாகனத்தின் உரிமையாளர் பெயர், முகவரி, வாகனத்தின் பெயர் வாகனத்தின் வகை ஆகியவற்றை மாற்றி போலி காப்பீட்டு பாலிசியை கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தமிழக முழுவதும் ஆயிரக்கணக்கான நபர்களிடம் ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது இதைத்தொடர்ந்து நடந்த விசாரணையில் இந்த மோசடியில் ஈடுபட்ட தென்காசி மாவட்டம் மலையடிபட்டியை சேர்ந்த 1,சங்கரலிங்கம், தென்காசி மாவட்டம் கழுநீர்குளம் பகுதியைச் சேர்ந்த 2,தங்கராஜ் ,திருநெல்வேலி மாவட்டம் இத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த 3,தங்கபாண்டி தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த 4,பாலமுருகன் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த5, செந்தில் வேல் முருகன் ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் பல்வேறு இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பெயரில் போலியாக இணையதளத்தில் காப்பீடு பதிவு செய்து லட்சக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்ட கும்பல் கைது செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
    1
    தூத்துக்குடி தமிழகம் முழுவதும் போலியாக காப்பீட்டு நிறுவனங்களின் பெயரில் ஆயிரக்கணக்கான நபர்களிடம் பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட ஐந்து பேர் கொண்ட கும்பல் கைது தூத்துக்குடி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறை நடவடிக்கை 
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாறைக்குட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பால்பாண்டி இவர் சொந்தமாக சரக்கு வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார் இந்த நிலையில் கடந்த 20 2 2024 ஆம் ஆண்டு பால்பாண்டியன் சரக்கு வாகனம் இருசக்கர வாகனம் ஒன்றின் மீது மோதி விபத்து ஏற்பட்டது இது தொடர்பாக மணியாச்சி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் 
இந்த நிலையில் பால்பாண்டி விபத்துக்குள்ளான தனது நான்கு சக்கர சரக்கு வாகனத்திற்கு மோட்டார் வாகன விபத்து காப்பீடு தொகை பெறுவதற்காக HDFC இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் வாகன காப்பீடு இருப்பதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் இந்த நிலையில் பால்பாண்டி தாக்கல் செய்த காப்பீடு பாலிசி போலியானது என தெரியவந்தது 
இதைத்தொடர்ந்து HDFC ஜென்ரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் மேனேஜர் ராஜேஷ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மணியாச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது 
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர் 
தூத்துக்குடி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் காப்பீடு சம்பந்தமான சிறப்பு புலனாய் பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயந்தி நடத்திய விசாரணையில் இணையதளம் மூலம் நான்கு சக்கர வாகனத்தின் பதிவினை இரண்டு சக்கர வாகனமாக பொய்யாக பதிவேற்றம் செய்து காப்பீட்டு நிறுவனத்திற்கு இரண்டு சக்கர வாகனத்தின் கட்டணத்தை செலுத்தி ஒரிஜினலாக காப்பீட்டு பாலிசி எடுத்து அதில் வாகனத்தின் உரிமையாளர் பெயர், முகவரி, வாகனத்தின் பெயர் வாகனத்தின் வகை ஆகியவற்றை மாற்றி போலி காப்பீட்டு பாலிசியை கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தமிழக முழுவதும் ஆயிரக்கணக்கான நபர்களிடம் ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது 
இதைத்தொடர்ந்து நடந்த விசாரணையில் இந்த மோசடியில் ஈடுபட்ட தென்காசி மாவட்டம் மலையடிபட்டியை சேர்ந்த 1,சங்கரலிங்கம், தென்காசி மாவட்டம் கழுநீர்குளம் பகுதியைச் சேர்ந்த 2,தங்கராஜ் ,திருநெல்வேலி மாவட்டம் இத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த 3,தங்கபாண்டி தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த 4,பாலமுருகன் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த5, செந்தில் வேல் முருகன் ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்
பல்வேறு இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பெயரில் போலியாக இணையதளத்தில் காப்பீடு பதிவு செய்து லட்சக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்ட கும்பல் கைது செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
    user_Jaya Studio
    Jaya Studio
    தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • தூத்துக்குடி தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் முன்னிட்டு பொது மக்களின் பாதுகாப்பு நலன் கருதி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் மதன் தலைமையில் கொடி அணி வகுப்பு தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து மில்லர்புரம் வ உ சி கல்லூரி வரை இந்திய துணை ராணுவ படை மற்றும் காவல் துறையில் அணிவகுப்பு நடைபெற்றது இப்பேரணியில் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகிர் மற்றும் தூத்துக்குடி காவல்துறையினர் கலந்து கொண்டனர்
    1
    தூத்துக்குடி தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் முன்னிட்டு பொது மக்களின் பாதுகாப்பு நலன் கருதி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் மதன் தலைமையில் கொடி அணி வகுப்பு தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து மில்லர்புரம் வ உ சி கல்லூரி வரை இந்திய துணை ராணுவ படை மற்றும் காவல் துறையில் அணிவகுப்பு நடைபெற்றது இப்பேரணியில் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகிர் மற்றும் தூத்துக்குடி காவல்துறையினர் கலந்து கொண்டனர்
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • மக்காச்சோளம் அதன் குறைந்தபட்ச ஆதார விலை ரூபாய் 2500 ஆக அறிவிக்க வேண்டும் விளாத்திகுளம் பகுதியில் மிளகாய் பயிரிட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் 15,000 எழுப்பீடு வழங்க வேண்டும் உழவு மற்றும் வண்டி காளை வைத்திருக்கும் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு தனி அடையாள அட்டை வழங்க வேண்டும் கடம்பா வடிகால் ஆக்கிரமிப்பை முழுவதும் அகத்திட வேண்டும் வாய்ப்பாட்டில் மாட்டுவண்டியில் வீட்டு உபயோகத்திற்கு மணல் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியை வறட்சிதொகுதியாக அறிவிக்க வேண்டும்இவ்வாறு தமிழக ஏர் உழவன் அனைத்து விவசாயிகள் சங்கம் தலைவர் ராஜேஷ் உழவர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
    2
    மக்காச்சோளம் அதன் குறைந்தபட்ச ஆதார விலை ரூபாய் 2500 ஆக அறிவிக்க வேண்டும் விளாத்திகுளம் பகுதியில் மிளகாய் பயிரிட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் 15,000 எழுப்பீடு வழங்க வேண்டும் உழவு மற்றும் வண்டி காளை வைத்திருக்கும் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு தனி அடையாள அட்டை வழங்க வேண்டும் கடம்பா வடிகால் ஆக்கிரமிப்பை முழுவதும் அகத்திட வேண்டும் வாய்ப்பாட்டில் மாட்டுவண்டியில் வீட்டு உபயோகத்திற்கு மணல் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியை  வறட்சிதொகுதியாக அறிவிக்க வேண்டும்இவ்வாறு தமிழக ஏர் உழவன் அனைத்து விவசாயிகள் சங்கம் தலைவர் ராஜேஷ் உழவர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
    user_Balu
    Balu
    சாத்தான்குளம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    20 hrs ago
  • ஜாதி வெறிசெயல் குடிக்கும் தண்ணிர் குழாயை அடைத்து இரு சமூகத்தினர் தண்ணியின்றி தவிக்கவிட்ட கிராமச்செயலாளர்(ஈஸ்வரன், கள்ளர்) கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி, கம்பம் ஊராட்சி ஒன்றியம் தேனி மாவட்டம்
    1
    ஜாதி வெறிசெயல் குடிக்கும் தண்ணிர் குழாயை அடைத்து இரு சமூகத்தினர் தண்ணியின்றி தவிக்கவிட்ட கிராமச்செயலாளர்(ஈஸ்வரன், கள்ளர்) கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி, கம்பம் ஊராட்சி ஒன்றியம் தேனி மாவட்டம்
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • திருமங்கலம் முனிசிபல் காலனி 12வது வார்டு மூன்று மாதங்களால் அடைக்கப்பட்டிருக்கும் சாக்கடை கழிவுகள்
    1
    திருமங்கலம் முனிசிபல் காலனி 12வது வார்டு மூன்று மாதங்களால் அடைக்கப்பட்டிருக்கும் சாக்கடை கழிவுகள்
    user_Village volgs Alex and siva
    Village volgs Alex and siva
    திருமங்கலம், மதுரை, தமிழ்நாடு•
    10 hrs ago
  • தென்காசி மாவட்டம் வடகரை மெயின் ரோடு பகுதியில் குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடுமையான அவதிப்படுகின்றனர்
    1
    தென்காசி மாவட்டம் வடகரை மெயின் ரோடு பகுதியில் குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடுமையான அவதிப்படுகின்றனர்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    10 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.