Shuru
Apke Nagar Ki App…
கடத்தூரில் 9 லட்சத்திற்கு வெற்றிலைகள் விற்பனை தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட கடத்தூரில் ஞாயிறுதோறும் வெற்றிலை விற்பனைக்காக பிரசித்தி பெற்ற வாரச்சந்தை நடைபெறும் வழக்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வார சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும், பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் வெற்றிலைகளை விற்க & வாங்க வந்திருந்தனர் 128 கட்டுகளைக் கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை ரூ.10,000 முதல் ரூ.26,000 வரை விற்பனையானது மேலும் நேற்று ஒரே நாளில் சுமார் 9 லட்சத்திற்கு வெற்றிலை வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்
Raja
கடத்தூரில் 9 லட்சத்திற்கு வெற்றிலைகள் விற்பனை தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட கடத்தூரில் ஞாயிறுதோறும் வெற்றிலை விற்பனைக்காக பிரசித்தி பெற்ற வாரச்சந்தை நடைபெறும் வழக்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வார சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும், பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் வெற்றிலைகளை விற்க & வாங்க வந்திருந்தனர் 128 கட்டுகளைக் கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை ரூ.10,000 முதல் ரூ.26,000 வரை விற்பனையானது மேலும் நேற்று ஒரே நாளில் சுமார் 9 லட்சத்திற்கு வெற்றிலை வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்
More news from தமிழ்நாடு and nearby areas
- ஒகேனக்கல் காவேரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில தினங்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பொழியும் பருவமழையின் அளவைப் பொறுத்து நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவதுமாக காணப்படுகிறது. நேற்று 700 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று (ஜன.12) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளதாக, மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.1
- தர்மபுரி அருகே மதிகோன் பாளையம் ஏரியல் மருந்து கடை விற்பனையாளர் சடலமாக மீட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.1
- உதகை அருகே முதுமலை வனப்பகுதிற்குட்பட்ட வாழைத் தோட்டம் பகுதியில் சாலையின் நடுவே கம்பீரமாக நின்ற காட்டு யானை... சுமார் ஒரு மணி நேரமாக நின்றதால் போக்குவரத்து பாதிப்பு... உதகை அருகே முதுமலை புலிகள் காப்பக வனப் பகுதி சாலையிலுள்ள வாழைத் தோட்டம் - மசினகுடி சாலையில் ஒற்றை காட்டு யானை சாலையின் நடுவே கம்பீரமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நின்றது. இதனால் சாலையின் இரு புறமும் வாகனங்கள் அணி வகுத்து நின்றன். இதனால் வாழைத்தோட்டம் - மசினகுடி சாலையில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது1
- *போச்சம்பள்ளி சந்தையில் பொங்கல் முன்னிட்டு – ஆடு, கோழி, தங்கம், மளிகை, மாட்டு அலங்காரம் வரை விற்பனை ஜோர்* *தமிழ்நாடு – கர்நாடகா – ஆந்திரா மாநிலங்களிலிருந்து வியாபாரிகள் வருகை; இன்று மட்டும் 5 கோடிக்கு ஆடு விற்பனை!* கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கிய வர்த்தக மையமான போச்சம்பள்ளியில் இன்று நடைபெற்று வரும் வாரச் சந்தை, தைப்பொங்கல், , மாட்டு பொங்கல் , காணும் பொங்கல் ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு அதிகாலையிலேயே பெரும் கூட்ட நெரிசலுடன் களைகட்டியது. வாடிக்கையாளர்கள் அதிகாலை 5 மணி முதலே சந்தைக்கு திரண்டதால், வியாபாரிகள் தங்கள் கடைகளை முன்கூட்டியே அமைத்து விற்பனையைத் தொடங்கினர். இன்றைய சந்தையின் சிறப்பம்சமாக, தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களுடன் அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களிலிருந்தும் ஏராளமான வியாபாரிகள் வருகை தந்திருந்தனர். வேறுபட்ட மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆடுகள், கோழிகள், மளிகை பொருட்கள், காய்–பழங்கள் மற்றும் மசாலா பொருட்கள் மிக உயர்ந்த விற்பனையைப் பெற்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இறைச்சி தேவையும், குலதெய்வ வழிபாடு, நேர்த்திக்கடன் செலுத்துதல், பலி வழிபாடு ஆகியவற்றிற்கான ஆடுகளின் தேவை அதிகரித்ததால், இந்த வாரம் மட்டும் 5 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 20–25 கிலோ எடை கொண்ட ஆடுகள் 19,000 முதல் 23,000 ரூபாய் வரை விற்பனையாகின. மாட்டு பொங்கல் நெருங்கிவருவதால், கால்நடைகளுக்கான அலங்காரப் பொருட்கள் சந்தையில் அதிகம் தேவை பெற்றன. விற்பனையாளர்கள் கொண்டு வந்த மாட்டுக் கொம்புக்கு நிறமூட்டும் பவுடர்கள் – சிவப்பு, மஞ்சள், பச்சை கொம்புக்கு கட்டும் மணி, தாலம் கழுத்தில் அணிவிக்கும் பொன்/வெள்ளி நிற அலங்கார கயிறுகள் மாட்டிற்கு அணிவிக்கும் முத்து சங்கிலி, முல்லுறி ரிப்பன், வால் அலங்காரம் அலங்கார குட்டைகள் மற்றும் வண்ணத்துண்டுகள் இந்த பொருட்கள் அனைத்தும் அதிகாலை முதலே வேகமாக விற்று, பெரும்பாலான கடைகளில் பொருட்கள் மாலைக்குள் விற்றுவிட்டன. அரிசி, சர்க்கரை, பருப்பு வகைகள், மஞ்சள், நெய் போன்ற பண்டிகை மளிகைப் பொருட்கள் அதிக விற்பனையாகின காய்கறி விலை உயர்ந்திருந்தாலும், விற்பனை அதிகரித்தது தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த அனைத்து வியாபாரிகளும், “இன்று விற்பனை மிக சிறப்பாக உள்ளது. கடந்த வாரங்களை விட இரட்டிப்பு அளவில் மக்கள் வருகை. பண்டிகை முன்பாக சந்தை முழுவதும் விற்பனை சூடுபிடித்துள்ளது,” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.1
- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கிழக்கு மற்றும் மேற்கு நகர திமுக சார்பில் நகர அளவிலான திராவிட பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள் நேற்றும் இன்றும்நடைபெற்றது. வாலிபால் மற்றும் கபடி போட்டிகள் நடைபெற்றது. இதில் கபடி போட்டிகளில் பத்துக்கும் மேற்பட்ட அணிகளும் வாலிபால் போட்டியில் 15க்கும் மேற்பட்ட அணிகளும் பங்கேற்று விளையாடினார்கள் இறுதி வாலிபால் போட்டியை திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் சேலம் கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சேலம் ஏ வி எஸ் கல்லூரியின் முதல்வர் சீனிவாசன்திருச்செங்கோடு மேற்கு நகர திமுக பொறுப்பாளர் முன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன் கிழக்கு நகர திமுக பொறுப்பாளர் நகர் மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.இந்தப் போட்டிகளில்நகர அளவிலான விளையாட்டு வீரர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.கபடி பிரிவில் முதலிடம் பிடித்த எஸ்.பி. என் A அணிக்கு 5 ஆயிரம் ரொக்கப் பரிசு கோப்பை, 2ம் இடம் பிடித்த எஸ்.பி. என் B அணிக்கு 4ஆயிரம் மற்றும் கோப்பை 3ம் இடம் பிடித்த அன்னைத் தமிழ் அணிக்கு 3 ஆயிரம் மற்றும் கோப்பை பரிசாக வழங்கப் பட்டது. இதே போல் வாலிபால் பிரிவில் முதல் பரிசு பெற்ற மாணிக் பிரண்ட்ஸ் அணிக்கு5000 ரொக்கப் பரிசு மற்றும் கோப்பை இரண்டாம் பரிசு பெற்ற சந்துரு பிரண்ட்ஸ் அணிக்கு 3000 ரொக்க பரிசு மற்றும் கோப்பை மூன்றாம் இடம் பிடித்த பி.ஆர்.சி அணிக்கு ரூ 3000 ரொக்க பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- திருப்பூர் அருகே சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து1
- மாவட்டத்தில் இன்று பதிவான மழையின் விவரம் தர்மபுரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று காலை முதல் தற்போது வரை பல இடங்களில் மழை பொழிந்து வருகிறது இந்த நிலையில் இன்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழையின் விவரம். வேப்பம்பட்டி 4.4 மிமீ, சூரியக்கடை 4மிமீ, கேத்துரெட்டிபட்டி 2.8 மிமீ, பெரியப்பட்டி 2.8 மிமீ, மருதிப்பட்டி 2.4 மிமீ, தென்கரைக்கோட்டை 2.4 மிமீ, பையர்நத்தம் 2.4மிமீ, தீர்த்தமலை 2மிமீ என மழை பதிவாகி உள்ளது1