குண்டடம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் 100 கார்பன் பெண்களுக்கு சமூக வளைகாப்பு விழா சிறப்பாக நடைபெற்றது இதில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர். திருப்பூர் மாவட்டம் குண்டடம் மேற்கு ஒன்றியத்தில் அரசு சார்பில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமூக வளைகாப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு குண்டடம் மேற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசின் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரான கயல்விழி செல்வராஜ் அவர்கள் விழாவை நடத்தி வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு வளையல்கள் அணிவித்து ஆசீர்வதித்தார். விழாவில் கலந்து கொண்ட அமைச்சரும் நிர்வாகிகளும், கர்ப்பிணி தாய்மார்களின் உடல்நலம், சத்தான உணவு, மருத்துவ பரிசோதனைகளின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் அரசு வழங்கும் தாய்மை நலத்திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இந்த சமூக வளைகாப்பு விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு வளையல்கள், இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன. பொதுமக்கள் மற்றும் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
குண்டடம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் 100 கார்பன் பெண்களுக்கு சமூக வளைகாப்பு விழா சிறப்பாக நடைபெற்றது இதில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர். திருப்பூர் மாவட்டம் குண்டடம் மேற்கு ஒன்றியத்தில் அரசு சார்பில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமூக வளைகாப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த
நிகழ்ச்சிக்கு குண்டடம் மேற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசின் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரான கயல்விழி செல்வராஜ் அவர்கள் விழாவை நடத்தி வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு வளையல்கள் அணிவித்து ஆசீர்வதித்தார். விழாவில் கலந்து கொண்ட அமைச்சரும் நிர்வாகிகளும், கர்ப்பிணி தாய்மார்களின் உடல்நலம், சத்தான உணவு,
மருத்துவ பரிசோதனைகளின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் அரசு வழங்கும் தாய்மை நலத்திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இந்த சமூக வளைகாப்பு விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு வளையல்கள், இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன. பொதுமக்கள் மற்றும் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
- திண்டுக்கல் நாகல் நகர் ரவுண்டானாவில் இன்று காரும் பேருந்தும் மோதி விபத்து ஏற்பட்டது அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயமோ, உயிர் சேதமோ இல்லை. ஆனாலும் இந்த விபத்தில் காரணமாக போக்குவரத்து நெரிசல் நீண்ட நேரம் ஏற்பட்டது உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் போக்குவரத்து நெரிசலை சீர் செய்தனர்.1
- திருப்பூர் மாநகர் மாவட்ட கழக அலுவலகமான அம்மா மாளிகையில், திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 289 பூத் ஐடி விங் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் அவர்களது மகத்தான பணி குறித்த ஒளிப்பட விளக்ககூட்டம் நடைபெற்றது.....1
- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா குளத்துபட்டி அரசு மகளிர் கலை கல்லூரியில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டது சுமார் 4 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள கூடுதல் கட்டிடத்திற்கு நிலக்கோட்டை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகால பாண்டியன் கலந்து கொண்டு பூமி பூஜையை துவக்கி வைத்தார். நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் சக்தி ஸ்ரீ தலைமை வகித்தார். மேலும் இவ்விழாவில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் திமுக முக்கிய பிரமுகர்களான சேசுராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மலையாளம் துணை அமைப்பாளர் கந்த பிரபு, கல்லூரி பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.1
- தேனியில் 13வது நாளாக தொடரும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம் தேனி ஆட்சியர் அலுவலகம் முன் சாப்பாட்டு தட்டை கடண்டியல் அடித்து "ஓசை எழுப்பி" அதன் மூலம்தமிழக முதல்வருக்கு கோரிக்கையை வலியுறுத்தும் "கவன ஈர்ப்பு" போராட்டம் * தேனியில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் காலவரையற்ற போராட்டத்தின் 13 வது நாளில், தேனி ஆட்சியர் அலுவலகம் முன், சாப்பாட்டு தட்டை கடண்டியல் அடித்து "ஓசை எழுப்பி " அதன் மூலம் தமிழக முதல்வருக்கு கோரிக்கையை வலியுறுத்தும் "கவன ஈர்ப்பு" போராட்டம் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆளும் திமுக அரசின் கடந்த தேர்தல் வாக்குறுதி 313ன் படி, காலமுறை ஊதிய உயர்வு, காலிப்பணியிடங்கள் நிரப்புதல், ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேனியில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கடந்த ஃபெப்ரவரி மூன்றாம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களின் இந்த "ஓசை எழுப்பும்" போராட்டம் பலரின் கவனத்தையும் ஈர்ப்பதாய் அமைந்துள்ளது.1
- Post by Senthilkumarankumaran1
- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் எ. சித்தூர் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ சர்வ மங்கள ரூபிணி சாமுண்டீஸ்வரி திருக்கோவிலில் பெண்கள் பொங்கல் வைக்கும் விழா பெண்களுக்கு சீர்வரிசை வழங்கும் திருவிழா அன்னதானமும் வெகு விமர்சையாக நடைபெற்றது இக்கோயிலில் சுற்று வட்டார ஊர் பொதுமக்கள் விழா குழுவினர் வெகு விமர்சையாக திருவிழா நடைபெற்றது1
- ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி திருக்கோவிலில் தீமிதி விழா !! கரூர் அருகே மேட்டு மகாதானபுரத்தில் திருநங்கை மாருளாளி வினோதினி தலைமையில் அங்காள பரமேஸ்வரி கோவில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. இதில் கரகம் பாலித்து, விரதம் இருந்த பக்தர்கள் அலகுகுத்தியும், தீமிதித்தும் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தினர். திருநங்கைகள் வழிபடும் இக்கோவிலில் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.1
- ஒட்டன்சத்திரம் மற்றும் ஒட்டன்சத்திரத்தை சுற்றியுள்ள மாணவர்கள், மாணவியர்கள் ஒட்டன்சத்திரம் நகரில் வந்து கல்வி கற்று சொந்த ஊருக்கு திரும்பி செல்கிறனர். இந்நிலையில் பள்ளி விடும் நேரத்தில் அரசு சார்பில் ஊதிய பேருந்துகள் இயக்கப்படாத நிலையில் நீண்ட நேரம் காத்திருந்து தாருங்கள் பேருந்து தங்களுடைய ஊருக்கு செல்ல வேண்டியதாக மாணவியர்கள் குற்றம் சாட்டி வருகிறனர். மேலும் பள்ளி விடும் நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க பள்ளி மாணவியர்கள் கோரிக்கை.1